Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் விலை கொடுத்து புனர்நிர்மாணம்" ‐ எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழ் இலங்கையில் தடை ‐ கட்டுரையின் விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்

Featured Replies

பெரும் விலை கொடுத்து புனர்நிர்மாணம்" ‐ எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழ் இலங்கையில் தடை ‐ கட்டுரையின் விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐

24 August 10 12:21 am (BST)

எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழை இலங்கையின் சுங்க அதிகாரிகள் விற்பனைக்கு அனுமதிக்காமல் தடை செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக அது தடை செய்யப்பட்டள்ளது என தமக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார் அதன் விற்பனை ஏஜென்டான விஜிதயாப்பா புத்தகசாலையின் உரிமையாளரான விஜித யாப்பா. எனக்குத் தெரிந்தவரை அதில் இலங்கையைப் பற்றி ஒரு கட்டுரை இருந்தது. எனவே அது காரணமாகலாம் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எக்கனமிகஸ் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பத்திரிகை. ஆதில் இலங்கை பற்றி மட்டுமல்ல சர்வதேசத்தின் பல முக்கிய விவகாரங்கள் குறித்த கட்டுரைளும் வெளியாகி வருகிறது என்றும் முன்னாள் பத்திரிகை ஆசிரியரான விஜித யாப்பா சுட்டிக்காட்டுகிறார்.

வெளிநாட்டிலிருந்து வரும் வெளியீடுகள் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்குமானால் அவை விற்பனைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார் ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளரான லக்ஸ்மன் கலுகல்ல.

எக்கனமிக்ஸ் இலங்கையில் விற்பனைக்குத் தடுக்கப்பட்டது இது தான் முதற் தடவை என்றுமில்லை. முன்னரும் இது நடந்துள்ளது. இலங்கையில் உத்தியோகபூர்வமான தணிக்கை இல்லாத போதிலும் ஊடகங்கள் மீதானதும் ஊடகவியலாளர்கள் மீதானதுமான அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இங்கே அந்த எக்கனமிக்ஸ் சஞ்சிகையில் வெளியான இலங்கை பற்றிய கட்டுரை தமிழில் தரப்படுகிறது. தமிழாக்கம் ஜிரிஎன்.

பெரும் விலை கொடுத்து புனர்நிர்மாணம்.

சுற்றி வர அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த வேலிக்கு இப்புறமாக நின்று தான் இழந்து போன தன்னுடைய மூன்று ஏக்கர் விவசாய நிலத்தையும் தனது கிராமத்தையும் சுட்டிக்காட்டுகிறார் நீல நிறச் சேர்ட் அணிந்திருந்த குமாரசுவாமி நகுலேஸ்வரன். திருமலை மாவட்டத்தின் சம்பூரில் இருக்கிறது அவருடைய விவசாய நிலம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னதாக இலங்கை இராணுவத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட மோதலில் சம்பூரையும் அதனை அண்டிய கிராமங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின. அவ்வாறு வெளியேறியவர்கள் போர் முடிவடைந்து ஆறுமாதங்களின் பின்னர் இவ்வருட ஜனவரியில் தமது வீடுகளுக்குத் திரும்பியவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே.

போருக்குப் பின்னான "அபிவிருத்தித் திட்டங்களில்" தாம் பலியாக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டார்கள்.

போரின் போது சம்பூர் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. சம்பூரில் நிலை கொண்டிருந்த புலிகள் வெளியேற்றப்பட்டு 2009 மேயில் முழுமையாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

ஆனால் அப்பிரதேசம் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளதால் சுமார் ஆறாயிரம் மக்கள் தமது வீடுகளுக்கோ அன்றி தமது கிராமத்திற்கோ திரும்ப முடியாது அவதிப்படுகிறார்கள்.

இன்றோ அந்தப் பாதுகாப்பு வேலிகளுக்கு உட்புறமாக சம்பூர் பிரதேசம் துப்புரவாக்கப்பட்டு 500மெகா வற்ஸ் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டாக இத்திட்டத்தை நிறைவேற்றி உள்ளன. அத்தோடு துறைமுகம் ஒன்றுக்கும் வர்த்தக வலயம் ஒன்றுக்கும் அங்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசாங்கம் அதற்கான கட்டுமான வேலைகளை ஆரம்பித்து விட்டிருக்கிறது.

கிண்ணியாவுக்கும் மூதூருக்குமிடையேயான குறுகிய தூரத்தைக்கடப்பது இன்னும் பிரச்சினையான ஒன்றாகத் தான் இருக்கிறது. வீதியால் பயணிப்பதானால் குண்டும் குழியும் நிறைந்த கரடுமுரடான பாதையூடாகப் பயணிக்க வேண்டும். அல்லது ஒரு நாளைக்கு மூன்று சேவை என ஆரம்பிக்கப்பட்டிருக்குமு; படகுச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். இந்தக்களைப்பூட்டும் படகுச் சேவையைத் தவிர்க்க வேண்டுமானால், தெருக்கள் தார் ஊற்றப்பட்டு பாலங்கள் உடனடியாகக் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

நகரங்களும் கிராமங்களும் தமது பழைய நிலைமைக்குத் திரும்புவதற்கு கால் ஊனமானவர்; நொண்டி நொண்டி ஊர் எல்லையைக் கடக்க முயற்சிப்பதைப் போல முயன்று கொண்டிருக்கின்றன.

2006இல் பெரும் போர் நடைபெற்ற சம்பூருக்கு அருகில் உள்ள முஸ்லிம் நகரம் இதனோடு ஒப்பிடும் போது வளர்ச்சி கண்டு வருகிறது. அது கொஞ்சம் தலை நிமிர்திருக்கிறது. புதிய பாடசாலைகள் உட்பட்டவற்றுக்கான கட்டிடங்கள் எழும்பியிருக்கின்றன. மதில்களுக்கு வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஓரளவு நிதியுதவியும் கிடைத்தால் அது விரைவாகவே பழைய நிலைமைக்கு மீண்டு விடும்.

அம்மாவட்டம் எங்ஙணும் கடற்கரைக்கு முன்புறமாக உள்ள பகுதிகளை ஹோட்டங்கள் அமைப்பதற்கும் சுற்றுலாப்பிரயாண அபிவிருத்திக்குமாக விஸ்தரிப்பதற்காக அதிகாரிகள் அடையாளமிட்டிருக்கிறார்கள்.

அந்நிலப்பரப்புகள் ஏலமொன்றின் ஊடாக விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அனுசரணையின்படி அவை தெற்கிலிருந்து வரும் சிங்களவர்களுக்காக வழங்கப்படும் என உள்ளுர் தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.

இடம் பெயர்ந்த மக்கள் குழுவின் தலைவரான நாகேஸ்வரன் இடம் பெயர்ந்தவர்களை ஒன்று திரட்ட முயன்று வருகிறார். அரசாங்கம் இவர்களுக்காக வேறு இடங்களில் இடம் ஒதுக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், நாகேஸ்வரன் சொல்கிறார் அந்த நிலங்கள் குடியிருப்புக்கு உதவாதவை. விவசாயத்திற்கு தேவையான தண்ணீரையோ அல்லது விவசாயத்திற்கான மண்ணையோ கொண்டிராதவை என்று. அவை கடலை அண்டியனவாகக் கூட இல்லை மீன் பிடிப்பதற்கு. இவ்வாறு திட்டமிடப்படுவது குறித்து எவரும் எமக்கு அறிவிக்கவில்லை. எம்முடன் கலந்துரையாடவுமில்லை என்கிறார் அவர்.

அமைச்சர்கள் அறிவார்கள் இங்கு என்ன நடக்கிறதென்பதை. அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக வந்து செல்வதாக மூதூர் தெருவில் காவல் கடமையில் இருக்கும் படையினர் சொல்கிறார்.

உண்மையான போர் வீரரான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை சிறைக்குள் தள்ளிய அரசாங்கம் முன்னாள் புலிகளின் தலைவரும் தற்போதைய மீள்குடியேற்ற பிரதிஅமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு "சல்யூட்" அடிக்கும்படி தான் வற்புறுத்தப்படுவதாகவும் அந்தப் படையினர் தெரிவிக்கிறார்.

இலங்கையின் நான்கு நட்சத்திரப்பதக்கம் பெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஒருவரே. இவர் தான் புலிகளுக்கு எதிரான போரைத் தலைமை தாங்கினார்.

ஓகஸ்ட் 13ஆம் திகதி இராணுவ நீதிமன்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். உத்தரவுகளுக்கக் கீழ்ப்படியாமல் துரோகத்தனம் புரிந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவருடைய இராணுவ தரம், பதக்கங்கள் ஆகியன ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசி முன்னணியைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக ரீதியாக ஜனநாயகம் கோரி நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் குண்டாந்தடிப் பிரயோகத்தை மேற்கொண்டதோடு கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.

போரின் பின்னர் நாடு சிலவேளை அபிவிருத்தி கண்டு விடலாம். ஆனால் ஜனநாயகமோ இன்னமும் குற்றுயிராகத் தான் இருக்கிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=28904&cat=1

எக்கனமிக்ஸ் இலங்கையில் விற்பனைக்குத் தடுக்கப்பட்டது இது தான் முதற் தடவை என்றுமில்லை. முன்னரும் இது நடந்துள்ளது. இலங்கையில் உத்தியோகபூர்வமான தணிக்கை இல்லாத போதிலும் ஊடகங்கள் மீதானதும் ஊடகவியலாளர்கள் மீதானதுமான அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்
.

ஆனால் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் சொல்லினம் பத்திரிகை சுதந்திரம் சிறிலன்காவில் ஓ கோ என்று

எங்கட எலும்புத்துண்டு கெளவிகள் கொழும்பில தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தப்போயினமாம். பிறகென்ன. ஊடக சுதந்திரம் தமிழர்களுக்கும் சுதந்திரம் என நிறுவப்போயினம்.

பெரும் விலை கொடுத்து புனர்நிர்மாணம்" 24 August 10 12:21 am (BST)

சுற்றி வர அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த வேலிக்கு இப்புறமாக நின்று தான் இழந்து போன தன்னுடைய மூன்று ஏக்கர் விவசாய நிலத்தையும் தனது கிராமத்தையும் சுட்டிக்காட்டுகிறார் நீல நிறச் சேர்ட் அணிந்திருந்த குமாரசுவாமி நகுலேஸ்வரன். திருமலை மாவட்டத்தின் சம்பூரில் இருக்கிறது அவருடைய விவசாய நிலம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னதாக இலங்கை இராணுவத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட மோதலில் சம்பூரையும் அதனை அண்டிய கிராமங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின. அவ்வாறு வெளியேறியவர்கள் போர் முடிவடைந்து ஆறுமாதங்களின் பின்னர் இவ்வருட ஜனவரியில் தமது வீடுகளுக்குத் திரும்பியவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே.

இன்றோ அந்தப் பாதுகாப்பு வேலிகளுக்கு உட்புறமாக சம்பூர் பிரதேசம் துப்புரவாக்கப்பட்டு 500மெகா வற்ஸ் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டாக இத்திட்டத்தை நிறைவேற்றி உள்ளன. அத்தோடு துறைமுகம் ஒன்றுக்கும் வர்த்தக வலயம் ஒன்றுக்கும் அங்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசாங்கம் அதற்கான கட்டுமான வேலைகளை ஆரம்பித்து விட்டிருக்கிறது.

இந்திய பயங்கரவாதிகளுக்கு வாழ் பிடித்து, குடும்பத்தினருக்கு 5 வருட விசா பெற்றுக்கொள்ளும் சம்பந்தன், சுரேஷ் கண்டுகொள்வார்களோ அல்லது கண்டு-கொல்வார்களோ?

கூத்தமைப்பு தலைவர், சம்பந்தனின் அடுத்த வீடுக் கொல்லையில் நடைபெறும் இன அழிப்புக்கள் சம்பந்தனுக்கு தெரியாதது ஆச்சரியம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.