Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

Featured Replies

(படித்ததில் பிடித்தது)

அன்பின் சுந்தரம்,

நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன

ஏழை வானத்தின் கீழ்

அந்தகார இரவு

முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது

ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே

எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென

உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி

அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு

அன்றைய நள்ளிரவு இருள்

பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு

அப்பா இல்லாமல் போன காலம்

குஞ்சுகளுக்கு யாருடைய காவல்

அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர்

வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள்

ருசி தானே இந்த (சிறை) உணவு

வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் சுவை உணவு

புள்ளினங்கள் பறந்தாலும்

பாடல்கள் இல்லை அவையிடத்தே

பூக்கள் மலர்ந்தாலும்

மிதிபட்டுச் சிதையும் அக்கணமே

இழுத்துப் பிடித்த வீணையின் நரம்புகள்

முன்பெழுந்த இன்னிசையை இனியெழுப்பாது

தப்பித்தோடினால் மீளவும்

முட்கம்பிகளில் சிக்கி விட நேரிடும்

விழி உயர்த்திப் பார்த்தால்

மீண்டும் தலைதூக்க முடியாமல் போய்விடும்

ஒரு துளி விழிநீர் சிந்தினால்

முழுப் பரம்பரையும் சாம்பலாகும்

அதனால் உணர்ச்சியற்றிருக்கிறேன்..

எவர்க்கும் கேட்டுவிடாதபடி சுவாசிக்கிறேன்..

நீங்கள் அங்கு உறங்கும் வரை.

இப்படிக்கு,

உங்களுடைய,

ராதா.

(சிங்கள மொழி மூலம்) - மாலதீ கல்பனா எம்ப்ரோஸ்

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

கவிஞர் குறித்து...

மாலதீ கல்பனா எம்ப்ரோஸ்

அரச சார்பற்ற நிறுவனமொன்றில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராகக் கடமை புரியும் மாலதீ கல்பனா எம்ப்ரோஸ், ஒரு சமூக ஆய்வாளரும், சமூக சேவகியும் கூட. இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகள் குறித்து கள ஆய்வுகள் செய்து, அவை பற்றி வெளிப்படையாக கவிதைகள், கட்டுரைகள் என இலங்கையின் பிரபல சஞ்சிகைகளில் அச்சமின்றி எழுதி வருபவர் இவர்.

http://www.penniyam.com/2010/10/blog-post_05.html

  • கருத்துக்கள உறவுகள்

போகன்வில்லா பூக்களைப்போல் கவிதை தமிழின் அழகுணர்த்திச் செல்கிறது. உயிர்ப்பின் வாசனையை உணர முடியவில்லை

போகன்வில்லா பூக்களைப்போல் கவிதை தமிழின் அழகுணர்த்திச் செல்கிறது. உயிர்ப்பின் வாசனையை உணர முடியவில்லை ஒருவேளை மொழிபெயர்ப்பினாலோ

  • கருத்துக்கள உறவுகள்

எமது உணர்வை உணர முடிந்த அந்த சிங்கள சகோதரிக்கு நன்றி.

வீணா இணைப்புக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.