Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஒன்றியம்.

Featured Replies

ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா

ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு. நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை.

இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மாநில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை பாதிப்பு ஏற்படும் போது நான் இந்தியன் இல்லை, 'இந்த' மொழி பேசுவன் என்கிற நிலை எடுக்க தூண்டுவதாக, அவர்களின் மொழி மற்றும் நிலத்தை அழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் என்னும் தேசியம் சார்ந்த நடவடிக்கையால் இயல்பாகவே, எதிர்வினையாகவும் ஏற்பட்டுவிடுகிறது.

ஒரே மொழிப் பேசுபவரிடையே கூட குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படும் போது அதன் விளைவுகளாக தனித் தெலுங்கான கோரிக்கைகள் நடந்து வருவதை கண்ணுறுகிறோம். அதிகாரம் பகிர்தல் என்கிற புரிதல் இல்லாமல் அதிகாரம் கைப்பற்றுதல் என்ற நிலைக்கு ஒரு தரப்பு முயலும் போது மற்ற தரப்பு அதிகார இழப்புக்கு ஆளாகிறது. இதுவே பூசல்கள் பலவற்றிற்கும் காரணம்.

இந்தி திணிப்பு

தமிழன் மட்டுமல்ல தனது மொழி பாதிக்கப்படும் போது அனைத்து மொழிக்காரனும் கிளர்ந்தெழுவான், ஏனெனில் அவன் மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தானே இருக்கிறது. வல்லரசு கனவில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைப்போம் என்று முயற்சிக்கும் அரசியல்வாதிகள் அதை மொழியால் செய்துவிட முடியும் என்று நினைத்து இந்தியை பல்வேறு மாநிலங்களில் திணிக்கிறார்கள். ஏற்கனவே நன்கு பொருளியல் ரீதியில் வளர்ந்திருக்கும் மாநிலங்களில் இந்த திணிப்பு நடைபெறும் போது இந்தி தெரிந்த பிற மாநில மக்கள் அந்த மாநிலத்திற்கு வேலை வாய்ப்புக்கு சென்று அந்த மாநிலங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். மொழிக்கலப்பு மற்றும் பண்பாட்டுக் கலப்பு என அந்த மாநில தனி அடையாளமே இவ்வாறு தான் சிதைக்கப்படுகிறது. ஒரு இந்தியன் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வசிக்க முடியும் என்பது அவனது உரிமை, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே மாநிலத்தில் அனைவரும் குவியும் போது அங்கு பிறந்தவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும்.

மாநிலங்கள் உருவானவிதம்

சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒன்பது பிரிட்டீஷ் மாகாணங்களும், 562சிறு மன்னராட்சி பகுதி களும் (Princity States) நிலவில்இருந்தன. சுதந்திரத்திற்கு பின் நடத்தப்பட்ட மாநில மறுசீரமைப்பின் முதல்கட்டத்தையடுத்து மாநிலங்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. அவை:

"A' Category: உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம்.ஒரிசா, மத்திய பிரதேசம், மெட்ராஸ் தற்போதைய தமிழ்நாடு +ஆந்திரம்), பம்பாய்(தற் போதைய மகாராஷ்டிரம்+குஜராத்). இவை ஆளுனரின் ஆட்சியின் கீழ்செயல்பட்டன.

"B' Category: PEPSU, , மத்திய இந்தியா, மைசூர் (தற்போதைய கர்நாடகம்),சௌராஷ்டிரம், ராஜஸ்தான், ஹைதராபாத், திருவிதாங்கூர், கொச்சி. இவை மாநிலத்தலைவரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.

"C' Category: அஜ்மீர், கட்ச், கூர்க், தில்லி, பிலாஸ்பூர், போபால்,திரிபுரா, இமாசலப் பிரதேசம், மணிப் பூர், விந்தியப் பிரதேசம் இவைலெப்டினட் கவர்னரால் ஆட்சி செய்யப்பட்டன.

"D' Category: : அந்தமான் நிகோபார் தீவுகள். மத்திய அரசின் நேரடி நிர்வாகம்.

* இரண்டாம் கட்ட மாநில சீரமைப்பு வட்டாரக் கூறுகள், மொழி, கலாச்சாரம்மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.

* மொழியடிப்படையில் மாநிலங்களை புனர் நிர்மாணம் செய்யவேண்டும் எனும்கோரிக்கை பற்றி ஆராய் வதற்காக அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டஎஸ்.கே. தர் கமிஷனும், காங்கிரசின் ஜெ.வி.பி. கமிட்டியும் (நேரு, படேல்,பட்டாபி சீதாராமைய்யா) மொழி வழிப் பிரிவினைக்கு உடன்படவில்லை.

* ஆனால் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காக ஒரு தனி மாநிலம் உருவாக்கியே ஆகவேண்டும் என்னும் கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலுஎனும் தெலுங்கர் மரண மடைந்ததையடுத்து 1953, அக்டோபர் ஒன்றாம் தேதிஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. (தெலுங்கானாப் பகுதிகளும் சேர்க்கப்பட்ட புதிய ஆந்திரப்பிரதேசம் 1956, நவம்பர் ஒன்றாம் திகதி உருவானது). ஆந்திரப்பிரதேசமே இந்தியாவில் மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்.

எதிர்காலத்தில் பிரச்சினை?

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5சதவீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பயன்படாதவாறு உள்ளது. மீதி 3.5சதவீதத்தில் கூட 1.8 சதவீதமான தண்ணீர் மனி தனுக்கு பயன்படாதவாறு ஐஸ்கட்டியாக உறைந்து போயுள்ளது. சில நாடுகளின் நீரின் விலை எண்ணெயின் விலையை தாண்டிப் போய்விட்டது. நீர்ப்பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 2 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள்என்பது இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி.

இன்றைக்கு எண்ணெய்க்காக நடக்கும்யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்றுபல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழமுடியாது. நீர் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச்செயலையும் செய்யத்தூண்டும்.

மற்ற எல்லா நாடுகளையும்விட இந்தியாவில் மக்கள்தொகை வேகமாகஅதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050-இல் 200 கோடியை இந்திய மக்கள்தொகைதாண்டிவிடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 சதவீதமானகுடிநீர் இந்தியாவில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்டமாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப்பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

2050-இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம் உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றைவிட நீர் வளம்பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறு வனங்கள் தமது தொழிற்சாலைகளைஅமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள்தொகையும் பெருகி, இருக்கின்ற நீர் வளத்தையும் பன்னாட்டு நிறு வனங்கள் சுரண்டிவிட, மற்றையமாநிலங்களோடு தற்பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக்கூடகொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எத்தனையோ நடுவர்மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்கமறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சினைஇருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங் களுக்கும் இடையில் இந்தநீர்ப்பிரச்சினை இருக்கின்றது. இந்த நீர்ப் பிரச்சினை இந்தியத் தேசியஉணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன. மற்றைய மாநிலத்தவர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங் களைசுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன.

சமச்சீர் அற்ற பொருளாதார வளர்ச்சி

நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள நாடுகளில் இந்தியா ஒன்றாக விளங்குகிறது. இந்த வேக வளர்ச்சியில் பெரும்பாலான மக்கள் பயன்படுகிறார்கள் . ஆனால் இந்த வளர்ச்சியில் ஒரு தேக்கம் இல்லை ஒரு சரிவு ஏற்படும் போது மாநிலங்களுக்கு இடையிலான பிரிவினை வாதங்கள் உரக்க ஒலிக்கும். காரணம் யாருமே எளிதாக தமது பணத்தையோ அல்லது தங்கள் வாழ்க்கை சுகபோகங்களையோ எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டர்கள்.

இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகம் கருதப்படுகிறது. கர்நாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டின் முடிவில், கர்நாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது.

உதாரணத்துக்கு பத்து மாநிலங்களையும் மூன்று பிரதேசங்களையும் கொண்ட பணக்கார நாடான கனடாவில் நான்கு மாநிலங்களே பொருளாதார வளர்ச்சி கொண்டன. அதாவது மத்திய அரசு இந்த மாநில மக்களிடம் இருந்து பணத்தை வேண்டி மற்றயவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றது (equalization). அதிகளவில் வெள்ளை இனத்தவர்களையும் ஆங்கிலமே பெரும்பான்மை மொழியாக உள்ளபோதும் சில பணக்கார மாநிலங்கள் தாம் தனியாக செல்லவேண்டும் என கூக்கிரல் இடும்.

இப்படி கனடா இருக்கையில், பல்வேறு பிரிவுகளை கொண்ட இந்தியாவின் நிலைமை இலகுவில் பூதாரகமாக கூடியது.

முடிவாக ....

இந்தியா சுதந்திரம் அடைந்து 62 வருடங்களாகியும் வடகிழக்கு மாநில மக்களின்பொருளாதார நலன்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதனாலேயே அங்கு தனிநாடுகளுக்கான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களின் நோக்கங்கள் தவறாகஇருப்பினும் மத்திய அரசின் தவறான போக்கின் பின்விளைவுகளே காரணம்.அதேபோலதான் காஷ்மீர் மாநிலமும். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அப்போது அந்த மாநிலத்தின் கோரிக்கையேமாநில சுயாட்சிதான். அதனை அன்று ஏற்றுக் கொண்ட மத்திய அரசு படிப்படியாகமாநில சுயாட்சிக்கு விரோதமாக நடக்கவே, காஷ்மீர் மக்கள் போராட்டங்கள்நடத்தி வருகின்றனர். இந்தியை தமிழகத்தில் திணித்ததனாலும், மாநிலங்களின் நலன்களை தொடர்ந்து புறக்கணித்து வந்ததனாலும்தான் அன்றைக்கு அறிஞர் அண்ணா தமிழகத்தில் தனிநாடு கோரிக்கையை எழுப்பினார். அதனைமாற்றி தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மாநில சுயாட்சியை வலியுறுத்திவருகிறார் .

மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி தண்ணீர்பிரச்சினையும் பூதாகரமாக மாறி, "இந்தியாவோடு இருந்தகாரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில் லையே'' என்றவேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியாஉடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் நன்றி தோழர் அகூதா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டுக்காரரே? ஏன் தமிழ் சினிமாவில் கூட ஜெய் கிந் என சொல்லி சலூட் அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

காஷ்மீர் இந்தியக் கூட்டமைப்புடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது என்று படித்திருக்கிறேன்..! :) அப்போது காஷ்மீரிலோ ஜம்முவிலோ ஹரி ராஜா என்று ஒரு மன்னர் இருந்ததாகவும் அவர் இந்துவாக இருந்ததால் இந்தியக் கூட்டமைப்புடன் நிபந்தனை அடிப்படையில் சேர முடிவெடுத்ததாகவும் படித்திருக்கிறேன். இது காஷ்மீர் மக்களின் விருப்பம் என்று கூறிவிடமுடியாது. ஆனாலும் மன்னரின் விருப்பத்தை மதித்து இந்தியா காஷ்மீரின் முடிந்தளவு பகுதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. :D

அதே சமயத்தில், ஹைதராபாத் நிசாமோ, யாரோ ஒரு முஸ்லிம் மன்னர் ஆந்திராவை ஆண்டுவந்தார். அவர் பாகிஸ்தானுடன் ஆந்திராவை இணைக்க எண்ணினார். ஆனால் இந்தியா வலுக்கட்டாயமாக ஆந்திராவை இணைத்துக்கொண்டது. அங்கு மன்னரின் விருப்பம் ஏற்ருக்கொள்ளப்படவில்லை. :)

இதுதான் இந்திய ஜனநாயகம்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.