Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் : அமெரிக்கா எச்சரிக்கை _

Featured Replies

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவத் தளபதிகள் குழுவின் தலைவரான மெக் முல்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் இருந்து டெல்லிக்குப் பயணமான அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"மும்பையில் நடைபெற்றதைப் போன்று இந்தியாவில், மற்றுமொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் தீவிரவாதிகள் திட்டமிட்டமிட்டுள்ளனர்.

பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பிராந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. இருநாடுகளும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு பலரை இழந்துள்ளோம்.

கடந்த 20ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ உறவு வளர்ந்துள்ளது. இருப்பினும் இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் வேறுபாடு இருப்பதாகவும், இரண்டையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமெரிக்கா கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25734

பயங்கரவாதிகள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் உண்மையாக நடந்தால் சந்தோசப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இறையாண்மை என்று ஏதோ எல்லாம் புலம்புகிறது.. ஒரு இறையாண்மை உள்ள நாட்டுக்கு தனது பாதுகாப்பை தானே உறுதி செய்து கொள்ள முடியவில்லை. உலக பொலீஸ்காரன் வேலை செய்து மற்றைய நாடுகளின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் அமெரிக்கா சொல்லித்தான் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்படனும் என்றால்.. பிறகென்ன இறையாண்மை...???! இந்திய இறையாண்மை அமெரிக்காவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது போலல்லவா இருக்கிறது இது.

ரஷ்சியாவையோ அல்லது சீனாவையோ வேறு நாடுகளையோ பார்த்து அமெரிக்கா சொல்லுமா.. உங்கள் நாடுகள் மீது தீவிரவாதம் தாக்கப் போகிறது கவனமா இரு என்று. உடன அவங்க சொல்வாங்க எங்கட வேலையை எங்களுக்கு பார்க்கத் தெரியும்.. நீ பொத்திக்கிட்டு போ என்று.

மும்பைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அமெரிக்க உளவாளியை விசாரணைக்கு கையளிக்க முன்வராத அமெரிக்கா.. இப்போ இன்னொரு தாக்குதலை தானே திட்டமிட்டுவிட்டு எச்சரிக்கையும் வழங்குவது போல் இந்திய இறையாண்மையோட விளையாட.. இந்திய இறையாண்மை நித்தா கொள்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதைப்பற்றி இந்தியாவில் உள்ளவங்களுக்கு சூடு சுறணை வருவதில்லையா..??! :( :(

அப்பிடி கேளுங்கோ.... நெடுக்ஸ்.

என்னமாதிரி கேட்டாலும் இந்தியாவுக்கு ஒண்டுமே விளங்காது.

அவர்களை சூழும் ஆபத்தை அறியாமல்....

அவர்கள் சினிமா, கிரிக்கெட் போன்ற விளையாட்டில் மூழ்கியுள்ளார்கள்.

அவர்கள் புரியும் காலத்தில்..... காலம் கடந்திருக்கும்.

அது, தமிழனுக்கு செய்த பாவத்தை, இந்தியா அனுபவிக்கும் காலமாக இருக்கலாம்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.