Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்

Featured Replies

புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்

புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்

செவ்வாய், 09 நவம்பர் 2010 19:41 . .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே ஆகும் என்றும் இலங்கையின் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்து உள்ளார்.

அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வாராந்தம் எழுதும் பத்தி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். அவர் அப்பத்தியில் தெரிவித்து உள்ளவற்றை தொகுத்து தருகின்றோம்.

”முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சமாதி கட்டப்பட்டது. இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன், அவரின் சிரேஷ்ட சகாக்கள், கமாண்டோக்கள் ஆயிரக்கணக்கான போராளிகள் என பெரும்பாலும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் முடிவு கட்டப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனர்.இவர்கள் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.இவர்களுள் ஒரு தொகையினர்-ஆயிரக் கணக்கானவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர். எஞ்சியோர் படிப்படியாக விடுவிக்கப்படுவர்.

தீவிர போராளிகள் எனக் கருதப்படும் சுமார் ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இறுதி யுத்தத்தில் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் முக்கியப் பெறுபேறு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான்.இலங்கையில் புலிப் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்பது தான். இதற்குப் பின்னர் கடந்த 18 மாதங்களாக நாட்டின் எப்பாகத்திலும் புலிகளின் பயங்கரவாதங்கள் இடம்பெறவே இல்லை. புலிப் பயங்கரவாதம் இல்லை என்று ஆகி விட்டது. பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருக்கும் காயங்கள் குணப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் தற்போதைய சமாதானம் நிரந்தரமானதுதானா? அல்லது தற்காலிகம் ஆனாதா? போன்ற கேள்விகள் எழவே செய்கின்றது. விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறலாம்-அதனால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கலாம் செல்லலாம் என்கிற அச்சமும், முன்னெச்சரிக்கையும் இன்னமும் இருக்கவே செய்கின்றது. புலிகளின் வன்முறைகள் மீண்டும் தலைதூக்குமாக இருந்தால் நாட்டில் படிப்படியாக உணரப்பட்டு வரும் இயல்பு வாழ்க்கை குலைந்து விடும். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் மக்கள் தற்போது அனுபவித்து வரும் அமைதி மீண்டும் குலைந்துவிடக்கூடும் என்பதுதான் பாரிய கவலை.

இதனால் நிரந்தர சமாதானத்தை நோக்கிய நகர்வுகளும்,உண்மையான நல்லிணக்கமும் பாரிய பின்னடைவைச் சந்தித்து விடும். புலிகள் புத்துயிர் பெறும் நிலைமை மீண்டும் உருவானால் அது தமிழ் மக்களுக்கு மீள முடியாத ஒரு பேரவலத்தை திரும்பவும் ஏற்படுத்தி விடும். வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற பல தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களுக்கு கசப்பான அனுபவங்களையே ஏற்படுத்தி இருந்தது. அவர்களைச் சின்னாபின்னமாக்கி இருந்தது. அவர்கள் இப்போதுதான் அவ்வழிவுகளிலிருந்து மீண்டு பொருளாதார ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் மறுமலர்ச்சி பெற முயன்று வருகின்றனர்.

அரசியல் ரீதியான வன்முறைகளை புலிகள் மீண்டும் ஆரம்பித்து விட்டால் அது தற்போதைய நிலைமையை மிக மோசமாக மாற்றி அமைத்துவிடும். எனவே அரசு திட்டமிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் மீண்டும் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்யும். அரசு இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சனத்தொகைக் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சிகளையும் எடுக்க நேரலாம். ஆனால் புலிகள் புத்துயிர் பெறுகின்றமைக்கு சாதகமான களநிலைகள் இல்லவே இல்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் உறுதியான நிலையில் உள்ளன.

அங்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது. தமிழ் மக்கள் புனர்வாழ்வு,மீள்குடியேற்றம், பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன்முறைகளுக்கான மக்கள் ஆதரவு மிகவும் குறைவாகவே உள்ளது. சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள்தான் பிற்போக்குத்தனமான கருத்துக்களை மீண்டும் முன்வைத்து வருகின்றனர். புலிகள் இலங்கையில் மரண அடி வாங்கினார்கள்தான். ஆனால் அவர்களின் வெளிநாட்டுக் கட்டமைப்பு பாதிக்கப்படவே இல்லை. புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு கிளைகள் , வர்த்தக மற்றும் ஊடகக் கட்டமைப்புகள் ஆகியன முன்பு போலவே செயற்படுகின்றன.

கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் சமூகத்தால் தமிழ் ஈழக் கோட்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப் படுகின்றது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் புலிக் கொடி ஏற்றப்படுகின்றது. அது தமிழ் ஈழக்கொடி என்று கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கொடி என்று வெளிநாடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் பிரசாரமும் செய்யப்படுகின்றது. ஆனால் புலிகள் இராணுவ ரீதியாக தோல்வி அடைந்த பின் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு சக்திகள்கூட வலு இழந்து விட்டன. உட்பூசல்கள் இயக்கத்தை கணிசமாகப் பாதித்துள்ளன. ஒரு காலத்தில் மேற்குலக நாடுகளின் நகரங்களில் மிகக் குறுகிய கால அறிவித்தலில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டும் ஆற்றல் புலிகளுக்கு இருந்தது.ஆனால் அக்காலம் இன்று மலையேறி விட்டது.

ஏராளமான புலி ஆதரவு ஊடகங்கள் அந்நாட்களில் செயற்பட்டன. இப்போது அவையும் இல்லை. நிதி சேகரிப்பு முற்றாக நின்று விடவில்லையாயினும் கணிசமான அளவில் குறைந்து விட்டன. புலி ஆதரவு புத்திஜீவிகள் பலர் இரவோடு இரவாக புலி ஆதரவு நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டமை மிகவும் வேடிக்கையானது. மாற்றுக் கருத்து உடையவர்களைக் கொலை செய்தல் என்கிற புலிகள் இயக்க கோட்பாட்டையும், புலிகளின் எல்லா செயல்பாடுகளையும் ஒரு காலத்தில் நியாயப்படுத்திய இப்புத்திஜீவிகள் இன்று மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.இவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றமை மிகவும் வெட்கக் கேடான விடயம் ஆகும் .

புலிகளின் தோல்விக்குப்பின் புலிகளுக்கு ஆதரவான இணையத்தள பிரசார செயலணி ஒன்று புதிதாக தோற்றம் பெற்றுள்ளது. இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மூலமாக ப இலங்கையின் நிலைமை பற்றி முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை இவ்விணையத் தளங்கள் வெளியிட்டு வருகின்றன. ராஜபக்ஸ அரசு கவிழ்கின்றது, புலிகள் இயக்கம் புத்துயிர் பெறுகின்றது என்றெல்லாம் இவை தகவல்களைப் பரப்பி வருகின்றன.இம்மடத்தனமான பிரசாரங்களால்தான் மீண்டும் இலங்கையில் வன்முறைகள் தலைதூக்கக் கூடும் என்று மேலைநாட்டு முகவராண்மைகள் சில நம்புகின்றன்.

இருந்தாலும் வன்முறைகள் மீண்டும் தலைதூக்கினால் அவற்றை முளையிலேயே இலங்கை அரசு கிள்ளி எறிந்து விடும் என்று இவை விசுவாசிக்கின்றன. சில வாரங்களுக்கு முன் இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழு ஒன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழுகளுடன் இவர்கள் பரஸ்பரம் பேசினார்கள். புலிகள் இயக்கம் புத்துயிர் பெறும் சாத்தியம் உண்டா? என்பது குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தார்கள். இந்தியத் தரப்பு புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் கே.பி யுடன் விரிவான நேர்காணல் ஒன்றை நடத்தியது. இதே நேரம் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு பற்றி விரிவாக இப்போது ஆராயப்பட்டு வருகின்றது.

புலி ஆதரவு அமைப்புக்கள் இத்தடை நீடிப்புக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. மேற்குலக நாடுகள் ஐக்கியமானதும் பிளவுபடாததுமான இலங்கையை ஆதரிக்கின்றன அத்துடன் வன்முறைகளற்ற, ஜனநாயக ரீதியான ஈழ ஆதரவு செயற்பாடுகளுக்கும் மேற்குலக நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. . அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாக புலிகள் இயக்கம் இருக்கின்றது. ஆனால் நியூயோர்க் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டு பகிரங்கக் கூட்டங்கள் அண்மையில் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. எந்தவொரு புலி ஆதரவுச் செயற்பாட்டுக்கும் அங்கு இடம் இல்லை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை மற்றும் மணிப்பூர் கொரில்லாக்களுக்குப் புலிகள் பயிற்சியளித்தமை போன்றவற்றை இந்தியாவால் ஒருபோதும் மறக்கமுடியாது. விசுவநாதன் உருத்திரகுமாரன் நியூயோர்க்கில் உள்ள ஒரு சட்டத்தரணி. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு உந்து சக்தியாக இருப்பவர். புலிகளுடைய சர்வதேச செயலகத்தின் சட்ட ஆலோசகராக முன்பு பணி ஆற்றியவர். ஒஸ்லோ ஆதரவு சமாதானப் பேச்சில் புலிகளின் பேராளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரதிப் பிரதமர்கள், ஏழு அமைச்சர்கள், பத்து பிரதி அமைச்சர்கள் ஆகியோரைக் கொண்ட அமைச்சரவையையும் நிறுவியுள்ளார். செனற் சபை அல்லது மேலவை ஒன்றையும் ஸ்தாபிக்க இவர் திட்டமிட்டுள்ளார்.

இது போன்ற செயற்பாடுகள் புலம்பெயர் தமிழ் சமூகம் வன்முறைகளைக் கைவிட உதவும் என்று மேற்கு நாடுகள் எண்ணுகின்றன. நாடு கடந்த தமிழீழ அமைச்சர்கள் இப்போது சுய கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். கொழும்பிலிருந்து சமதான பேச்சுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக்கள் வரும் என்றும் இவர்களில் சிலர் காத்திருக்கின்றனர்.ஆனால் இவர்கள் எல்லோருமே இலங்கையில் கறுப்புப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மையாகும். உருத்திராவின் நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பாதிப்பற்ற நகைச்சுவையாகக் மேற்கு நாடுகள் கருதுகின்றன. தீங்கு அற்ற முயற்சியாக கருதி இப்பிரிவுகளுடன் பேச்சுக்களையும் நடத்தி உள்ளன. ஆனால் நெடியவன் குழுவை மேற்குலக நாடுகள் பேராபத்தானது என கருதுகின்றன.

நெடியவன் பிரிவுக்குள் பல அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.இவற்றுள் உலகத் தமிழர் பேரவை முக்கியமானது. இப்பேரவை ஓரளவு சுயாதீனமாகச் செயற்படுகின்றது. சில விடயங்களில் சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட வண.பிதா எஸ்.ஜே.இமானுவல் இப்பேரவைக்குத் தலைமை தாங்குகின்றார். நெடியவனின் கருத்தியல் ஞானத் தந்தையாகவும் இவரே உள்ளார். நெடியவனின் உண்மையான பெயர் பேரின்பநாயகம் சிவபரன். புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கு முன்னர் பொறுப்பாக இருந்த மணிவண்ணன் அல்லது கெஸ்ட்ரோவால் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார் .தற்போது 34 வயது. இவர் 18 வயதில் இயக்கத்தில் இணைந்தவர்.

அரசு- புலிகளுக்கு இடையில் தாய்லாந்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனோடு பங்கேற்றவர்.ரு உருத்திரகுமாரனைக் கவிக்க நெடியவன் குழு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகுன்றது. குறிப்பாக உருத்திரகுமாரனுக்கு சவாலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட முன்னாள் எம்.பி ரி.ஜெயானந்தமூர்த்தியை களத்தில் இறக்கியது. இவ்விடயத்தில் நெடியவனுக்கு ஆலோசகராக இருப்பவர் தமிழ்நெற் இணையத் தள ஆசிரியரான நோர்வே வாழ். ஜெயச்சந்திரன் கோபிநாத். ஆனால் உருத்திரகுமாரனுடன் மல்லுக் கட்டக் கூடியவராக ஜெயானந்த மூர்த்தி இருக்கவில்லை.

இதனால் நெடியவனின் முயற்சி தோற்றுப் போனது.உருத்திரகுமாரன் உடைய குழுவின் கை ஓங்கி விட்டது. இருந்தாலும் உருத்திரகுமார் மீதான அடுத்த தாக்குதலுக்கு நெடியவன் பிரிவு திட்டமிட்டு வருகின்றது. யுத்தத்துக்குப் பின் தமிழ் மக்களின் நிலைமைகளில் மேற்கு நாடுகள் ஓரளவு பரிதாபம் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் புலி அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் இறங்கும் என்று மேற்கு நாடுகள் எதிர்ப்பார்த்தன.

ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக இப்புலி அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நல்வாழ்வுக்கு உதவுகின்றவர்களுக்கு எதிராக கடும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்கு இடையி மீண்டும் பேரழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைககளும் இடம்பெற்று வருகின்றன. பல நாடுகளில் புலி ஆதரவாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.ஜெர்மனி இத்தாலி,நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் பல நாடுகளில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புலிகளின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகள் தற்போது மிகவும் குறைந்த மட்டத்திலேயே இடம்பெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிதி சேகரிப்பு 10 முதல் 15 சதவீதத்தால் குறைந்துள்ளது. பெரும்பாலும் ராஜபக்ஸ தலைமையிலான அரசை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தவும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டவும் என்று கூறியே இந்த நிதி சேகரிக்கப்படுகின்றது. வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டு நிதி சேகரிக்கப்படுகின்றது. புலம் பெயர்ந்த சமூகத்துக்கு மத்தியில் சேகரிக்கப்படும் இந்த நிதியை வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உண்மையிலேயே பேரின்னல்களை அனுபவித்து வரும் மக்களின் நன்மைகளுக்குப் பயன்படுத்த முடியும்.புலம்பெயர் சமூகத்துக்கு இத்தார்மீகப் பொறுப்பு உண்டு. ஆனால்

* பிரபாகரனும்,பொட்டு அம்மானும் உயிருடன் இருக்கின்றனர்-

* இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன் 2000 போராளிகளுடன் தோணி ஒன்றில் கடல் மார்க்கமாக வெளிநாடு ஒன்றுக்கு தப்பி வந்து விட்டார்-

* 10000 போராளிகளுக்கு வெளிநாடு ஒன்றில் பிரபாகரன் பயிற்சி கொடுத்து வருகின்றார்-

* உரிய நேரத்தில் அதிரடித் தாக்குதல் நடத்துவார்- என்றெல்லாம் உசுப்பேற்றி நிதி சேகரிக்கின்றனர்.இவை வெறும் கட்டுக்கதைகளே ஆகும்.

இக்கதைகளில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. .இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து புலிகள் இயக்க உறுப்பினர் சிலர் தப்பித்தான் இருந்தனர். ஆன்மால் அவர்களும் பின்னர் மிகவும் திட்டமிட்ட முறையில் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. இலங்கை மீது தாக்குதல் தொடுக்கின்றமைக்கு 12ஆயிரம் புலிப் போராளிகளுக்கு பயிற்சியளிக்க எந்தவொரு உலக நாடும் இடம் வழங்க முன் வந்து இராது. இலங்கையின் பாதுகாப்பு மிகவும் கட்டுக்கோப்பான நிலையில் உள்ளது.

இங்கு எந்தவொரு சதி நாச வேலைக்கும் இப்போதைக்கு இடம் கிடையாது என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் மீண்டும் புலிகளின் வன்முறைகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்குமா? என்ற கேள்வியை எழுப்பினால் நிச்சயம் இல்லை என்பதே உறுதியான பதிலாக இருக்கும். ஆனால் இலங்கைக்கு எதிரான பாரிய தாக்குதலோ, வன்முறையோ இப்போதைக்கு முடியாத ஒன்றாக இருந்தாலும் கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி ஆதரவு சமூகம் தொடர்ந்தும் இலங்கைக்கு தொல்லை கொடுக்கும் ஒன்றாகவே நிச்சயம் இருக்கும்.”

தற்போதுள்ள நிலையில் தேவையானதொரு கட்டுரை ஆகையால் இணைத்துள்ளேன்[/u]

Edited by BLUE BIRD

அவர் இருக்கிறார்,அவர் இல்லை என்று நம்மை நாம் எ மாற்றி கொண்டு இருப்பதை விட நமக்காக அவர்கள் போராடியது நினைவில் வைத்து இனி வரும் களத்தில் நாம் முழு மூச்சி வுடன் போராட வேண்டும்

http://usetamil.forumotion.com :rolleyes:

Edited by aarul

இவர் ஒரு சிறீ லங்காவில் கூலிப்படை புலனாய்வு என்று தன்னையே கூறும் தமிழர் விரோத கருத்துக்களை சிங்களத்தின் கூலிக்குகாக எழுதுபவர்.

எழுத்தில் வீரம் உண்டு. ஆனால் எப்பவும் சிங்கள இனவாத்திகளின் கருத்தை பிரதிபலிப்பதாகவே கடந்த 10-15 ஆண்டுகளாக எழுதுகிறார். தான் தமிழராக இருந்தாலும் சிங்களவன் வெல்ல வேண்டும் என்ற ஒரே கொள்கை தான் இவருக்கு. தமிழ்ர்களை பற்றி எழுதும்போது அவர்கள் பல அந்தர்ங்க சாதி போன்ற இன்னோரன்ன கட்டுரைக்கு தேவையற்ற வற்றை எழுதுவார். ஆனால் அதை ஒரு சிங்களவருக்காக எழுதும்போது உலகில் அந்தமனிதந்தான் புனிதன் என்றவாறு ர்தான் எழுதுவார்.

ஈழ்த்தமிழர்களிடையே இவர் போன்ற பல எழுத்தாளர்கள் தமது இனத்தையே விற்று கொண்டிருக்கிறார்கள். தமது மனைவி , பெண் பிள்ளைகளை விற்ற்பதற்கு சமமான காரியங்களை தற்போது இவர்கள் செய்கிறார்கள்.

தமது இனம் கஷ்டப்படுவதை காணாத இவர்கள் பகற்குருடுகளே அன்றி வேறல்ல.

இவருடைய எழுத்துக்கு பல சிங்களவர்கள் விசிறிகளாக உள்ளதோடு பல ஈனத்தமிழர்கள்களும் உள்ளனர்.

இவர்களை விட

அரச அதிகாரிகள்-- இமெல்டா. தய்யனந்தா, பீதாம்பரம்,

பா உ- சிவசக்தி ஆனந்தன். ரங்கா, ........

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகம் தமிழர் தாயகம் என்று கூவி ஒரு சில நிலபரப்புகளுக்கு மட்டுமே உரிமை கொண்டாடுவது தற்ப்போது வேஸ்டு செயல் ... முழுமைக்கும் சொந்தம் கொண்டாட ஈழ தோழர்கள் பழகி கொள்ளவேண்டும் ... நாடுகளை பிரிப்பது தற்போதைய உலக சூழ் நிலையில் யாருக்கும் விருப்பமில்லையென்றால் மொத்தத்தினையும் கைப்பற்ற பழகி கொள்ளவேண்டும் ... மீண்டும் உலக நாடுகளிடம் போய் குலைய குலையா முந்திரிக்க கணக்கா தமிழீழம் என கும்மியடிக்க கூடாது... மொத்த இலங்கையும் தமிழீழம் என கூறுதல் வேண்டும்... ஆக கூட்டி கழித்து பார்த்தால் பிரிந்து போவதை இவர்கள் விரும்பவில்லை ஆனால் ஒரு ஆதிக்கத்தில் வரவேணும் என விரும்புகிறார்கள்.. அதற்காக முயற்சி செய்யவேணும்... அதை ஏன் முயற்சிக்க கூடாது...? நாடு இல்லாத சிங்களவர்கள் வேறு எங்காவது ஒரு தீவை வடகைகு எடுத்து கொள்ளட்டும் அல்லது கிந்தியா ஏதாவது மும்பையில் கல்யாண்பூர் போல இவர்களுக்கும் ஏதாவது செய்வார்கள் ... ரத்தபாசம் அப்படி அதைபற்றி நமக்கென்ன்ன கவலை?

டிஸ்கி:

ஒட்டு மொத்தமாய் கைபற்றியவர்களுக்கு இன்னும் இவர்கள் மறைமுகமாக ஆதரித்து கொண்டுதான் உள்ளனர்.. மனிதமாவது மண்ணாங்கட்டியாவது.... :unsure:

http://thatstamil.oneindia.in/news/2010/11/09/myanmar-post-election-violence.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.