Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தே மஹிந்த புலிகளுடன் யுத்தம் செய்தார்: ஜயலத் ஜயவர்தன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தே ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் புலிகளுடனான யுத்தத்தை முன்னெடுத்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் ஒரு போதும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்ததில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாக ஜயவர்தன மற்றும் பிரேமதாச போன்றோர் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்த முடியாமற் போனதாக சுட்டிக் காட்டும் அவர், பின் வந்த காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டும் நிலைப்பாட்டுக்கு இந்திய அரசாங்கம் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலப்பகுதியில் அந்த நிலைப்பாடு அதி தீவிரமாக முனைப்புப் பெற்றிருந்ததாகவும், அதன் காரணமாக அவர் நினைத்திருந்தால் கூட யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்றும், இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து இந்திய ஆதரவுடன் யுத்தத்தை முன்னெடுப்பதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் தாம் எந்தவொரு வெளிநாட்டு அழுத்தத்துக்கும் அடிபணியவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பற்றிக் குறிப்பிட்ட ஜயலத் ஜயவர்தன முன்பொரு தடவை பி.பி.சி.யின் "ஹாட் டோக்" நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் சரத் பொன்சேகாவை தான் தூக்கிலிடப் போவதாக கோத்தபாய கர்ச்சித்திருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதன் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையானது ஏலவே தீர்மானிக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றார்http://www.tharavu.com/2010/10/blog-post_7319.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய ஒத்து கொண்டதற்கு நன்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

அது அவருக்கும் தெரியும். இந்தியாவினைப் பகைத்துக்கொண்டதன் மூலம் புலிகள் பெரும் தவறொன்றை இழைத்து விட்டனர், நாம் இன்று நடத்துவது இந்தியாவினது யுத்தத்தைத்தான் என்று மகிந்த மாமா முன்னர் ஒருதடவை சொல்லியிருக்கிறார்.

ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாக ஜயவர்தன மற்றும் பிரேமதாச போன்றோர் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்த முடியாமற் போனதாக சுட்டிக் காட்டும் ......

http://www.tharavu.com/2010/10/blog-post_7319.html

:lol:

நெல்லையன் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..! :lol:

இசை,

உங்க இம்சை தாங்கமுடியல்லை.! :D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.