Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் உரிமையை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்த, மன்மோகன் கைச்சாத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் உரிமையை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்த, மன்மோகன் கைச்சாத்து

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்று பி.பி.சி தொலைக்காட்சிக்குப் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோடாபய ராஜபக்ச நேர்காணல் வாழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா சென்றுள்ள ராஜபக்ச குழுவினர் இந்தியாவுடன் வர்தக ஒப்பந்தங்களும், குற்றவியல் ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

குற்றவியல் ஒப்பந்தத்தில் கைதிகள் பரிமாற்றம் பிரதானமான அம்சமாக அமைந்திருப்பதாக மேலும் தெரிவிக்கும் டெல்லிச் செய்திகள், இந்தியாவில் புலிகள் என சந்தேகத்திற்கிடமான ஈழத் தமிழர்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அனைத்துமாக குற்றவியல், இருதரப்பு வணிகம் ஆகியன தொடர்பாக ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

தமிழ் நாட்டின் எழுச்சிகளை கட்டுப்படுத்த அதிகாரப்பரவலாக்கம் குறித்தும், சீனாவின் பிரசன்னம் குறித்தும் பேசப்பட்டாலும் இந்த ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுவிட்டன. ஆக, அழிக்கப்படும் தமிழ் மக்கள் குறித்த எந்தப் பேச்சும் இவர்களிடையே இடம்பெறவில்லை, மாறாக எதிர்காலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக் குரலை அடக்கியொடுக்குவதற்கான ஒப்பந்தம் மட்டுமே நிறைவாகியுள்ளது.

http://inioru.com/?p=13683

ஒப்பந்தங்களின் மீது விமர்சனம் செய்யும் போது முழுமையான ஒப்பந்தத்தை மக்களின் பார்வைக்கு இணைக்க வேண்டும் . பின்னர் தெளிவாக விமர்சனம் செய்ய வேண்டும். அதுதான் முறை. இந்த மரபு முறையை மீறியதால் தான் அணுசக்தி ஒப்பந்தத்தின் விமர்சனங்களின் மீது கம்யுனிஸ்டுகள் மண்ணை கவ்வினார்கள். முழு ஒப்பந்தமும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற வழியுண்டு. அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட ஈழ தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒன்றை அல்லது சிலவற்றை ஒப்பந்தம் மூலம் யார் கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டு மீதியை பெற போராடுவதே தற்போதைக்கு நமக்கு நல்லது . சும்மா தேவையில்லாமல் இணையத்தில் சவால் விட்டுக்கொண்டு இருந்தால் எதுவும் ஆக போவது இல்லை. பகைவனையும் பழகி அழி. இதுதான் தற்போது நாம் கடை பிடிக்க வேண்டிய வழி.

மேலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக பற்றிய கிலி ஆரம்பம் ஆகி விட்டது. தற்போது திமுகவை சமாதானபடுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. திமுகவும் நாளுக்கு நாள் இருதலை கொல்லி எறும்பு போல தவிக்கிறது. ஈழ போர் முடிந்ததும் ஈழ பிரச்சினையும் முடிந்து விடும். அரிசியும், டிவி பொட்டியும், கொஞ்சம் காசும் கொடுத்து தமிழன் வாக்கை பாராளுமன்ற தேர்தல் போல சுலபமாக வாங்கி விடலாம் என்று இருந்தவர்களுக்கு தற்போது நிலவரம் அவர்கள் கை விட்டு போய் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்து விட்டார்கள். சீமானுக்கு கூடும் கூட்டம், வைகோ மீண்டு(ம்) வருவது, அம்மா காப்டனிடம் நெருங்குவது போன்ற காரணங்களால் குழப்பத்தில் அய்யா கொலைஞர் இருக்கிறார். இந்த நிலைமையில் மேற்கூறிய கட்டுரை கூறுவது போல ஒப்பந்தங்கள் முற்றிலும் பாதகமாக இருக்க முடியாது. நன்றாக படித்த பின் விமர்சிப்பது நலம்.

1.குற்றவியல் ஒப்பந்தம் பல நாடுகளிக்கிடையே சரளமாக கை சாத்திடப்படும் ஒரு ஒப்பந்தம். இதற்கு வேறு ஒரு அர்த்தம் கற்பித்து திசை மாற்ற முயற்சி .

முழு ஒப்பந்தமும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற வழியுண்டு.

நீங்கள் இதற்கு உதவமுடியுமா?

அந்த அந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகங்களிலோ அல்லது சார் பதிவாளர்கள் (???) அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம். மேலும் நான் இருப்பது வட இந்தியாவில் தமிழர்களே அதிகம் இல்லாத ஊரில். இங்கே இதுபோன்ற விசயங்களில் அனுசரணை எப்படி இருக்கும் என தெரியாது. ஒரு வேலை நான் தமிழ் நாடு சென்றால் விண்ணப்பிக்கிறேன்

வணிக மற்றும் வியாபார நோக்க ஒப்பந்தங்கள் இப்போது கூட இணையத்தில் எங்கு காண்கிலும் கிடைக்கிறது. மேலும் ஒப்பந்தம் போடப்பட்டதே இன்றோ நேற்றோ தான். அது கூட சிறிது நாட்களில் இணையத்தில் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான தலைப்புத்தான். ஈழத்தமிழர் உரிமை பற்றி சந்திப்புக்கனில் பேசுகின்றோம் என்று அறிவிப்போம். ஆனால் இங்கு அதற்கு எதிர்மாறு தான் இருக்கின்றது. என்பது உண்மை. நாங்கள் பாசாங்காகப்பேசிப்பேசி இப்படிளே இழுத்துக்கொண்டு செல்வோம். இதற்கிடையில் எவ்வளவு தமிழனைக் கொல்லமுடியுமோ நீ கொன்று அழித்துவிடு என்பது தான் ஒப்பந்தம். இப்போ கொல்லும் கணக்கு வெளியில் வரப் புலிகளும் இல்லை. என்பதும் யதார்த்தம். வுpரப்பனைப்பிடிக்கும்போது எவ்வளவு மக்களைக் கொன்றும் சிறையும் பிடித்தோம் யாருக்கும் தெரிந்ததா? ஹரிசனங்களை அழித்தபோது எண்ணிக்கை யாருக்கும் தெரிந்ததா? எங்கள் பாணி உன் பாணியாகட்டும். வாழ்த்துக்கள் ராஜபக்ஷ என்று பேசியிருப்பார்கள். ஆனாலும் சீனாவை அங்கு அனுமதிக்காதே 'ப்ளீஸ்" 'ப்ளீஸ்"'ப்ளீஸ்" உன்னுடைய தமிழனுக்கு எதிரான எந்தச்செயலுக்கும் நாங்கள் முட்டுக்கட்டையாக இருக்கமாட்டோம். எங்களுக்கு சவாலாக இருக்கும் சீனாவை இலங்கையில் அனுமதிக்காதே 'ப்ளீஸ்" 'ப்ளீஸ்" 'ப்ளீஸ்" 'ப்ளீஸ்" 'ப்ளீஸ்" .............

ராஜபக்ஷ: 'வா மச்சான் வா" வளமாய் ஆப்பிட்டிருக்கின்றாய். இனிமேல் ப்ளீஸ்க்கு மேல் ப்ளீஸ் கேட்க வைக்கிறன்டா உங்களை. சீனா இருப்பது தான் உங்களை அடக்க நல்ல சகுனம்" என்று மனதில் எண்ணிக்கொண்டு

'ஓ இஞ்சை பாருங்கோ மன்மோகன் புலிகளையும் தமிழர்களையும் அழிக்க எவ்வளவு உதவியா இருக்கிறீங்க. உங்களுக்கு எதிராகச் செயல்படுவனோ. எங்கட உறவுகள் எவ்வளவு மேம்பட்டிருக்கு. சீனாவாவது சீனியாவது அவர்களின் உறவாவது. ஒன்றுக்கும் பயப்படாதீங்க மன்மோகன் உங்கட நாட்டிலே பயங்கரவாதத்தை அழிக்கிறது கூட என்னுடைய கடமை. நானிருக்கும்போது நீங்கள் பயப்படத்தேவையில்லை. நான் சவுத்திலே இருந்து பயங்கரவாத ஒழிப்பை ஆரம்பிக்கின்றன் வரட்டுமா"

மன்மோகன்: நல்லது நல்லது இன்றைக்கு எல்லாத்துக்கும் உங்களை நம்பித்தானே இருக்கின்றோம் நீங்கள் ஒரு குரு மாதிரி.

ராஜபக்ஸ: சரி சரி இதுக்கெல்லாம் போய் குரு என்று சொல்லிக்கிட்டு. நான் அடுத்த தடவை வருகின்றேன். (மனதில்) வடுவ ராஸ்கல் உங்களுக்கும் வெடி வைக்கிறன் பார். சிங்களவன் என்றால் யார் எண்டு காட்டுறன். வரட்டுமா?

மன்மோகன்: சரி சரி தெய்வமே நீங்கள் தான். சீனா விடயம் தான் மறந்திடாதையுங்கோ.

ராஜபக்ஸ: (மனதில் வடுவா) டோன்ற் வொறி வரட்டுமா? 'பாய் பாய்"

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் என்ன ஒப்பந்தங்கள்.

ஏற்கனவே போடாத ஒப்பந்தங்களா?

கிழித்தெறியப்படாதா ஒப்பந்தங்களா?

அது சரி இனப்பிரச்னை பற்றியும் பேசுவார்களோ?

அல்லது கையெழுத்து மட்டும் தானோ?

வாத்தியார்

................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.