Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனுக்காக.... இது கவிதையில்லை....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் போல அவனுக்கும்

வாழ்வு மீதான பிரியங்களும்

தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன…..

பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும்

அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்……

கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப்

பேரலையொன்று விழுங்குமாப்போல

குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில்

தொலைந்து போக

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்……

ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய்

ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்…..

காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள்

போரும் அவலமும் புகுந்து கொண்ட போது

போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன்

சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு

வீட்டுப் படியேறி வந்தவனை வேண்டாமென்றா ஒதுக்க முடியும்…?

போன உயிர் புதுப்பிறவியெடுத்தது போலக் கொண்டாடிய

அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் அவன் வாழவேயில்லை……

வரலாற்றையும் அதற்காக வாழ்ந்தோரையுமே வழிகாட்டியென்பான்

வழிநெடுகத் தன்கூட வாழ்ந்து மடிந்துபோன வரலாற்றுப்

பிள்ளைகளையே உச்சரிப்பான்…..

என்ன பிள்ளையடா நீ எங்களின் வாழ்வடா….?

அம்மாவின் அழுத கண்ணீர் துடைத்து

அவன் சொன்ன கதைகள் ஆயிரம்….

உயிர் பிரிந்து அம்மா நான் உனைப்பிரிந்து போனாலும்

உங்களைக் காக்க ஆயிரம் மகன்கள் வருவார்கள்…..

அவர்களுக்காக வாழ்ந்திரு

சத்தியம் செய்தான் சபதமாகவே…..

கண்களில் ஏந்திய கனவுகள் தாங்கிய

களமொன்றில் காயமடைந்தவன்

கடைசியாய் உணர்வு நரம்புகள் அறுபட்டுக்

கையில் 3விரல்களும் கழுத்தின் மேலாயும்

உயிர்ப்புடன் திரும்பினான்…..

எல்லாம் போயிற்றென்று புலம்பிய அம்மாவுக்கு

எல்லாரும் எனக்காகவே நம்பியிரு தாயே….

நம்பிக்கை கொடுத்தான்…..

வாரம் ஒரு தரம் மாதம் ஒருதரமாகி

அவனைக் காணும் நாட்கள் தூரமாகிப்போனது

கண்ணீரில் அவனைக் கனவுகளில் காணுதலே அரிதாகி

அவன் மே 2009 காணாமலே போய்விட்டான்…..

அம்மாவும் அப்பாவும் அவனைக்

காணாதோர் பட்டியலில் வைத்துக்

காத்துக் கொண்டிருக்க

அவன் காணாமல் போயிருக்கிறான்……

கலந்து வைத்த வண்ணங்களைக்

காற்றடித்துச் சிதைத்தது போல்

அவனது கனவுகள் சிதைக்கப்பட்டது….

சாகவிடாமல் அவனையும்

அள்ளிக்கொண்டு போனார்கள்….

தடுப்பும் கம்பியும்

அவனையும் அவனது தோழர்களையும்

கம்பியிட்டுக் காவலர்கள் மத்தியில்

அழுக்குகளும் நாற்றமும்

அவர்களுக்கு உணவாக……போயிற்று எல்லாம்…..

நாங்களிருக்கிறோம் நம்பிக்கையின் தூண்களிருக்கிறோம்

என்றொலித்த குரல்கள்

மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று…..

எவரையும் காணவில்லை எங்கிருந்தோவெல்லாம்

வந்து போனவர்கள் ஞாபகப்படம் பிடித்தவர்கள்

ஒருவரையும் காணவில்லை…..

சோறும் நீருமா சுதந்திரம் இல்லை

வீரம் என்றுமே

விலையானதில்லையென்றோரால் மறக்கப்பட்டு

மரணம் கூட அண்டாத பிண்டங்களாய்ப்

போன துயரைச் சொல்லியழ

ஆழுமின்றி அனாதரவானவர்கள் வரிசையில்

அவனும் அனாதரவாகிக் கிடக்கிறான்…..

மூன்று விரலுக்குள் கரண்டியைச் செருகிச் சோற்றுக் கோப்பையை

வைத்துவிட்டுப் போகின்ற உறவுக்கு நன்றி சொல்லி

கிடைக்கின்ற சோற்றுக்குள்ளே அவனது சுதந்திரக் கனவுகள்

சிதைந்து போவதாய் நினைக்கையில் நெஞ்சுக்குள்

சோகம் அப்பிக் கொள்வதில்லை கோபமே வருகிறது…..

அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்

அவர்களுக்கு என் துயர் இனியும் வேண்டாம்

வெறுப்புகளாலும் வேதனைகளாலும் சூழப்பட்டுள்ளான்…..

கந்தக வாசனை கடந்தகாலக் கனவுகளின் வேதனை

எல்லாவற்றின் மீதும் அவன் நம்பிக்கையற்றுப் போயிருக்கிறான்……

அனாதையாய் போனதாய் அலட்டிக் கொள்கிறான்

ஆருமற்றுப்போனதாய் தனக்குள் அழுது தொலைகிறான்…..

எவரது வார்த்தைகளும்

தன்னைக் காப்பாற்றாது என்பதை மட்டும் நம்புகிறான்…..

வாழும் ஆசையும் வருங்காலக் கனவுகளும்

சிறுவயதில் கட்டிய மண்வீடு போலக் கரைகிறது

அவனது கண்ணீராயும் அவனது கனவுகளாயும்……

மிஞ்சிக் கிடக்கும் காலம் அவனையும் தன்னோடு

இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது……

ஓரினத்தின் கனவுகளைச் சுமந்தவன்

ஒன்றுக்கும் பயனில்லாத சடமாகிக் கிடக்கிறான்

சாவுக்காய் காத்துக் கிடக்கிறான்……

11.10.10

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76252

இந்த இணைப்பில் உள்ளவனுக்காக இந்த வரிகள். இது கவிதையல்ல....

நாங்களிருக்கிறோம் நம்பிக்கையின் தூண்களிருக்கின்றோம்

என்றொலித்த குரல்கள்

மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று…..

எவரையும் காணவில்லை எங்கிருந்தோவெல்லாம்

வந்து போனவர்கள் ஞாபகப்படம் பிடித்தவர்கள்

ஒருவரையும் காணவில்லை…..

மூன்று விரலுக்குள் கரண்டியைச் செருகிச் சோற்றுக் கோப்பையை

வைத்துவிட்டுப் போகின்ற உறவுக்கு நன்றி சொல்லி

கிடைக்கின்ற சோற்றுக்குள்ளே அவனது சுதந்திரக் கனவுகள்

சிதைந்து போவதாய் நினைக்கையில் நெஞ்சுக்குள்

சோகம் அப்பிக் கொள்வதில்லை கோபமே வருகிறது…..

ஓரினத்தின் கனவுகளைச் சுமந்தவன்

ஒன்றுக்கும் பயனில்லாத சடமாகிக் கிடக்கிறான்

சாவுக்காய் காத்துக் கிடக்கிறான்……

குறிப்பிட்ட சகோதரன் வாழ்க்கையில் பூரண உளநலத்துடன் வாழவும், இயலுமான அளவு உடல்சுகம் பெறவும் பிரார்த்திப்போம். விரலுக்கு தகுந்ததுதான் வீக்கம். என்னால் உதவமுடியவில்லை. யாராவது அக்கறை உள்ளவர்கள் - இவரை தமது உறவாக நினைக்கக்கூடியவர்கள் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு - வாழ்க்கை ஆரோக்கியமான வகையில் இயல்பு நிலை அடைவதற்கு உதவி செய்வார்கள் என பிரார்த்திப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட சகோதரன் வாழ்க்கையில் பூரண உளநலத்துடன் வாழவும், இயலுமான அளவு உடல்சுகம் பெறவும் பிரார்த்திப்போம். விரலுக்கு தகுந்ததுதான் வீக்கம். என்னால் உதவமுடியவில்லை. யாராவது அக்கறை உள்ளவர்கள் - இவரை தமது உறவாக நினைக்கக்கூடியவர்கள் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு - வாழ்க்கை ஆரோக்கியமான வகையில் இயல்பு நிலை அடைவதற்கு உதவி செய்வார்கள் என பிரார்த்திப்போம்.

கரும்பு உங்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை. இந்த உறவுக்கு வாழ்வு முழுவதும் அவன் வாழும்வரையும் மாதாந்தம் அவனது தேவைகளுக்காக 15ஆயிரம் ரூபா தருவதற்கு முன்வந்துள்ளார். அந்த அன்பு உள்ளத்தின் மின்னஞ்சலில் ஒரு பகுதியை கீழே இணைக்கிறேன்.

அன்பின் சாந்தி

இந்த உறவை நான் எனது தம்பியாக ஏற்றுக்கொள்கிறேன். என் தம்பியை பராமரிக்க மாதமொன்றுக்கு தேவையான 15,000/- ரூபாவை ஒவ்வொருமாதமும் அனுப்புவேன்.

எனக்கு நீங்கள் ஒரு உத்தரவாதம் தரவேண்டும். இனி இவனைப்பராமரிப்பவர்கள் இவனோடு மிகுந்த அன்பாகவும் பாசமாகவும் சகிப்புணர்வோடும் பராமரிக்க வேண்டும்.

நீங்களும் அவனோடு அடிக்கடி தொடர்பில் இருந்து அவனுக்கு வாழவேண்டுமென்ற ஆசையை ஊட்டவேண்டும். இவனைப்பற்றி அடிக்கடி எனக்கு தெரியப்படுத்துங்கள்.

நான் பணம் தருவதால் இதைச் சொல்லவில்லை. இனிவரும் நாளில் அவன் மன ஆறுதலோடும், மகிழ்சியுடனும் இருக்கவேண்டும் என்ற துடிப்புடன் தான் கூறுகின்றேன்.

அவனிடம் கூறுங்கள் அவன் ஒற்றைக்கு இல்லையென்று. அவனுக்கு அக்கா(நீங்கள்), அண்ணா, இன்னும் அவனை அன்போடு பராமரிக்க ஏற்றுக்கொண்ட உறவுகள் என அவனைச் சுற்றி பல பேர் உண்டு என்று.

வாழ்க வளமுடன்

றோசன்

கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஒருவனை வாழ வைக்க கடவுள் போலொரு உறவு வந்திருக்கிறார். சகோதரர் றோசன் அவர்களை வணங்குகிறேன். இப்படியொரு உதவி கிடைக்குமா என்பதில் நம்பிக்கையற்றுப் போனபோது கடவுளாக வந்து இவ்வுதவியை வழங்க முன்வந்த சகோதரர் றோசன் அவர்கள் போல ஒவ்வொருவரும் முன்வந்தால் இன்னும் ஆயிரம் பேரை நிம்மதியாக வாழ வைக்கலாம்.

எப்போதுமே நான் பதிவிடுகின்ற விடயங்களில் ஊக்கம் தந்து உதவுகின்ற கரும்பு உங்களுக்கு என்றென்றும் நன்றிகள் உரித்தாகுக.

மிக்க மகிழ்ச்சி சாந்தி அக்கா. நான் சில மாதங்களிற்கு முன்னர் ஓர் பாதிரியாரை சந்தித்தேன். அவர்கள் தமது சபை மூலம் சுமார் இருநூறு பிள்ளைகளை பொறுப்பெடுத்து வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் அடைக்கலம் கொடுத்து ஆதரவுக்கரம் கொடுத்து வருகின்றார்கள். அவர் என்னிடம் காட்டிய கோப்புக்கள், உதவி தேவைப்படுவோரின் விபரம் காட்டியபோது தலைசுற்றியது. பல ஆயிரம் பிள்ளைகள்.. கை இல்லை, கால் இல்லை, அம்மா அப்பா இல்லை, வெவ்வேறு விதமான அவலங்கள் என... குழந்தைகள் தொடக்கம் முதியவர் வரை உதவி கேட்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கோப்பிலும் ஒரு பக்கத்தில் ஆள் பெயர், விபரம், அவலம், உதவித்தொகை, உதவிவகை என கேட்கப்பட்டு காணப்பட்டது. அவர் என்னிடம் கோப்புக்களை காட்டி தாம் என்ன செய்வது என்று கேட்டார். தம்மாலும் ஓர் குறிப்பிட்ட அளவு பேருக்கு மட்டுமே உதவமுடியும். பல ஆயிரம் பேருக்கு உதவ முடியாது என்று தமது இயலாமையை கவலையுடன் கூறினார். தாயகம் போனால் ஒவ்வொரு தடவையும் அவலப்பட்டோரை பார்க்க செல்லும்போது.. பல்வேறு விதமான உதவிகள் கேட்கப்படும்போது இறுதியாக தனது கடன் அட்டையை, சபை நன்கொடைகளை பயன்படுத்தி உதவி செய்தபின்னர் இப்போது ஒன்றும் இல்லாதபடியால் தாயகப்பக்கமே போவதற்கு முடியாமல் விருப்பம் இல்லாமல் உள்ளது என்று கூறினார்.

இந்தப் பிரச்சனை தீர்வதற்கு அவர் கூறிய ஒரே ஒரு வழி வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தாயகத்தில் உள்ள ஆகக்குறைந்த ஓர் உறவை பொறுப்பெடுத்து அவர்கள் வாழ்க்கை இயல்புநிலைக்கு வந்து நிலைநிறுத்தப்படுவதற்கு ஆகக்குறைந்தது ஓர் ஐந்து வருடங்களாவது மாதாந்த அடிப்படையில் அல்லது ஓர் சற்று பெரிய தொகையாக - உதாரணமாக $25 * 12 * 5 = $ 1,500 என்று கொடுத்து உதவவேண்டும் என்று. இப்படி வெளிநாட்டில் உள்ள உறவுகள் அவலப்படுபவர்களை தனிப்பட்ட ரீதியாக ஒவ்வோர் நபர்களாக பொறுப்பெடுக்காதவரை அவலப்படும் மக்களின் அவலங்களை குறைப்பதற்கு, ஆறுதற்படுத்துவது மிக மிகக்கடினமான பணி என்றே நான் நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனை தீர்வதற்கு அவர் கூறிய ஒரே ஒரு வழி வெளிநாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தாயகத்தில் உள்ள ஆகக்குறைந்த ஓர் உறவை பொறுப்பெடுத்து அவர்கள் வாழ்க்கை இயல்புநிலைக்கு வந்து நிலைநிறுத்தப்படுவதற்கு ஆகக்குறைந்தது ஓர் ஐந்து வருடங்களாவது மாதாந்த அடிப்படையில் அல்லது ஓர் சற்று பெரிய தொகையாக - உதாரணமாக $25 * 12 * 5 = $ 1,500 என்று கொடுத்து உதவவேண்டும் என்று. இப்படி வெளிநாட்டில் உள்ள உறவுகள் அவலப்படுபவர்களை தனிப்பட்ட ரீதியாக ஒவ்வோர் நபர்களாக பொறுப்பெடுக்காதவரை அவலப்படும் மக்களின் அவலங்களை குறைப்பதற்கு, ஆறுதற்படுத்துவது மிக மிகக்கடினமான பணி என்றே நான் நினைக்கின்றேன்.

நிச்சயமாக ஒவ்வொருவர் ஒவ்வொரு குடும்பத்தை பொறுப்பேற்பது மிகவும் பயனுள்ள விடயம். குடும்பங்களை குடும்பங்களோடு இணைத்து உதவிகளை நேசக்கரம் செய்து வருகிறது. ஆனால் தொடர் உதவிகள் கொடுக்கப்படுவதில் சில சிக்கல்களும் வருகிறுது. சில மாதங்கள் தொடர்ச்சியாக உதவி போய் பின்னர் இடையில் உதவிகள் நின்றும் இருக்கிறது. இதனால் இம்மாதம் முதல் இயன்றவரை சுயதொழில் செய்ய இயலுமானவர்களை அவர்களுக்கான ஊக்கத்தொகையை கொடுத்து சுயதொழிலில் முன்னேற ஏற்பாடுகளை செய்கிறோம். இதிலும் எமது பங்கு போதாதுள்ளது.

மற்றும் இந்த உறவுகள் போல ஊனமுற்றோருக்கு கட்டாயம் நிரந்தர உதவி குறைந்த சில வருடங்களுக்காவது செய்தலே அவர்களை மனரீதியான பலப்படுத்தலுக்கும் உதவியாக இருக்கும். தற்போது எதுவுமற்று உதவிகள் யாருமற்று உள்ளவர்களை நிரந்தரமாக பராமரிப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளோம். முதல் நிறைவேற்ற வேண்டியது நிதித்தேவை. முதல் கட்டமாக 10குடும்பங்களை இந்த பராமரிப்புக்கு தேர்வு செய்துள்ளோம். அவர்களில் இந்த இளைஞனும் அடங்குகிறார்.

ஒரு குடும்பத்தை ஒருவர் இங்கிருந்து பொறுப்பேற்று உதவுவது என்பது இயலாத ஒன்றல்ல. மனம் வைத்து முயன்றால் எங்களால் முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு விதமான உதவிகள் கேட்கப்படும்போது இறுதியாக தனது கடன் அட்டையை, சபை நன்கொடைகளை பயன்படுத்தி உதவி செய்தபின்னர் இப்போது ஒன்றும் இல்லாதபடியால் தாயகப்பக்கமே போவதற்கு முடியாமல் விருப்பம் இல்லாமல் உள்ளது என்று கூறினார்.

இதே நிலையில்தான் ஆரம்பத்தில் கடன் அட்டையை பாவித்து இம்முறை மட்டும் இம்முறை மட்டுமென நானும் கடனட்டையை காலி செய்து இன்று கடனட்டையைத் தரச்சொல்லி கெளரவமாக வங்கி வாங்கி வைத்துள்ளது. :wub: மாதாந்த கட்டுக்காசு கட்டுகிறேன். உதவியென்று இப்படியான குரல்களைக் கேட்கின்ற போது இருக்கிற ஏதாவது மட்டைகளைத்தான் வழிப்பது. அது பின்னர் மாதாந்தம் கட்டுவதில் வட்டியே அதிகமாகிவிடுகிறது.

உண்மையில் இதுவொரு கூட்டு முயற்சியாக செய்ய வேண்டிய அவசரமான உதவி. எல்லாரும் இணைந்தால் இது எமக்கு பெரிய விடயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு உதவிக்கரம் நீட்டிய மதிப்பிற்குரிய ரோஷன் அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவான்.

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு உதவிக்கரம் நீட்டிய மதிப்பிற்குரிய ரோஷன் அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவான்.

வாத்தியார்

**********

கடவுளுக்கு நிகரான உதவியை வழங்கிய சகோதரர் றோஷன் அவர்கள் இன்னும் சிலரது மருத்துவ உதவிகள் மற்றும் சுயதொழில் முயற்சிக்கும் உதவியுள்ளார். நிச்சயம் றோசன் அவர்களை கடவுள் காப்பாற்றுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.