Jump to content

நேசக்கரம் மூன்றாம் காலாண்டிற்கான (ஆடி,ஆவணி,புரட்டாதி) கணக்கறிக்கை.


Recommended Posts

பதியப்பட்டது

ஆடி,ஆவணி,புரட்டாதி கணக்கறிக்கை PDF வடிவில். இந்த இணைப்பில் அழுத்தி கணக்கு விபரங்களை பார்வையிடலாம்.

நேசக்கரம் தன்னார்வத் தொண்டு அமைப்பின் உதவித் திட்டங்களினால் மூன்றாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள்.

1)கல்விகற்கும் பாடசாலை மாணவர்கள் , பயனடைந்தோர் 765 மாணவர்கள்.

பயனடைந்த பாடசாலைகள் :- கனகபுரம் பாடசாலை (13மாணவர்கள்) , ஊற்றுப்புலம் அ.த.க (220மாணவர்கள்) , கிளிநொச்சி கனிஸ்ரா மகாவித்தியாலம் (6மாணவர்கள்). 239மாணவர்கள் பாடசாலைகள் ஊடாகவும் 136மாணவர்கள் வெளியிலிருந்தும் உதவிகள் பெறுகின்றனர்.

வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சத்துணவு மற்றும் வாழ்வாதார கற்றலுக்கான பண உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஏ.எல் உயர்தரபரீட்சைக்குத் தோற்றிய வன்னியைச் சேர்ந்த 300மாணவர்களுக்கும் கிளிநொச்சியில் தோற்றிய 90 மாணவர்களுக்கும் பேனாக்கள் வழங்கப்பட்டது. மற்றும் வன்னி மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் 11170ரூபாவுக்கு பிரதிகள் எடுத்துக் கொடுக்கப்பட்டது.

2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்கள் பயனடைவோர் 73 சிறார்கள். இவர்களிற்கான உணவு உடை பாடசாலைச் செலவு பாடசாலைக்கான போக்குவரத்துச் செலவுகள் வழங்கப்படுகின்றது.

3) உயர்கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் – 30பேர். (ஒருவருக்கு தலா 2000ரூபா மாதாந்தம் பண உதவி கிடைக்கிறது)

4) பல்கலைக்கழக மாணவர்கள் – 35பேர் (ஒருவருக்கு தலா 5000ரூபா முதல் 6000ரூபா வரை பண உதவி கிடைக்கிறது)

உதவிபெறும் மாணவர்கள் பெயர் விபரம்

1) சுரேஸ்குமார் தேவராஜ்(கலைப்பிரிவு)

2) விமலேஸ்வரி(கலைப்பிரிவு)

3) நிசாந்தன் கருணாகரன்(முகாமைத்துவம்)

4) ஞானக்குமார் சிவஞானம்(முகாமைத்துவம்)

5) யசோதரன் செல்லத்துரை(கலைப்பிரிவு)

6) கயேந்திரன் சிவசுப்பிரமணியம்(கலைப்பிரிவு)

7) நவதரன் வைத்திலிங்கம்(கலைப்பிரிவு)

8) ரவிநேசன் சிறில்(கலைப்பிரிவு)

9) சுதாநாதன் ஜெகநாதன்(கலைப்பிரிவு)

10) நிமல்ராஜ் யேசுராசா(வர்த்தகப்பிரிவு)

11) நரேஸ்குமார் விக்னேஸ்வரன்(வர்த்தகப்பிரிவு)

12) பிரபாகரன் அருளம்பலம் (கலைப்பிரிவு)

13) கயேந்திரவேல் கணபதிப்பிள்ளை (கலைப்பிரிவு)

14) சுரேஸ்கண்ணா கோபாலராசன் (கலைப்பிரிவு)

15) குகன் குமாரசாமி (வணிகத்துறை)

16) கேளதமன் குணரத்தினம்(கலைத்துறை)

17) றாதீபன் துரைராஜா(கலைத்துறை)

18) சசிகுமார் நீலகண்டன்(கலைத்துறை)

19) தனறஞ்சன் தனராஜா(வணிகத்துறை)

20) சுகுமாரன் கைலாயபிள்ளை(முகாமைத்துவம்)

21) நிசாந்தி கனகரத்தினம்(கலைப்பிரிவு)

22) பெனடிக்ற் ஸ்ரீபன்(கலைப்பிரிவு)

23) தர்மீசன் புவனேஸ்வரன்(மருத்துவம்)

24) பிரதீப் தனபாலசிங்கம்(பௌதீக விஞ்ஞானம்)

25) விக்னா கனகலிங்கம்(கலைப்பிரிவு)

26) சாந்தினி ஆனந்தராசா(கலைப்பிரிவு)

27) சிறீகாந் கந்தையா(கலைப்பிரிவு)

28) சிவராசா வேலுச்சாமி(கலைப்பிரிவு)

29) மகேந்திரம் சுப்பிரமணியம்(விஞ்ஞானம்)

30) சுபராஜ் குலசேகரம்(கலைப்பிரிவு)

31) ரவீந்திரன் சோபனா (முகாமைத்துவம்)

33) ரவீந்திரன் சுகந்தன் (கலைப்பிரிவு)

34) ரமேஸ் காளிமுத்து (விஞ்ஞானம்)

35) பாலகுமார் பாலசிங்கம் (வணிகத்துறை)

5)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்து தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் பயன்பெறுவோர் 87 குடும்பங்கள்.

இக்குடும்பங்களில் பலர் விழிப்புலன் அற்றவர்களாகவும் , உடல் அவயவங்களை இழந்தவர்களாகவும் , மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் இடுப்புக்குக்கீழ் கழுத்துக்குக்கீழ் இயங்காதவர்களும் உள்ளனர். இவர்களிற்கான தொடர்ச்சியான மாதாந்தக் கொடுப்பனவுகளாக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் தொகையின் அடிப்படையில் 5 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் ரூபாய்வரை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிற்குக் கிடைக்கும்படி வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

6) சுயதொழில் ஊக்குவிப்பில் பயனடைந்தோர் – 91பேர்

கணவனை இழந்த குடும்பப் பெண்கள் பயன் பெறுவோர் 45 பெண்கள்.

கணவனை இழந்த குடும்பப் பெண்களில் தொழில் செய்யமுடியாத அளவிற்கு உடல் மற்றும் மனநிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் 17 பேரிற்கு மாதாந்த கொடுப்பனவுகளும் , சுயதொழில் செய்யத் தெரிந்த 26 பெண்களிற்கான சுயதொழில் வாய்ப்பிற்கான தையல் இயந்திரங்கள் , வீட்டுத்தோட்ட வசதிகள், சிறு மளிகைக்கடை மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் இக்குடும்பங்களின் குழந்தைகளிற்கான அடிப்படை கல்வி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் 20குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

7) வைத்திய உதவிகள் பயனடைந்தோர் 4

பயனாளர்கள் :-

1)சதீஸ்கரன் திருமலை (வைத்திய மற்றும் சுயதொழில் வாய்ப்பு)

உதவியவர்கள். விசுகு மற்றும் அவரது நண்பர்கள் பிரன்ஸ் – 900€ யுரோக்கள்

2) துரை இந்தியா (1500டெனிஸ்குரோணர்கள் – உதவியவர் – வினோதினி டென்மார்க்)

3) அறிவொளி.இந்தியா தமிழ்நாடு

4) சிவகரன் .இந்தியா தமிழ்நாடு

காலத்தின் தேவையறிந்து நேசக்கரத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகவும் மக்களுக்காகவும் தங்கள் நேசக்கரங்களை நீட்டிய அனைத்து அன்பான உள்ளங்களுக்கும் பயனடைந்தவர்கள் சார்பாக நேசக்கரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உங்கள் நேசக்கரங்களை எங்கள் உறவுகளுக்கு நீட்டுவீர்கள் என நம்புகிறோம்.

- நேசக்கரம் நிர்வாகக் குழுவினர் –

உறவுகளிற்கு உதவுவோம்.

Posted

நேசக்கரம் ஒழுங்குபடுத்தலில் அதிகமான உதவிகள் நேரடியாக உதவி செய்யும் உறவுகளாலேயே செல்கிறது. குறைந்தளவு உதவியே அதாவது நேரடியாக அனுப்ப முடியாதவர்களின் உதவியே நேசக்கரம் வங்கிக்கணக்கூடாக உதவப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் சிறுவர்கள் குடும்பங்களுக்கான உதவிகள் 95வீதமானவை நேரடியாகவே உதவ விரும்புவோரால் செய்யப்படுகிறது.

எமது கடந்த 3மாத உதவிகளில் நேரடியான உதவிகளில் அதிகமானவற்றை தொடர்பாளர் தீபச்செல்வனே கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார். தான் சென்று வந்த ஊர்களிலிருந்து மிகவும் பாதிப்படைந்தவர்களின் விபரங்களை சேகரித்து வந்து தன்னால் இயன்றவரை பணியாற்றியுள்ளார். குறிப்பாக எந்தவிதமான கொடுப்பனவுகளும் இல்லாது இப்பணியைச் செய்துள்ளார். தீபச்செல்வனுக்கு எங்களது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றிகள் என்ற சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது தங்கள்சேவையை...

நன்றியுடன் தங்களின் கரம் பற்றுகின்றேன்

Posted

சாந்தி அக்கா உங்கள் சேவைக்கு நன்றிகள் பல. நேசக்கரம் தளத்தை ஆங்கிலத்தில் பார்க்க ஆவன செய்யுங்கள்.

Posted

சாந்தி அக்கா உங்கள் சேவைக்கு நன்றிகள் பல. நேசக்கரம் தளத்தை ஆங்கிலத்தில் பார்க்க ஆவன செய்யுங்கள்.

நுணாவிலான்,

நேசக்கரம் முதல் பக்கத்தில் இடது பக்க மேல் மூலையில் ஆங்கிலம் டொச் தமிழ் ஆகிய 3மொழிகளுக்குமான இணைப்பு கொடுக்கப்பட்டள்ளது. இணைப்பில் கிளிக் செய்து ஏனைய மொழிகளைப் பார்வையடலாம்.

ஆங்கிலத்தில் முழுமையாக விடயங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் பிரதானமான விடயங்கள் போட்டுள்ளோம். ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய யாராவது உதவினால் பேருதவியாக இருக்கும்.

Posted

ஆங்கில மொழிபெயர்ப்பு செய்ய யாராவது உதவினால் பேருதவியாக இருக்கும்.

சாந்தி,

இந்த இணைப்பில் உங்களுக்கு தேவையான மொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். மிகவும் இலகுவானது. பலரிடம் உங்கள் PayPal தளத்தை மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டிருந்தேன். நேற்றுதான் என்னுடன் வேலை செய்யும் ஆங்கில நண்பர் கொடுத்தார்.

http://uk.babelfish.yahoo.com/

Posted

சாந்தி,

இந்த இணைப்பில் உங்களுக்கு தேவையான மொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். மிகவும் இலகுவானது. பலரிடம் உங்கள் PayPal தளத்தை மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டிருந்தேன். நேற்றுதான் என்னுடன் வேலை செய்யும் ஆங்கில நண்பர் கொடுத்தார்.

http://uk.babelfish.yahoo.com/

நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு. பார்க்கிறேன் நீங்கள் தந்த இணைப்பில்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.