Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்தியா அறிவித்துள்ளது

Featured Replies

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்தியா அறிவித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக முதல் தடவையாக இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளுக்கு அமைய தடா நீதிமன்றம் பிரபாகரனுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் நீக்கிக் கொண்டுள்ளது.

ராஜீவ் படுகொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தடா நீதிமன்றம் நீக்கிக் கொண்டுள்ளது.

இந்திய சட்டத்தின் அடிப்படையில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது எனவும், அதன் அடிப்படையில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருடம் மே மாதம் 18ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசாங்கம் ஊடகங்களின் வாயிலாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ இறப்பு சான்றிதழ்களை வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, 1989ம் ஆண்டு அமிர்தலிங்கம் படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கை நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. பொட்டு அம்மான பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதை இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்த இந்தியா, முதல் முறையாக இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1991-ம் ஆண்டு, மே 21-ல் ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்மைக் குற்றவாளியாகவும், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் அடுத்த முக்கிய குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் பொட்டம்மானும் கொல்லப்பட்டதாக இலங்கை அறிவித்தது. பிரபாகரன் 'உடலை'யும் காட்டியது. ஆனால் இதனை புலிகளின் ஆதரவாளர்கள் நம்ப மறுத்ததோடு, அவரும் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாகவும் கூறி வந்தனர்.

இந்தியாவும் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை. ராஜீவ் கொலை வழக்கை முடிக்க ஏதுவாக பிரபாகரன், பொட்டம்மான் இறப்புச் சான்றிதழை அனுப்புமாறு இலங்கையிடம் தொடர்ந்து கோரி வந்தது.

ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்றதாகவோ, மறுப்பதாகவோ எதையும் தெரிவிக்காமலிருந்தது இந்திய அரசு.

சிபிஐயின் இணையதளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில், "முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகிறது ("The case against the absconding accused A1 Prabhakaran, A2 Pottu Amman alias Shanmuganathan Sivasankaran is hereby dropped and the charges against them ordered abated"), என்று கூறியுள்ளார்.

குற்றவாளியின் மரணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகளும் தானாகவே காலாவதியாகிவிடும் என்ற இந்திய குற்றவியல் சட்ட அடிப்படையில் இந்த முடிவை மேற்கொள்ள சிபிஐ அனுப்பிய குறிப்புகளின் பேரிலேயே நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த அமிர்தலிங்கம் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையும் சிபிஐ தனது குறிப்பில் தெரிவித்திருந்தது.

http://thatstamil.oneindia.in/news/2010/10/26/prabhakaran-name-dropped-rajiv-case.html

  • கருத்துக்கள உறவுகள்
:lol: அப்ப என்ன, இனி தடையையும் நீக்க வேண்டியதுதானே?? அப்பிடியே சிங்களவனுக்கு கு.. கழுவிறதையும் சோனியா நிப்பாட்டலாம்தானே??
  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல ஒரு விடயம் தான்..! :lol: இரண்டு விடயங்கள் இதில் உள்ளது போல் படுகிறது..!

1) தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களை இச்செய்தி சோர்வடையச் செய்யும்.

2) இந்தியாவின் பிடியிலிருந்து விலகி சீனாவின் பக்கமாகச் சென்றுவிட்ட சிங்களத்தை மிரட்ட இது உதவும். புலிகள் இல்லை என்றால் தடையும் தேவையில்லை. தடை இல்லையென்றால் சிங்களத்தினால் புலி அரசியல் செய்ய முடியாது. :lol:

இது நல்ல ஒரு விடயம் தான்..! :lol: இரண்டு விடயங்கள் இதில் உள்ளது போல் படுகிறது..!

1) தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களை இச்செய்தி சோர்வடையச் செய்யும்.

2) இந்தியாவின் பிடியிலிருந்து விலகி சீனாவின் பக்கமாகச் சென்றுவிட்ட சிங்களத்தை மிரட்ட இது உதவும். புலிகள் இல்லை என்றால் தடையும் தேவையில்லை. தடை இல்லையென்றால் சிங்களத்தினால் புலி அரசியல் செய்ய முடியாது. :lol:

நீங்கள் இந்திய கொள்கை வகுப்பாளராக எல்லா தகுதியும் இருக்கும்.... ஆனால் இந்தியாவில் இண்று இருக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இப்படி யோசிக்க வருமா எண்டு தான் சந்தேகமாக இருக்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்திய கொள்கை வகுப்பாளராக எல்லா தகுதியும் இருக்கும்.... ஆனால் இந்தியாவில் இண்று இருக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இப்படி யோசிக்க வருமா எண்டு தான் சந்தேகமாக இருக்கு... :)

ச்சே.. வீணா இங்க இருந்துகொண்டு காலத்தை ஓட்டுறனா? :lol: அங்க போனாலாவது அசின் குறூப்போட குந்தியிருந்து கொள்கை வகுக்கலாம்..! :lol:

இந்த ஆறு மாதங்களில் என்ன பெரிய மாற்றம் நடந்துள்ளது..?

1. இந்த இருவர் மீதான எல்லா வழக்குகளும் கைவிடப்படுகின்றன..என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மத்திய குற்றப்புலனாய்வு துறையினரால் அமைக்கப்பட்ட MMDA ( Multi - Disciplinary Monitoring Agency ) அறிக்கையின் பெயரல் என்று, இந்த சிறப்பு அமைப்பை 1998 - ல் அமைத்திருக்கிறார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை..பின்பு 1991 - அன்று ராஜீவ் படுகொலை நடந்தவுடன் இந்த சிறப்பு அமைப்பை அப்படியே புலிகள் குறித்த விசயங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

2. மேலும் இந்த சிறப்பு அமைப்பு கூறுகிறது..இந்திய இந்திய தண்டனை சட்டப்படி, இறந்த போனவர்கள் மீது எந்த வித வழக்குகளும் இருக்கக் கூடாது என்று இருப்பதால் இந்த இருவரின் பெயர்களும் நீக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறது..இந்த வழக்குகளை தற்பொழுது விசாரித்து வரும் நீதிபதி கே.தக்சிணாமூர்த்தி அவர்கள் அறிவித்துள்ளார் என்று உறுதியாக கூறமுடியவில்லை..மேலும் இந்த MMDA - வினால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இலங்கை காவல் துறையிடம் இருந்து இறப்பு சான்றிதழை அதாவது செய்தியை..? பெற்று விட்டோம் என்று கூறுகிறார்கள்..கடந்த வருடம் 2009 may 11 அன்று திரு பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மை என்றும் பொட்டு அம்மன் அவர்களும் பிறகு கொல்லப்பட்டார் என்பதும் உண்மை என்று, இலங்கை காவல் துறை உறுதி செய்துள்ளது என்று இந்த இருவரின் மீதான குற்றங்களில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது இந்திய புலனாய்வு துறை..(சிபிஐ).

3. இலங்கை அரசும், காவல்துறையும் சொல்வதை எந்தக் காலத்திலும் நம்ப முடியாதவை..அவர்கள் உலக நாடுகளுக்கு பொய்களை சொல்வதில் நம்பர் ஒன் என்று பெயர் எடுத்தவர்கள்..எதற்க்கெடுத்தாலும் பொய்..வாயைத் திறந்தால் பொய்..எழுதினால் பொய் என்று இருப்பவர்கள்...இலங்கை அரசும் இந்திய அரசும் பொய் சொல்வதில் யார் வல்லவர்கள் என்று போட்டி வைத்தால்..இந்திய அரசுக்கு ஆறுதல் பரிசும்..இலங்கை அரசுக்கு தங்க மெடலும் கிடைக்கும்.

4. இன்று காலையில் இருந்து எந்த தினசரிகளும் தொலைக்காட்சிகளும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை சொல்லவில்லை..

விண் டி.வி.யின் செய்தி தொகுப்பாளர் திரு.மணி அவர்கள் தவிர..ஒருவேளை நாளை சொல்லுவார்கள் என்று நம்பலாம்..

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சொன்னார்கள் இந்த இருவரும் இறந்தது உண்மை என்று..இறப்பு சான்றிதழ் பெற்று விட்டோம் என்று..அவரின் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் சொன்னார்கள்..அப்படியெல்லாம் கிடையாது என்று மிகவும் வெளிப்படையாக..தற்பொழுது சி.பி.ஐ. அறிவிப்பு மட்டும் அல்ல..வழக்கில் இருந்து பெயரை நீக்கி விட்டார்கள்..இந்த ஆறு மாதங்களில் என்ன பெரிய மாற்றம் நடந்துள்ளது..?

இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் முழுக்க அம்பலப்பட்டு போயிருக்கும் நிலையில், இந்திய அரசு தடை நீட்டிப்பு தீர்ப்பாயத்தில் முதன் முறையாக வைக்கோ மற்றும் நெடுமாறன் அவர்களை சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை நீடிக்குமா..? அல்லது பெயரளவிற்கு தடை நீட்டிப்பு கொடுத்து விட்டு, அகதிகள் விசயத்தில் கண்டு கொள்ளாமை என்ற போக்கு தொடருமா..? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரிய வரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் ஒருபுறம்...!

5. மறுபுறம், இந்திய சீன அயலுறவுக் கொள்கைகள் பெரும் மாற்றம் நடந்து கொண்டிருக்கின்றன பிரிக் (BRIC - Brazil, Russia, India, China) என்று கூட்டணி ஏற்பட்டப்பிறகு..

ஒருவரையொருவர் உரசிக் கொள்வதும்..அனுசரணையும் என்று..மேற்குலக நாடுகள் கிழக்காசியப் பகுதியில் இந்த இருவரையும் ஒருபோதும் பின்னிப்பிணைய விடமாட்டார்கள்..அதுபோல ஒருபோதும் இருக்க முடியாது என்பது வேறு விடயம்..உதாரணமாக இலங்கையில் நடந்து வரும் வேகமான சீனாவின் வளர்ச்சியும் அதிகாரமும் இந்திய அரசை குழப்ப நிலையிலேயே தொடர்ந்து வைத்துள்ளன..சிறு விஷயங்களுக்குக் கூட மற்றவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல்..சுயாதீனமாக விபரங்களை பெற முடியவில்லை..அதேசமயம் சீன அரசுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை..முன்பை விட தற்பொழுது நாலு கால் பாய்ச்சலில் மிக வேகமாக முன்னேறி சென்ற வண்ணம் உள்ளது..இவையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது புலிகள் விசயத்தில்..இந்திய வெளியுறவுக் கொள்கையில் வேண்டிய அளவிற்கு சிலபல மாற்றங்களை உருவாக்கும் என்றே கருதலாம்..காலம்தான் பதில் சொல்லும் பல புதிய மாற்றங்களுக்கு... என்று கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்...!

ஈழதேசம் செய்திக்குழு

3. இலங்கை அரசும், காவல்துறையும் சொல்வதை எந்தக் காலத்திலும் நம்ப முடியாதவை..அவர்கள் உலக நாடுகளுக்கு பொய்களை சொல்வதில் நம்பர் ஒன் என்று பெயர் எடுத்தவர்கள்..எதற்க்கெடுத்தாலும் பொய்..வாயைத் திறந்தால் பொய்..எழுதினால் பொய் என்று இருப்பவர்கள்...இலங்கை அரசும் இந்திய அரசும் பொய் சொல்வதில் யார் வல்லவர்கள் என்று போட்டி வைத்தால்..இந்திய அரசுக்கு ஆறுதல் பரிசும்..இலங்கை அரசுக்கு தங்க மெடலும் கிடைக்கும்.

உண்மையை அற்புதமாக ரசிக்கும் வண்ணம் தீட்டியுள்ளீர்கள்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், போர்க் குற்றவாளிகள், ....., …… சிங்களவர் வந்தேறு குடிகள்,

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், போர்க் குற்றவாளிகள், ....., ... ... வட இந்தியர் வந்தேறு குடிகள்,

பிரிந்து நிற்கும் ஒருசாராரை இது இணைத்து வைப்பதற்கு உதவும். அல்லது கே பி யை ஆதரிக்கச் செய்வதற்கான ஊக்குவிப்பாகக் கூட இருக்கலாம்.

உங்களுக்கு இதில் விருப்பம் என்றால் கையெழுத்திடவும்:

"இந்திய பிரதமருக்கு புலிகளின் தடையை நீக்குக "

Petition to the Government of India to Lift the Ban on Non-existing LTTE

http://www.petitiononline.com/LiftBAN/petition.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.