Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்லோவில் நடந்தது என்ன? மக்கள் அவையினர் விளக்கம்

Featured Replies

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன் தினம் இரவு அம்மறூட் ஆலய தேர்த் திருவிழாவின்போது இடம்பெற்ற சிறிய அசம்பாவிதத்தை நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும், மேற்குலக ஊடகங்களும் ஊதிப் பெருப்பித்து விட்டன என்று என்று நோர்வே மக்கள் அவையினர் விளக்கம் தந்துள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான இரு ஆயுதக் குழுக்களிடையே இடம்பெற்றதுதான் இந்த மோதல் என்கிற தொனியில் நோர்வே ஊடகங்களும்,இலங்கை அரசின் ஊடகங்களும், மேற்குலக ஊடகங்களும் திரித்து வேண்டுமென்று செய்தி வெளி யிட்டுள்ளன என்று நோர்வே மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா தமிழ்- சி.என்.என் இற்குத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தவை வருமாறு:-

”நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அம்மறூட் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலய திருவிழாவில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற சிறு அசம்பாவிதத்தை, நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும் பெரிதுபடுத்தியும்-திரிவுபடுத்தியும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆலய வளாகத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தோடு நோர்வே மக்களவையைச் சம்பந்தப்படுத்தியது மட்டுமல்லாது, நோர்வே தொலைக்காட்சி மற்றும் பி.பி.சி சிங்கள சேவை ஆகியன இச் செய்திக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்கவேண்டும் என்று நாம் சற்று சிந்தித்தால் உண்மை வெட்டவெளிச்சமாகி விடும் .

நடந்தது என்ன?

அம்மறூட் ஆலய திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை ஒழுங்காக தரித்து நிறுத்தும் பணியில் மக்களவையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். மிகவும் பெறுமதி வாய்ந்த ஆடம்பர காரில் வந்த இளைஞர் ஒருவர், அவரது காரை தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தி இருக்கின்றார். இவர் இப்படி முதல் நாளும் வந்திருக்கின்றார்.

அங்கு வாகனங்களை நிறுத்த முடியாது என கடமையில் இருந்தவர்கள் முதல்நாள் கூட இவருக்கு கூறியிருக்கின்றனர். இருப்பினும் இவர் இந்த அறிவுறுத்தலை கணக்கில் எடுக்காமல் சம்பவ தினமான மறுநாளும் நடந்து கொண்டார். கடமையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.காரில் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து கடமையில் இருந்தவரைத் தாக்கி இருக்கின்றார்.

சிறிய கத்தியால் குத்தியும் தாக்கி உள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் அந்த இளைஞனைக் கைது செய்தனர். இதில் காயமடைந்தவர்களில் நோர்வே மக்களவையின் முக்கிய பிரமுகர். இதனால் நோர்வே மக்களவையை தாக்கி அவதூறான செய்திகளை பரப்பி அதில் அரசியல் இலாபம் தேட நோர்வே அரசும், இலங்கை அரசும் முயல்கின்றன.

சிங்கள இணையங்கள் , பி.பி.சி சிங்கள சேவை , நோர்வே தொலைக்காட்சி என்பன இந்த அசம்பாவிதத்தை ஊதிப் பெரிசாக்க முனைவது, இலங்கை - நோர்வே அரசுகளுக்கு இடையிலான நெருக்கமான உறவை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

பொதுவாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் மிகுந்த ஒற்றுமையானவர்களாகவும், தாயகக் கோட்பாட்டில் உறுதியுடையவர்களாகவும், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடு படுபவர்களாகவும் உள்ளனர். இதனை நோர்வே அரசும் நன்கு அறியும், சமாதானம் என்று சொல்லி இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்து, எமது போராட்டத்தை நோர்வே அரசுதான் முதலில் சீர் குலைத்தது என்பது கசப்பான உண்மை.

புலம்பெயர் தமிழர்களின், வலையமைப்பை உடைக்க, முதலில் நோர்வேயில் உள்ள ஈழத் தமிழர்களிடம் காணப்படும் ஒற்றுமையை உடைக்க வேண்டியுள்ளது. இதனால் இலங்கை அரசின் ஊடகங்களும், நோர்வே தொலைக்காட்சியும் இச்சதியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.”

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8042:2010-08-09-11-14-41&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே உறவுகள் மேற்படி செய்தியை உறுதிப்படுத்தலாமே? வேறு ஊடகங்கள் வேறு வகையாக செய்திகளை பரப்புகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.