Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்ணில் ஓர் மோதல்

இன்று 04-07-2005 அதிகாலை 01.52 க்கு புூமியில் இருந்து 134 மில்லியன் கிலோமீற்றருக்கு அப்பால், நாசா விண்வெளி நிலையத்தால் அனுப்பிவைக்கப்பட்ட deep impact எனும் செயற்கைக்கோள் TEMPLE1 எனும் வால்நட்சத்திரத்துடன் மோதி வெடிக்க வைக்கப்பட்டது

DELTA II எனும் விண்கலத்தால் இவ்வருடம் ஜனவரியில் செயற்கைக் கோள் DEEP IMPACT ஏவப்பட்டது. மோதலின் இறுதிக் கணம்வரை கட்டுப்பாட்டு அறைக்கு வால்நட்சத்திரத்தின் தன்மைகள் பற்றிய தகவல்களை அனுப்பியது.

36 720 KM/H எனும் வேகத்தில் மோதல் நிகழ்ந்தது

4.8 தொன் TNT அளவு சக்கி மோதலின் போது வெளியேறியது

வால்நட்சத்திரம் TEMPLE1 1867 ஆம் ஆண்டு ERNST TEMPEL என்பவரால் அவதானிக்கப்பட்டது. இவ்வால் நட்சத்திரம் புூமியை சுற்றிவர ஐந்தரை வருடங்கள் பயணிக்கும் . புூமியில் இருந்து ஆகக் கூடிய து}ரம் 825 மில்லியன் கிலோமீற்றர். குறைந்த து}ரம்

225 மில்லியன் கிலோமீற்றர.

http://deepimpact.jpl.nasa.gov

http://deepimpact.eso.org

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

_41263009_1di_nasa_203.jpg

மனிதன் மேற்கொண்ட விண்ணியல் மொத்துகையின் பின்னர் வால்நட்சத்திரத்தின் திண்மப் பகுதியில் இருந்து பனித்துகள்களும் தூசி மீதிகளும் வெளித்தள்ளப்படும் காட்சி...!

மேலதிக தமிழில் தகவல் இங்கு... http://kuruvikal.blogspot.com/ .... செய்தி ஆதாரம் படங்கள் bbc.com

தகவலுக்கு நன்றியண்ணா

pr3.jpg

விண்வெளியில் பயணம் செய்துகொண்டிருக்கும் "டெம்பெல்~1' என்னும் வால்நட்சத்திரத்தின் மீது 'நாஸô' அனுப்பிய 'இம்பேக்டர்' விண்கலத்தை மோதிப் பிளப்பதற்கு முன் படம்பிடித்த காட்சி. இவ் வால்நட்சத்திரம் மும்பை நகரை விட சற்று பெரிது.

pr8.jpg

வால்நட்சத்திரதை 'இம்போக்டர்' விண்கலம் மோதிய பின்பு ஏற்படும் காட்சியை பூமியிலிருந்து தொலைக்காட்சியில் பிடிக்கப்பட்ட காட்சி.

நன்றி - தினமணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன் அண்ணா....என்ன ஒரு நாளைக்கு நாசாக்கு சொல்லாமல் வந்திச்சு என்றால் சரி.....:P :P :P

நாசாக்கு சொல்லாமல் வரணுமா? எது நாசாக்கு வால்நட்சத்திரமா?

வால்நட்சத்திரத்துடன் விண்கலம் மோத வைக்கப்பட்டது

_41257297_deepimp_nasa_203.jpg

பூமிக்கு 130 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில்

வான்வெளியில் ஒரு சிறிய விண்கலத்திற்கும் டெம்பல் ஒன் எனப் பெயரிடப்பட்ட வால் நட்சத்திரத்திற்கும் இடையில் தாங்கள் உண்டாக்கிய மோதல் மிகப் பெரும் வெற்றி என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா கூறுகிறது.

அண்டத்தில் புதிய சூரியக் குடும்பங்கள் ஏற்படுகையில் உண்டான சிதிலங்களைக் கொண்டதாகக் கருதப்படும் வால் நட்சத்திரங்கள் தொடர்பான ஆய்வில் இன்றைய நிகழ்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த டெம்பல் ஒன் என்கின்ற வால் நட்சத்திரம் இலகுவான, பஞ்சு போன்ற இழுக்கக் கூடிய அமைப்பைக் கொண்டது என்ற கருத்து இப்போது நிராகரிக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இன்று பிரபஞ்சத்தில் ஏற்படுத்தப்பட்ட மோதலின் விளைவாக பெரும் வெளிச்சம் ஏற்பட்டதுடன் சிதிலங்கள் வெடித்துச் சிதறின. மோதலின் விளைவாக ஏற்பட்ட வெளிச்சமானது மற்றொரு பெரிய விண்கலத்தில் இருந்தும் பிற செய்கோள்கள் மற்றும் பிற ஆய்வு நிறுவனங்களினால் பதிவு செய்யப்பட்டன.

நன்றி - பிபிசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன் அண்ணா நான் சொன்னன் வால் நட்சத்திரங்கள் நாஸா விண்வெளி நிலையத்திற்கு தாங்கள் வாறம் என்று சொல்லாமல் வந்தினம் என்றால் என்ன நடக்கும் என்று நினைச்சன் அது தான் சொன்னன் அப்படி.....:P :P :P

  • தொடங்கியவர்

_41287225_crew_nasa_416.jpg

கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அமெரிக்க கொலம்பிய விண்ணோட விபத்திற்குப் பின்னர் சர்வதேச விண் நிலையம் நோக்கி அமெரிக்க டிஸ்கவரி விண்ணோடம் மூலம் எதிர்வரும் புதன்கிழமை (13 - 07 - 2005) விண்ணுக்கு பயணிக்க இருக்கும் 7 பேர் கொண்ட விண்வெளிவீரர்கள் குலாத்தைப் படத்தில் காணலாம்...! இவர்களுக்கு Eileen Collins எனும் பெண் வீராங்கனை தலைமை தாங்குகிறார்...!

இவர்கள் சர்வதேச விண் நிலையத்தின் கட்டமைப்புத் தொடர்பான இறுதிப் பணிகளை நிறைவு செய்வதுடன்.... விண்வெளியில் மனிதர்களை அதிக காலம் தங்க வைக்கக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும் மீண்டும் சந்திரனுக்குப் போவது குறித்தும் ஆய்வுகள் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...!

_41281601_crew_203.jpg

Commander Eileen Collins

Pilot James Kelly

Mission Specialist Andy Thomas

MS Charles Camarda

MS Wendy Lawrence

MS Soichi Noguchi

MS Steve Robinson

டிஸ்கவரியில் பறப்புக்குத் தயாராக இருக்கும் விண்வெளி வீரர்களும் அவர்களின் விபரங்களும்..!

மேலதிக விரங்களுக்கும் செய்தி ஆதாரத்துக்கும்.. http://kuruvikal.blogspot.com/

ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவர விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். குருவியண்ணா தகவலுக்கு நன்றியண்ணா :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவிகளே..

நன்றி குருவி

ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!

  • தொடங்கியவர்

_41298105_shuttle_203_new.gif

13-07-2005 இல் ISS நோக்கி விண்ணுக்குச் செலுத்தப்பட இருந்த அமெரிக்க நாசா நிறுவன விண்ணோடமான டிஸ்கவரி, இறுதி நேரத்தில் அவதானிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணுக்குச் செலுத்தப்படுதல் மறு திகதி அறிவிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது...!

விண்ணோடம் கெனடி ஏவுதளத்தில் விண்வெளி வீரர்களுடன் செலுத்துகைக்கு தயாராக இருந்த வேளை எரிபொருள் தாங்கியில் இருந்த உணரி (sensor) தொழிற்படத் தொடங்கி தொழில்நுட்பக் கோளாறை அடையாளம் காட்டவே செலுத்துகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.!

இதற்கு முன்னராக டிஸ்கவரியின் முன் கண்ணாடியில் பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் காப்பு கழன்று விழுந்து, அது சரி செய்யப்பட்டு முன்னர் குறிப்பிட்டது படி இன்று விண்ணோடம் செலுத்துகைக்கு தயார் செய்யப்பட்டிருந்தது...! எனினும் வரும் திங்கள் வாக்கில் டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்படலாம் என்றும் தெரிகிறது...!

Problem delays US shuttle launch

The launch of the Discovery space shuttle has been delayed for several days because of technical problems.

No new launch date has been set, but Nasa managers say the most optimistic possibility for the next attempt could be as early as Saturday.

[Nasa says the launch will now take place no earlier than Saturday.

However, it is considered more likely lift-off will be delayed until Monday. - 14.07.2005]

bbc.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் குருவி அண்ணா....நீங்க என்ன Astronaut ஆ? இல்ல பறந்து போய் பார்த்திட்டு வாறிங்களா? :wink:

  • தொடங்கியவர்

குருவிகள் பறவைகளாச்சா இணையத்தில பறந்து போய் பாக்கிறதுகள்..இப்ப டவுட்டுக் கிளியரா தங்கையே..! :wink: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி குருவி அண்ணா...நான் நினைச்சன் நீங்க விஞ்ஞானியாக்கும் என்று.....:wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவிகளே

  • தொடங்கியவர்

_41316891_moontree.jpg_41319529_guideplaque_nasa203.jpg

தற்போதும் அமெரிக்காவில் உயிர் வாழும் சந்திர மரங்கள்...!

யூலைத் திங்கள் 20ம் நாள் 1969ம் ஆண்டு மனித வரலாற்றில் முக்கியமான விண்ணியல் சாதனை நிகழ்ந்த நாள்..! அன்றுதான் அமெரிக்க விண்வெளிவீரர்களான Neil A. Armstrong, Commander; Edwin E. Aldrin, Lunar Module Pilot; Michael Collins, Command Module Pilot, ஆகியோர் முதன்முதலில் சந்திரனில் கால்பதித்த நாள்...! அதுவரை அபூர்வமாக தெய்வமாக உவமையாக விளங்கிய சந்திரன் அன்றிருந்து தான் ஆராய்ச்சிக்குரியதானது...!

அதன் பின்னர் மேலும் 5 பயணங்கள் அப்பலோ விண்ணோடம் மூலம் சந்திரனுக்கு நடத்தப்பட்டுள்ளன...! அதில் அப்பலோ 14 என்ற விண்ணோடம் மூலம் பெப்ரவரித் திங்கள் 5ம் நாள் 1971ம் ஆண்டு சந்திரனை நோக்கிப் பயணித்த விண்வெளி வீரர்களில் ஒருவரான Stuart A. Roosa, Command Module Pilot, தனது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட காலுறை அளவுப் பைக்குள் தனக்குப் பிடித்தமானதும் அமெரிக்க வனத்துறை மற்றும் தாவரப் பிறப்புரிமையியல் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு உட்பட்டதுமான மரத்தின் விதைகளை எடுத்துச் சென்று அதைச் சந்திரனில் வெளிப்படுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்துள்ளார்...!

அந்த விதைகள் முளைத்து வந்த வழித்தோன்றல்கள்...மாற்றங்கள் ஏதும் இன்றி இன்றும் சந்திர மரங்களாக (Moon Trees) உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றன அத்துடன் அவை ஞாபகார்த்தமாக வளர்க்கப்பட்டும் வருகின்றன...!

இந்த சந்திர மரங்கள் பற்றி இன்றுதான் எமக்கு அறியக் கிடைத்தது...உங்களுக்கு எப்படி...??!

_41319549_roosa_nasa203.jpg

மர விதைகளை சந்திரனுக்கு எடுத்துச் சென்ற விண்வெளி வீரர் Stuart Roosa

மேலதிக தகவல்களுக்கும் இணைப்புக்களுக்கும் செய்தி ஆதாரத்துக்கும்... http://kuruvikal.blogspot.com/

டிஸ்கவரி'யில் என்ன கோளாறு? விடை தெரியாமல் தவிக்கிறது நாசா

19dnasa.jpg

அமெரிக்காவின் கேப் கனவராலில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் (இடமிருந்து) டிஸ்கவரி விண்வெளி ஓட திட்ட மேலாளர் பில் பார்சன்ஸ், துணை இயக்குநர் வேய்ன் ஹேல்.

ஹூஸ்டன், ஜூலை 20: டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் என்னவிதமான கோளாறுகள் ஏற்பட்டதால், அதை ஏவும் பணி தோல்வியடைந்தது என்பதற்கான விடையை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் இன்னமும் முழுமையாக கண்டறிய முடியவில்லை.

கடந்த ஜூலை 13-ல் எரிபொருள் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக டிஸ்கவரியை ஏவும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோளாறுகளைக் கண்டறிந்து, தீர்வு காணும் பணியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஜூலை 26-ம் தேதி வரை டிஸ்கவரியை ஏவும் வாய்ப்பு இல்லை எனவும் நாசா கூறியுள்ளது. இம்மாத இறுதிக்குள் டிஸ்கவரியை ஏவுவது கடினமான விஷயம்தான் என்றாலும் கூட, எப்பாடுபட்டாவது டிஸ்கவரியை விரைவில் விண்வெளியில் ஏவுவதற்காக நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

""பிரச்சினைகளைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது குழுவில் இடம் பெற்றுள்ள விஞ்ஞானிகள் மிகவும் திறமைசாலிகள். பிரச்சினையை எப்படியும் சரி செய்துவிடுவோம் என நம்புகிறோம். மேலும் ஜூலை 31-க்குள் டிஸ்கவரி ஏவப்பட்டுவிடும் எனவும் நம்புகிறோம்'' என டிஸ்கவரி திட்ட மேலாளர் பில் பார்சன்ஸ் தெரிவித்தார். எரிபொருள் சென்சாரைத் தவிர வேறு பிரச்சினைகளும் எழுந்துள்ளனவா என ஒரு விஞ்ஞானியிடம் கேட்டதற்கு, அவ்வப்போது சிறிய பிரச்சினைகளும் உருவாகின்றன எனப் பதில் அளித்தார்.

திணமணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் குருவி அண்ணா மதன் அண்ணா....அது சரி குருவி அண்ணா..அது என்ன சந்திர மரங்கள்? சந்திர விதைகள்? என்ன விதைகளை அந்த atmosphere க்கு expose பண்ணிவிட்டு இங்கு மரங்களை நட்டார்களா? :wink::

  • தொடங்கியவர்

நன்றிகள் குருவி அண்ணா மதன் அண்ணா....அது சரி குருவி அண்ணா..அது என்ன சந்திர மரங்கள்? சந்திர விதைகள்? என்ன விதைகளை அந்த atmosphere க்கு expose பண்ணிவிட்டு இங்கு மரங்களை நட்டார்களா?

ஆமாம் தங்கையே...அதையே தான் செய்தார்கள்...! எல்லோருக்கும் விளங்கத்தக்க வகையில் எளிமையாகச் சொல்லி இருக்கம் அந்தச் செய்தியில்...விரிவாகக் கதைக்கவில்லை..!

உங்கள் நல்லதொரு வினவல் வெளிப்பட்டிருக்கு...இப்படியா

  • தொடங்கியவர்

_41326553_engin_ap_203.jpg

நாசாப் பொறியியலாளர்கள்..!

நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (26-07-2005) அன்று ஐ எஸ் எஸ் நோக்கி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது...!

Discovery given new launch date

The US space agency has set Tuesday at 1039 EDT (1539 BST) as its new launch opportunity for the shuttle Discovery. (bbc.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டிஸ்கவரியில் சந்தர்பம் கிடைத்தால் பார்க்கலாம்

டிஸ்கவரி விண்கலன் விண்ணில் ஏவப்பட்டது

1.jpg

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கொலம்பியா விண்கலம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்காவால் ஏவப்படும் முதலாவது விண்கலமான டிஸ்கவரி, இன்று புளோரிடாவின் கேப் கனவரல் என்னும் இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

டிஸ்கவரி விண்ணில் எழுந்து சென்ற போது அதனைப் பல விண் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்; நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அந்த விண்கலத்தில் உள்ள 7 விஞ்ஞானிகளும் தற்போது அதனை விண் சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னர் திட்டமிட்டபடி சர்வதேச விண் ஆய்வு கூடத்துடன் இன்னும் இரு நாட்களில் அவர்கள் இணையவுள்ளனர்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரு வாரங்கள் தாமதமான டிஸ்கவரி நிதானமாக ஏவப்பட்டது குறித்து அங்கு ஒரு ஆறுதல் காணப்பட்டதாக அங்குள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

BBC Tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.