Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் செய்திகள்: இந்தியாவுக்கு சீனா பாராட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமன்வெல்த் செய்திகள்: இந்தியாவுக்கு சீனா பாராட்டு

common_wealth_2010.jpg

பெய்ஜிங், செப்.28: தில்லி காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்த இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

காமன்வெல்த் போன்ற மிகப் பெரிய போட்டிகளை நடத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம். இதில் சீனாவுக்கும் அனுபவம் உண்டு. தில்லி காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எனினும், போட்டியை சிறப்பாக நடத்த தில்லி அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.

போட்டி வெற்றி பெற சீனாவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயம் அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்த காமன்வெல்த் போட்டியை இந்தியா சிறப்பாக நடத்தும் என்றார் அவர்.

16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன. 2008-ல் ஒலிம்பிக் போட்டிகளை வெகு சிறப்பாக நடத்திய சீனா, அதை விஞ்சும் அளவுக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் திருப்தி: போட்டி ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் முழு திருப்தி தெரிவித்துள்ளன. இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக் கூறியது:

விளையாட்டு கிராமம், போட்டி நடைபெறும் இடங்கள் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்ததாக இப்பகுதி அமைந்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழு திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளன. இந்தப் பெருமை அனைத்தும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையே சாரும். போட்டி ஏற்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், ஷீலா தீட்சித் முழு வீச்சில் செயல்பட்டு அனைத்து பணிகளையும் முடிக்க முயற்சி எடுத்ததற்கு பாராட்டுகள் என்றார் அவர்.

இதேபோன்று வங்கதேச தூதர்

தாரிக் ஏ கரிமும் போட்டி ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=310336&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=

----------------------------------------------------------------------------------------------------------------------

மனிதர்களுக்குள் நக்கல் விடுவதை பார்த்திருக்கேன் ... நாடுகளுக்குள் நக்கல் விடுவது என்பது இதுதானா? ஈழத்தோழர்கள் விளக்குக.... :wub:

215.gif

நாடுகளுக்குள் நக்கல் இல்லை தோழரே. உண்மையில் காமன்வெல்த் போட்டியை நடத்துவது என்பது ஒரு சாதாரண காரியமில்லை. கீழே உள்ள link ல் சென்று பாருங்கள். போட்டிக்காக எவ்வளவு சிறப்பான் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பது புரியும்.

http://www.thedipaar.com/news/news.php?id=19015

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கூட்டமைப்பில் இருந்து மனதளவில் வெளியேறி பலநாளாகிவிட்டது தோழர்... ஈசி ஜாப்ஸ்... சிலருக்கு வடவர்களின் போக்கு அது பிடித்தமானதாக இருக்கலாம்.... இவர்கள் செய்யும் குல்மால் வேலைகளுக்கு.. நம் வீட்டு வரிப்பணம் கால் பகுதியாவது சென்றிருக்கும் அல்லவா? மேலே நீங்கள் சுட்டிய இணைப்பில் காட்டபடும் ஜிகினா வேலைகளில் 20% மட்டுமே செலவிட பட்டு இருக்கும்...

http://www.yarl.com/files/100928_abdul_jabar.mp3

மீதி எவனோ தின்று கொழித்து இருப்பான் இது தமிழர் நாட்டு அரசியல் கைத்தடிகளையும் சேர்த்துத்தான்.. ஆனது ஆச்சு போனது போகட்டும்... நம்நாடு... தாய்நாடு.... என்பதில் எனக்கு விருப்பமில்லை தோழர்... உரிய இழப்பீடு அரசியல் தீர்வு... அது ஈழமானாலும்... காசுமீர் .....வடகிழக்கு ஆனாலும் சம்பந்தபட்டவர்களுக்கு வழங்கிய பிறகு தேசியம் ...தேசம்... என்பதைனை பேசி கொள்ளலாம்..

http://www.youtube.com/watch?v=vqiItJ7FObA

தெற்காசிய ரவுடிகள் அதை செய்யபோவதில்லை என்பதே நிதர்சணம்... கீழே இருப்பவனை குத்தி கொண்டு இருப்பதுதான் இவர்கள் வழக்கம்...

இவர்களின் குல்மால் வேலைகளை ...தேசியம் தேசம் ... நாட்டு பற்று என்பதினை கொண்டு மூடிவிடிவிட கூடாது...

டிஸ்கி:

எதிர்க்கணும் என எண்ணம் வரவேண்டுமெனில்... உள்நாட்டு ரீதியாக ....

ஐ.நா சபையில் இலங்கைக்கு ஆதரவாக கிந்தியா வாக்களித்ததை நினைவில் நிறுத்த வேண்டும் ...அல்லது மலேசியாவில் தமிழர்கள் தாக்கபடுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் கூச்சல் எழுப்பியபோது மலேசிய மக்கள் பார்த்துவிடுவாரகள் ... அது நம் நட்பு நாடு என்று தூர்தர்சன் லைவ் டெலிகாஸ்டை நிறுத்த சொன்ன காம்நாத் காட்டர்ஜியை நினைத்து கொள்ளவேண்டும்... அதுவும் இல்லையெனில் இந்தியத்தினை சந்தி சிரிக்கவைத்த தோழர் முத்து குமாரை நினைத்து கொள்ளவேண்டும்...

இன்னும் காவிரி முல்லை பெரியாறு தமிழக மீனவ பிரச்சனை என தேவைபடுவதை நினைத்து கொள்ளலாம்... இவன் அப்போதைய கன்னட மத்திய அமைச்சர் எஸ் ஆர் பொம்மை... அபோதே வந்திருக்கவேண்டிய செம்(கனி)மொழி அந்தஸ்தினை நிறுத்தியத்தில் இருந்தும் எடுத்து கொள்ளலாம்.....

நன்றி :o

புரட்சிகர தமிழ்தேசியன்.... திருவண்ணாமலை.....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

easyjobs இணைப்பில் உள்ள முதல் படத்திலேயே ரோட்டில் தண்ணி நிக்குது.. இதில பெருமையாமா? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

easyjobs இணைப்பில் உள்ள முதல் படத்திலேயே ரோட்டில் தண்ணி நிக்குது.. இதில பெருமையாமா? :D

அது சரி பெட்டில ஏன் இரண்டு பேப்பர் றோலை வைத்து இருக்கிறர்கள்? நாய் மேலால எறி நடந்து போற நேரம் விரிச்சு விடுறதுக்கோ, அல்லது கால் தடத்தை துடைச்சு விடுறதுக்கோ :o:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பெட்டில ஏன் இரண்டு பேப்பர் றோலை வைத்து இருக்கிறர்கள்? நாய் மேலால எறி நடந்து போற நேரம் விரிச்சு விடுறதுக்கோ, அல்லது கால் தடத்தை துடைச்சு விடுறதுக்கோ :o:lol::)

இந்த இணைப்பில் உள்ள படத்தில்.... நாய்கள் நடந்து போன... காலடிகள் உள்ளன.

http://news.bbc.co.uk/sport1/hi/commonwealth_games/delhi_2010/9025907.stm

கக்கூஸ் எல்லாவற்றையும் துரிதமாக செப்பனிட்ட, இந்தியாவுக்கு பாராட்டுக்கள்.

_49213434_combination466.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Common Wealth Vs India's Wealth

நன்றி என் டி டி வி

61642_10150095751534128_722674127_7389510_7778164_n.jpg

61258_10150095751669128_722674127_7389518_5174456_n.jpg

61311_10150095751699128_722674127_7389519_130291_n.jpg

61311_10150095751704128_722674127_7389520_7411523_n.jpg

62446_10150095751494128_722674127_7389509_6113710_n.jpg

61108_10150095751569128_722674127_7389511_4889065_n.jpg

60833_10150095751589128_722674127_7389512_672807_n.jpg

60833_10150095751594128_722674127_7389513_3817016_n.jpg

62823_10150095751624128_722674127_7389514_5804698_n.jpg

62823_10150095751629128_722674127_7389515_3185629_n.jpg

62406_10150095751649128_722674127_7389516_7086561_n.jpg

61258_10150095751659128_722674127_7389517_7334562_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.