Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுபோதையில் திரிவதற்குத் தடை :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுபோதையில் திரிவதற்குத் தடை :யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு _

வீரகேசரி இணையம் 6/27/2010 3:13:25 PM

யாழ்ப்பாணத்தின் பொது இடங்களில் மதுபோதையில் அலைவது மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்தார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

"அண்மைக் காலமாக தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மது போதையில் அலைந்து திரிந்து மக்களுக்கு இடையூறு விளைவிப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நயினாதீவு, நல்லூர் மற்றும் நாக விகாரை போன்ற புனித இடங்களிலும், மற்றும் பொது இடங்களிலும் மது போதையில் நடமாடுவதும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி நடப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு மதுபானம் கொண்டு வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இடங்களுக்கு அருகில் மதுபான சாலையில் மதுபானம் விற்பனை செய்யப்படவும் கூடாது.

ஆலயங்கள், பொது இடங்களில் பிள்ளைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி - வீரகேசரி இணையம்

Edited by nochchi

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

மிகவும் நல்லதொரு செயல் இலங்கை காவல்துறைக்கு எம் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதை எவர் செயினும் வரவேற்கும் பண்பு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களைப் பிச்சை எடுக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளியது சிங்கள இனவெறி அரசு

சிங்கள ராணுவக் காடையர்களைக் கொண்டு தமிழ்ப் பெண்கள மீது பாலியல் சேட்டைகளில் ஈடுபடுத்துவது சிங்கள இனவெறி அரசு

ஒட்டுக்குழுவை வைத்துக் கொண்டு அரஜகம் புரிவது சிங்கள இன்வெறி அரசு

ஆலயங்களுக்குச் செல்லும் பெண்கள மீது சோதனை என்னும் பெயரில் அடாவடித்தனம் செய்வது சிங்கள இனவெறி அரசு

இப்படி இன்னும் பல அட்டூழியங்களைச் செய்வது சிங்கள இன்வெறி அரசும் அதன் ஒட்டுக் குழு அடிவருடிகளும்.

இதையெல்லாம் கட்டுப் படுத்த முடியாத சிங்கள இன்வெறி அரசு தமிழ் மக்களை, அவர்களின் சொந்த இடங்களில் நடமாடும் சுதந்திரத்தைப் பறிக்க இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றது

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.