Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வலயக் காணிகள் மக்களுக்கு இனிக் கிடையாது!வேறு இடங்களில் காணி வழங்கப்படும் என்கிறது அரசு

Featured Replies

கொழும்பு, ஜூலை 16

நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா.

அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளைத்தான் வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம்களும் நீக்கப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றன என்று அடையாளம் காணப்படும் இடங்களில் மேலும் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறி யவை வருமாறு:

இந்த நாட்டின் பாதுகாப்புக்கே முதலா வது இடமும் இரண்டாவது இடமும் மூன் றாவது இடமும் வழங்கப்படும். ஒரு நாட் டின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு வலயங் கள் அமைக்கப்பட வேண்டியது கட் டாயம். அமெரிக்கா கூட அந்நாட்டின் பாதுகாப்புக்காக கொரியாவில் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்துள்ளது.

நாட்டில் தற்போது இருக்கின்ற பாது காப்பு வலயங்களும் இராணுவ முகாம் களும் அவ்வாறே இருக்கவேண்டும். அந்தப் பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களின் காணிகள் இருந்தாலும் கூட அந்தக் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டா. அத்தகையோருக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்படும்.

மீள்குடியேற்றம் துரித கதியில்

தற்போது மீள்குடியேற்றம் துரிதமாக இடம்பெறுகின்றது. சில மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளில் அல்லாது வேறு காணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 10 முதல் 15 வீதமான மக்களே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அது விரைவில் தீர்க்கப்படும்.

ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது யுத்தம் முடிந்து இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீள்குடியேற்ற முடிந்தமை ஒரு பெரும் சாதனையாகும்.

கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. வன்னியில் சுமார் 15 லட்சம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இதுவரை 2 லட்சத்து 68ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இதற்காக அரசு 88ஆயிரம் கோடி ரூபாவைச் செலவுசெய்துள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றுவதில் எமது படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். துரிதமாக மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சிலர் அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர். அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து அவசரப்பட்டு மீள்குடியமர்த்தி மக்களுக்கு கண்ணிவெடிகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அதற்கும் அரசு மீதே குற்றம் சுமத்தப்படும்.

இன்னும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்பட்டதும் அவர்கள் விரைவில் குடியமர்த்தப்படுவர். என்றார்.(அசி)

http://www.uthayan.com/Welcome/full.php?id=3561&Uthayan1279273643

கொழும்பிலையும், அம்மாந்தோட்டையிலையும் கூட தான் அச்சுறுத்தல் இருக்கு அங்கையும் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்த வேண்டியதுதானே....??

இலங்கை ஆட்ச்சி சர்வதிகாரத்துக்குள் போய்க்கொண்டு இருப்பதுக்கு இது நல்லதொரு சாட்ச்சி...!

Edited by தயா

இலங்கை ஆட்ச்சி சர்வதிகாரத்துக்குள் போய்க்கொண்டு இருப்பதுக்கு இது நல்லதொரு சாட்ச்சி...!

தனிச்சிங்கள ஆட்சிக்குள் போய்கொண்டிருக்கிறது எண்டு வரவேனும்..

( கேட்டு வாங்கினதுதானே நல்லா அனுபவிக்கட்டும்... :lol: )

தனிச்சிங்கள ஆட்சிக்குள் போய்கொண்டிருக்கிறது எண்டு வரவேனும்..

( கேட்டு வாங்கினதுதானே நல்லா அனுபவிக்கட்டும்... :lol: )

எங்களுக்கை பார்வையாளர் கூடி போனதாலை வந்தவினை... இண்டைக்கும் பாருங்கோ இலவசமாக அறிவுரை மாட்டும் குடுக்கதான் எல்லாரும் நிக்கினம்.....

அப்படியில்லை தயா.. முள்ளிவாய்க்காலோட எல்லாம் முடிஞ்சுபோச்சுதெண்டு, ஈடுபாடுள்ளவை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அதனால்தான் சிலர் கோபத்தில் கிண்டலும், பலர் நப்பாசையில் அறிவுரைகளையும் செய்கின்றனர். நீங்கள் விரும்பினாலும் இரும்பாவிட்டாலும் எல்லம் எப்பவோ முடிந்த காரியம். இப்ப நடக்கிறது எல்லாம் சுத்த வியாபாரம், உண்மையில் அங்க ஒண்டுமில்லை. மீண்டும் ரகசியமா குசு விடுறம் எண்டு மிஞ்சின மோட்டுகூட்டத்திண்ட தலையில முளகாய் அரைக்கினம்...

கொஞ்சநாளில் பார்வையாளர்களும் ஒதுங்கிவிடுவினம்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் நீங்கள் கூறுவது எதுவும் நடக்கப்போவதில்லை. அதுக்காகத் தலைவர் திரும்பவும் வந்து துவக்கத் தூக்குவார் எனச் சொல்ல வரவில்லை. இப்போது நாங்கள்தான் தமிழத்தேசியம் எண்டு ஆளுக்காள் ஒவ்வொரு பெயரில அமைப்புகளைத் தொடங்கிக்கொண்டு வெளிக்கிட்டிருக்கினம். இதுபோலத்தான் எண்பதுகளில ஏகப்பட்ட போராட்ட இயக்கங்கள் வெளிக்கிட்டவை. அவைகளையும் உங்களைப்போன்றவர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சித்தவையள்தான். அதுக்கையும் காலத்துக்கோற்றாற்போல் அடித்துப்பிடித்துக்கொண்டு ஒரு தேசிய விடுதலை இயக்கம் வளர்ந்தது. இப்போது அது இல்லாது போய்விட்டது அன்றேல் இயங்கக் கூடிய வல்லமையற்றுப்போய்விட்டது. அதைப்போல இப்போது புறப்பட்டிருக்கும் அமைப்புகளிலும் கடந்தகாலத் தவறுகள் லாபநட்டங்கள் அனைத்தையும் ஜீரணித்து தமிழர்கென ஒரு தேசியத்தலைமை உடனடியாகவில்லையெனினும் காலப்போக்கில் உருவாகும். ஆனால் அதனது எழுர்சியை யாராலும் தடுக்க முடியாததாகவிருக்கும் அது எந்த வல்லரசுகள் நினைத்தாலும் இயலாமலே இருக்கும். இவை நடைபெறம் போது சிலவேளை நாணோ அன்றேல் நீங்களோ உயிரோடிருந்து இவற்றைப் பார்ப்பதற்கோ அன்றேல் அதனுடன் பங்களிப்பச்செய்வதற்கான வாய்புகள் அற்றவராகவும் இருக்கலாம். ஆனால் இது நிச்சயம் நடந்தேதீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நாங்கள்தான் தமிழத்தேசியம் எண்டு ஆளுக்காள் ஒவ்வொரு பெயரில அமைப்புகளைத் தொடங்கிக்கொண்டு வெளிக்கிட்டிருக்கினம். இதுபோலத்தான் எண்பதுகளில ஏகப்பட்ட போராட்ட இயக்கங்கள் வெளிக்கிட்டவை. அவைகளையும் உங்களைப்போன்றவர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சித்தவையள்தான். அதுக்கையும் காலத்துக்கோற்றாற்போல் அடித்துப்பிடித்துக்கொண்டு ஒரு தேசிய விடுதலை இயக்கம் வளர்ந்தது. இப்போது அது இல்லாது போய்விட்டது அன்றேல் இயங்கக் கூடிய வல்லமையற்றுப்போய்விட்டது. அதைப்போல இப்போது புறப்பட்டிருக்கும் அமைப்புகளிலும் கடந்தகாலத் தவறுகள் லாபநட்டங்கள் அனைத்தையும் ஜீரணித்து தமிழர்கென ஒரு தேசியத்தலைமை உடனடியாகவில்லையெனினும் காலப்போக்கில் உருவாகும். ஆனால் அதனது எழுர்சியை யாராலும் தடுக்க முடியாததாகவிருக்கும் அது எந்த வல்லரசுகள் நினைத்தாலும் இயலாமலே இருக்கும். இவை நடைபெறம் போது சிலவேளை நாணோ அன்றேல் நீங்களோ உயிரோடிருந்து இவற்றைப் பார்ப்பதற்கோ அன்றேல் அதனுடன் பங்களிப்பச்செய்வதற்கான வாய்புகள் அற்றவராகவும் இருக்கலாம். ஆனால் இது நிச்சயம் நடந்தேதீரும்.

நன்றி எழுஞாயிறு

வாத்தியார்

***********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.