Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி நடிகர் விவேக் ஒப்ரோயின் வாக்குறுதிக்கு என்ன நடந்தது?

Featured Replies

atbc-01.jpg

கடந்த ஆண்டு நடைபெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிப்புற்ற வவுனியா வடக்கு வலயத்தில் அமைந்துள்ள மாறாவிலுப்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இப்பாடசாலையின் நிலையை நேரில் கண்டறிந்த வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இப்பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து, கழுத்துப்பட்டி (ரை) மற்றும் சமையல் பாத்திரங்கள் என்பன அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தினரால் (ATBC )அவர்களது நேயர்களின் நன்கொடைகளினூடாக 21.09.2010 செவ்வாய்க்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவற்றை சிவசக்தி ஆனந்தன் கொள்வனவு செய்து பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

atbc-02.jpg

நிகழ்ச்சிக்கு பாடசாலையின் அதிபர் சி.இராசரத்தினம் தலைமைதாங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் க.கங்காதர கீர்த்தி வழங்கினார். பெற்றோர்கள் சார்பில் சயம்பு செல்லத்துரை உரையாற்றினார் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் பரமேஸ்வரன் கலந்துகொண்டார்.

இதன்பொழுது சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமைக்கு பயங்கரவாதத்தையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையையும் அரசாங்கம் காரணமாகக் கூறிவந்தது. இப்பொழுது யுத்தம் முடிவுற்றதாக அரசாங்கம் அறிவித்து விட்டது. அத்துடன் அரசாங்கத்திற்கு தான் எதிர்பார்த்த பெரும்பான்மையும் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் தீர்வினைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை.

மாரிகாலம் தொடங்கிவிட்டதால் அரச இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு எமது மக்களுக்கான உட்கட்டுமானங்களை விரைந்து செயற்படுத்த வேண்டும். காலநிலை மாறுபாட்டால் ஏற்படக்கூடிய நோய்களைத் தடுப்பதற்கும் நோயாளர்களைக் குணப்படுத்துவதற்கும் மீள்குடியேறிய அனைத்து கிராமங்களிலும் உடனடியாக மருத்துவமனைகளை அமைப்பது மிகவும் அவசியமாகும்.

atbc-03.jpg

மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள இடங்களில் மாரிக்காலத்திற்கு முகம்கொடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையும் சாலைகள் உட்பட உட்கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதையும் மருத்துவ வசதி செய்யப்படவில்லை என்பதையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலியுறுத்தி வருகின்றோம். இன்னமும் அவைகள் செய்யப்படாமலேயே உள்ளன என்றும் தெரிவித்தார்.

atbc-04.jpg

அவர் மேலும் கூறுகையில், மாரிக்காலம் தொடங்கிவிட்டது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தாங்கள் இருந்த முகாம்களிலிருந்து கொண்டுவந்த கூடாரத்துணிகளையே பயன்படுத்தி வருகின்றனர். கூரைகளுக்கான தகரங்கள் சிலருக்குக் கொடுக்கப்பட்டபோதிலும் அவைகளைப் பொருத்துவதற்கான தடிகள் கொடுக்கப்படவில்லை. அத்துடன் தரையுடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் கூடாரங்களினுள் புகுந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சீமெந்து மூட்டைகள், அவர்களிடம் எஞ்சியுள்ள உலர்உணவுப் பொருட்கள் உடைகள் உட்பட அனைத்தையும் நனைத்து பாவிக்க முடியாத நிலைக்குத் தள்ளியள்ளது. அது மட்டுமன்றி கூடாரத் துணிகள் உக்கிப்போய்விட்டதால் மழைநீரின் பாரம் தாங்காமல் துணிகள் கிழிந்து மக்கள் மழையில் நனைகின்றனர். இவர்கள் ஒதுங்குவதற்குப் பாடசாலைகளில்கூட கூடாரங்கள் இல்லை. எமது மக்கள் மாரிக்காலத்தில் எங்கு செல்வது? இந்த வகையில்தான் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளது. மாரிக்காலத்தில் பெரும்போக பயிர்ச்செய்கை செய்து தனது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ளலாம் என்று எமது மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைகின்ற போதிலும் மறுபுறம் தங்களது இயல்பு வாழ்க்கைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையிட்டு மிகவும் கவலையடைந்துள்ளனர்.

atbc-05.jpg

மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள கிராமங்களில் மக்களுக்கான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை என்று சொல்லப்படுகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்கான அரசியல் தீர்வு காணப்பட்டால் உடனடியாக அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறை தீர்ந்துவிடும். ஆனால் அரசு அதனைச் செய்யாமல் காலம் தாழ்த்தி நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காண்பித்து எமது மக்களை மீண்டும் மீண்டும் கையேந்தும் நிலையில் வைத்துள்ளது.

atbc-06.jpg

மிகவும் செல்வாக்குடனும் தன்னிறைவுடனும் வாழ்ந்த எம்மக்களை வலுக்கட்டாயமாக அவர்களது இடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு அவர்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டு இன்று எமது மக்களுக்கு 50,000 கடன் வழங்குவதாகச் சொல்கின்றார்கள். எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். எமது மக்களைக் கடனாளிகளாக்க மாட்டோம். எமது மக்கள் உழைப்பாளிகள். இதுவரைகாலமும் அவர்கள் உழைத்துச் சேமித்து வைத்திருந்த அனைத்தையும் கடந்த ஆண்டு யுத்தம் நிர்மூலமாக்கிவிட்டது. ஏதுமற்று இன்று சொந்தநாட்டிலேயே ஏதிலிகளாக வாழ்ந்துவரும் எமது மக்களின் உயிரோடும் வறுமையோடும் விளையாடாதீர்கள். இந்த நேரத்தில் அரசாங்கம் தன்னால் முடியாவிட்டால் உடனடியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள அனைத்து கிராமங்களிலும் தமது பணிகளைச் செய்வதற்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டும்..வன்னி மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி இருப்பதால் கடந்த நான்கு நாட்களாகப் பெய்துவரும் மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும் அவர்கள் கூடாரங்களில் தங்கியிருப்பதால் அவர்களின் குடும்பச் சூழ்நிலை அவர்களை முழுமையாகத் தமது தொழிலில் ஈடுபடமுடியாமல் தடுக்கின்றது.

atbc-07.jpg

போரின்பொழுது எமது மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டனர். இப்பொழுதும் அதே நிலை உருவாகும் வாய்ப்பு இருக்கின்றது. கடந்த ஜுன்மாதம் மாறாவிலுப்பைப் பாடசாலைக்கு அரசாங்கம் இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்தி நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து காண்பித்தது. அவரும் இப்பாடசாலையைத் தத்து எடுத்து ஐந்துகோடி ரூபாய் செலவில் இப்பாடசாலையைப் புனரமைப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதால் இன்று இப்பாடசாலையை ஒருவரும் திரும்பிப் பார்ப்பதில்லை. இப்பாடசாலையின் கூரைகள் முழுவதும் கழற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்குவதற்கு இடவசதியில்லை. இந்நிலையில் இரண்டு பெண் ஆசிரியர்கள் யாழிலிருந்து வந்து இங்கு தங்கியிருந்து கற்பிக்கின்றனர். ஆசிரியர்கள் அனைவரும் வெளியிலிருந்து வருவதால் இங்கு அவர்கள் தங்கியிருப்பதற்கான வசதிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்பட வேண்டும். தொடங்கிவிட்ட மாரிக்காலத்தில் பிள்ளைகள் பாடசாலையினுள் அமர்ந்து கல்விகற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இப்பகுதி பின்தங்கிய பிரதேசமாக இருப்பதால் மின்சாரவசதி, தங்குமிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாபோதிலும் ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புக்களை நடத்தி இம்மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். இதேநிலைதான் மீள்குடியேறியுள்ள அனைத்து இடங்களிலும் நீடிக்கின்றது என்று கூறிய அவர் இவை அனைத்தையும் துரிதகதியில் சீர்செய்வதற்கு தன்னால் இயன்றவற்றைச் செய்வதாகக் கூறினார்.

தொடர்புபட்ட பதிவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75605

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75610

  • கருத்துக்கள உறவுகள்

தானா மேயற மாட்ட நக்கற மாடு கெடுத்த கதை இதானா? அவர்களாவது எதாவது செய்திருப்பார்கள்.. இவன் வெத்து வெட்டு அறிவிப்பு செய்துவிட்டு போய்விட்டான்.. :lol:

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இவை போல் பல அமைப்புகள் முன் வந்து அங்குள்ள, அதுவும் பறிபோகப்போகும் நிலப்பரப்புகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்ற வேண்டும்! அது அவர்களை நிரந்தரமாக அம்மண்ணில் வாழ்க்கையை வாழ உதவும்!

மேலும் கேபிக்கள், டக்லஸுகளின் கைகளில் சிக்கி சிங்கள அரசின் ஏவலுக்கு, அவை விரயமாகாது, த.தே.கூ சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் மூலம் முன்னெடுத்து, அவை சென்றடைய வேண்டியவர்களை சென்றடைய செய்யலாம்!!

எமது மக்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இன்று மிகவும் தேவையாக உள்ளது. இதற்கு வெளிநாடு தமிழர்களால் எத்தனை வீதம் உதவ முடியும்? எவ்வளவு காலம் உதவ முடியும்?

இந்த குழந்தைகள் வளர்ந்து வெளிநாட்டுக்கு வந்து அவர்களுக்கு உழைக்கும் அடிமைகளாக மாறக்கூடாது. தமது மண்ணிலே படித்த பட்டதாரி ஆனால் வேலையற்றவராக இருக்கக்கூடாது.

எமது மக்களுக்கு நாம் இவ்வாறாக உதவும் வேளையில் அவர்களின் "நீண்ட" கால கல்வி, பொருளாதார, நில, அரசியல் உரிமைகள் வென்றேடுக்கப்படவேண்டும். அதுவே உண்மையனா பங்களிப்பு.

தொடரும் உலக பொருளாதார தேக்கத்திலும் எந்தவிதமான வேலைவாய்ப்புக்கள் கிரக்கியகவுள்ளன என அண்மையில் அமெரிக்காவில் ஒரு ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டது. இதில் கணணி சம்பந்தமான தொழில் முதலீடுகள் ஊக்குவிக்கப்படலாம் புலம் பெயர் தமிழரால்.

=====================

a) Nurses: The number of registered nurses is expected to swell to 3.2 million by 2018, up from 2.6 million today.

b) Network Systems and Data Analysts: These are the analysts are the folks who design and build the systems that we use to connect to the web, from work or home. This profession will grow by 53.4% to almost 448,000 workers between 2008 and 2018.

c) Software Engineers: Software engineers and application developers to swell to 689,900 by 2018 (up from 514,800 in 2008). Whether they are building business software, constructing an operating system, developing games, or designing mobile apps, software engineers have a wide array of career avenues to consider.

d) Biomedical Engineers: Biomedical engineering is expected to be the fastest growing occupation, with a whopping growth project of 72% between 2008 and 2018. The immense growth of biomedical engineering will be driven by the demand for new treatments for diseases and the increasingly higher expectations of aging patients to maintain an active lifestyle. From developing artificial organs, medical devices like pace makers, or refining imaging technology that allows doctors to examine patients in more precise ways than ever before, biomedical engineers will have plenty to work on in the coming decade.

e) Accountants and Auditors: While number crunching and bean counting has certainly not fallen out of style in recent memory, the economic fallout of the past few years has placed renewed focus on financial regulation. And with the passage of the federal financial reform bill in June, companies will need an even larger cohort of auditors and accountants to parse through new regulations to make sure they are in compliance. The accounting profession is poised to experience 22% growth between 2008 and 2018, with an anticipated 279,400 new jobs in the field by 2018.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.