Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்"!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்"!

புதன், 10 நவம்பர் 2010 11:57

”நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்.” இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார்.

வாழ்க்கைச் செலவு மற்றும் உணவுப் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றுக்கான குழுவினரை அலரி மாளிகையில் ஜனாதிபதி சந்தித்துப் பேசி உள்ளார்.

அப்போதே அவர் இலங்கையை முன்பு ஆண்டிருந்த இராஜசிங்க அரசனின் உணவுக் கொள்கைகளை நினைவு கூர்ந்தார்.

இராஜசிங்க மன்னன் குரக்கன் மாவால் ஆன உணவுகளையெ அமைச்சர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று உத்தரவு இட்டிருந்தார் என்றும் குரக்கனால் ஆன உணவுகளை சாப்பிட முடியவில்லை என்று சில நேரங்களில் அரசனுக்கு முறையிட்டு இருந்தனர் என்றும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

அதே போல அவருடைய அமைச்சர்களுக்கு சில காலங்களுக்கு குரக்கனால் ஆன உணவுகளை வழங்கி இருக்கின்றார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அப்போது அக்கூட்டத்தில் பங்குபற்றி இருந்த அமைச்சர் ஒருவர் இராஜசிங்க அரசன் என்பவர் யார்? என்று இன்னொரு அமைச்சரிடம் வினவி இருக்கின்றார்.

அக்கேள்விக்கு இராஜசிங்கன் இலங்கையை ஆண்ட மன்னர்களில் ஒருவர் என்று ஜனாதிபதியே பதில் கூறி இருக்கின்றார். இராஜசிங்க மன்னன் யார்? என்பதை முழுமையாக தெரிந்து கொண்டாரோ? இல்லையோ சந்தேகம் வெளியிட்டிருந்த அமைச்சர் இப்படி ஒரு கருத்துக் கூறினார். “

எப்போதுமே ஒரு அரசன் இன்னொரு அரசனை மேற்கோள் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசன்தான் எம் முன்னிலையில் இருக்கின்றார்.

tamilcnn.com

”நான் இன்னொரு இராஜசிங்க மன்னன்.”

அமேரிக்கா புத்திஜீவி ஜோர்ஜ் வில்லியத்திற்கு மகிந்தா வைச்ச ஆப்பு போலகிடக்குது.....அவர் இவரை துட்டகைமுனு என்று சொல்ல இவர் உசாராகி இராஜசிங்கன் மன்னன் என்று சொல்லுகிறார். :rolleyes:

இலங்கையில் 1785ம் ஆண்டு விக்கிரம ராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவரது இயற்பெயர் கண்ணுச்சாமி. மதுரை நாயக்க மன்னருடன் திருமண உறவு கொண்டிருந்தார். ஆங்கிலேயர்கள் இவரிடம் அதிகளவு கப்பம் கேட்டு மிரட்டினர். பின்னர் 16 ஆண்டுகள் இவருடன் போர் செய்து 1815ல் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்தால் கலவரம் வெடிக்கும் என்பதால், விக்கிரம ராஜசிங்கனையும், உறவினர்கள் 16 பேரையும், அவர்களது பேரன், பேத்திகள் 32 பேரையும் வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர். அதன் பிறகு, இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விக்கிரம ராஜசிங்கன்.

வேலூர் கோட்டை சிறையில் 17 ஆண்டுகள் இருந்த விக்கிரம ராஜசிங்கன் 1832ல் இறந்தார். அவரது உடலை வேலூர் பாலாற்றில் ஆங்கிலேயர்கள் புதைத்து சிறிய கல்லறையையும் கட்டினர். அரசனின் குடும்பத்தினர் இறந்த போது, அவர்களின் உடல்களையும் அரசன் கல்லறைக்கு அருகில் புதைத்தனர்.

கடந்த 1983ல் இலங்கை இனக்கலவரத்திற்கு பின், இலங்கை தமிழர்கள் மீது தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அனுதாபம் ஏற்பட்டது. அப்போது, இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் கல்லறை பாலாற்றில் அனாதையாக இருந்தது பற்றி தகவல்கள் வெளியானது.

இணையத்தில் சுட்டது.

இதுவும் மஹிந்தவுக்கு தெரியுமோ தெரியாது

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னொரு "ராஜராஜ சோழன்" என்று வாய்க்கு வந்ததை அள்ளி போடாமல் இருந்தது வரை சந்தோசபடுவம் :unsure:

நான் இன்னொரு "ராஜராஜ சோழன்" என்று வாய்க்கு வந்ததை அள்ளி போடாமல் இருந்தது வரை சந்தோசபடுவம் :unsure:

:unsure: :unsure:

மகிந்த கொம்பனி கப்பல் ஏறி தமிழ் நாட்டை பிடிக்கும் போது அதையும் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:huh: :huh:

மகிந்த கொம்பனி கப்பல் ஏறி தமிழ் நாட்டை பிடிக்கும் போது அதையும் சொல்வார்கள்.

:huh: :huh: :huh: :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.