Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் எச்சங்களாய் வன்னிநிலப்பகுதிகளில் மிஞ்சியிருப்பது துயரங்களின் குவியல். காலம்காலமாய் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு மனிதவுயிர்கள் எண்ணுக்கணக்கின்றி அழிக்கப்பட்ட கொடுமையின் முடிவு எங்கள் மக்களை ஏதிலிகளாக்கிவிட்டுள்ளது. தங்கள் நிலங்களில் மீளவும் வாழ வழியற்றுத் தவிக்கும் மனிதர்களும் அவர்களின் அனாதைக் குழந்தைகளும் தங்கள் எதிர்காலம் மீதான நம்பிக்கைகளுடன் தறப்பாள்களின் கீழே மீளவும் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல்லாம் இழந்தபின்னும் நம்பிக்கைகளோடு மீளவும் குடியேறியுள்ள பொன்னகர் கிராமமக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்கள் நீங்களே உறவுகளே…..!

பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டார்கள். 50 வீட்டுத் திட்டத்தில் 35 வீடுகள் அமைத்து முடிக்கப்பட்ட சூழலில் யுத்தம் காரணமாக ஏனைய 15 வீடுகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன. அவர்களில் 15 குடும்பங்கள் தற்பொழுது அந்தக் கிராமத்தில் தரப்பால்களை கட்டிக் கொண்டு குடியேறியிருக்கிறார்கள். அடர்ந்த பற்றைகளுக்குள் வீடிருந்த இடங்களில் எழும்பிய புற்றுக்களுக்கு மத்தியில் அவர்கள் குடியிருக்கிறார்கள். கூரைகளற்ற வீடுகளைச் சேர்ந்த ஏனைய மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப்பொன்னகரத்தில் வாழும் மக்கள் தமக்கான வாழ்வாதார உதவியை தமிழர்களாகிய எம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பசியுடன் வாழும் குழந்தைகளும் பிள்ளைகளை இழந்த உறவுகளை இழந்த மனிதர்களும் நிறைந்த பொன்னகரில் வாழும் 15குடும்பங்களுக்குமான அவசர உதவியை நேசக்கரம் உறவுகளே உங்களிடம் எதிர்பார்த்து நிற்கிறது. தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி பொன்னகர் மக்களுக்கு ஒளிபெறச்செய்யுங்கள்.

உதவ விரும்புவோர் :-

Nesakkaram e.V

Hauptstr - 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany - 0049 6781 70723

Sri France - 0033 611149470

www.nesakkaram.org

Email – nesakkaram@gmail.com

மேலுள்ள விபரங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.

பொன்னகர் கிராமம் பற்றி தீபச்செல்வன் தந்த ஒலிப்பதிவின் இணைப்பு இது. இணைப்பை அழுத்தி கேளுங்கள்.

பொன்னகர் மக்களின் இன்றைய நிலமைகளை விளக்கும் படங்கள் இவை.

ponnakar.PNG

ponnakar1.PNG

Edited by shanthy

உதவிகள் அவசியம் தேவையான மக்கள் இவர்கள்.

சாந்தி அக்கா, நேசக்கரம் பெயருக்கு பின்னால் e.V என்று உள்ள எழுத்துக்களின் அர்த்தம் என்ன? உங்கள் பிரதான வலைத்தளத்தில் பேபல் தொடுப்பு ஆங்கிலத்தில் இல்லை, மாற்றம் செய்துவிடுங்கள், நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதவிகள் அவசியம் தேவையான மக்கள் இவர்கள்.

அவசியமாகவும் அசரமாகவும் உதவி செய்யப்பட வேண்டிய கிராமங்களில் ஒன்று. உங்கள் ஆதரவினையும் வேண்டுகிறோம் ஆராவமுதன்.

கருத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா (யாழ் இணையம்) வழைமைபோல் மாதாந்த உதவியாக 20 யுரோக்கள் அனுப்பியுள்ளார் அவரது பணம் மேற்:படி திட்டத்தில் இணைக்கப்படுகின்றது நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா, நேசக்கரம் பெயருக்கு பின்னால் e.V என்று உள்ள எழுத்துக்களின் அர்த்தம் என்ன? உங்கள் பிரதான வலைத்தளத்தில் பேபல் தொடுப்பு ஆங்கிலத்தில் இல்லை, மாற்றம் செய்துவிடுங்கள், நன்றி.

e.V என்று உள்ள எழுத்துக்களின் அர்த்தம் association என்பதைக்குறிப்பது. பேபால் ஆங்கில தொடுப்பை கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றிகள் கரும்பு. மாற்றிவிடுகிறேன்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னகரின் இன்றைய நிலமை இது

ஒலிப்பதிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதுமறியாத பொன்னகரில் வாழும் சிறுமியொருத்தியின் முகம்

kind.JPG

அவசியமாகவும் அசரமாகவும் உதவி செய்யப்பட வேண்டிய கிராமங்களில் ஒன்று. உங்கள் ஆதரவினையும் வேண்டுகிறோம் ஆராவமுதன்.

கருத்துக்கு நன்றிகள்.

நன்றி சாந்தி அக்கா.

எம்மால் முடிந்த சிறு உதவிகளை அயலூர்களில் செய்து வருகிறோம்.

கல் வீடுகளில் வாழ்ந்தவர்கள், இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளால் குடிசைகளில் வாழும் அவல நிலையைக் காட்டும் மனதைத் தொடும் படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.