Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வம்சாவளித் தமிழ் அகதிகளின் நலனை முன்னிலைப்படுத்தி இருக்கும் நிருபமா!

Featured Replies

வவுனியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கை அரசு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கோரி இருக்கின்றது இந்தியா.

நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று நாடு திரும்பி உள்ளார்.

அங்கு ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோதே இப்படி ஒரு கோரிக்கையை இந்திய அரசின் சார்பில் விடுத்திருக்கின்றமையை அவர் வெளிப்படுத்தினார். இலங்கையில் இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று தமிழர்களில் இரு வகையினர் இருக்கின்றார்கள் என்றும் 1977 ஆம் ஆண்டு கலவரம் ஒன்று இடம்பெற்றமையை அடுத்து இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு தொகையினர் வவுனியாவுக்கு சென்று குடியேறி அங்குள்ள நிலங்களில் விவசாயம் செய்து இருக்கின்றார்கள் என்றும் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் இருக்கின்றார்கள் என்றும் அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

இவர்களின் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் அவற்றை இவர்களிடம் மீளக் கையளிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேரடியாகக் கோரி இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று உறுதி மொழி வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகள் ஆகியவற்றுக்கு அப்பால் சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அரசியல் தீர்வு ஒன்றை மிகவும் விரைவாக முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கோரினார் என்றும் அந்த விடயத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு, பற்றுறுதி ஆகியவற்றுடன் செயற்படுகின்றார் என்று ஜனாதிபதி அழுத்தமாகக் கூறினார் என்றும் அவர் சொன்னார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9570:2010-09-02-17-47-23&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இருக்கும் பிரிவினை பத்தாது என்று ... அக்கா வேற பிட்ட போடுறார்... ஒற்றுமை இனி விளங்குன மாதிரிதான் :rolleyes:

இந்திய வம்சாவளித் தமிழ் அகதிகளின் நலனை முன்னிலைப்படுத்தி இருக்கும் நிருபமா!

முட்டையில் மயிர் பிடுங்குவது, எமக்கு கை வந்த கலை! :rolleyes:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர் நெல்லையன் மலையாள அக்காவின் பிரிவினை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் மற்றவரை ஏன் கடிந்து கொள்கிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா? :rolleyes:

கைக்கூலிகள் எப்பவும் இப்பிடித்தான்!!!

கைக்கூலிகள் எப்பவும் இப்பிடித்தான்!!!

Flasher.gif:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை இலங்கை அரசு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று கோரி இருக்கின்றது இந்தியா.

நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று நாடு திரும்பி உள்ளார்.

அங்கு ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோதே இப்படி ஒரு கோரிக்கையை இந்திய அரசின் சார்பில் விடுத்திருக்கின்றமையை அவர் வெளிப்படுத்தினார். இலங்கையில் இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று தமிழர்களில் இரு வகையினர் இருக்கின்றார்கள் என்றும் 1977 ஆம் ஆண்டு கலவரம் ஒன்று இடம்பெற்றமையை அடுத்து இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு தொகையினர் வவுனியாவுக்கு சென்று குடியேறி அங்குள்ள நிலங்களில் விவசாயம் செய்து இருக்கின்றார்கள் என்றும் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் இருக்கின்றார்கள் என்றும் அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

இவர்களின் காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் அவற்றை இவர்களிடம் மீளக் கையளிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேரடியாகக் கோரி இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று உறுதி மொழி வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகள் ஆகியவற்றுக்கு அப்பால் சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அரசியல் தீர்வு ஒன்றை மிகவும் விரைவாக முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கோரினார் என்றும் அந்த விடயத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு, பற்றுறுதி ஆகியவற்றுடன் செயற்படுகின்றார் என்று ஜனாதிபதி அழுத்தமாகக் கூறினார் என்றும் அவர் சொன்னார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9570:2010-09-02-17-47-23&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

இந்தக் கூற்று ஈழத்தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

நடைமுறையில் வந்தால் அவர்களுடன் சிங்களவர்களும் இன்னும் வேகமாக வடபகுதியில் குடியேற்றப்படுவார்கள்.

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.