Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வது திருத்த சட்டட்தின் கீழ் தீர்வு மஹிந்த இணக்கம்

Featured Replies

13 வது திருத்த சட்டட்தின் கீழ் தீர்வு மஹிந்த இணக்கம்

வவுனியா நிருபர்

வியாழக்கிழமை, யூன் 10, 2010

MR and Sngh

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம்.

சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார்.

போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற டெல்லியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட மஹிந்த அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.

இதேவேளை வடக்கு, கிழக்கைச் சேரந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளைக் அமைத்துக்கொடுப்பதற்கு இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

http://www.eelanatham.net/story/13-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டப்படும் 50.000 வீடுகளில் 30.000 வீடுகள் சிங்களக் குடியேற்ற வாசிகளிடம் கையளிக்கப்படும் என்பதும் அந்த ஏழு ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

நல்லாத் தான் ஊடு கட்டுகின்றார்கள்

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு தேடப்படுகிறதே தவிர பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரச்சனைக்கு அல்ல தீர்வு தேடப்படுகிறது.

மகிந்தவும் மன்மோகனும் தங்களுக்குள் பேசி ஈழத்தில் தமிழர்களுக்கு என்ன தீர்வை அளிப்பது என்பதற்கு தமிழர்கள் இந்தியாவில் பஞ்சாப்பில் வாழவில்லை. மாறாக ஈழத்தில் தங்கள் தாய் நிலத்தில் வாழ்கின்றனர்.

தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழர்களோடு பேசிவிட்டு மன்மோகன் கருத்துச் சொல்ல வேண்டும்... எதனடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதை மன்மோகனும் மகிந்தவும் தீர்மானிக்க முதல் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னர் தான் இவர்கள் கருத்துப் பரிமாற வேண்டும்.

இது என்னவோ தமிழ் மக்கள் மன்மோகனும் மகிந்தவும் விரும்பும் வடிவில் வாழ வேண்டும் என்பது போலல்லவா இந்தியா தமிழர்கள் மீது ஒரு தீர்வை வலிந்து திணிக்க மீண்டும் 1987 இல் நடந்து கொண்டது போல் நடந்து கொள்கிறது.

இதை நியாயமான தீர்வைத் தேடும் அனைத்து தமிழர் தரப்புக்களை கண்டிப்பதோடு இந்த அணுகுமுறையின் கீழ் நடக்கும் பேச்சுக்களில் ஈடுபடுவது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்.

Edited by nedukkalapoovan

இதை நியாயமான தீர்வைத் தேடும் அனைத்து தமிழர் தரப்புக்களை கண்டிப்பதோடு இந்த அணுகுமுறையின் கீழ் நடக்கும் பேச்சுக்களில் ஈடுபடுவது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தியாவின் விருப்பிற்கு மேல்ச் சென்று கதைப்பதற்கு, தமிழர் தரப்பு என்று ஒன்று புலத்தில் இருக்கா?

நாம் புலத்தில் அமைத்த, அரசு, ஏதும் வாய்துறக்கும் என்று எதிர்பார்கலாமா?

Edited by aathirai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.