Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணமும் சுற்றுலா விடுதிகள் அமைக்கும் களேபரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணமும் சுற்றுலா விடுதிகள் அமைக்கும் களேபரமும் ‐ GTN செய்தியாளர்‐

30 August 10 01:58 am (BST)

2010‐08‐29 22:17:58

விடுதலைப் புலிகளின் ராணுவ நடவடிக்கையின் போது முழுமையாக அழிக்கப்பட்ட சிறுத்தீவு படைத்தளப் பகுதியில் பாரிய 5 நட்சத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி அடைந்துள்ளது.

இந்த அமைப்பு வேலைகளுக்காக கண்ணி வெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு அளவை நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறுத்தீவுப் பகுதியில் மீனவர்களின் மீன்பிடிக்கான அனுமதி படைத்தரப்பால் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது.

இதேவேளை யாழ்ப்பாணப் பகுதிகளின் விடுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் விரும்பத்தகாத, குறிப்பாக விபச்சாரக் குற்றச் சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சனைகளின் மத்தியில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளின் உரிமையாளர்கள் யாழ்நகரில் ஒன்று கூடி அமைப்பொன்றை உருவாக்கி உள்ளனர்.

இதற்கான ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியில் இன்று நடத்தப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், விடுதிகள் தொடர்பாக யாழ்ப்பாண மக்களிடையே நிலவிவரும் அச்சநிலை, விடுதிகளை மேம்படுத்தி சுற்றுலாப் பயனிகளை கவரும் வகையில் விடுதிகளின் செயற்பாடுகளை விஸ்தரித்தல் முதலான விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அந்த வேளையிலேயே சிறுத்தீவுப் பகுதியில் அடுத்த வருட ஆரம்பத்தில் 5 நட்சத்திர விடுதி அமைப்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இதேபோன்று யாழ்ப்பாணம் பருத்தித் துறை வீதியில் நல்லூர் ஆலையத்திற்கு அருகாமையில் 3 மாடிகளைக் கொண்ட நட்சத்திர விடுதி ஒன்று அமைப்பது குறித்து பெரும் ஆரவாரத்துடன் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் பின்னர் அதுதொடர்பில் எதுவுமே நடைபெறவில்லை. இது தொடர்பாக பொதுமக்களிடையே பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த நடவடிக்கையும் கைவிடப்பட்டது. இவற்றினிடையே சிறுத்தீவில் 5 நட்சத்திர விடுதி தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே வேலனை சாட்டிப் பகுதி, காரை நகரின் காரைநகரின் கசூரினா பீச்சை அண்மித்த பகுதிகளிலும் நட்சத்திர விடுதிகளை அமைக்கவிருப்பதாக இலங்கை அரசின் உல்லாச பயணத்துறை அமைச்சு அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=29147&cat=1

பொறுப்பான புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து தரமான விடுதிகளை அமைக்க முன்வராதவரை, கடத்தல் - கப்பக் கும்பல்கள் ஆதரவில் தரமற்ற விடுதிகள் உருவாவதை தவிர்க்க முடியாது.

இன்னும் தாமதித்தால், சிங்களவன் விடுதிகளை அமைத்துவிடுவான். அதன் பின் கூச்சல் போட்டு வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பான புலம் பெயர் தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து தரமான விடுதிகளை அமைக்க முன்வராதவரை, கடத்தல் - கப்பக் கும்பல்கள் ஆதரவில் தரமற்ற விடுதிகள் உருவாவதை தவிர்க்க முடியாது.

இன்னும் தாமதித்தால், சிங்களவன் விடுதிகளை அமைத்துவிடுவான். அதன் பின் கூச்சல் போட்டு வேலையில்லை.

அது மட்டுமில்லை சிஙகளவன் மும்மரமாக வன்னிப்பகுதிகளில் காணிகள் வாங்கிறானாம்.இங்க உள்ளவர்களை கேட்டால் அங்க முதலீடு செய்தால் சிங்களவன் கொண்டு போய்விடுவனாம்.

கோவில் கட்டுவது என்றால் ஒண்றிணைவோம்

கோட்டல் கட்ட ஒண்றிணையோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.