Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இருக்கும் சிங்களவர்களின் உதவியுடன் வன்னியில் சிங்கள குடியேற்றங்கள்

Featured Replies

[ஃஉஒடெ நமெ='Bஒன்ட்007' டடெ='15 Jஉனெ 2010 - 05:32 ஆM' டிமெச்டம்ப்='1276576355' பொச்ட்='592648']

30 வருட போராட்டமும் அதன் தோல்விக்கான காரணங்களை மறு பரிசீலனை செய்யதர் அடுத்தவர்களை முத்திரை குத்துவதில் கவனம் செலுத்துவது மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவும்! எமது சிந்தனையில் மாற்றம் வராது போனால் நாம் தொடரந்தும் அடுத்தவர்களை குற்றம் கூறுவதிலேயே கவனம் செலுத்துவோம்!

இணையத்தில் கண்ட ஒரு தரமான கட்டுரை! இது என் சொந்தக் கருத்து அல்ல ஆனால் இதை வாசித்தபின் இதனுடன் உடன்படுவதே இன்றைய தேவையாக நான் கருதுகிறேன்!

"சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது"!?

சிங்களமக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்று எவரெல்லாம் கூறுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாக தமிழ்மக்களுடன் கூட சேர்ந்து போராடவும் வாழவும் மறுப்பவர்கள் தான். உண்மையில் இவர்கள் சிங்களமக்களை எதிரியாகக் காட்டி, தமிழ்மக்களை தமக்கு கீழ் அடக்கியாளவே விரும்புகின்றனர். இதனால்தான் சிங்களமக்களை, தமிழ்மக்களின் எதிரியாக சித்தரிக்கின்றனர்.

பேரினவாதம் தமிழ்மக்களை சிங்களமக்களின் எதிரியாக்கி, சிங்களமக்களை அடக்கியாள்வது போன்று தான் இதுவும் இயங்குகின்றது. சாராம்சத்திலும், உள்ளடக்கத்திலும் இதில் எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது.

முதல் நாங்கள் சிங்களமக்களுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கின்றோமா!? நாங்கள் அதற்கு தயாராக இல்லாதவரை, அவர்கள் சேர்ந்து வாழமாட்டார்கள் என்று கூறுவது அரசியல் அபத்தமாகும். இங்கு சேர்ந்து வாழ்வது என்பது, அரசு தரமறுப்பதை குறித்து சொல்லவில்லை. அரசு தமிழ்மக்களுக்கு தரமறுப்பதை, சிங்களமக்களுடன் சேர்ந்து நின்று போராட்ட, நாம் முயன்று இருக்கின்றோமா என்பது பற்றியது.

அதற்காக நாம் என்ன முயற்சியை எடுத்திருக்கின்றோம்? சொல்லுங்கள்! தமிழ்மக்களின் வலதுசாரி சிந்தனைமுறையைக் கூட, நாம் மாற்றுவதற்காக உணர்வுபூர்வமாக போராடாதவர்கள் தான் நாம். [சிழெ="4"]எம்முடன் புரையோடிக் கிடக்கும்; சாதிய அடிமைத்தனத்தை அடக்குமுறையையும் கட்டிப் பாதுகாக்கும் நாம், சிங்களமக்களுடன் சேர்ந்து வாழ்வதை பற்றி எப்படித்தான் சிந்திக்க முடியும். முஸ்லீம்மக்களை ஒடுக்கிய நாம், எப்படி தமிழ்மக்களை உணர்வுப+ர்வமாக எங்கள் சொந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க போராடியிருப்போம். [/சிழெ]சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு எதிராக இருந்தோம், இருக்கின்றோம். தாம் கொண்டுள்ள வலதுசாரி இனவாத சிந்தனைமுறைக் கைவிடாமல் இருக்கும்வரை, மற்றைய இனமக்களை எதிரியாக பார்ப்பது, எதிரியாக காட்டுவதும் தான் தொடரும், தொடருகின்றது. இங்கு நாம் இனவாதிகளாக தொடர்ந்து இருக்கின்றோம் என்பதே உண்மை.

இந்தநிலையில் தமிழ்மக்களின் தப்பபிராயங்களை நீக்காமல், சிங்களமக்களின் தப்பபிராயங்களை எம்மால் நீக்க முடியாது. இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. சிங்கள பேரினவாதம் சிங்களமக்களை இனவெறியூட்டி, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கவைக்கின்றது. இதுதான் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலும், அதன் அரசியல் உள்ளடக்கமுமாகும்.

நாங்கள் இதை சிங்களமக்களுக்கு முன் அம்பலப்படுத்தி அவர்களை விழிப்புற வைக்காத வரை, அவர்களை பேரினவாத சேற்றில் தள்ளிவிடும் தொடர் அரசியல் வேலையைத்தான் எமது இனவாதமும் செய்யும். நாங்கள் இனவாதிகள் அல்ல என்றால், என்ன செய்வோம்.

சிங்களமக்கள் முன் எமது ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து, அதை விளக்கி அவர்களை ஏற்க வைக்கவேண்டும். இதை நாம் செய்யாது, "சிங்களவனுடன் சேர்ந்து வாழமுடியாது" என்று கூறும் எமது இனவாதக் கண்ணோட்டத்தை, முதலில் நாம் களைந்ததாக வேண்டும். இதன் மூலம் தமிழ் இனவாதத்தை, அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்மக்களின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை வேறு, தமிழினவாதம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதை வேறுபடுத்தி பார்க்கவும், அதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி போராட வேண்டும். அத்துடன் சிங்களமக்கள் மத்தியிலும், அதை எடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் இரண்டு வேறுபட்ட நேரெதிரான அரசியல் கூறுகளையும், சிங்களமக்களுக்கு விளக்கி, அதை தெளிவுற வைக்க வேண்டும்;. இதன் மூலம் எமது ஜனநாயகக் கோரிக்கைகளை சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், நாம் முன்முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

மறுபக்கத்தில் சிங்களமக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்காக, எமது கரத்தை அவர்களுக்காக உயர்த்துவதுடன், அவர்களுக்காக நாம் அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். நிச்சயமாக சிங்களமக்கள் போராடுவது, அதே பேரினவாத அரசுக்கு எதிராகத்தான் என்பது வெளிப்படையான ஒரு பொது உண்மை. இதன் பின் "சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது" என்று சொல்லத்தான் முடியுமா? சொல்லுங்கள்!

[சிழெ="4"]தமிழ்மக்களின் ஜனநாயகக் கோரிக்கை தமிழ் இனவாதத்தில் [/சிழெ]இருந்து வேறுபட்டது என்பதை சிங்களமக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்;. இந்த வகையில் மக்களின் பொது எதிரி அரசு என்பதை விளக்கவேண்டும். நாம் எமது பலத்தின் அடிப்படையில், இதை சிறியளவில் தொடங்கி தொடர்ந்து முயன்று வருகின்றோம்;. விரைவில் அதை பரந்ததளத்தில், பலர் அதில் பலரும் விவாதிக்கும் வண்ணம் எடுத்துச் செல்லவுமுள்ளோம்.

நாம் சேர்ந்து வாழ முடியாது என்று வலதுசாரி சிந்தனைமுறைக்குள் தமிழ் இனவாதியாக நிற்காது, சிங்களமக்களுடன் உரையாடுவதன் மூலம் எம்மை நாம் ஜனநாயகப்படுத்தி செயல்பட முன்வருமாறு கோருகின்றோம். மக்களை அவர்களின் முரணற்ற அரசியல் கோரிக்கைகள் ஊடாக, ஜக்கியப்படுத்த முன்வாருங்கள். நாம் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், உலகை எம்முடன் அணிதிரட்ட முடியும். நானும் நீயும் இணைந்து அதை செய்யும் போது, வெல்வதற்கு எம்முன் ஒரு உலகமே உள்ளது.

Tகன்க்ச் டமில்cஇர்cலெ.

[/ஃஉஒடெ]

முதலில் ஏன் தமிழன் சிங்களவனுடன் ஒன்றாக வாழ வேண்டும், இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழனுக்கு மட்டும் தான் சொந்தம் அதை சிங்களவனுடன் பங்கு போட வேண்டிய அவசியம் இல்லை. சிங்களவன் வேறு இனம், தமிழன் வேறு இனம் ஏன் ஜேர்மன்காரனையும், பிரான்ஸ்காரனியும் ஒன்றாக வாழ்ச் சொல்லுங்கோவன், இல்லாட்டி ஸ்பேயின் காரனையும் இத்தாலிக்காரனையும் ஒன்றாக வாழச் சொல்லுங்கோவன், அதை எல்லம் விடுங்கோ இஸ்ரேல் காரனையும், பலஸ்தீன்காரனையும் சமாதானமாக்ப் போகச் சொல்லுங்கோவன் யூதன் 2000 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் செய்தவற்றுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக குடுக்கிறான், சிங்களவனுடன் பேச வேண்டும் என்கிறீர்களே 1956ம் ஆண்டு முத்ல் இதைத்தானே செய்கிறோம்

இன்றைய மனித வாழ்வியலையும் யதார்த்தத்தையும் புரியாது கற்பனை உலகில் சஞ்சரித்தபடி உணரர்ச்சி மேலேட்டத்துடன் இங்கு வந்து கருத்தெழுதுவது மிகவும் சுலபம். நாம் தோற்றது யதார்த்தம். அதற்காக அடிபணிய கேட்கவில்லை! மாறாக நாம் மீள சிந்திக்க வேண்டியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டு நாம் எடுக்கும் ஒவ்வரு நடவடிக்கையும் நிச்சயம் தோல்வியில் தான் முடியும்! இன்றைய உலகம் பல்தேசிய இனங்களை கொண்டதாக உருவெடுத்து வருகிறது! நான் இங்கு மக்கியமாக கூறுவது தேசியம் என்று நாம் போராடி வெற்றி பெற்றாலும் உண்மையில் வடக்கு கிழக்கு மக்களிற்கு முழு வெற்றியாகி இருக்குமா?

தென் ஆபிரிக்காவில் இனவெறி ஆட்சி நீங்கி இன்று உலக கோப்பை கிண்ண போட்டிகள் நடைபெறுகின்றது! அனால் அங்குள்ள கறுப்பின மக்கள் உண்மையில் வெற்றி பெற்றுவிட்டாரகளா? தென்ஆபிரிக்கா இன்னமும் கறுப்பர்களுக்கு சொந்தமானா நாடாக இல்லை என்பதே யதார்தம்! தென்னாபிரிக்காவில் 75வீதமான சொத்துகள் இன்னமும் வெள்ளையர்கள் கைகளில் தான்! தென் ஆபிரிக்கா இன்னும் தென்னாபிரிக்கர்களின் நாடாகவே இல்லை!

ஆயுதப்போரில் தோற்று விட்டோம்! அனால் பொருளாதா போரில் புலம்பெயர் மக்கள் வெற்றி பெற்றவர்களாகவே இருக்கிறோம். இந்த வெற்றியை தாயக மக்களின் வெற்றியாக்க நாம் நினைத்தால் நிச்சயம் முடியும். நாம் நமது உணர்வுகளுக்கு தினீ போடுபவர்களாக இருந்து உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரம் அடைந்தவர்களாக இருப்பதால் என்ன பலன்? விட்டுக்கொடுப்பு தாராள மனப்பாங்கு சாதுர்யமான சிந்தனை - இந்த மூன்று விடயங்களை நாம் கையில் எடுக்காது வெறுமனே வினைக்கு எதிர் வினை தேடி அலைந்தால் காலமும் விணாகி நாம் செய்யும் கருமங்களும் வீணாகும்!

நான் கோபமடைவதாலே அல்லது பொங்கி எழந்து ஆர்ப்பரிப்பதோ இன்று எதையும் சாதிக்காது! நம் மக்களிற்கு நடந்த கொடுமைக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும். ஆனால் அதை நாட் இன்றைய யதார்த்தத்தில் நிச்சயம் செய்ய முடியாது. அனால் அது காலப் போக்கில் நடை பெறவதையும் யாராலும் தடுக்க முடியாது. இன்று லண்டன் பத்திரிகைகளின் முக்கிய செய்தி நமக்கும் ஒரு நம்பிக்கை தரவில்லையா? அநியாயமாக 28 வருடங்களிற்கு முன் கொல்லப்பட்ட அயர்லாந்து மக்களிற்கு இன்றுதான் நியாயம் கிடைத்துள்ளது. 2ம் உலக மகா யுத்தத்தில் அட்டூளியம் செய்தவர்கள் தற்போதும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். இன்று தாயக மக்களை நாம் பொருளாதார ரீதியல் வெற்றி கொள்ள வைக்க நமது சிந்தனை முறையில் மாற்றம் நிச்சயம் தேவை!

தனி மனித விடுதலை என்பதை நாம் தேசிய இன விடுதலைக்குள் மட்டும் வைத்து மட்டுப்படுத்தாது அதனை விரிபு படுத்தி அடக்கப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்கான ஒரு போராட்டமாக எடுக்கவேண்டும். இல்லை நாங்கள் குண்டாஞ்சட்டிக்குள் தான் குதிரை ஓட்டுவேம் என்றால் ..

தனி மனித விடுதலைக்குள் நீங்கள் கேழ்வி கேட்ட அத்தனை விடயத்திற்கும் விடிவு கிடைக்கும்.

மீள நினைவூட்ட விரும்புவது தென் ஆபிரிக்காவை ஒரு தரம் பாருங்கள்! அவர்கள் உண்மையில் விடுதலை அடைந்து விட்டார்களா?

  • தொடங்கியவர்
அல்லலுறும் தாயக சொந்தங்களின் கல்வி - தொழில் - இருப்பிடம் இவற்றை நிவர்த்தி செய்ய அழுக்கொரு குடும்பத்தை தத்தெடுப்போம்!
:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.