Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகிள் தனது "டூடில்" இல்

Featured Replies

எக்ஸ் - ரே : கண்டுபிடிக்கப்பட்டு இன்று 115 ஆண்டுகள். இதை பிரபல நிறுவனமான கூகிள் தனது "டூடில்" சின்னத்தையும் மாற்றியமைத்துள்ளது.

X-rays : Google celebrates the 115th anniversary of their discovery

http://www.dailyrumors.net/515-x-rays-google-celebrates-the-115th-anniversary-of-their-discovery

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எக்ஸ்-ரே கருவியைகண்டு பிடித்தவருக்கு என் கோடானுகோடி நன்றிகள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்

பிரான்சு நாட்டவரான ஜூல் வெர்ன் - ஒரு ஆரம்பகால விஞ்ஞான ரீதியான கதைகளின் தந்தையென கருதப்படும் இவருக்கு சமர்ப்பணம் செய்துள்ளது.

post-1724-0-92713800-1297182272_thumb.jp

  • தொடங்கியவர்

கூகிள் தனது டூடிலை உலகின் பிரபல அமெரிக்க விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், முதலீட்டாளர் தாமஸ் அல்வா எடிசனுக்கு சமர்ப்பித்துள்ளது.

post-1724-0-52842300-1297420195_thumb.jp

  • தொடங்கியவர்

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன் (1847–1931)

“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம். வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.” - தாமஸ் ஆல்வா எடிசன்

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.” - தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Perspiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம்.

எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை!

நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்!

உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [industrial Research Center] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்!

18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கிய மானவர்.

அவரது உயர்ந்த படைப்புகள்:

  • முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb],

  • மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor],

  • மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad],

  • மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker],

  • ஒலிபெருக்கி [Microphone],

  • கிராமஃபோன் [Phonograph],

  • மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை.

முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm 's Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டுபிடித்தது கால் பந்தளவு!

‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!

முழுக் கட்டுரை : http://jayabarathan.wordpress.com/2010/02/22/Edison/

. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

  • கருத்துக்கள உறவுகள்

எடிசன் ஒரு கடும்போக்காளர்.............

அவரது பல கண்டுபிடப்புகளுக்கு சொந்தகாரர்கள் வேறு நபர்கள் பின்னாளில் அவரிடம் இருந்த செல்வாக்னை பயன்படுத்தி அவர்களை வெளியில் வாராது செய்துவிட்டார். அவருக்கு பின் நின்று உழைத்தவர்களின் உழைப்பே அதிகமானது..... சிலபேர் எடிசனால் கொலை கூட செய்யபட்டுள்ளதாக படித்திருக்கிறேன்...........

ஆனால் எதற்கும் ஆதாரம் இல்லை. காய்க்கிற மரம் கல்லெறிவாங்குவதுபோல் யாராவது இவர் மீது சேறு பூசவும் எத்தணித்திருக்கலாம். அல்லது இவரும் அப்படி வாழ்ந்திருக்கலாம்.

எது எப்படியோ இரவில் இருளில் மூழ்கி கிடந்த உலகுக்கு வெளிச்சம் ஊட்டி உள்ளார்கள்.

விமானங்களில் பறந்துகொண்டிருக்கும்போது சில நகரங்களை பார்தத்தால் வியப்பாக இருக்கும் எத்தனை பிரகாசமாக இருக்ககும். அது எல்லாவற்றிற்கும் அத்திவாரம் போட்டவர் இவரே.

  • தொடங்கியவர்

காதலர் தினம் :)

post-1724-0-50329400-1297695554_thumb.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.