Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவும் ஒரு கெட்டித்தனமே...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு கெட்டித்தனமே...!

அரசாங்க ஊழியருக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பள உயர்வு அடுத்த வருடத்திற்கான, 2011 ஆம் ஆண்டுக்கான, வரவு செலவுத் திட் டத்திலும் சேர்க்கப்படமாட்டாது என்பதற்கான சமிக்ஞை காட்டப்பட்டுவிட்டது!

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 139 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பேசு கையில் இந்தச் சமிக்ஞையைக் காட்டி உள்ளார். மறைமுகமாகத் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான இந்த வருடத்திற் குரிய அரசாங்கத்தின் உத்தேச வரவு செலவு விவரம் சென்ற வருடம் நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களைக் காட்டி அது கடந்த மாதம் 29ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டும் விட்டது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தலில் அரச பணியாளர்களுக்கும், தனி யார் துறையினருக்கும் 2,500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசவேட்பாளர் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. பிரசார மேடைக்கு மேடையில் அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதியினால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் தமது வாக்குகளை அள்ளி அள்ளிப் போட்டனர். ஆனால் பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகமவின் வரவு செலவுத்திட்ட உரை கேட்டு வாக்குப் போட்ட வர்களின் நாடி நரம்புகள் தளர்ந்துபோயின.

அவர்களின் ஏமாற்றம் அரசுக்கு எதிரான போராட்டங்களாக மாறிவிடாது தடுக்கும் தந்திரத் துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட வுள்ள அடுத்த வருடத்துக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் புதிய சம்பளத் திட்டங்கள் வகுக்கப் பட்டு அவற்றோடு 2,500 ரூபா உயர்வும் சேர்க்கப் படும் என்று அரசாங்கத்தின் சார்பில் பிரதி நிதி அமைச்சர் உறுதி அளித்திருந்தார். தனியார் துறைப் பணியாளர் நிலை தொப்பெனக் கைவிடப்பட் டது.

ஆனால் பதில் நிதி அமைச்சரின் வரவு செல வுத் திட்ட உரை வெறும் வெற்றுவேட்டு என்று இப்போது சந்தேகம் எழுந்திருக்கிறது. மற்றொரு அமைச்சர் பந்துல குணவர்த்தன உண்மைகளைப் போட்டு உடைத்திருக்கிறார்!

கல்வி அமைச்சர் பந்துலவின் வரவு செலவுத் திட்ட உரை மற்றொரு பெரிய உண்மையையும் புட்டுக்காட்டியிருக்கிறது. சர்வதேச நிதி நிறுவ னங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப்பட்டு விட்டது. முதலை மட்டுமன்றி உயர் அறா வட்டி யையும் மக்களே செலுத்தவேண்டும்; செலுத்தப் போகிறார்கள் என்பதே அதுவாகும்.

விடுதலைப் புலிகளை வெல்லவேண்டும் அதன் தலைவர் பிரபாகரனைக் கொல்லவேண் டும் என்பதற்காக அரசாங்கம் பட்ட கடனை ஆட்சி யில் உள்ள தலைவர்களா மீளச்செலுத்தப் போகி றார்கள்....?

அந்தச் சுமை இந்த நாட்டு மக்களின் தலைகள் நொடிந்து போகும் அளவுக்கு, அரச பணியாளர் கள், தனியார் ஊழியர்கள் மற்றும் அடிமட்ட ஏழை மக்கள் என்ற பாரபட்சம் வேறுபாடு இன்றி அவர்கள் மீது பழிச் சுமையாக்கப்பட உள்ளது!

அதனை வெகு புத்திசாதுரியமாக, நாசூக்காக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனா தமது வரவு செலவுத் திட்ட உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். விடுதலைப் புலிகளை வெல்வதற் காக உங்கள் நலன் கருதியே உங்களை நம்பித் தான், சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் பெற்றோம். சம்பள உயர்வுகள், வேறு நிதிசார் சலுகைகளை உங்களுக்குச் செய் யும் நிலையில் நாம் (அரசு) இல்லை என்று கைவிரித்திருக்கின்றார்.

சம்பள உயர்வு கிடைக்கவில்லை, விலை வாசி கள் நாளுக்கு நாள் உயர்கின்றன என்று அரசின் மீது மக்கள் வெறுப்புக்கொள்ளாமல்

போராட்டங்கள், பகிஷ்கரிப்புகள் என்று அவர் கள் கொந்தளிக்காது இருப்பதற்காக இப்போதே அரசின் சார்பில் கல்வி அமைச்சர் ஒரு பூட்டுப் போட்டிருக்கிறார்.

மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் கெட்டித் தனம் எந்தளவு பாகை அல்லது புள்ளி உயர்ந் திருக்கிறது! பலே கெட்டித்தனம்!

நன்றி - உதயனிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை எவ்வளவு காலத்துக்கு இவர்கள் ஏமாற்ற போகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.