Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்ருபூமி

Featured Replies

matrubhoomipic.jpg

மா(!)த்ருபூமி

அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து...

' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் என் மனைவியே என் தம்பிக்கும் மனைவி '

'ஹே! என்ன சொல்றீங்க?' என்று கவனிக்க ஆரம்பித்தேன். இதே போல இன்னும் சில குடும்பங்களைக் காட்டி, பஞ்சாபில் நிலம் துண்டு படுவதைத் தவிர்க்க இப்படி ஒரு வழக்கமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார் நிருபர். இது ஒன்றும் புது கதையல்ல என்று இருபத்தி ஏழு வருடங்களாக மூன்று சகோதரர்களுக்கு மனைவியாயிருக்கும் ஒரு பெண்மணி ஆச்சர்யம் தந்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளா¾தால் எழுபத்து சொச்சம் வயதிலும் திருமணமாகாத இரண்டு ஆண்களோடு ஒரு குடும்பமும் செய்தியில் தலை காட்டியது.

தேவைகள்... அதற்கேற்றார் போல மாறும் கோட்பாடுகள். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய யோசிக்க வைத்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சிரிப்பு... இன்றைக்கு இறுக்கி இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு நாள் பிடியை உதறிவிட்டுப் போகத்தான் போகிறது என்பதை நினைத்தாயிருக்கும். அன்றைக்கே அதை எழுத முடியாமல் போய் விட்டது.

இன்று காலை கொஞ்ச நாளாக நேரம் வாய்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த 'மாத்ருபூமி' படம் பார்க்கப் போகும் போது, அது இதைத்தான் சொல்லப் போகிறது என்று நிச்சயம் நினைக்கவில்லை. போனிகபூரை இப்படி ஒரு படம் எடுக்க சம்மதிக்க வைத்த டைரக்டரை பாராட்ட வேண்டும்.

matrubhoomi1.jpg

தழும்ப தழும்ப பால் நிறைத்த ஒரு அண்டாவில் அப்பாவால் மூழ்கடித்துக் கொல்லப்படும் ஒரு பெண் சிசுவோடு படம் தொடங்குகிறது. பெண்களே இல்லாமல் போகும் ஒரு சமூகத்தில் ஆண்களின் தவிப்பு, வெளிப்படும் மூர்க்கம், தேடும் வடிகால்கள்... எவ்வளவு தூரம் இது கொண்டு போகும் என்று சொன்னது எதுவும் மிகையாகத் தெரியவில்லை. ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்ன செய்திக் குறிப்பு தான் படம். அத்தனை அவலங்களையும் சொல்லிப் போகிறது. சேச்சே இவ்வளவு மோசமாகவெல்லாம் ஒன்னும் ஆகாது என்று மறுக்க முடியவில்லை. இன்றைக்கும் இப்படி கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இனிமேலும்.

ஏன் இந்தப் படம் பற்றி சத்தமேயில்லை? முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொள்வது உத்தமமாக பட்டதோ?

-Thanks: Nirmala

main.jpg

அண்மையில் சுவிஸ் தொலைக்காட்சியின் இரவுக் காட்சியில் மாத்ருபூமி ஒளிபரப்பாகி பார்த்த போது இதுபற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

மேலதிக விபரங்கள் இல்லாமையால் விட்டு விட்டேன்.

தற்செயலாக நிர்மலாவின் கட்டுரையை பார்த்ததும் இங்கே இணைக்கத் தோன்றியது.

http://www.matrubhoomithefilm.com/

தகவலுக்கு நன்றி அண்ணா

சூப்பர் படமாம் நானும் தேடுகிறேன் கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்

அன்று இரவு 12 மணி

சுவிஸ் இரவுப்படங்கள் ஒளிபரப்பாகும் சனல் ஒன்றில் மாத்ருபூமி(கலைப்படங்களாகவும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா இங்கு ஹிந்தியில் இந்தப் படம் கிடைக்கிறது நீங்கள் பார்த்தது தமிழா அல்லது ஹிந்தியா?தமிழாயின் மொழிமாற்றம் எப்படி இருக்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா நீங்கள் பார்த்தது தமிழிலா இந்தியிலா.தமிழாயின் மொழிமாற்றம் எப்படி நன்றாக இருக்கிறதா?

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா இங்கு ஹிந்தியில் இந்தப் படம் கிடைக்கிறது நீங்கள் பார்த்தது தமிழா அல்லது ஹிந்தியா?தமிழாயின் மொழிமாற்றம் எப்படி இருக்கிறது?

ஜெர்மன் உப - தலைப்புகளுடன் ஹிந்தியில்தான் இங்கு ஒளிபரப்பினார்கள் ஈழவன்.

இந்தியாவிலுள்ள 6 மொழிகளில், தமிழ் மொழி உட்பட மாத்ருபூமி படம் வெளிவந்திருப்பதாக தெரிகிறது.

அதை அவர்களது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சிலர் பார்க்க விரும்புகிறார்கள்.

நீங்கள் பார்த்தது DVD லா அல்லது VHS லா?

அது பற்றித் தெரியப்படுத்தினால் அல்லது அதை online shop களில் வாங்கக் கூடியதாக இருந்தால் அறியத் தாருங்கள்.

பலருக்கு உபயோகமாக இருக்கும்.

நன்றி ஈழவன்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

:?: கரு உண்டானவுடன், சில வாரங்களுக்கு அது ஆணா பெண்ணா என்று கருவே தீர்மானிக்காமல் இருக்கும் என்று ஒரு பதிலில் கூறினீர்கள். வெளியில் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், X க்ரோமோசோமும் Y க்ரோமோசோமும் இணைந்தால் ஆணும், இரண்டு X க்ரோமோசோம் இணைந்தால் பெண்ணும் உண்டாகும். ஆக, செக்ஸ் அந்த விநாடியே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. இது அறிவியல் உண்மை. ஆகவே, ஆண்களுக்கு நிப்பிள் இருப்பதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்பது என் எண்ணம்! சரியா?

p120a.jpg

உலகில் உயிர் என்பது தோன்றி, பிறகு நூறு கோடி ஆண்டுகளுக்கு ஆண் என்பதே கிடையாது! ஒரு (பெண்) செல் இரண்டாகப் பிரியும். அது நாலாகும். நாற்பதாகும். ஆணே இல்லாமல் குழந்தை பெறுவது மாதிரிதான்!

அப்படியே தொடர்ந்திருந்தால், க்ளோன்கள்தான் (CLONES) தோன்றியிருக்கும். உலகம் முழுவதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும் பெண்கள். அத்தனை பேரும் ஐஸ்வர்யா ராய்கள்! அதே சமயம், உலகில் ஆணே கிடையாது. எப்படி இருக்கும்?!

பல கோடி வருடங்களுக்கு முன், திடீரென செல்லுக்குள் நிகழ்ந்த ஒரு ம்யூடேஷன் (கிறுக்குத்தனமான மாறுதல்!) காரணமாகத் தோன்றியதுதான் சீ க்ரோமோசோம். அதாவது, ஆணுக்கான க்ரோமோசோம்!

செக்ஸ் என்பது ஆரம்பித்தது அப்போதுதான்! கோடிக்கணக்கில் விதவிதமான அழகிகள் தோன்றக் காரணம் அந்த Y தான்! ஏழு வாரங்கள் வரை கரு ஆணுமில்லை, பெண்ணுமில்லை. ஆனால், நீங்கள் குறிப்பிடுவது போல உள்ளே மாற்றங்கள் நிகழ்கின்றனதான். Y க்ரோமோசோம் ஆணைப்படி ஆணுக்கான டெஸ்டோஸ்டரோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இன்னொரு ஹார்மோன், பெண்ணுக்கான அறிகுறிகளை நிறுத்துகிறது (Suppresses). முலைக்காம்பு (Nipple) வளராமல் அப்படியே நின்றுவிட, க்ளைடோரிஸ் வளர்ந்து ஆண் உறுப்பாகிறது(Penis) .

உள்ளே நிகழும் இந்த வளர்ச்சிகள் வெளியே தெரிய, ஏழு வாரங்கள் ஆகிவிடும். அந்த Y க்ரோமோசோம் எப்படி முதன்முதலில் உருவானது? அதுதான் விஞ்ஞானிகளுக்குப் புரியாத அற்புதமான ஆச்சர்யம்!

:?: உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா?

பெண்ணுக்குத்தான் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால், முதன்முதலில் தோன்றிய செல்கூட பெண்தான்! ஒரு செல் இரண்டாகப் பிரிந்தது ஒரு விதத்தில் பிரசவம்தான். Clones!

குரங்கு இனத்திலிருந்து பிரிந்து முதலில் உருவான மனிதனும் பெண்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லியாகிவிட்டது.

- மதன் பதில்

இதைப் பார்த்ததும் மாத்ரூபூமிதான் என் நினைவலைக்கு வந்தது..............?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா ,

பிரயோசனமான தகவல்கள்....

ஆனால், "மாத்ரு பூமி" யாரிடம்/எங்கு பார்ப்பது...?

எவ்வளவோ தேடி அண்மையில் தான் "பவர் ஒப் வுமன்" (குஷ்பூ & கரிகரன்) பார்க்க கிடைத்தது....

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா ,

பிரயோசனமான தகவல்கள்....

ஆனால், "மாத்ரு பூமி" யாரிடம்/எங்கு பார்ப்பது...?

எவ்வளவோ தேடி அண்மையில் தான் "பவர் ஒப் வுமன்" (குஷ்பூ & கரிகரன்) பார்க்க கிடைத்தது....

மேகநாதன்

"மாத்ரு பூமி"யை சுவிஸ் தொலைக் காட்சியில் தற்செயலாகவே பார்க்க நேர்ந்தது.

நான் இத்திரைப்படம் படம் பற்றி அறிந்திருக்காததால் பதிவு செய்யாமல் இருந்து விட்டேன்.

பின்னர் ஒளிபரப்புவார்கள் என்று நினைத்தேன்.

இன்னுமில்லை.

Hindi திரைப்படங்கள் மட்டும் RTL 2 எனும் ஜேர்மன் தொலைக் காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

DVD online shop களிலும் தேடினேன். கிடைக்கவில்லை.

இந்தியாவில் ஒளிநாடாவில் கிடைக்கலாம்.?

இப்படியான படங்களை அங்கு பார்க்க மாட்டார்கள்.

யாழில் உள்ள நண்பர்கள் எவருக்ககாவது தெரிந்தால் கூறுங்கள்.

ஆனால் விரைவில் வெளி வரலாம்.

:?: பவர் ஒவ் வுமண் படத்தையும் நான் பார்க்கவில்லை.

எப்படி இருக்கிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா,

பார்த்தேன்....வித்தியாசமாக இருந்திது.....

(எனக்கு)அருமையான பாடல்கள்/இசை....

சினிமாத்தனங்கள் பல இல்லாமலிருந்தன...

பெண் ஒடுக்குமுறையின் வடிவங்களைப் (கணவனின் மனைவி மீதான சந்தேகப் புத்தி )படம் பிடித்தது...

கனடாவில் எடுத்த படம் என்றதால் யாழ் உறுப்பினர்கள்/தெரிந்தவர்கள் யாரும் பங்கு பற்றினமோ தெரியாது....

இந்த "தலைமாத்துக்காரர்" பற்றியும் படத்தில் வரும்...என்பது உதிரித் தகவல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் அண்ணா இப்போது தான் இப்படத்தை பார்த்தேன் மிகவும் வேதனையாக :oops: இருந்தது.பெண்ணுரிமை பேசுபவர்கள் இவற்றை பற்றி வாயே திறக்கினமில்லையே :evil: ?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா இப்போது தான் இப்படத்தை பார்த்தேன் மிகவும் வேதனையாக :oops: இருந்தது.பெண்ணுரிமை பேசுபவர்கள் இவற்றை பற்றி வாயே திறக்கினமில்லையே :evil: ?

அவர்களது உரிமைப் போராட்டம் வேற?

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இந்தியாவில் கருக்கலைப்பினால் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் அழிக்கப்படுகின்றன.

_41195564_foetus203.jpg

வயிற்றுக்குள் சிசு

வயிற்றில் வளரும் கரு ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாயிருந்தால் கருக்கலைப்பு செய்துகொள்ளும் வழக்கத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண் கருக்கள் சிசுக்கள் அழிக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இவ்வகையான பெண்கருக்கலைப்பைத் தடைசெய்யும் சட்டம் இந்தியாவில் ஒரு தசாப்தகாலத்துக்கும் அதிகமாகவே அமலில் இருந்துவருகிறது என்றாலும், இந்தியாவில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் நீடிக்கும் வித்தியாசம் இவ்வழக்கம் தொடரவே செய்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்றவை கிராமிய சமூகங்களில் மட்டும்தான் நடக்கின்றன என்று ஆரம்பத்தில் கூறப்பட்டுவந்தது.

இந்தியாவுக்கு கொஞ்சம் செழிப்பு வந்து நகரங்கள் பெருகினால் மகனுக்குதான் மவுசு என்கிற நிலை மாறும் என்று பலர் நம்பினார்கள். ஆனால் நடந்திருப்பது என்னவோ தலைகீழான மாற்றம்.

ஆண் பெண் விகிதாச்சாரத்தில் வித்தியாசம் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப், ஆனால் இந்தியாவோட அதிக பணக்கார மாநிலமும் அதுதான். தலைநகர் தில்லியிலே, ஆண்களோடு ஒப்பிடும்போது பெண் குழந்தைகள் மிகக் குறைவாக இருக்கும் பகுதிகூட மத்தியதர வர்க்கத்தினர், படித்தவர்கள் வாழும் இடங்கள்தான்.

இன்றைக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்ததினாலே இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கருவை பார்ப்பதற்கான அல்ட்ரா சவுண்ட் கருவிகள் அனைத்தும் அதிகாரிகளிடம் பதிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம்.

ஆனால் இன்றைக்கு அவை சின்னதாக எடை குறைவான வடிவங்களிலே வந்துவிட்டதால் அவை எங்கே இருக்கிறது இல்லை என்பதை கண்காணிப்பது மிகுந்த சிரமமாகிவிட்டது. கரு ஆணா பெண்ணா என்று மருத்துவர் சொல்லக்கூடாது என்று இருந்தாலும், யதார்த்தத்திலே சைகைகள், குறியீடுகள் மூலமாக அந்த விஷயம் தெரியப்படுத்தப்பட்டுவிடுகி

The Independent, London

Ten million girls aborted as Indians seek male heirs

By Jeremy Laurance, Health Editor

Published: 09 January 2006

At least 10 million female foetuses have been aborted in India over

the past two decades by middle-class families determined to ensure

they have male heirs.

The figure is revealed by a survey of more than a million homes

published today which found that sex determination in pregnancy and

selective abortion accounted for 500,000 missing girls each year.

Termination of pregnancy on the basis of sex was made illegal in

India in 1994, but better-off families find ways round the law. Many

couples believe their family is unbalanced without a son who will

continue the family name and bloodline, earn money, look after the

family and take care of his parents in old age in a country which has

no social security system.

Population censuses in India show that the number of girls has been

falling steadily for the past 20 years relative to the number of

boys. For every 1,000 boys up to the age of six the number of girls

dropped from 962 in 1981 to 945 in 1991 to 927 in 2001.

Researchers say the most likely reason for the fall is the

availability of ultrasound which allows parents to discover the

gender of their child before birth and has been widespread in India

for most of the past two decades.

Writing in The Lancet, which publishes the findings online today,

Shirish Sheth of Breach Candy hospital, Mumbai, says: "To have a

daughter is socially and emotionally accepted if there is a son, but

a daughter's arrival is often unwelcome if the couple already have a

daughter.

"Daughters are regarded as a liability. Because she will eventually

belong to the family of her future husband, expenditure on her will

benefit others. In some communities where the custom of dowry

prevails, the cost of her dowry could be phenomenal."

Researchers from the University of Toronto in Canada and the

Institute of Medical Education in Chandigarh, India, studied almost

134,000 births in 1997 among 6 million people living in 1.1 million

households who are part of the ongoing Indian National Survey. They

found the sex of the previous child born affected the sex ratio of

the current birth, with fewer girls born to families who had yet to

have a boy.

The effect was more than twice as great among educated mothers

compared with those who were illiterate, but did not vary by religion.

Based on the natural sex ratio from other countries, the researchers

estimated that 13.6 to 13.8 million girls should have been born in

India in 1997 but the actual number was 13.1 million. The deficit

amounts to between 590,000 and 740,000 female births.

Prabhat Jha and colleagues say: "We conservatively estimate that

prenatal sex determination and selective abortion accounts for

500,000 missing girls yearly. If this practice has been common for

most of the past two decades since access to ultrasound became

widespread, then a figure of 10 million missing female births would

not be unreasonable. Women who have already had one or two female

children are clearly at highest risk."

The research team found that when the first birth was a girl, at the

second birth there were 759 girls born to every 1,000 boys. At the

third birth, the sex ratio declined further to 719 girls to every

1,000 boys when the first two births were girls. By contrast, when

the first or second child was a boy, the number of girls born at

second or subsequent births exceeded the number of boys.

The practice of female foeticide has taken the place of infanticide

and is extensive in China as well as India, aided by the development

of ultrasound. Dr Sheth says: "Female infanticide of the past is

refined and honed to a fine skill in this modern guise. It is ushered

in earlier, more in urban areas and by the more educated ... A

careful demographic analysis of actual and expected sex ratios shows

that about 100 million girls are missing from the world - they are

dead."

C 2006 Independent News and Media Limited

தகவல்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா...இப்படித்தான் இந்தியாவில் ஒரு இடத்தில்(சரியான பெயர் தெரியாது தெரிந்தால் பிறகு சொல்கிறேன்) பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களுக்கு உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கக்கூடாது என்பதற்காக உள்ளூர் நாவிதனைக் கொன்று சவரக்கத்தியால் பிறப்புறுப்பில் வைத்தியம் செய்வார்களாம்.இவற்றையெல்லாம

  • தொடங்கியவர்

தகவலுக்கு நன்றி

சூரியமுகி

சினேகிதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.