Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி

இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் கூட அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையான சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர் எனவும், கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களில் அவரது உறவினர்கள் சிலரும் இருந்ததாகவும் லக்பிம தெரிவித்துள்ளது. அது மேலும் குறிப்பிடுகையில்..

புலம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாகப் பிளவுற்றிருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது கே.பியின் அபிமானிகள் என்று ஒரு பிரிவும், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என ஒரு பிரிவாக, புலம்பெயர் தமிழர்கள் இரண்டாகப் பிரிவுற்றுள்ளனராம். இதில் பிரித்தானியாவில் உள்ள பலர் கே.பியோடு தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரும் இதில் அடங்குவர்.

கே.பியை துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யுத்தக் களத்தை திறந்துள்ளதே இப்போது தோன்றியுள்ள நிலையாகும். இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே பெரும் பாடாக உள்ளது. எங்கு குத்தினால் தமிழர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்து வைத்துள்ள இலங்கை அரசு, அதனை தற்போது பாவிக்கிறது. புரியவில்லையா? அதுதான் ""போராளிகளின் புனர்வாழ்வு"" ! இதனைப் பயன்படுத்தி துருப்புச் சீட்டாக கே.பியைக் களமிறக்கி இருக்கிறது இலங்கை அரசு. போராளிகளை வெளியே விட அவர்களுக்கு ஏதாவது கற்கை(கல்வி) கொடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்துகிறதாம். அதனால் பெரும் நிதியை புலம்பெயர் நாடுகளில் திரட்டி அதனை இலங்கையில் பாவிக்க சில தமிழ் பிரமுகர்கள் நேரடியாகவே பிரயத்தனம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க, நாம் ஏற்கனவே எதிர் பார்த்தது போல கே.பிக்கு அரசாங்கம் ஒரு பொது மன்னிப்பை வழங்குவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர் அரசுக்கு விடுதலைப் புலிகளின் பெரும் பணத்தை வழங்கினார், மற்றும் கப்பல்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் என்று செய்திகளை சிங்கள மக்களிடம் திட்டமிட்டு இலங்கை அரசு பரப்பி வருகிறது. எனவே பிற்காலத்தில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சிங்கள மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பாது. அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி என்ற வாசகங்களையே இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது, இந்நிலையில் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகள் தம்மோடு இணைந்தே செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டும் அபாயமும் உள்ளது.

அத்தோடு கே.பியின் வரவால், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்ளஸ், மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர்கள் ஒரு பொது உடன்பாட்டிற்குள் வர சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பி குழுவோடு சென்றிருந்த 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

சரணடைந்த பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை அரசின் இராணுவம் போர்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் புரிந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு இடையே ஊடுருவி போர்குற்ற முன்னெடுப்புக்களைத் தடைசெய்யக்கூடும் அல்லது முன்னெடுக்கப்படும் விடயங்களை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முடியும். எனவே அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவோர் இது குறித்து மிகுந்த கவனம் கொள்வது நல்லது.

இலங்கை அரசின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து, தெளிவுபெறுதல், நல்லது. ஒரு சிலரின் சுயலாபம், மற்றும் அரசியல் நலனுக்காக எமது இனத்தின் மானத்தை அடகு வைக்கவேண்டாம். சூழ் நிலைக் கைதியாக இருக்கும் கே.பி குறித்தும் மிக அவதானமாகச் செயல்படுவதே நல்லது. இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ள கே.பி விரைவில் இந்த மாதிரியான தோற்றத்தையே தமிழ் மக்களிடம் பெறப்போகிறார்.

நன்றி - பதிவு இணையம்

... முதல் முறையாக பதிவார், ஓர் ஆக்கபூர்வமான எழுத்தை பிரசுரித்திருக்கிறார்கள்! ... நன்றிகள் ... "து" பட்டம் கட்டி எழுதாமைக்கு!

... இந்த கேயாண்ணா பீனாவிற்கு புலத்தில் இந்த ஒன்பதுகளுக்கு பின் சில மாடு பிடித்துதிரியும் மாமாக்கள் இருக்கிறார்கள்! அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்! ... மக்கள் அவர்களிடம் சிலவல்ல பல கேள்விகளுக்கு விடை தேடுகிறார்கள், முடிந்தால் அவர்களை பகிரங்க மேடையில் ஏற்ற வேண்டும் ...

... இங்கு சில வதந்திகள், லண்டனிலுள்ள மாமாக்களின் அடையாளங்கள் தொடர்பாக ...

1) எங்கள் யாழ்கள பாண்டருடன் சேர்ந்த லிட்டிலெயிட் கும்பல்

2) தமிழர் நலன்புரி அமைப்பின் பொறுப்பான டாக்குத்தராம்.

3) டீபாம் டீவியில் வரும் டாக்குத்தரும் அடக்கமாம்.

4) சவுத்தோல் பகுதியிலுள்ள அப்புக்காததாம்.

5) லண்டனில் வாணவேடிக்கைகள் செய்த சில கவுண்ஸிலருகளாம்.

6) ....

... இந்த மாமாக்கள் சிலர் தங்கள் முன்னைய நடவடிக்கைகள் இங்கு தெரியவரின் தம் வேலைகள் அம்போ ஆகிவிடும் என்றுதான் சரணாகதி அடைந்தவர்கள் என்று கதைக்கிறாங்களடாப்பா?. இந்த மாமாக்களில் சிலர், சில முன்னால் புலிகளை பிளாக்மெயில் செய்வதாகவும் சொல்கிறார்களடாப்பா???? ...

... ஒரு உண்மையை இங்கு சொல்ல வேணும், உந்த கேயாண்ணா பீனாக்களை அம்பலப்படுத்துவதில் மாற்றுக்கறுத்து மாணிக்கங்கள் புலிகளை முந்திக்கொண்டு ஓடுகிறார்களாம்???? ...

Edited by Nellaiyan

... மாமாக்களை கேயாண்ணா பீனாவை வைத்து பிடிக்கப்படுவதற்கு முன்னுக்கே, இங்கு லண்டனில் ஹம்ஷா நானா சிலரை பிடித்து விட்டாராம். அதுவும் போன வருசம் செப்ரம்பர் மாதத்துக்கு முன்னுக்கேயே இந்த மாமாக்கள் நானாவின் வலையில் வீழ்ந்து விட்டார்களாம்!!

... இங்கு வெம்பிலி பகுதியில் உள்ள ஒரு பீச்சுக்கு முன்னுக்கு வாற பாம் றெஸ்ரோரன்டில் தானாம் சாப்பாடு போட்டவராம் நானா!!! ... முதலில் அங்கு விருந்துக்கு போன மாமாக்கள் மறுத்தவர்களாம், தாம் அப்படிப் போகவில்லை என்று, ஆனால் மாமாக்களின் கெட்டகாலம் விருந்தை சிறப்பாக சீசீரிவி படம் பிடித்துட்டுதாம் ... எண்டுறாங்களடாப்பா!!!???!!!!!

9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

இச்செய்தி 100% உண்மை!!! ... இதனை ஒன்பதுகளில் ஒன்றாக சென்ற ... முன்னால் திம்பு ரெலோ ... உறுதிப்படுத்தினாராம்! :)

... மாமாக்களை கேயாண்ணா பீனாவை வைத்து பிடிக்கப்படுவதற்கு முன்னுக்கே, இங்கு லண்டனில் ஹம்ஷா நானா சிலரை பிடித்து விட்டாராம். அதுவும் போன வருசம் செப்ரம்பர் மாதத்துக்கு முன்னுக்கேயே இந்த மாமாக்கள் நானாவின் வலையில் வீழ்ந்து விட்டார்களாம்!!

... இங்கு வெம்பிலி பகுதியில் உள்ள ஒரு பீச்சுக்கு முன்னுக்கு வாற பாம் றெஸ்ரோரன்டில் தானாம் சாப்பாடு போட்டவராம் நானா!!! ... முதலில் அங்கு விருந்துக்கு போன மாமாக்கள் மறுத்தவர்களாம், தாம் அப்படிப் போகவில்லை என்று, ஆனால் மாமாக்களின் கெட்டகாலம் விருந்தை சிறப்பாக சீசீரிவி படம் பிடித்துட்டுதாம் ... எண்டுறாங்களடாப்பா!!!???!!!!!

இன்னும் சில உண்மைகளையும் தெரிந்து கொண்டீர்கள் எண்றால் பூரணமாக இருக்கும்... இங்கை ஏற்படுத்த பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரண கர்த்தா யார், யாரால் திட்டமிட்டு குழப்பபட்டது, என்பனவும், அவர்களின் நீண்ட திட்டமிடல்களையும் புரிந்து கொள்ளலாம்...!

யாழ் களத்துக்கு அடிக்கடி வருகை தரும் டி பி எஸ் ஜெ யில் இருந்து பலருடனும் KP யும் , இந்திய , இலங்கை உளவுப்பிரிவும் சேர்ந்து நடத்திய தமிழர்களை பிரிக்கும் வேலையை புரிந்து கொள்ளல் அவசியமானதும் கூட...

http://www.pathivu.com/news/7319/60//d,article_full.aspx

இந்த கட்டுரையில் இருப்பவை அனைத்தும் உண்மையானவை... ஆனால் இந்தக்கட்டுரை எனக்கு தெரிய யாழில் இரண்டு முறை வேறு வேறானவர்களால் இணைக்கப்பட்டு நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது... காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை... ஆகவே நீங்கள் அங்கு போய் படித்துக்கொள்ளுங்கள்...

இச்செய்தி 100% உண்மை!!! ... இதனை ஒன்பதுகளில் ஒன்றாக சென்ற ... முன்னால் திம்பு ரெலோ ... உறுதிப்படுத்தினாராம்! :)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32079

&

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72904

Edited by தயா

... மார்ச் 30, லண்டன் ஹீத்ரொ விமான நிலையம், இரவு 9.30 மணி, கொழும்பு செல்லும் சிறிலங்கன் எயார் லைன்ஸுக்காக காத்திருக்கும் லவுண்ஞில், ஒரு கண்ணாடி போட கறுத்த உருவத்துக்கு அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள்(பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு), உரையாடல்கள் ஆங்கிலமும், தமிழும் மாறி மாறி ... பின்பு அவ்வுருவம் விமானத்துக்குள் சென்று உட்கார்ந்ததாம், அமோக வரவேற்பாம்...

... அவ்வுருவம், விமானம் கொழும்பு கட்நாயக்கா விமான நிலையத்தை அடைந்தவுடன், எல்லோரிடமும் சேர்ந்து இறங்கியதாம், ஆனால் வெளியில் வரும்போது இராஜ மரியாதைகளுடன் வேறு வழியால் கூட்டி செல்லப்பட்டாராம்! ...

அவ்வுருவம் ... டீபாம் டீவியில் உலாவும் டாக்குத்தராம் என்று சொல்லுகிறாங்களடாப்பா!!!!!!!

இந்த உருவத்தையும் எம் பத்திரிகைகள், இனையத்தளங்கள் ... பேட்டி எடுத்து ... உண்மையை அம்பலப்படுத்தலாமே????????

  • கருத்துக்கள உறவுகள்

தங்களிடம் கேட்பது...

எவராயினும் என்னாவாவது செய்யட்டும்

கொஞ்ச காலத்துக்கு அவர்களை விட்டுவிடுங்கள்

உண்மை வரட்டும்

நல்லது நடக்கட்டும்

கெட்டது தெரியட்டும்

முதலில் அவர்கள் யார்என்பதை மக்களுக்கு இனம் காட்டட்டும்

உண்மை முகம் தெரியவரட்டும்

எங்கே போய் என்ன ஆட்டம் போட்டாலும் மக்களுக்கு முன் வந்தே ஆகவேண்டும்

எமது கையிலேயே இறுதி முடிவு...

வரவிடுங்கள்

நன்றி

கே பி யை வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாக யார் அறிவித்தது?

கே பி யை வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாக யார் அறிவித்தது?

கிளிநொச்சி விடுப்பட்ட போது ஒரு கடிதம் வாங்கினவர்... இந்தியாவுடன் பேச அழைக்கிறார்கள் அனுமதி வேணும் எண்டு... அந்த கடிதத்தை வைத்து பிரகடனப்படுத்திக்கொண்டார்...

தயா

கே.பி க்கு மட்டும் தானோ கடிதம் கொடுக்கப்பட்டது.

அல்லது 2002 வரை கே.பி யுடன் வேலை செய்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டதா?

மீண்டும் வேலை செய்வதற்கு.

கிளிநொச்சி விடுப்பட்ட போது ஒரு கடிதம் வாங்கினவர்... இந்தியாவுடன் பேச அழைக்கிறார்கள் அனுமதி வேணும் எண்டு... அந்த கடிதத்தை வைத்து பிரகடனப்படுத்திக்கொண்டார்...

தாய்லாந்தில் கே பி கைது செய்யப்பட்டார் என்ர செய்தியும் உடனே தாய்லாந்துக்கு ஓடி சென்ற வடக்கத்திய வெளிவிவகர அமைச்சரின் செய்தியும் கிளிநொச்சிக்கு தெரியாதோ?

தாய்லாந்தில் கே பி கைது செய்யப்பட்டார் என்ர செய்தியும் உடனே தாய்லாந்துக்கு ஓடி சென்ற வடக்கத்திய வெளிவிவகர அமைச்சரின் செய்தியும் கிளிநொச்சிக்கு தெரியாதோ?

KP எண்ட பெயரிலை அண்று கைது செய்யப்பட்டது வேறு ஒருவர்...! அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஆங்கில இணையம் நடத்தியவர்... அவர் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு இப்போ ஐரோப்பிய நாடு ஒண்றில் இப்போது தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவான இணையம் ஒண்டை நடத்துபவர்...

தயா

கே.பி க்கு மட்டும் தானோ கடிதம் கொடுக்கப்பட்டது.

அல்லது 2002 வரை கே.பி யுடன் வேலை செய்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டதா?

மீண்டும் வேலை செய்வதற்கு.

எனக்கு தெரிய KP க்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டது...! KP யுடன் வேறு ஆக்கள் எல்லாம் நீக்கப்பட்டார்கள் என்பது எனக்கு புதிய தகவல்...! அப்படி நான் யாரையும் அறியவில்லை...

.... கேபியை ஒதுக்கியதற்கு பின்னர், கேபி கண்காணிக்கப்படவில்லை, அவர்/ அவரின் மனைவி/பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்கள் பல வருடங்களாகியும் மாற்றப்படவில்லை! பெயரில், அவரின் நிஜ உருவம் தெரியாது, இறுதிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ... விடப்பட்ட பிழைகளை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

.... கேபியை ஒதுக்கியதற்கு பின்னர், கேபி கண்காணிக்கப்படவில்லை, அவர்/ அவரின் மனைவி/பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்கள் பல வருடங்களாகியும் மாற்றப்படவில்லை! பெயரில், அவரின் நிஜ உருவம் தெரியாது, இறுதிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ... விடப்பட்ட பிழைகளை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

உண்மையை சொன்னால் அவருடன் கூட வேலை செய்தவர்களால் அவர் விலக்க பட்ட பின்னர் கூட அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்து இருந்தார்கள்... அவர் பிழையாக செயற்படுவார் எண்று யாரும் நினைத்து கூட பார்த்து இருக்கவில்லை... அதுதான் உண்மை...!

KP எந்த விதமான பெரிய பிரச்சினையாலும் விலக்கி வைக்கப்படவில்லை... நீண்டகாலமாக அதிகப்படியான செலவுகளும் அதுக்கான கணக்குகளை கொடுக்காமையும் தான், நீயே இப்படி செய்தால் உனக்கு கீழை இருப்பவங்கள் எப்படி ஒழுங்கா இருப்பாங்கள் எண்டு கேட்டு அவரிடம் இருந்து பொறுப்புக்கள் வாங்கப்பட்டன...!

தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது கருணாவுக்கும் KP க்கும் நேரடியாக ஏற்பட்டு இருந்த தொடர்பு தொடர்ந்ததை யாரும் தெரிந்து கொள்ள இல்லை... KP யின் மாற்றத்துக்கு கருணாவின் பங்கு அளப்பரியது...

KP மட்டும் அல்ல வேறு யாராக இருந்தாலும் நீங்கள் விசுவாசமாக தான் இருக்கிறார்களா எண்று பார்க்க யாராலும் பரீட்சை வைத்து கொண்டு இருக்க முடியாது... இருந்த ஆள் பற்றாக்குறைக்குள் இதவேறை செய்து இருக்க வேண்டும் எண்டு சொல்வது நடக்க கூடிய விடயமும் இல்லை...

Edited by தயா

தாய்லாந்தில் நடந்த பேச்சுக்களின் போது கருணாவுக்கும் முP க்கும் நேரடியாக ஏற்பட்டு இருந்த தொடர்பு தொடர்ந்ததை யாரும் தெரிந்து கொள்ள இல்லை... முP யின் மாற்றத்துக்கு கருணாவின் பங்கு அளப்பரியது...

கருணா, கே.பி என்பர்களுக்கு இணையாக பலர் புலத்தில் திரைமறைவில் இருக்கின்றார்கள்.

Edited by aathirai

கருணா, கே.பி என்பர்களுக்கு இணையாக பலர் புலத்தில் திரைமறைவில் இருக்கின்றார்கள்.

அடையாளப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருப்பது மிகவும் உண்மை... காலம் எல்லா பாம்புகளையும் வெளியில் கொண்டு வரும் எண்டு நம்புகிறன்... KP க்கு ஒருவருசம் எண்டால் இவர்களுக்கும் எண்டும் காலம் இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.