Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வின் சில்வா கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் நீக்கம்

Featured Replies

பிரதியமைச்சர் அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேர்வின் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Eelanatham.net

Edited by உமை

எங்கிருந்தோ சரியான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது

இந்த அழுத்தத்தை எம்மால் ஏன் கொடுக்க முடியவில்லை? ஏனெனில் நாம் சரியான வழியில் முயற்சிக்கவில்லை.படம் காட்டுவதில் தான் அதிக கவனம் செலுத்தினோம்.

அடடா யாருடைய அழுத்தம் என்பதை உடனடியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்

ஆனால் சொல்லத்தான் முடியேல்ல உங்களால

சூழ்நிலையை சமாளிக்க நாடகம் ஆடுகிறார்கள்.

நல்லவர்கள் வேடம் போடும் சிங்களவர்களின் உண்மையான சொரூபம் தான் - மேர்வின் சில்வா.

மகிண்டவாவது மேர்வினை விலத்திறதாவது. இருவரும் சேர்ந்து முன்பு கொழும்பில் செய்த சேட்டைகளை மேர்வின் அவிழ்த்துவிட்டால் - சிரந்தி மகிண்ட கூட இருக்கமாட்டார்.

மேர்வின் சில்வா பதவி நீக்கப்பட்டார்!

ஆநசஎin_ளுடைஎய_துபிரதி அமைச்சர் மேர்வின் சில்வா பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கியதை அடுத்து மேர்வின் சில்வாவிற்கும் அவர் அங்கம் பெறும் அரசிற்கும் எதிராக பல்வேறு விமர்சனங்களும் எதிர் கருத்துநிலைப்பாடுகளும் வலுப்பெற்றிருந்தன.

இந்நிலையில் மேர்வின் சில்வா தாம் அவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை என்றும்இ அவ்வாறு செயற்பட்டமை உண்மைதான் அவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்றும் அவர் முரண்பட்ட நிலையில் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் நாடு தழுவிய ரீதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முழுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேர்வின் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேர்வின் சில்வா எம்ரிவி ஊடக நிறுவனம் மீதான தாக்குதல்களில் பங்குகொண்டமை ஊடகர்கள் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை ஆதாரங்களோடு நிருபிக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேர்வின் மீதான இந் நடவடிக்கை கூட கண்துடைப்பே அன்றி வேறில்லை என்றும் மகிந்தராஜபக்சவிற்கும் மேர்வினுக்கும் இடையிலான இரகசிய செயற்பாடுகளே அவர் மீதான நடவடிக்கைகளைத் தடுத்து வந்ததாக கொழும்பின் அரசியல் நோக்கர் ஒருவர் தெரிவித்தார்.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கிருந்தோ சரியான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது

அழுத்தமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சிங்கள மக்களின் பவர் தான் காரணம். மகிந்த எவ்வளவு சர்வ வல்லமை பெற்றிருந்தாலும் சிங்கள மக்கள் அமைப்புக்களின் முன் தலைவணங்கியே ஆகவேன்டும். இதே வேலையை டக்ளஸ் யாழ்ப்பாணத்தில் செய்திருந்தால் என்னதான் கூப்பாடு போட்டிருந்தாலும் ஏதாவது நடந்திருக்குமா? ... வேண்டாம் அந்த சிங்கள டாக்டர் விவகாரத்தில் போராடியும், எதனை காணமுடிந்தது? அடிமைகள் குரல் சபை ஏறாது.

  • கருத்துக்கள உறவுகள்

“அடிதடி அமைச்சர்” மேவின் சில்வா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்

திகதி:11.08.2010,

சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய மேவின் சில்வாவை பிரதி அமைச்சர் பதவியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீக்கியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேவின் சில்வாவின் கட்சி உறுப்புரிமையை நீக்கியுள்ளது.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்திலேயே இந்த முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி அதிகாரி மீது அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது. அனைவராலும் கண்டிக்கப்பட்ட சம்பவமாக இருந்தது.

இதனையடுத்தே கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சங்கதி

அழுத்தமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சிங்கள மக்களின் பவர் தான் காரணம். மகிந்த எவ்வளவு சர்வ வல்லமை பெற்றிருந்தாலும் சிங்கள மக்கள் அமைப்புக்களின் முன் தலைவணங்கியே ஆகவேன்டும். இதே வேலையை டக்ளஸ் யாழ்ப்பாணத்தில் செய்திருந்தால் என்னதான் கூப்பாடு போட்டிருந்தாலும் ஏதாவது நடந்திருக்குமா? ... வேண்டாம் அந்த சிங்கள டாக்டர் விவகாரத்தில் போராடியும், எதனை காணமுடிந்தது? அடிமைகள் குரல் சபை ஏறாது.

இது அழுத்தத்துக்குள்ள சேராதாக்கும்

இந்த அழுத்தத்தை எம்மால் ஏன் கொடுக்க முடியவில்லை? ஏனெனில் நாம் சரியான வழியில் முயற்சிக்கவில்லை.படம் காட்டுவதில் தான் அதிக கவனம் செலுத்தினோம்.

். இதே வேலையை டக்ளஸ் யாழ்ப்பாணத்தில் செய்திருந்தால் என்னதான் கூப்பாடு போட்டிருந்தாலும் ஏதாவது நடந்திருக்குமா? ... வேண்டாம் அந்த சிங்கள டாக்டர் விவகாரத்தில் போராடியும்இ எதனை காணமுடிந்தது? அடிமைகள் குரல் சபை ஏறாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.