Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவரின் தாயார் உடல் நிலை மோசமடைந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 27, 2010 / பகுதி: செய்தி /

தேசியத்தலைவரின் தாயார் உடல் நிலை மோசமடைந்தது

தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பார்வதி அம்மாளின் உடல்நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக மருத்துவமனை செவிலியர்களை அழைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகவும், அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாகவும், திட உணவுகளை விடுத்து திரவ உணவுகளையே அதிகம் உட்க்கொள்கின்றார் என மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும், பார்வதி அம்மாள் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும், ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டு அந்த அம்மாவுக்கு சீக்கிரமாய் சுகமாக வேண்டும் அல்லது நிம்மதியாய் கடவுளிடம் போய் சேர வேண்டும்....அந்த அம்மாவை வைத்து ஒருத்தரும் அரசியல் செய்யாமல் இருந்தால் சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 27, அக்டோபர் 2010 (18:6 IST)

என் பிள்ளைகளை பார்க்க வேண்டும்:

பிரபாகரன் தாயார் கண்ணீர்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இலங்கையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பார்வதி அம்மாளை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து வந்ததை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாளின் உடல்நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக மருத்துவமனை செவிலியர்களை அழைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பார்வதி அம்மாளின் உடல் நிலை ஆபத்தான நிலையிலும் இல்லை. சுகமான நிலையிலும் இல்லை. இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருக்கிறது.

திட உணவுகளை தவிர்த்து திரவ உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறார் என்று மருத்துவர்கள் கூறினார்கள். பார்வதி அம்மாள் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும், ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் கவலைப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

nakkheran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Oct 28, 2010 / பகுதி: செய்தி /

பேரப்பிள்ளைகளையாவது அனுப்பி வைத்தால் பார்வதி அம்மாள் மகிழ்ச்சியடைவார் - சிவாஜிலிங்கம்

அச்சத்தின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் சகோதர, சகோதரிகள் ஸ்ரீலங்காவுக்கு செல்லாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வல்வெட்டித்துறையில் வைத்து கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வல்வெட்டித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை பார்வையிட்டார்

பார்வதி அம்மாளின் தேகநிலை மோசமடைந்து வருவதாகவும் அவர் வெளிநாடுகளின் உள்ள தனது பிள்ளைகளைப் சந்திக்க விரும்புகிறார் எனவும் சிவாஜிலிங்கம் இதன் போது கூறியுள்ளார்.

இந்தநிலையில் பிரபாகரனின் சகோதர, சகோதரிகள் தமது பிள்ளைகளையாவது அனுப்பி வைத்தால் பார்வதி அம்மாள் மகிழ்ச்சியடைவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

pathivu

அவரை உரிய நேரத்தில் தமிழகத்துக்கு பிள்ளையிடம் அனுப்பி வைப்பதே சிறந்ததாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணம் செய்வதற்கு உரிய உடல்நிலை இல்லை என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.