Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கி மூனின் ஆலோசனைகுழு இன்று கூடுகின்றது.

Featured Replies

இலங்கை அரசின் போர்குற்றங்கள் தொடர்பான ஆலோசனை வழங்குவத்ற்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது

"இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது. குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழநாதம்

அவங்க குழு அமைசிட்டாங்க . இனி அவங்க பார்த்துப்பாங்க . நம்மல்லாம் போயி குடிச்சிட்டு கும்மாளம் அடிக்கலாம் வாங்க.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24859

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=100

இன்று ஜாதிக ஹெல உறுமயவினர் கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஐநா நிபுணர் குழு இலங்கைக்கு வருவதை கண்டித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24875

இலங்கையின் எதிர்கால நலனுக்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அவசியம் தேவை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

நாட்டு மக்களுடனான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதென அமெரிக்கா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதென ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்துள்ளார். .

நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். .

மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24835

Edited by akootha

அவங்க குழு அமைசிட்டாங்க . இனி அவங்க பார்த்துப்பாங்க . நம்மல்லாம் போயி குடிச்சிட்டு கும்மாளம் அடிக்கலாம் வாங்க.

ஈழத்தமிழரின் வேதனை இந்திய பைத்தியங்களுக்கு விளையாட்டாக இருக்கிறது.

உண்மை ஒரு நாள் வெளிப்படும்

[ உதயன் ] - [ Jun 28, 2010 04:00 GMT ]

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை விவகாரம் குறித்துத் தமக்கு ஆலோ சனை வழங்குவதற்கென நிபுணர் குழு ஒன்றை நியமித் திருப்பது இந்த நாட்டு அரசாங்கத்துக்குப் பெரும் கடுப்பை உண்டாக்கி உள்ளது. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருப்பதற்கு இலங்கை அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஆரம்பத்தில் விளாசி இருந்தார்.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு. நிறைவேற்று அதிகாரம் உள்ள நாடு. ஐ.நா. நிபுணர் குழு ஒரு தேவை யற்ற விடயம் என்று தமது மட்டத்துக்குள் நின்று கண் டித்திருக்கிறார் அவர். உறுப்பு நாடு ஒன்றின் விடயத்தில் ஐ.நா. செயலர் தலையிட்டிருப்பது எந்த வகையிலும் ஒவ் வாதது என்றும் கருத்துச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ரம்புக்வெல. ரம்புக்வெல கருதிய நடவடிக்கையை, அரசு மேற் கொண்டுவிட்ட தகவலை அதன் தரப்பில் அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். ஐ.நா நிபுணர் குழு இலங்கைக்குள் வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கமாட்டாது என்பது அந்தத் தகவல்; அறிவிப்பு. அரசாங்கம் ஜனாதிபதி ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விட்டதால் ஐ.நா. நிபுணர் குழு அவசியமற்ற ஏற்பாடு என்பது அரசாங்கத்தின் வாதம்; நிலைப்பாடும்

அதுவே. தாமும், சட்டமா அதிபரும் பான் கீ மூனைச் சந்தித்து ஐ.நா நிபுணர் குழு தேவையற்றது என்று பான் கீ மூனிட மும், இலங்கை வந்திருந்த ஐ.நா வின் அரசியல் விவ காரங்களுக்கான செயலாளர் லியன் பாஸ்கோவிடம் எதிர்ப்பைத் தெரிவித்தோம் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ளது நிபுணர் குழுவே. விசாரணைக்குழு அல்ல என்று ஐ.நா சபை கூறினாலும் அது இலங்கை நல்லிணக்க விசாரணைக்குழுவின் பணிகளைக் குழப்பும் என்றும் அமைச்சர் பீரிஸ் கூறு கிறார். தமது இந்தத் தடுப்பு மறிப்புகள் எல்லாம் கைகூடாது என்று உணர்ந்து கொண்டஇலங்கை அரசு, தனக்குச் சார்பு நிலையிலுள்ள ரஷ்யா, சீனா மற்றும் அணி சேரா நாடுகள் இயக்கம் ஆகியவற்றிடம் கூறி நிபுணர் குழு நிய மனத்தை கண்டிக்கச் செய்ய முனைந்துள்ளமை புலப் படுகின்றது. ஆயினும், அமெரிக்கா,நோர்வே ஆகிய நாடுகள் ஐ.நா. நிபுணர்குழு நியமனத்தை ஆதரிக்கின்றன. இலங்கை யில் நடைபெற்ற போரின் இறுதிக் காலத்தில் என்ன என்ன, எப்படி எப்படி நடைபெற்றன என்பதை ஐ.நா நிபு ணர் குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவரும். அதாவது போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் என்னென்ன குற் றங்களை இழைத்தனர், மக்களின் மனித உரிமைகளை எந்த மட்டத்துக்கு மீறின, மனிதாபிமானத்தை எந்தள வுக்கு குழிதோண்டிப் புதைத்தன என்ற உண்மைகளை வெளிப்படுத்தும் என்று அவை நம்புகின்றன.

அது மிகவும் அவசியம் என்றும் உலகலாவிய ரீதியில் அது பிரசித் தப்படவேண்டியது அவசியம் என்றும் அவை கூறு கின்றன. இதற்கிடையில், ஐ.நா நிபுணர் குழு விசாரணை நடத் துவதை இலங்கை அரசு விரும்பவில்லை எனில், ஐக் கிய நாடுகள் சபை மட்டத்திலேயே தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, பரந்த அதிகாரங்கள் உள்ள அசல் ஐ.நா விசா ரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க சம்பந்தப்பட்ட தரப்புகள் உத்தேசித்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள் ளன. அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு, இலங்கையில் நடை பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானப் பிரகாரம் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டால், பலர் அதன் முன் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டு அவர்கள் அதனை ஏற்றுத் தமக்குத் தெரிந்தவற்றை அவிழ்த்து விட்டால், இலங்கை அரசின் கீர்த்தி என்னாகும்? ஏன்?.... நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் விடுதலைப் புலிகள் அரசாங்கம் சமாதானப் பேச்சுக்களின் அனு சரணையாளருமான எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா ஆணைக் குழுவின் முன் தமக்குத் தெரிந்த விவரங்களை சாட்சிய மாக எடுத்துக் கூறினால் நிலைமை இப்போதுள் ளதை விட மேலும் இறுக்கமாகிவிடுமே...!

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத் தில் மே 17 ஆம் திகதி நடேசன், புலித்தேவன் மற்றும் விடுதலைப் புலித்தலைவர்கள் இலங்கை அரசிடம் சரணடைய உதவுமாறு தம்மிடம் கேட்டதாகவும் வெள்ளைக் கொடியுடன் சென்று சரண் அடையுங் கள் என்று தாம் அவர்களிடம் கூறியதாகவும், அவர்கள் சரணடைய விரும்புவது குறித்து அரசாங்கத்தரப்புக்கு முன்னரே அறிவித்துவிட்டதாகவும் அடித்துக் சொல்கிறார் அவர். இந்த விடயத்தின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து ""சுப்பரின் கொல்லைக்குள்'' போனாலும் சொல்ஹெய்ம் போன்ற சர்வதேச ராஜதந்திரி ஒருவரின் சாட்சியமே உறுதிப்படுத்தலே போதுமானதாகிவிடக்கூடும்....! எந்த விவகாரத்திலும் நன்மை தீமைகளை, சரி பிழை களை சீர்தூக்கிப் பார்த்து நிதானமாகச் சிந்தித்து செயற் பட்டாலே உரிய பலன் தரும். ஏற்கனவே மேற்கொண்ட முடிவை அல்லது தீர்மானத்தை நிலை நிறுத்த முயல் வது கெட்டித்தனம் என்று நினைப்பது, பாதகமான விளைவுகளையே தரும். உண்மை, ஏதோ ஒரு நாள் தானாகவே வெளிவரும் என்பது பொது மொழி. பொறுத்திருந்து பார்க்க வேண்டி யதுதான்....

Edited by akootha

ஈழத்தமிழரின் வேதனை இந்திய பைத்தியங்களுக்கு விளையாட்டாக இருக்கிறது.

வாயை புடுங்காதீர். வாங்கி கட்டி கொள்ளாதீர். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.