Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்ற்போலினால் தேடப்படும் நபரை அண்மையில் சந்தித்த மருத்துவட் அருண்குமாரின் பேட்டி.

Featured Replies

  • Replies 78
  • Views 8.3k
  • Created
  • Last Reply

2006 ம் ஆண்டி KP யை சிங்கள கூட்டம் சந்திச்சு இருக்கிறது.... ம்ம்ம்

நண்றி... இவர் இனி இலங்கை பக்கம் நினைச்சு கூட பாக்க முடியாது...!

நண்றி தமிழ் நெற்... காலத்துக்கு தேவையானது இது...

Edited by தயா

  • தொடங்கியவர்

கோத்தபாயவுடனான சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு

கடந்த சனி, ஞாயிறு (26,27-06-2010) தினங்களில் ஒளிபரப்பான ஜி.ரி.வி செய்திகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் கோத்தபாயவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மருத்துவர் அருட்குமார் சிறீலங்காவிற்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்டது எனவும், அவரது பயணம் பற்றியோ, அன்றி கோத்தபாயவைச் சந்திப்பது தொடர்பாகவோ அவர் பிரித்தானிய தமிழர் பேரவையிடம் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதையும், எமது பிரதிநிதியாக அவர் அந்த சந்தி;ப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக ஆராய ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவையின் கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதிலும் எந்தவித உண்மையும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். நேற்று (27-06-2010) இடம்பெற்ற கூட்டம் பிரித்தானிய தமிழர் பேரவையின் எதிர்கால பரப்புரைச் செயற்பாடுகள் பற்றிய பட்டறை என்பதும், இது ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இடம்பெற்றதுடன், பிரித்தானியாவின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து பலர் கலந்துகொண்டனர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://meenakam.com/?p=1367

  • தொடங்கியவர்

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. துப்பாக்கி கிடையாது. பீரங்கி கிடையாது. இதில் யார் அதிகம் பொய் பேசி வெற்றி பெறுவது என்பதுதான். பொய்யினால் மனதை நிலைகுலைய செய்து, அடுத்தக்கட்டத்திற்கு நம்மை நகரவிடாமல் தடுக்கும் உளவியல் போர். சிங்கள பாசிச அரசு இப்போது இப்படிப்பட்ட மனித மாண்புக்கு எதிரான, மனதை பாழடிக்கும் ஒரு போருக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை செய்த தவறுகளுக்கு காரணங்களைத் தேடவும், அந்த காரணங்கள் உண்மைதான் என சாட்சியம் அளிக்கவும், அவர்களுக்கு துரோகிகள் தேவைப்படுகிறார்கள். தமது இன, மான அடையாளங்களை இழப்பதற்கு இவர்களுக்கு இப்போது தேவை சொகுசான வாழ்வு.

தம்மை இழந்து இனத்தை காத்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மனதை, அவர்களின் வீர அடையாளத்தை, அவர்களுக்குள் எரிந்து கொண்டிருந்த விடுதலை தாகத்தை இந்த தரங்கெட்ட சிலரால் அணைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். கருணா, டக்ளஸ் என வரிசையிலே இப்போது சேர்ந்திருப்பவர் கே.பி. கே.பி.யை வைத்து தமது போர் குற்ற நடவடிக்கைகளை சரி என்று சொல்வதற்கு சிங்கள பாசிச அரசு இவரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. 2009 ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு இணையத்தளங்கள் கே.பி.யைக் குறித்து பக்கம் பக்கமாக தகவல்களை வாசித்தன. சிங்கப்பூரில் இருந்து கே.பி. கடத்தப்பட்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் வந்த தகவல்களுக்கு முன்னால், தமிழ் தேசிய அடையாளத்தை சீர்குலைக்கும் வண்ணமாக மேதகு.தேசிய தலைவர் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள அளப்பரியா நம்பிக்கையை சிதைக்கும் வண்ணமாகவும் கே.பி.யின் அறிக்கைகள் அமைந்தன.

இப்போது வரும் செய்திகள் கே.பி.யின் மூலமே எமது விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கும், சிங்கள பாசி அரசு தாம் செய்த குற்ற செயல்களில் இருந்து தப்பிக்கவும் புதிய முயற்சிகளை கைக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நிலையாக நிற்கட்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலைகளில் நாம் எப்படி நமது வலிமையை நிரூபிப்பது என்பதிலேதான் நம்முடைய போராட்டத்தின் தன்மை இருக்கப்போகிறது. திசை மாறாமல் நமது போராட்டத்தை சரியாக வழிநடத்த இப்போது நமக்குத் தேவை கருவிகள் அல்ல, கருத்துக்கள். கருத்துக்களால் செல்ல வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். மார்டின் லூதர் கிங் கூறுவதைப்போல, நாம் நெருக்கடியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகும்.

இப்போது நம்முடைய போராட்ட வடிவம் நெருக்கடியான ஒரு தளத்திலே நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்ட முறையை இந்த காலத்தில் நாம் எப்படி நடத்தப் போகிறோம் என்பதிலேதான் நமக்கான விடுதலை உறுதிசெய்யப்பட இருக்கிறது. முதலில் ஒட்டுமொத்த உலக உறவுகளுக்கு ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நேர்மறை எண்ணம் வளர வேண்டும். நமக்கான விடிவு என்பது, நமக்கான முடிவு என்பது, நமக்கான வாழ்வு என்பது தமிழீழம் என்கின்ற ஒற்றைச் சொல்லிலேதான் முடங்கி இருக்கிறது என்பதை நாம் தெளிவாக உறுதியாக உணரவேண்டும்.

தமிழீழம் என்கின்ற இந்த தாரகச் சொல், நம்மிலிருந்து நம் மனங்களிலிருந்து எந்த நிலையிலும் மாறுபடக்கூடாது. தமிழீழம் எவ்வாறு நம்முடைய மனச் சிறைகளில் விடுதலைக்காக ஏங்கி இருக்கிறதோ, அதேப்போன்றே மேதகு தேசிய தலைவர் மூலம் தான் நமக்கான விடுதலை உறுதி செய்யப்படும் என்ற கூற்றும் நமக்குள் இருந்து விலகக்கூடாது. இடைவிடா நமது செயல்பாடு உலகெங்கும் தமிழீழம் என்கின்ற அடையாளத்திற்கு ஆதரவாக அணித்திரள உறுதுணைப் புரிய வேண்டும். இந்த நேரத்தில் நமது மனதை சிதைக்கும் வண்ணமாக உளவியல் தாக்கத்தை தொடங்கியிருப்பதின் செயல்பாடாகத்தான் தமிழீழத்திலிருந்து புதியப் புதிய கருத்துக்கள், சிங்கள பாசிச அடக்குமுறையாளர்களால் உருவாக்கப்பட்டு அவை காற்றிலே விதைக்கப்படுகிறது.

இந்த சிங்கள பாசிச வெறியர்கள் விதைக்கும் வார்த்தைகள், சிந்தனைகள், கருத்துக்கள், செய்திகள் நம்மை நிலைகுலைய வைக்கும் என சிங்கள இன வெறியர்கள் எதிர்பார்க்கலாம். தமிழர்களின் மன அழுத்தத்தை அவர்களின் மன உறுதியை எப்படி சிதைப்பது என்பதிலேதான் இப்போது சிங்கள அரசு உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் இரும்பைவிட வலிமையான மனம் படைத்தவர்கள் என்பதை நிரூபிப்பவர்களாக, எந்த நிலையிலும் அச்சப்படாமல், எந்த துயருக்கும் கலங்காமல் நம்மை இழப்பதின் மூலமே நமக்கான வரலாற்றை எழுதி வைக்க முடியும் என்கிற அடிப்படை உறுதியை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஒழிய, இந்த பாசிச வெறியர்களின் அடக்குமுறை நிறைந்த, ஆணவம் மிக்க நமது சுயமரியாதைக்கு எதிரான செயல்பாடுகளை நம்மால் வெற்றிக் கொள்ள முடியாது. ஆகவே, களத்திலே கருவி ஏந்தி தமது இன்னுயிர் ஈந்த, அந்த கார்த்திகை பூக்களின் நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு இன்று சிங்கள பாசிச வெறியர்களிடம் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீரர்களின் எண்ணங்கள் வடிவமைக்கப்பட வேண்டிய பணியை உலகம் தழுவிய நமது உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எதை குறித்து அவர்கள் சிந்தித்தார்களோ, அதை அடைய அவர்கள் முயற்சித்தார்களோ, அதை முழுமைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நம்மிடம் குவிந்து கிடக்கிறது. இன்றுவரை தமது சிங்கள பாசிச வெறியை விட்டுக்கொடுக்காத ராசபக்சே சகோதரர்கள், மேலும் மேலுமாய் தம்மிடம் இருக்கும் ஆற்றலை பொய் என்ற பெரும் கருவியால் வெல்ல பெரும் முயற்சி எடுக்கிறார்கள். ஆகவே, நாம் முன்னைக் காட்டிலும் இப்போது உறுதியாக செயல்பட வேண்டும். யார் இடித்துரைத்தாலும், யார் நம்மை அடக்க முனைந்தாலும், அத்தனையும்மீறி நமக்கான லட்சியம் தமிழீழம் மட்டும்தான் என்று சொல்லக்கூடிய துணிவு, தமிழீழம் நிச்சயம் பெறுவோம் என்கிற நம்பிக்கை, மேதகு தேசிய தலைவர் அவர்களின் தலைமையில் மலரப்போகும் தமிழீழத்தில் நாம் நடைபயில்வோம் என்ற மகிழ்ச்சி நிறைந்த எண்ணம் நமக்குள் மேலும் மேலுமாய் வளர வேண்டும்.

இப்படி உளவியல் ரீதியாக நம்முடைய எண்ணங்கள் வளர்ச்சி பெறும்போது, நம்முடைய எண்ணங்கள் புற சூழ்நிலைகளாக மாறும். இந்த புறச் சூழல் தன்மைகள் நம்முடைய போராட்டத்தை உந்தித் தள்ளும். அடக்க முடியாத மாபெரும் ஆற்றலை நமக்குள் நம்முடைய சிந்தனையை வளர்க்கும். எந்த நிலையிலும் நம்முடைய மனங்களில் அவநம்பிக்கை துளிர்விடக் கூடாது. எந்த நிலையிலும் நம்முடைய எண்ணங்களுக்குள் சந்தேகம் எழக்கூடாது. வெற்றி என்கின்ற ஒரே வார்த்தை, தமிழீழம் என்கிற ஒரே லட்சியம், நமது மனதில் எப்போதும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும். யாராலும் நம்மை தோற்கடிக்க முடியாது என்கின்ற நம்பிக்கையை நமக்குள் நாம் மேலும் மேலுமாய் வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது என்று சொல்பவர்களை நான் வெறுக்கிறேன் என்று மாவீரன் நெப்போலியன் அடிக்கடி சொல்லுவான்.

ஆகவே, நாமும்கூட தமிழீழம் அமையாது என்று சொல்பவர்களை வெறுக்க பழக வேண்டும். தமிழீழம் என்பது ஏதோ ஒரு காலத்திற்காக ஏற்பட்ட கருத்து அல்ல. இது ஒரு கடமை. ஒரு இனத்தின் அடையாளத்தை காப்பதற்கான கடமை. ஒரு மொழியின் அடையாளத்தை வேளிபோடுவதற்கான கடமை. நமது இனத்தின் உரிமையை, தன்மானத்தை, நமது மொழியின் நாகரீகத்தை, பண்பை, மொத்தத்தில் தமிழன் என்கிற அடையாளத்தை இந்த மண்ணிலே பதிவு செய்வதற்கான கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே, கே.பி., கருணா, டக்ளஸ், என தொடர்ந்து பல்வேறு பெயர்களைச் சொல்லி, இவர்களே சொல்லி விட்டார்கள், இவர்களே சரணடைந்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பரப்பப்படலாம். நாம் இந்தப் போராட்டத்தை துவக்கியது, இவர்களைக் கொண்டல்ல. இவர்கள் நமது போராட்டத்தை நடத்திச் செல்வதற்காக இடையில் வந்தவர்கள், இடையிலேயே சென்றுவிட்டார்கள்.

ஆனால் இந்த போராட்டத்தைத் துவக்கிய மேதகு தேசிய தலைவர் ஒருவேளை தமிழீழம் என்ற நிலையிலிருந்து நாம் மாறினால், என்னை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று தமது மெய்காப்பாளர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். ஆக, இந்தப் போராட்டத்தை, தமிழீழம் என்கின்ற உயரிய கோட்பாட்டை, தமிழீழம் அடைவதற்கான சமர்களத்தை, மரபு சமர் கொண்ட ஒரு புதிய உத்வேகத்தை உண்டாக்கி, அதை வழிநடத்திய மாபெரும் ஆற்றலாளன் வாழும் எல்லாலன் மேதகு தேசிய தலைவர் அவர்கள் வாய்மொழியால் வரும் வார்த்தையை தவிர, வேறு எதுவும் நம்மை சலனப்படுத்தக் கூடாது. காரணம், இந்த போராட்டத்திற்காக, நமது லட்சியத்திற்காக நாம் அடைந்த, நாம் இழந்து, நாம் கொடுத்த பலிகள், பொருட்கள், நிலங்கள், வாழ்வு கொஞ்சம் நஞ்சமல்ல. ஆகவே, சரியான புரிதல், சரியான லட்சியத்தை நோக்கி, சரியான பாதையில் நாம் நடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பணத்திற்காக சில ஊடகங்கள் நம்மையும் குழப்பி, நமது லட்சியத்தையும் குழப்பலாம்.

ஆனால் நாம் குழப்பிப் போகாமல் தெளிவாக, அழுத்தமாக, உறுதியாக நமது லட்சியத்தில் நிற்போம். நமக்கான தேவை தமிழீழம் என்கின்ற நமது நாடு. இது நாம் வேறொருவனை கொள்ளையடிப்பதல்ல. நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை நாம் பெற்றுக்கொள்ளவே இந்த சமர்களத்தில் நிற்கிறோம். எந்தஒரு அடக்குமுறையாளனும் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. எந்தஒரு ஆட்சியாளனும் தமது அரச பயங்கரவாதத்தை கொண்டு நீடித்து வாழ்வதில்லை. இது ராசபக்சேவுக்கும் பொருந்தும். ஆனால் போராளிகள், லட்சியவாதிகள் தொடர்ந்து இம்மண்ணிலே வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கோடி ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் குரல் வேறொரு மனிதனின் வாய்வழியாக நமக்கு கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

ஆகவே அடங்க வேண்டிய நிலையில் நாம் இல்லை, அடக்கி நாம் நமது ஆளுகையை வென்றெடுக்கும் நிலையில் இருக்கிறோம். சிங்கள பாசிச அரசு நடத்தும் இந்த உளவியல் சமரை முறியடிப்போம். உயர்ந்த நமது லட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம். வரலாற்றில் தமிழீழம் அமைவதற்கு துணைபுரிந்தவர்களின் பட்டியலில் நமது பெயரையும் இணைப்போம். அதற்கான காலமே உங்கள் கரங்களில் இருக்கிறது. போராடுவோம். தொடர்ந்து போராடுவோம். நமது லட்சியத்தை வென்றெடுக்கும்வரை போராடுவோம். எப்போது தமிழீழ குடியரசு அமைகிறதோ, அதுவரை நமது போராட்டத்திற்கு ஓய்வில்லை. நம்முடைய தன்மானத்தை இழந்து வாழ்வதிலே ஒருபோதும் நமக்கு விருப்பமில்லை. தமிழீழ தேசிய தலைவரின் தலைமையிலே தொடர்ந்து முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். தமிழீழ குடியரசை விரைந்து அமைப்போம்.

http://viduthalaivengaigal.blogspot.com/2010/06/blog-post_28.html

PS: முடிந்தால் ஒரு கடிதத்தை எழுதி தமிழீழ விடுதலைக்கு வலுச்சேருங்கள்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=100

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அருண்குமார். இயற்கையே, தமிழ்சாதியை என்ன செய்ய நினைக்கிறாய்?

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராளிகளின் மாவீரர்களின் மாண்ட மக்களின் கனவுகளை சுமந்து கொண்டு அரசியல்ரீதியில் உறுதுடன் செயற்படக் கூடிய இளைய தலைமுறை ஒன்று தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்கும் நிலை வந்தால் அன்றி.. கே பி.. கூ பி எல்லாம் தமிழ் மக்களை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து தங்கள் பிழைப்பை பார்த்துக் கொள்ள ஒருபோதும் பின்நிற்கமாட்டார்கள்.

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பின் இணக்க அரசியலாலும் விடிவில்லை.. கே பியின் காட்டிக்கொடுப்பு அரசியலாலும் விடிவில்லை. இது எல்லாம் கடந்த காலங்களிலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் தான். திரும்பத் திரும்ப ஏன் தான் இவர்கள் மக்களை ஏமாற்ற மக்களும் ஏமாந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இன்றைய நிலையில் எமக்குத் தேவை தெளிவான விலைபோகாத தலைமையுடன் இயங்கக் கூடிய இளைய தலைமுறை. அதனை நாடு கடந்த தமிழீழ அரசு தான்ன் ஏற்படுத்திக் கொடுக்க முன் வர வேண்டும். எமது போராட்டம் பல பரிமான நிலையை அடையாவிட்டால்.. அது மிக இலகுவாக எதிரி ஊடுருவி சீரழிக்கப்படும் நிலைக்கே தள்ளப்படும்.

துரோகங்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டு இருப்பதிலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிரி எவ்வாறு எல்லாம் செயற்படுவான் என்பதை எதிர்பார்த்து அதன்படி திட்டமிட்டு செயற்படக் கூடிய தன்மையே தமிழர்களுக்கு இப்போ அவசியம்.

ஒன்றுமட்டும் புரிகிறது.. சிங்களவன் இந்தியாவிற்கு ஆப்படிக்க தருணம் பார்த்துத் திரிகிறான் என்பது. எனவே இந்தியாவிற்கு இந்த நிலை புரியாமல் இல்லை. அது மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் நிற்கிறது. அந்த நாட்டின் இந்த நிலையையும் எமக்காக பாவித்துக் கொள்வதோடு மேற்குலகின் சிறீலங்காவுடனான உறவு அவர்களின் நலன்சார்ந்து இன்று கண்டுள்ள நெருக்கடி நிலையையும் எமக்கு சார்ப்பாக பாவித்துக் கொள்ள வேண்டும். இவை தவிர தமிழர்கள் ஏனைய நாடுகளோடும் பேசி உறவுகளை பலப்படுத்த வேண்டும். ரஷ்சியா போன்ற தேசங்களோடும் போய் பேச வேண்டும். ரஷ்சியா ஒன்றை எதிர்கிறது என்றால் கூட்டமைப்பு வாழாது கிடக்கிறது. அது மக்கள் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டும் செயலற்றுக் கிடக்கிறது. ரஷ்சிய தூதரகத்தை சந்தித்து நிலைமைகளை விளக்கி ரஷ்சிய உயர்மட்டத்தோடு பேரம் பேசியாவது ரஷ்சியாவை வழிக்கு கொண்டு வர முனைய வேண்டும். இது வெறும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தால்.. எமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

சிங்களவனா எதனையும் எமக்குத் தரப்போவதும் இல்லை..!

.... நன்றிகள் தமிழ்நெற் .... அன்று தொடக்கம் கேபியின் உண்மை முகம் இதுதான் என்று உறுதியாக நின்ற தமிழர்களின் தளம் ...

... நாம் அவசரப்பட்டு அவரவருக்கு "து" கொடுப்பதற்கு முதல் ....

.... சிலர், உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனை இயல்பாகவே உள்ளவர்கள். மக்கள் துன்பப்பட ஏதாவது எம்மாலானது செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் ... அவர்கள் இலகுவாக சிலரின் வலைக்குள் வீழும் , பிழையாக வழி நடத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்களும், சந்தர்ப்பமும் உள்ளது ! ....

... இதுதான் டாக்டர் அருட்குமாருக்கும் நடந்துள்ளது. ஏறக்குறைய அவர், தன் வாழ்க்கையை எம்மக்களுக்காக அற்பணித்தவர். தனது ஒரு வீட்டையே விற்று மக்களை காப்பாற்ற கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். ...

... இன்னுமொரு டாக்டர், கொழும்பில் ஒரு பார்மஸி உருவாக்கி, அதன் மூலம் கடந்த காலங்களில் வட/கிழக்கு பகுதிகளுக்கு தடைகளையும் மீறி மருத்துவ பொருட்கள் அனுப்பி வந்தவராம்(பின்னணியில் வேறு சில டாக்டர்களும் சேர்ந்து), அது சில மாதங்களின் முன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கைகளுக்கு அகப்பட்டவுடன், அந்த டாக்டரின் இங்கு மருத்துவ தொழிலே பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவானதாம், அவர் பிளாக்மெயில் செய்யப்பட்டு(?) கேபியுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என ஒரு நண்பர் சொன்னார்! ....

... ஏதோ சென்றார்கள், பட்டுத் திரும்பியிருக்கிறார்கள் என்று சொல்வதிலும் பார்க்க ... இப்பொழுது அது நல்லதுக்கத்தான் என சிந்திக்க வைக்கிறது! இங்கு குழம்பியிருந்த பலரை கண் திறக்க வைத்திருக்கிறது!

எல்லாவற்றுக்கும் மேலாக ... காஸ்ரோக்களோ, நெடியவன்களோ, உருத்திரகுமாரர்களோ இல்லை தமிழ் மக்களை சிங்களம் ஒருபோதும் வாழ்விடாது என்ற கொள்கை கொண்ட மாற்றுக்கருத்து மாணிக்கங்களோ, ... ஒரு பொதுகொள்கையின் அடிப்படையில் செயற்பட முன்வர வேண்டும்!!! உங்களுகளுக்குள் உள்ல ஈகோக்களை களைந்து தொடர்ச்சியான சந்திப்புகள், தொடர்பாடல்கள் மூலம் சர்வதேசம் ஏற்கக்கூடிய ஒத்த இலக்கை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கும்! இதுதான் இன்று நடைபெறும் இக்குத்துகளுக்கு நாம் செய்யும் மாற்றீடாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலில் கேபியை பற்றி கூடாமல்[பணத்திற்காக விலை போனவர் என] எழுதியவுடன் யாழ் அதை தூக்கி விட்டு இருந்தது...நாங்கள் சொல்லும் போது நம்பவில்லை :)

நான் முதலில் கேபியை பற்றி கூடாமல்[பணத்திற்காக விலை போனவர் என] எழுதியவுடன் யாழ் அதை தூக்கி விட்டு இருந்தது...நாங்கள் சொல்லும் போது நம்பவில்லை :)

இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதால் பலர் பலவிதமான குழப்பத்துக்கு உள்ளாக்க பட்டு இருந்தனர்...! வெளிப்படையாக சொல்லக்கூடிய புலிகள் எல்லாம் KP சரண் அடையமுன்னமே இன்னல்களுக்குள்ளாக்க பட்டன... புலநாய்வு பிரிவு , விடுதலைப்புலிகள் எனும் பெயரில் எல்லாம் அறிக்கைகள் பறந்து கொண்டு இருந்தன... KP ஐரோப்பா முழுவதுமாக மே 18 க்கு பிறகு சரண் அடையும் வரைக்கும் குறைந்தது 1000 பேருடனாவது தொலைபேசியில் பேசி தலைவர் இறந்து விட்டார் எனது தலைமையை ஏற்றுக்கொள்ளுங்கள் எண்று வேண்டு கோள் விடுத்தார்... அதில் சிலர் KP யை நம்ப முற்பட்ட்டனர்... பலர் கழண்டு கொண்டனர்...

KP யை தலைமையாய் ஏற்றுக்கொண்டவர்கள் KPயின் தலைமையை ஏற்காத புலிகளை நோக்கி அவதூறுகளை பரப்ப ஆரம்பித்தனர்... மக்களை குழப்பி அவர்களை எல்லாம் ஒதுக்க வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது... இந்த அவதூறுகளில் பொட்டம்மான் கூட தப்பவில்லை... பொட்டம்மான் தான் இலங்கை அரசுடன் இணைந்து எல்லாரையும் காட்டிக்குடுக்கிறார் எண்று எல்லாம் புரளிகள் பரப்ப பட்டன...

இவ்வளவு ஏன் போன மே 18 ஒருவருட நினைவஞ்சலியில் கூட KP நல்லவர் எண்று எனக்கு சொன்னார்கள்... நானும் கூட போன மார்கழி மாதம் வரை KP யை பற்றி தவறாக தெரிந்து கொள்ளவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இன்ற்போலினால் தேடப்படும் நபரை அண்மையில் சந்தித்த

சரியான தலைப்பு

காட்டிக்கொடுப்புக்கு பெயர்போனவர் நாம்.............

எம்மால் முடியாவிட்டால்

இன்ரபோலுனுடாக முயல்வோம்

சரியான போட்டி

வாழ்க வளர்க............

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்ற்போலினால் தேடப்படும் நபரை அண்மையில் சந்தித்த

சரியான தலைப்பு

காட்டிக்கொடுப்புக்கு பெயர்போனவர் நாம்.............

எம்மால் முடியாவிட்டால்

இன்ரபோலுனுடாக முயல்வோம்

சரியான போட்டி

வாழ்க வளர்க............

தமிழரின் விடுதலைக்கு யார் தடை கற்களாக இருந்தாலும் அவர்கள் அகற்றபட வேண்டியவர்களே. அப்போது என்ன செய்தார்கள் என்பது முக்கியமில்லை இப்போது என்ன செய்கிறார்கள், என்பதுதான் முக்கியம். புலம்பெயர் தமிழர் கட்டமைப்பை உடைக்க முற்படுபவர்கள் எல்லாம் இனம்காட்ட பட வேண்டியவர்கள், போராட்ட பாதையில் இருந்து ஒதுக்க பட வேண்டியவர்களே, இங்கே ஆட்கள் முக்கியம் இல்லை இலட்சியம்தான் முக்கியம், இந்த இலட்சியத்துக்காக ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் தம்மையே கொடுத்தனர் அவர்கள் லட்சியம் காப்பாற்றபட வேண்டும், விடுதலை தீ அணையாது பாதுகாக்க வேண்டும்.

சிங்கள அரசின் கபட நோக்கத்தினை அம்பலப்படுத்துகின்றார் மருத்துவர் அருள்

பிரித்தானிய நிருபர்

செவ்வாய்க்கிழமை, யூன் 29, 2010

dr.arul

செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

தனிப்பிட்ட முடிவில் கொழும்பு சென்று பிரித்தானிய திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவென கே.பியின் ஏற்பாட்டில் கடந்த 15ஆம் நாள் முதல் 20ஆம் நாளுக்குள் 6 புலம்பெயர் நாடுகளிலிருந்து 9 பேர் கொழும்பு சென்றிருந்தனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிற்குச் சென்றதுடன், சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச, நீண்ட காலம் சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரன, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.

கொட்டாபயவுடனான சந்திப்பின்போது அவர் உள்ளே வந்தபொழுது கே.பி அவரைக் கட்டித்தழுவ முற்பட்டதாகவும், அவரது இந்த நடவடிக்கை தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் கூறும் மருத்துவர் அருட்குமார், விடுதலைப் புலிகள் தடுத்து வைக்கப்பட்ட பிரிவு - 4 முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்த படையினர், பிரிவு இரண்டாவது முகாமிற்கு தம்மை அழைத்துச் சென்றதாகவும், அங்கும் படைப் புலனாய்வாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டவர்களே முன்னாள் போராளிகள் போன்று தம்மை சந்திக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆணவத்துடன் கொட்டாபய ராஜபக்ச தம்முடன் உரையாடியதாகக் கூறும் மருத்துவர் அருட்குமார், வரலாற்றைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனவும், அரசு செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு மட்டும் நல்க வேண்டும் என, அடிமை போன்று நடத்த முற்பட்டதாகவும், புலம்பெயர் மக்களின் பணத்தைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர் மக்களை கே.பி ஊடாக உள்வாங்க முனைவது, அல்லது புலம்பெயர் தமிழ் மக்களை பிரிவுகளாக உடைத்து சின்னா பின்னமாக்கி மன்டியிட வைப்பது என்பதில் சிறீலங்கா அரசும், படைப் புலனாய்வாளர்களும் திட்டமிட்டிருப்பதை தமது சந்திப்புக்களில் உணர முடிந்ததாக கூறும் மருத்துவர் அருட்குமார், கே.பியை 2006ஆம் ஆண்டே தான் சந்தித்திருப்பதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வளங்களை இந்தியா சுரண்டுவதாக இந்த சந்திப்புக்களில் குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களை தரக்குறைவாகப் பேசியதாகவும், தமிழர் புனர்வாழ்வு மையம் (ரி.ஆர்.சி) என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி, அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருட்குமார் கூறினார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி ஓராண்டுக்குள் சிறிலங்கா அரசுக்கு நம்பிக்கையானவர் ஆகினார் என்பது நம்பகூடியதல்ல. வைத்தியர் அருண்குமார் சொன்னது போல் நீண்டகாலமாக அரசுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது உறுதியாகிறது.

கே.பியின் பேட்டி மே 19ல் கனடாவின் வானொலியில் (எந்த வானொலி என்று சொல்லாமலே விளங்கும்) ஒலிபரப்பான போதே என்னை போல் பலர் சந்தேகத்தை கிளப்பி இருந்தார்கள்.இன்று முற்று முழுதாக நிரூபணம் ஆகியுள்ளது. இன்னும் எத்தனை பேரோ?

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் மற்றும் நுணாவிலான்

தங்கள் கருத்து மாற்றுக்கருத்து கிடையாது

ஆனால் நீங்கள் சொல்வதும் ஒரு சந்தேக பாசையே.

என்னைப்பொறுத்தவரை...........

இப்படி ஒழித்துபிடித்து மறைந்திருந்து தாக்கி எந்த பயனும் வரப்போவதில்லை.

வெளியில் முகம்காட்டி உண்மையை சொல்லட்டும்

அதன்பின் பார்க்கலாம்

கேபி துரோகி காட்டிக் கொடுப்பவர் என்று சொல்லும் புலத்து மேதகுக்கும் மேலான மேதகுக்களுக்கும் இணைய புரட்சி செம்மல்களான பிரிகேடியர் ஜெனரல்களுக்கும் வணக்கமுங்க.....

தாயக விடுதலையையே அண்ணையை நம்பி தங்கள் வாழ்வை இளமையை எதிர்காலத்தை அர்பணித்த 12ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள்...

தாயக விடுதலைக்க அதாவது எங்களுக்கு உதவி செய்ததற்காக வாழ்வை வளத்தை தேட்டத்தை எதிர்காலத்தை தன்மானத்தை இழந்து இன்னும் முகாங்களில் ஒருவேளை சோற்றுக்கா சிங்களவனிடம் கையேந்தி நிற்கும் 2

இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்...

சிங்கள இராணுவ வெறியர்களின் பாலியல் கொடுமைகளை நிதம் அனுபவிக்கும் நம் பெண் போராளிகள்.....

வாழ்க்கைத் துணையை இழந்து பரிதவிக்கும் தங்கள் பிள்ளைகளுக்க பாலுட்ட வழியின்றி தவிக்கும் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்தும் அதிகமான விதவைகள்... (அவர்களின் மானத்துக்கு விலை பேசும் சிங்களக் காடையர் கூட்டம்)

இந்த போராட்டத்தை நம்பி வந்ததற்கான அவயங்களை இழந்த ஒரு இலட்சத்துக்கு அதிகமான சிறிவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் ….

2002 க்க முன் எமது பொராட்டத்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பும் பாதிப்பு 10 வீதம் என்றால் 2009 ல் ஏற்பட்ட பாதிப்பு 90 வீதம்.

முந்தி நாங்கள் இது எங்கடை ஊர் எங்கடை நிலம் எண்டு நாங்கள் உரிமை கொண்டாடக் கூடியதாக இருந்ததுஇ இப்ப எந்த சிமிடத்திலையும் சிங்கள இராணுவம் வந்தி எங்களை எங்கடை சொந்த வீட்டில் இருந்து எங்களை வெளியேற்றலாம்....

இது தான் எங்கடை தாயகத்தின் நிலைமை இன்று...

இந்த நிலைமையை மாற்றுறதுக்கு உங்களிட்டை என்ன திட்டம் இருக்கு....

இங்கை இருந்து ஒரு தரையிறக்கம் செய்து சிங்கள ஆமிக்காரனை உடனடியா அடிச்சு விரட்டி எங்கடை தாயகத்தை நாளைக்கே மீட்க முடியுமா? அப்படி ஒரு தரையிறக்கத்துக்கு போக இணையப் பரட்சியார்கள் தயாரா?

அல்லது அங்கி தப்பி எஞசி இருக்கிற போராளிகள் ஒன்று திரண்டு தாக்கதல் நடத்தி சிறையிலுள்ள போராளிகளையும் மக்களையும் விடுவிக்க முடியுமா?

ஊங்கடை மக்கள் பேரவைகளோ தமிழர் ஒன்றியங்களோ அல்லது நாடுகடந்த அரசோ தமிழர் புனர்வாழ்வுக் கழகமோ அங்கை போய் பாதிக்ப்பட்ட அவலத்தில் வாழ்கிற அந்த அப்பாவி உறவுகளுக்கு புனர்வாழ்வழிக்க முடியமா?

எல்லாம் நாங்கள் கதைகிறோம் சந்திக்கிறோம் எங்களுக்கு தொடர்புகள் இருக்கு எண்டு சொல்லுற மேற்குலக அரசுகள் ஊடனடியா ஓடிவந்து எங்கடை சகோதரிகள் சிங்களவன்ரை பிள்ளையை சுமக்கிற அல்லது அதை கருக்கலைப்பு செய்யிற அலத்தை தடுக்க உதவுமா? பட்டிணிபோட்டு பிள்ளைகளை கொல்வோம் என்ற மிரட்டி படுக்க அழைக்கும் நிர்பந்திக்கும் கொடுமையை உங்களால் இங்கை இருந்து தடுக்க முடியுமா?

மக்களை காப்பாற்ற என்ன திட்டம் இருக்கு உங்களிட்டை?

சொல்லுங்கோ அண்ணைமாரே........

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இதே கருத்தை ஒரு வருடத்துக்கு முன் நான் இங்கு வைத்தேன் ஆதியன்

அது தமிழீழ இலட்சியத்துக்கும் இதுவரை இழந்த போராளிகள் மற்றும் மக்களின் அர்ப்பணிப்புகளுக்கும் எதிரானது

என்று இங்கு பலமாக எதிர்க்கப்பட்டது.

அந்த துரோகத்தை நானும் விரும்பாததால் மட்டும் நான் அன்றிலிருந்து நிறுத்திக்கொண்டேன்.

சரி

அது தமிழீழ இலட்சியத்துக்கும் இதுவரை இழந்த போராளிகள் மற்றும் மக்களின் அர்ப்பணிப்புகளுக்கும் எதிரானது

இந்தக்கேள்விக்கு தங்கள் பதில் என்ன.....?

முதில் இந்த இணையப் புரட்சியாளர்கள் கருத்தச் சொல்லட்டு பிறகு நான் பதில் சொல்லுறன் விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

கேபி துரோகி காட்டிக் கொடுப்பவர் என்று சொல்லும் புலத்து மேதகுக்கும் மேலான மேதகுக்களுக்கும் இணைய புரட்சி செம்மல்களான பிரிகேடியர் ஜெனரல்களுக்கும் வணக்கமுங்க.....

தாயக விடுதலையையே அண்ணையை நம்பி தங்கள் வாழ்வை இளமையை எதிர்காலத்தை அர்பணித்த 12ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள்...

தாயக விடுதலைக்க அதாவது எங்களுக்கு உதவி செய்ததற்காக வாழ்வை வளத்தை தேட்டத்தை எதிர்காலத்தை தன்மானத்தை இழந்து இன்னும் முகாங்களில் ஒருவேளை சோற்றுக்கா சிங்களவனிடம் கையேந்தி நிற்கும் 2

இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்...

சிங்கள இராணுவ வெறியர்களின் பாலியல் கொடுமைகளை நிதம் அனுபவிக்கும் நம் பெண் போராளிகள்.....

வாழ்க்கைத் துணையை இழந்து பரிதவிக்கும் தங்கள் பிள்ளைகளுக்க பாலுட்ட வழியின்றி தவிக்கும் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்தும் அதிகமான விதவைகள்... (அவர்களின் மானத்துக்கு விலை பேசும் சிங்களக் காடையர் கூட்டம்)

இந்த போராட்டத்தை நம்பி வந்ததற்கான அவயங்களை இழந்த ஒரு இலட்சத்துக்கு அதிகமான சிறிவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் ….

2002 க்க முன் எமது பொராட்டத்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பும் பாதிப்பு 10 வீதம் என்றால் 2009 ல் ஏற்பட்ட பாதிப்பு 90 வீதம்.

முந்தி நாங்கள் இது எங்கடை ஊர் எங்கடை நிலம் எண்டு நாங்கள் உரிமை கொண்டாடக் கூடியதாக இருந்ததுஇ இப்ப எந்த சிமிடத்திலையும் சிங்கள இராணுவம் வந்தி எங்களை எங்கடை சொந்த வீட்டில் இருந்து எங்களை வெளியேற்றலாம்....

இது தான் எங்கடை தாயகத்தின் நிலைமை இன்று...

இந்த நிலைமையை மாற்றுறதுக்கு உங்களிட்டை என்ன திட்டம் இருக்கு....

இங்கை இருந்து ஒரு தரையிறக்கம் செய்து சிங்கள ஆமிக்காரனை உடனடியா அடிச்சு விரட்டி எங்கடை தாயகத்தை நாளைக்கே மீட்க முடியுமா? அப்படி ஒரு தரையிறக்கத்துக்கு போக இணையப் பரட்சியார்கள் தயாரா?

அல்லது அங்கி தப்பி எஞசி இருக்கிற போராளிகள் ஒன்று திரண்டு தாக்கதல் நடத்தி சிறையிலுள்ள போராளிகளையும் மக்களையும் விடுவிக்க முடியுமா?

ஊங்கடை மக்கள் பேரவைகளோ தமிழர் ஒன்றியங்களோ அல்லது நாடுகடந்த அரசோ தமிழர் புனர்வாழ்வுக் கழகமோ அங்கை போய் பாதிக்ப்பட்ட அவலத்தில் வாழ்கிற அந்த அப்பாவி உறவுகளுக்கு புனர்வாழ்வழிக்க முடியமா?

எல்லாம் நாங்கள் கதைகிறோம் சந்திக்கிறோம் எங்களுக்கு தொடர்புகள் இருக்கு எண்டு சொல்லுற மேற்குலக அரசுகள் ஊடனடியா ஓடிவந்து எங்கடை சகோதரிகள் சிங்களவன்ரை பிள்ளையை சுமக்கிற அல்லது அதை கருக்கலைப்பு செய்யிற அலத்தை தடுக்க உதவுமா? பட்டிணிபோட்டு பிள்ளைகளை கொல்வோம் என்ற மிரட்டி படுக்க அழைக்கும் நிர்பந்திக்கும் கொடுமையை உங்களால் இங்கை இருந்து தடுக்க முடியுமா?

மக்களை காப்பாற்ற என்ன திட்டம் இருக்கு உங்களிட்டை?

சொல்லுங்கோ அண்ணைமாரே........

சரியாச் சொன்னீங்கள். இனி எல்லாரும் மாசாமாசம் புலிகளுக்கு கொடுத்து வந்த மண்மீட்பு நிதிய கே.பி மூலமாக சிங்கள அரசுக்குக் கொடுப்பம். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு நீங்கள் மேற்சொன்ன அநியாயங்கள் கொடுமைகள் எல்லாம் நீங்கி எம் உறவுகள் சுதந்திரமாக உலவ வழி செய்வார்கள். ஏனெண்டா கடந்த அறுபது வருஷங்களாக சிங்களவன் காசில்லை அல்லது வழியில்லை எண்ட காரணங்களுக்காக மட்டும் தான் தமிழனைக் கொடுமைப் படுத்தினவன். காசைக் காட்டி விட்டா சிங்களவன் ரொம்ப நல்லவன் ஆகி விடுவான். மேலும் தனது வாக்கு மாறாக் குணத்தினால் அந்தக் காசையெல்லாம் தமிழர் நலனுக்கே சிங்களவன் செலவு செய்வான். இதையும் கடந்த அறுபது வருஷ வரலாற்றில் சிங்களவன் நிரூபித்திருப்பதால் அவனை நம்பலாம்! :)

டாக்டர் சந்திக்க போகும் போது துரோகியாகினார் திரும்பி வந்ததும் கீரோ ஆகிவிட்டார்.

போகும் போது அவரை துரோகியென்று கத்தியவர்களுக்கு ஒன்று விளங்கவேண்டும் அவர் போயிருக்காவிட்டால் எங்களுக்கு இவ்வளவு விடயங்களும் தெரியவந்திருக்க மாட்டாது.சும்மா பட்டம் கொடுகின்றவேலையை கொஞ்ச நாளைக்கு நிப்பாட்டி வையுங்கோ.

நிண்டவன் போனவனையெல்லாம் போட்டதும் பட்டம் கொடுத்ததும் தான் போராட்டம் என்று நாம் செய்தது. ஒன்றிற்கு முடிவு வந்து விட்டது மற்றதற்கும் வந்தால் ஒரு படி தாண்டிவிடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் சந்திக்க போகும் போது துரோகியாகினார் திரும்பி வந்ததும் கீரோ ஆகிவிட்டார்.

போகும் போது அவரை துரோகியென்று கத்தியவர்களுக்கு ஒன்று விளங்கவேண்டும் அவர் போயிருக்காவிட்டால் எங்களுக்கு இவ்வளவு விடயங்களும் தெரியவந்திருக்க மாட்டாது.

இதைத்தான் நானும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றேன்

போய் வரட்டும்

உண்மையை உணர்ந்து வரட்டும்

போகும்போது இவர் என்னநிலையில் போனாலும்

அங்கு எதுவும் கிடைக்காது என்பதையும் எவ்வாறு எம்மக்கள் வைத்திருக்கப்படுகின்றனர் என்பதையும் உணர்ந்து வந்துள்ளார்

இனி தெளிவாக இருப்பார்

சரியாச் சொன்னீங்கள். இனி எல்லாரும் மாசாமாசம் புலிகளுக்கு கொடுத்து வந்த மண்மீட்பு நிதிய கே.பி மூலமாக சிங்கள அரசுக்குக் கொடுப்பம். அவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு நீங்கள் மேற்சொன்ன அநியாயங்கள் கொடுமைகள் எல்லாம் நீங்கி எம் உறவுகள் சுதந்திரமாக உலவ வழி செய்வார்கள். ஏனெண்டா கடந்த அறுபது வருஷங்களாக சிங்களவன் காசில்லை அல்லது வழியில்லை எண்ட காரணங்களுக்காக மட்டும் தான் தமிழனைக் கொடுமைப் படுத்தினவன். காசைக் காட்டி விட்டா சிங்களவன் ரொம்ப நல்லவன் ஆகி விடுவான். மேலும் தனது வாக்கு மாறாக் குணத்தினால் அந்தக் காசையெல்லாம் தமிழர் நலனுக்கே சிங்களவன் செலவு செய்வான். இதையும் கடந்த அறுபது வருஷ வரலாற்றில் சிங்களவன் நிரூபித்திருப்பதால் அவனை நம்பலாம்! :)

அண்ணை 2009 க்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தாயகத்தில் குறைந்த பட்ட சட்டப் பாதுகாப்பும் சமூகப்பாதுகாப்பும் இருந்தது.சிங்கள இனவெறியர்கள் சிறய அளவிலைதான் எமது உறவுகளை அழிச்சவங்கள் ஆனால் இண்டைக்கு எமது இனம் நிர்க்கதியான ஒரு நிலையில இருக்குது. பணத்தை கொடுப்பதல்ல பிரச்சனை.எமது மக்களையும் பொராளிகளையும் உடனடியாக எப்படி பாது காக்கிறது என்பது தான் இப்ப உள்ள பிரச்சனை.

2 பிள்ளைகளின் தாயான ஒரு பெண்போராளி கடந்த வாரம் 22 இராணுவவெறிர்களால் குரூரமாக குதறப்பட்டிருக்கிறார்கள்.வெளியே சொன்னால் அவளது 2 குழந்கைளும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டிருக்கிறாhள். இன்னொருபெண் தன்னுடைய பிள்ளைகள் பசியால் துடிப்பதை பொறுக்க முடியாமல் கூட்டுத் தற்கொலை செய்திருக்கிறாள்.இதெல்லாம் வெளியுலகத்தக்கு மறைக்கப்படும் செய்திகள்இ

இங்கை பாதுகாப்பான வசதியுள்ள உயிராபத்தில்லாத சிறையில் இருக்கும் செயற்பாட்டாளரை வெளியிலை எடுக்க ஒரு இலட்சத்து இருப்பத்தையாயிரம் யூரோ கட்ட முடியுது.அங்கை எந்தசேரம் என்ன நடக்கும் என்ற தெரியாமல் அவல வாழ்வு வாழும் போராளிகளை வெளியல எடுக்க ஒரு திட்டமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் எமக்குத் தேவை

எமது போராளிகளின் மாவீரர்களின் மாண்ட மக்களின் கனவுகளை சுமந்து கொண்டு அரசியல்ரீதியில் உறுதுடன் செயற்படக் கூடிய இளைய தலைமுறை ஒன்று தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்கும் நிலை வந்தால் அன்றி.. கே பி.. கூ பி எல்லாம் தமிழ் மக்களை போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து தங்கள் பிழைப்பை பார்த்துக் கொள்ள ஒருபோதும் பின்நிற்கமாட்டார்கள்.

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பின் இணக்க அரசியலாலும் விடிவில்லை.. கே பியின் காட்டிக்கொடுப்பு அரசியலாலும் விடிவில்லை. இது எல்லாம் கடந்த காலங்களிலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் தான். திரும்பத் திரும்ப ஏன் தான் இவர்கள் மக்களை ஏமாற்ற மக்களும் ஏமாந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை.தெளிவான விலைபோகாத தலைமையுடன் இயங்கக் கூடிய இளைய தலைமுறை. அதனை நாடு கடந்த தமிழீழ அரசு தான்ன் ஏற்படுத்திக் கொடுக்க முன் வர வேண்டும். எமது போராட்டம் பல பரிமான நிலையை அடையாவிட்டால்.. அது மிக இலகுவாக எதிரி ஊடுருவி சீரழிக்கப்படும் நிலைக்கே தள்ளப்படும்.

துரோகங்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டு இருப்பதிலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிரி எவ்வாறு எல்லாம் செயற்படுவான் என்பதை எதிர்பார்த்து அதன்படி திட்டமிட்டு செயற்படக் கூடிய தன்மையே தமிழர்களுக்கு இப்போ அவசியம்.

ஒன்றுமட்டும் புரிகிறது.. சிங்களவன் இந்தியாவிற்கு ஆப்படிக்க தருணம் பார்த்துத் திரிகிறான் என்பது. எனவே இந்தியாவிற்கு இந்த நிலை புரியாமல் இல்லை. அது மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் நிற்கிறது. அந்த நாட்டின் இந்த நிலையையும் எமக்காக பாவித்துக் கொள்வதோடு மேற்குலகின் சிறீலங்காவுடனான உறவு அவர்களின் நலன்சார்ந்து இன்று கண்டுள்ள நெருக்கடி நிலையையும் எமக்கு சார்ப்பாக பாவித்துக் கொள்ள வேண்டும். இவை தவிர தமிழர்கள் ஏனைய நாடுகளோடும் பேசி உறவுகளை பலப்படுத்த வேண்டும். ரஷ்சியா போன்ற தேசங்களோடும் போய் பேச வேண்டும். ரஷ்சியா ஒன்றை எதிர்கிறது என்றால் கூட்டமைப்பு வாழாது கிடக்கிறது. அது மக்கள் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டும் செயலற்றுக் கிடக்கிறது. ரஷ்சிய தூதரகத்தை சந்தித்து நிலைமைகளை விளக்கி ரஷ்சிய உயர்மட்டத்தோடு பேரம் பேசியாவது ரஷ்சியாவை வழிக்கு கொண்டு வர முனைய வேண்டும். இது வெறும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தால்.. எமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

சிங்களவனா எதனையும் எமக்குத் தரப்போவதும் இல்லை..!

என்களுடைய தமிழ்கட்ச்சிகளால் ஆகக்குறைந்தது இந்தியாவையாவது தமிழர்களிற்கு சார்பாக மாற்ற முடிந்ததா? வேட்டியகட்டிக்கொண்டு சிங்களவன்ற பாராளுமன்றத்தில போய் வெறுவாயை மென்று தமிழர்க்கு எதுவும் நடக்கப்போறதில்லை. இந்தியாவில ஜனாதிபதி பதவியப்போல சும்மா வாறவன் போறவனை கூப்பிட்டவுடன் போய் சந்திக்கிறதுக்காகத்தான் நம்ம எம்.பி மார் இருக்கினம். இவர்கள் இலங்கைக்கு வாறவன் எல்லாரிட்டையும் கோரிக்கை வைத்துவைத்தே அடுத்த தேர்தல் வரை காலத்தை ஓட்டீடுவாரகள். இப்பிடிகோரிக்கை வச்சுவச்சே அறளைபேந்த இவர்கள் எல்லாம் தங்கட குடும்பங்களை வெளிநாட்டில செற்றிலாக்கிட்டு மண்டையை போட்டிடுவார்கள் எங்கடதலமுறைக்கு இப்பிடியே அடிமைசாசனம் வாங்கிக்கொடுத்திட்டு எங்கட முன்னோர் எங்களுக்கு செய்ததைப்போல!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை 2009 க்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தாயகத்தில் குறைந்த பட்ட சட்டப் பாதுகாப்பும் சமூகப்பாதுகாப்பும் இருந்தது.சிங்கள இனவெறியர்கள் சிறய அளவிலைதான் எமது உறவுகளை அழிச்சவங்கள் ஆனால் இண்டைக்கு எமது இனம் நிர்க்கதியான ஒரு நிலையில இருக்குது. பணத்தை கொடுப்பதல்ல பிரச்சனை.எமது மக்களையும் பொராளிகளையும் உடனடியாக எப்படி பாது காக்கிறது என்பது தான் இப்ப உள்ள பிரச்சனை.

2 பிள்ளைகளின் தாயான ஒரு பெண்போராளி கடந்த வாரம் 22 இராணுவவெறிர்களால் குரூரமாக குதறப்பட்டிருக்கிறார்கள்.வெளியே சொன்னால் அவளது 2 குழந்கைளும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டிருக்கிறாhள். இன்னொருபெண் தன்னுடைய பிள்ளைகள் பசியால் துடிப்பதை பொறுக்க முடியாமல் கூட்டுத் தற்கொலை செய்திருக்கிறாள்.இதெல்லாம் வெளியுலகத்தக்கு மறைக்கப்படும் செய்திகள்இ

இங்கை பாதுகாப்பான வசதியுள்ள உயிராபத்தில்லாத சிறையில் இருக்கும் செயற்பாட்டாளரை வெளியிலை எடுக்க ஒரு இலட்சத்து இருப்பத்தையாயிரம் யூரோ கட்ட முடியுது.அங்கை எந்தசேரம் என்ன நடக்கும் என்ற தெரியாமல் அவல வாழ்வு வாழும் போராளிகளை வெளியல எடுக்க ஒரு திட்டமும் இல்லை

இந்தத் திரியில கே.பி யக் கொண்டு சிங்களவன் எங்களிட்டக் காசு வாங்கப் போறதா சொல்லப் பட்டிருக்கு. அதுக்குக் கே.பி துணை போகக் கூடாது எண்டுறது தான் பலரது கருத்து. நீங்கள் வந்து கே.பியக் குறை சொல்ற ஆக்கள் என்ன திட்டம் வைச்சிருக்கிறியள் எண்டால் கே.பி யூடாக சிங்களவனுக்குக் காசு கொடுத்தாவது எங்கட ஆக்களை வெளியில எடுக்கலாம் எண்டு சொல்றதா எனக்கு விளங்குது. நான் கேட்டது அப்படிக் காசு குடுத்தாப் பிறகும் சிங்களவன் சொன்ன படியே வெளியில விடுவான் அல்லது நீங்கள் சொன்ன மாதிரி "2009 முன்னர் மாதிரி குறைவாக அழிக்க" ஆரம்பிப்பான் எண்டு யார் உறுதி மொழி தருவினம்? ஒருத்தரும் தர ஏலாது. அறுபது வருஷம் என்ன நடந்தது எண்டு தெரிஞ்ச ஒருத்தரும் இப்படியான சிங்களவன் நடத்தும் தமிழர் புனர் வாழ்வை நம்பப் போறதில்லை. வேற வழியத்தான் பாக்க வேணும். சிம்பாப்வேய சூடானை தனிமைப் படுத்தின மாதிரி ஏதாவது கைங்கரியத்த பெரிய நாடுகள் எடுக்க நாங்கள் ஏதாவது செய்ய வேணும். இப்படி சிங்களவனோட சேர்ந்து புனர் வாழ்வு செய்ய வெளிக்கிட்டால் அவனுக்கு நாங்களே அங்கீகாரம் கொடுத்த மாதிரித் தான் ஆகும். இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? எல்லாரும் கேள்வி கேட்கலாம் ஆனா பதில் சொல்லவும் தெரிய வேணும்.

நான் சொல்ல வருகிறது கேபிக்கு காசு கொடுத்து போராளிகளை விடுவிப்பதலலஇ சிறீலங்கா அரசு கேபியை துருப்புச் சீட்டா பயன்படத்தப் பாக்குது.போர் குற்ற விசாரணை என்ற ஒன்று நடந்தால் அதில் முக்கிய சாட்சி கேபி.அதனால் அவரை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய அவர் சொல்வதை கேட்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது.

இதை நாங்கள் அதாவது புலம் பெயாந்த சமூகம் பயன் படுத்த வேண்டும்.

சிறையிலுள்ள போராளிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று நாங்கள் கேபிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏனக்கு கிடைத்த தகவல் முதற்கட்டமாக 5000 போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கேபி கோரிக்கை வைத்திருக்கிறாராம்இஇது கொழும்பிலுள்ள அரசியல் கட்சி வட்டாரம் ஒன்றுக் கூடாக நான் உறுதிப்படுத்திய தகவல்.அப்படி 5ஆயிரம் போராளிகள் விடுதலை செய்ப்பட்டால் வரவேற்க வேண்டுமா வேண்டாமா? இதுதான் எனது கேள்வி இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு போராளியணின் விடுதலையும் மக்கியமானது அதுவும் பெண் போராளிகளின் பாதுகாப்பும் விடுதலையும் முக்கியமானது.

இதை தமிழ் நெட் ஈமுரசு கனவான்களால் செய்ய முடியுமா ? ஏன்பது தான் என்னுடைய கேள்வி?

இப்ப பேட்டி குடுத்த உந்த டாக்குத்தரை தமிழ் நெட்கனவான் செட்பண்ணி ஆனுப்பினதாகவும் இப்ப ஒரு தகவல் வந்திருக்குஎனக்க தமிழ் நெட் இந்த பேராட்டத்துக்கு என்ன செய்தவர் ஊரிலை என்ன செய்தவர் எண்டது அக்கு வேற ஆணிவேறா தெரியும்.ஈழப் போராட்டத்துக்கு அதிகம் துரொகம் செய்தது ஆர் எண்டால் முதல் இந்த கனவானின் பெயரைத் தான் நான் சொல்லுவன்இஅதுக்குபிறகு தான் கருணா மற்றவை எல்லாம் கரணாவை பிளவு படுத்தினதே உவர் தான் எண்டதும் சிவராமின்ரை அறிமுகத்தை வைத்து உவர் தென் தமிழீழத்திலை நகர்த்தின காய் நகர்த்தலகள் எத்தினை பேருக்கு தெரியும் உருவரை தெரிஞ்சுவங்க்ள இப்ப இஞ்சைதான் இருக்கிறங்கள்இஒண்டல்ல இரண்டல் பத்துக் கணக்கில் தங்களை வெளிப்படுத்தினால் காட்டிக் கொடுக்கப்படுவோம எண்ட பயம் அவங்களிட்டை இன்னமும் இருக்கு;

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திகளெல்லாம் புதினப்பலகையில் காணவில்லை ஏன்???????????????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.