Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்

Featured Replies

  • தொடங்கியவர்

.

யானைக் கடவுள் கதை

"ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு வனத்தில் ஒரு துறவி பல சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தன் சீடர்களுக்கு எல்லா உயிர்களிலும் கடவுளைக் காண்பதை பற்றி உபதேசித்தார். உயிர்களில் எல்லாம் கடவுள் இருப்பதன் காரணமாக அவற்றிற்கு தலை வணங்கும் படியும் சொன்னார்."

"அவரின் ஒரு சீடன் யாகம் செய்வதற்கு விறகு பொறுக்க காட்டினுட் சென்றான். அப்போது மூர்க்கமான யானை ஒன்று வருவதாகவும், விலகி ஓடும் படியும் யாரோ சத்தமிடுவது கேட்டது. இந்தச் சீடனைத் தவிர எல்லோரும் ஓடித் தப்பினர். 'யானையும் கடவுளின் ஒரு வடிவமே.பின் எதற்காக அதனிடம் இருந்து ஓட வேண்டும் ?' என்று அவன் காரணம் கற்பிக்கலானான். அவன் அசையாது அதன் முன் நின்று, தலை வணங்கி, அதன் புகழ் பாட ஆரம்பித்தான். யானைப் பாக‌னோ 'ஓடு, ஓடு' என்று ச‌த்த‌ மிட‌லானான். சீட‌ன் அசைய‌வேயில்லை. யானை அவ‌னைத் துதிக்கையால் தூக்கி ஒரு ப‌க்க‌த்தில் வீசிவிட்டுச் சென்ற‌து.

காய‌ம‌டைந்த‌ சீட‌ன் மூர்ச்சைய‌டைந்து த‌ரையில் கிட‌ந்தான். ந‌ட‌ந்த‌தைக் கேள்விப்ப‌ட்ட‌ துற‌வியும், ஏனைய‌ சீட‌ர்க‌ளும் அவ‌னை ஆசிர‌ம‌த்திற்குத் தூக்கிச் சென்று ம‌ய‌க்க‌ம் தெளிவித்த‌ன‌ர். 'யானை வ‌ருவ‌து உன‌க்குத் தெரியும் தானே, பின் எத‌ற்காக‌ நீ அந்த‌ இட‌த்தை விட்டு அக‌ல‌ வில்லை ?' என்று சீட‌ர்க‌ள் வினாவினார்க‌ள்.

அதற்கு அவ‌ன் 'ஆனால் எம்முடைய‌ ஆசான், க‌ட‌வுளே இப்ப‌டிப் ப‌ல‌ வ‌டிவ‌ங்க‌ளை எடுப்ப‌தாக‌ சொல்லியுள்ளார். அத‌ன் ப‌டி யானைக் க‌ட‌வுள் வ‌ருவ‌தாக‌ நினைத்து நான் ஒட‌ வில்லை.' என்றான். அதைக் கேட்ட‌ துற‌வி ' குழ‌ந்தாய், யானைக் க‌ட‌வுள் வ‌ந்த‌து உண்மையே; ஆனால் பாக‌ன் க‌ட‌வுள் உன்னைத் த‌டுத்திருந்தார். எல்லாமே இறைவ‌னின் வ‌டிவ‌ங்க‌ளாகையால் நீ ஏன் பாக‌னின் வார்த்தைக‌ளை ந‌ம்ப‌வில்லை ? பாக‌ன் க‌ட‌வுளின் வார்த்தைக‌ளின் பிர‌கார‌ம் நீ ந‌ட‌ந்திருக்க‌ வேண்டும்.'" (சிரிப்பு)

.

Edited by esan

  • தொடங்கியவர்

.

"வேதங்களில் தண்ணீர் கடவுளின் ஓர் வடிவமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் தண்ணீரில் சிலவகையே பூசனைக்கு பயன்படுகின்றது, சில முகம் கழுவ பயன்படும், இன்னும் சிலவகை பாத்திரம் கழுவவும், அழுக்குத் துணி துவைக்கவும் பயன்படும். இந்தக் கடைசி வகை குடிப்பதற்கோ அல்லது புனித தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது. "

" இதுபோலவே, இறைவன் எல்லோர் இதயங்களிலும் - ‍ அவன் புனிதமானவனோ; புனிதமற்றவனோ, நல்லவனோ; கெட்டவனோ, என்றில்லாமல் வசிக்கின்றான். ஆனால் ஒருவர்(ஆன்மீகி) தீயவருடனோ, தூய்மையற்றவருடனோ தொடர்பு வைத்தலாகாது. இப்படிப்பட்டவர்களுடன் அவர் நெருங்கிப்பழகலாகாது. சிலருடன் வார்த்தைகளைப் பறிமாறிக்கொள்ளலாம், மற்றையோருடன் அந்தளவிற்குக் கூட நெருங்கலாகாது. இப்படிப் பட்டவர்களுடன் இடைவெளியைப் பேண வேண்டும்."

தீயோரை எப்படி சமாளித்துக் கொள்வது ?

ப‌க்த‌ன்: "ஐயா, தீயவன் ஒருவன் துன்பம் தர முயற்சிப்பானாயின், அல்லது உண்மையிலேயே துன்பகரமான ஓர் காரியத்தைச் செய்து விடுவானாயின் நாம் பேசாமலேயே இருந்து விடுவதா ? "

குரு: "சமுதாயத்தில் வாழும் ஒருவர், தீய எண்ணமுள்ளோரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வன்மம் காண்பிக்கலாம். ஆனால், தனக்கு யாரும் கேடு செய்யப்போவதை அறிந்து அவர் ஒருபோதும் யாருக்கும் கேடு செய்யலாகாது."

.

. மனைவி மக்கள் தாய் தந்தை என்று எல்லோருடனும் வாழ்ந்து வா. அவர்களுக்கு பணிவிடைகளைச் செய். உன் உயிர் போல் அவர்க‌ளைக் கவனித்து வா. ஆனால்.. அவர்கள் உன்னைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உன் இதயம் அறிந்துகொள்ள வேண்டும்."

ரொம்பதான் குழப்பிறாங்கள் ......மேற்குலத்தினர் அநேகர் இப்படித்தான் வாழ்கிறாங்கள்...அதை நாங்கள் வரவேற்பதில்லை...ஆனால் இந்தியா சாமிமார் புலம்பினால் தேவவாக்கு என்று சொல்லுறம்.... :D:D

  • தொடங்கியவர்

.

ரொம்பதான் குழப்பிறாங்கள் ......மேற்குலத்தினர் அநேகர் இப்படித்தான் வாழ்கிறாங்கள்...அதை நாங்கள் வரவேற்பதில்லை..

ஞாய‌மான‌ வாத‌ம்.

கீழைத்தேச தத்துவ‌ஞானங்களான‌ சைவ சித்தாந்தம், வேதாந்தம், பௌத்தம் போன்றவற்றில் பற்றைத் துறத்தல் ஒரு முக்கிய அம்சம். அது பொருட் பற்றாகலாம், பிள்ளைப் பாசமாகலாம். இராமகிருஷ்ணர் இங்கு சொல்வது இதன் ஒரு நடைமுறை வடிவமே.

மேலைத்தேசத்தவர் பலர் ஆழமான பாசப் பிணைப்பை கொண்டிருப்பதில்லை. இதற்குக் காரணம் ஒரு சிலருடன் தமது வாழ்க்கையை முடிக்காமல் பலருடன் பழகி தமது இன்ப நுகர்ச்சியை அதிகரிக்கும் நோக்கம் இருக்கலாம்.

இதற்கும், பற்றை அறுத்து, தெய்வத்தை நாடுவ‌திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்தியா சாமிமார் புலம்பினால் ......................

* இராமகிருஷ்ணர் இருந்த காலத்தில் இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை.

* இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்ட இடங்களில் பல இன்றைய பங்களாதேஷில் இருக்கின்றன.

* இந்தும‌த‌த்தின் பூர்வீக‌ம் இந்தியா என்ப‌தைவிட‌ பாக்கிஸ்தான் என்ப‌த‌ற்குத்தான் ஆதார‌ங்க‌ள் அதிக‌ம்.

.

* இந்தும‌த‌த்தின் பூர்வீக‌ம் இந்தியா என்ப‌தைவிட‌ பாக்கிஸ்தான் என்ப‌த‌ற்குத்தான் ஆதார‌ங்க‌ள் அதிக‌ம்.

இந்து மதத்துக்கு பூர்வீகம் வேறு உண்டோ?

அமுத மொழிகளால் குழம்பிவிட்டீர்கள் போலுள்ளது.

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்து மதத்துக்கு பூர்வீகம் வேறு உண்டோ?

அமுத மொழிகளால் குழம்பிவிட்டீர்கள் போலுள்ளது.

என்னுடைய சிற்றறிவின் பிரகாரம், இந்து மதம் மனிதர்கள் கூர்படைந்து, நாகரீகங்கள் தோன்றியபின் தோன்றிய மதம். எனவே பூர்வீகம் என்பது இதற்கு உண்டு. இல்லையென்றால் விளக்கவும்.

என்னுடைய சிற்றறிவின் பிரகாரம், இந்து மதம் மனிதர்கள் கூர்படைந்து, நாகரீகங்கள் தோன்றியபின் தோன்றிய மதம். எனவே பூர்வீகம் என்பது இதற்கு உண்டு. இல்லையென்றால் விளக்கவும்.

எல்லா மதத்துக்கும் பூர்வீகம் உண்டு. "இந்து" என்பதே வெள்ளையர்கள் தந்த பெயர்தானே. மதம் தோன்றியது மனிதர்களின் மனங்களில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்துக்கும், அரசியலுக்கும் தொடர்புள்ளதா?

தேசியத் தலைவர் பிரபாகரனின் வயது முதிர்ந்த தாய் இறந்த பின்.....

அந்தச் சடலத்தை, எரித்த சாம்பலில்...

நாயை சுட்டுப் போட்டவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டும்?

  • தொடங்கியவர்

மதம் தோன்றியது மனிதர்களின் மனங்களில்தான்.

உண்மை அதுதான். மதமும் விஞ்ஞானம், கணிதம் போல் அறிவியல் தேடலின் ஒரு பகுதிதான். விஞ்ஞானம் ஒரு சாராரின் கூற்றே சரி என்று இறுதி மட்டும் இறுக்கிப் பிடிக்காமல் எல்லா கூற்றுக்களையும் திறந்த மனத்துடன் ஆராய்ந்தது. மனிதர்களுக்கு பெரும் பயன் தரும் வளர்ச்சி கண்டது.

இராமகிறுஷ்ணரிடம் பிடிக்கும் விடயமே இதுதான். பாதையில் பற்றை வைக்காமல் இலக்கைச் சிக்கெனப் பிடித்தார்.

  • தொடங்கியவர்

இந்து மதத்துக்கும், அரசியலுக்கும் தொடர்புள்ளதா?

தேசியத் தலைவர் பிரபாகரனின் வயது முதிர்ந்த தாய் இறந்த பின்.....

அந்தச் சடலத்தை, எரித்த சாம்பலில்...

நாயை சுட்டுப் போட்டவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்கவேண்டும்?

இழிவானவர்கள், இழிந்த செயல்கள் மூலம் தான் தங்கள் கேவலத்தை வெளியே காட்டுவார்கள்.

ஒரு வயதான பெண்ணின் சாம்பலிற்கே இந்த நிலை என்றால் இளம் பெண்களின் நிலை ?

ஒரு இனத்தை மாத்திரம் அல்ல இந்து மதத்தையும் சேர்த்தே இவர்கள் கேவலப் படுத்தி இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

.

பாம்பின் கதை

"ஒரு கதை சொல்கிறேன் கேள். சில‌ மாடு மேய்க்கும் சிறுவர்கள் தமது மாடுகளை ஒரு கொடிய விஷப் பாம்பு வாழும் புல் வெளியில் மேய்த்து வந்தார்கள். அந்தப் பாம்பின் மீதுள்ள பயம் காரணமாக அவர்கள் எப்போதுமே எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒருமுறை ஒரு பிரமச்சாரி அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது அவர்கள் அவனிடம் ஓடிச்சென்று 'ஐயா, தயவுசெய்து அந்த வழியாகச் செல்ல வேண்டாம்.அங்கே ஒரு விஷப் பாம்பு இருக்கிறது' என்றார்கள். 'அதனால் என்ன, குழந்தைகளே ? எனக்கு பாம்புகளின் மேல் அச்சம் கிடையாது. சில மந்திரங்கள் என்னிடம் இருக்கின்றன' என்றவாறே அவன் புல் வெளியினூடாக தன் பயணத்தைத் தொடர்ந்தான். அச்சமடைந்த ஆயர் சிறார்கள் அவனுடன் செல்லாது மீண்டார்கள். ஆள் அரவம் கேட்ட பாம்பும் படம் எடுத்தவாறே அவனை நோக்கி வந்தது.

அது நெருங்கியதுமே அவன் ஒரு மந்திரத்தை உச்சரிக்க பாம்பு ஒரு மண்புழுவைப் போல் அவன் காலடியில் துவண்டு கிடந்தது. பிரம்மச்சாரி அதைப் பார்த்துச் சொன்னான் 'இங்கே பார். ஏன் தீங்கு செய்ய விழைகின்றாய் ? உனக்கு ஒரு புனிதமான வார்த்தையைச் சொல்லித் தருகின்றேன். அதை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் கடவுளை நேசிக்கக் கற்றுக் கொள்வாய். இறுதியில் அவனை நீ உணர்ந்தும் கொள்வாய். ஆகவே உன் வன்முறை நிறைந்த இயல்பை விட்டுவிடு' என்றான்.

அவனும் அதற்கு ஒரு புனித வார்த்தையைக் கற்றுக் கொடுத்து அதன் ஆத்மீக வாழ்க்கையைத் தொடக்கி வைத்தான். பாம்பு அவனை வணங்கியவறே ' ஐயா, ஆன்மீகத்தை நான் எப்படிக் கடைப் பிடிப்பேன் ?' என்றது. 'புனித வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்', என்றான் அதன் ஆசான். ' யாருக்கும் தீங்கு செய்யாதே'.

புறப்படும் முன் பிரம்மச்சாரி அதனிடம், 'உன்னை மீண்டும் சந்திப்பேன்' என்றான்.

"சில நாட்கள் சென்றன. மாடு மேய்க்கும் சிறார்கள் பாம்பு கடிப்பதை விட்டுவிட்டதை அவதானித்தார்கள். அவர்கள் அதன் மீது கற்களை எறிந்தார்கள். அது எந்த வித கோபத்தையும் காட்டவில்லை. அது ஒரு மண்புழுவைப் போலவே நடந்து கொண்டது. ஒரு நாள் அவர்களில் ஒருவன் அதனை நெருங்கி வந்து, அதன் வாலைப் பிடித்துக் கொண்டான். அதனைச் சுழற்றி சுழற்றி பல முறை நிலத்தில் அடித்துத் தூர எறிந்தான். அது இரத்தத்தைக் கக்கியபடி மயக்கமடைந்தது.அதனால் அசைய முடியவில்லை. அது இற‌ந்துவிட்டதாக நினைத்த சிறுவர்கள் அங்கிருந்து சென்றார்கள்."

"அதற்கு நினைவு திரும்பியபோது பின்னிரவாகியிருந்தது. மிகுந்த சிரமத்துடன் மெது மெதுவாக அது தன் புற்றிற்கு ஊர்ந்து சென்றது. அதன் எலும்புகள் உடைந்திருந்தன. அதனால் அசையவே முடியவில்லை."

"பல நாட்கள் நகர்ந்தன. அது எலும்பும் தோலுமாகியது. எப்போதாவது இரவில் இரை தேட வெளியே வரும். இடையர் சிறார் மேல் இருந்த அச்சம் காரணமாக அது பகலில் வெளியே வருவதேயில்லை."

"புனித வார்த்தையைக் கற்றுக் கொண்டதில் இருந்து மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை அது விட்டுவிட்டது. மரங்களில் இருந்து விழும் இலை, பழங்கள் என்பவற்றை உண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தது."

"ஒரு வருடத்தின் பின் பிரம்மச்சாரி மீண்டும் அவ்வழியே வந்தான். பாம்பைப்பற்றி அவன் விசாரித்த போது இடைச்சிறுவர்கள் அது இறந்து விட்டதாகச் சொன்னார்கள். அவனால் அவர்கள் வார்த்தையை நம்பமுடியவில்லை."

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

.

"புனித வார்த்தையின் பயனை அடையாது அந்தப் பாம்பு இறந்திருக்க மாட்டாது என்பதை அவன் அறிந்திருந்தான். பாம்பு சீவிக்கும் இடத்தினை அடைந்து அங்கும் இங்குமாக தான் அதற்கு வழங்கிய பெயரைக் கூவிக் கொண்டே அதனை தேடினான் அந்த பிரம்மச்சாரி."

" தன் ஆசானின் குரலைக் கேட்டதும் பாம்பு தன் புற்றிலிருந்து வெளியே வந்து மிகுந்த மரியாதையுடன் தலை வணங்கியது. 'எப்படி இருக்கிறாய்?' என்று வினவினான் பிரம்மச்சாரி. 'நான் நலமே உள்ளேன்' என்றது பாம்பு. 'ஆனால்... ஏன் இவ்வளவிற்கு மெலிந்து, இளைத்துப் போய் உள்ளாய் ?' என்று கேட்டான் ஆசான். 'ஐயா, நீங்கள் என்னை, எவரையும் துன்பப்படுத்த வேண்டாம் என்று கட்டளையிட்டீர்கள், அதனால் நான் இலைகளையும் பழங்களையும் உண்டே சீவிக்கின்றேன், அதன் காரணமாக நான் இளைத்திருக்கலாம்' என்றது பாம்பு."

"பாம்பு மிகுந்த சாத்வீக குணத்தை அடைந்திருந்தது. எவர் மீதும் அதற்கு கோபம் ஏற்படவில்லை. இடைச்சிறார்கள் தன்னைக் கொல்ல முயன்றதையும் அது முற்றாகவே மறந்திருந்தது."

"உணவுத் தேவை மட்டுமே உன்னை இப்படியான நிலைக்கு ஆளாக்கியிருக்க முடியாது. வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். யோசித்துப் பார்' என்றான் பிரம்மச்சாரி. அப்போதுதான், சிறுவர்கள் தன்னை நிலத்தில் அடித்ததை நினைவுகூர்ந்தது பாம்பு. 'ஆம் ஐயா, எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு நாள் சிறுவர்கள் என்னைப் பலமாக நிலத்தில் அடித்தார்கள். அறியாமையினாலேயே அப்படிச் செய்தார்கள். என் மனதில் ஏற்பட்ட நல்ல‌ மாற்றங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நான் யாரையும் கடிக்கவோ துன்பப்படுத்தவோ மாட்டேன் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும் ? ' என்றது."

"பிரம்மச்சாரி விசனப்பட்டான். 'வெட்கக் கேடு! நீ ஒரு அறிவீலி! உன்னைப் பாதுகாக்க உனக்குத் தெரியவில்லையே. உன்னைக் கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். சீற வேண்டாம் என்றா சொன்னேன். நீ ஏன் சீறுவதன் மூலம் அவர்கள் நெருங்குவதைத் தடுத்திருக்கக் கூடாது ?'"

"தீயவர்களைக் கண்டால் சீறு. அவர்கள் உனக்குத் துன்பம் விளைவிக்க வந்தால் அவர்களை அச்சமடையச் செய். ஆனால் உன் நஞ்சை அவர்கள் மீது ஒருபோதும் உபயோகிக்காதே. மற்றவர்களிற்கு துன்பம் செய்யலாகாது."

"இறைவனின் இந்தப் படைப்பில் மனிதர்கள், மிருகங்கள், மரங்கள், தாவரங்கள் எனப் பலவகை உண்டு. மிருகங்களில் சில நல்லவை, சில தீயவை. புலி போன்ற பயங்கர மிருகங்களும் உண்டு. சில மரங்கள் தேன் என இனிக்கும் கனிகளை தருகின்றன, இன்னும் சில நச்சுப் பழங்களை தருகின்றன. அது போன்றே மனிதர்களில் நல்லவர்கள், தீயவர்கள், புனிதமானவர்கள் என்றெல்லாம் உள்ளார்கள். சிலர் கடவுளை நேசிப்பார்கள், மற்றோர் உலகத்துடன் பிணைந்துள்ளார்கள். "

  • 5 months later...
  • தொடங்கியவர்

.

நால்வகை மனிதர்கள்

" மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். உலகத்தின் சங்கிலிகளில் பிணைந்தவர்கள் ஒரு வகை; விடுதலை தேடுபவர்கள் இன்னொருவகை; விடுதலை அடைந்தோர் மறுவகை; என்றுமே சுதந்திரமான ஆத்மாக்கள் கடைசி வகையைச் சேர்ந்தவர்கள்."

" நாரதர் போன்றோர் என்றுமே சுதந்திரமான ஆத்மாக்களுள் அடங்குவர். அவர்கள் பிறரிற்கு நன்மை செய்யவும், ஆன்மீக உண்மைகளைப் போதிக்கவுமே உலகில் வாழ்கின்றனர். "

" பற்றினால் பிணைந்துள்ளவர்கள் கடவுளை மறந்து உலகியலில் தாண்டு போயுள்ளனர். தவறியும் இவர்கள் கடவுளை நினைப்பதில்லை. "

" விடுதலை தேடுபவர்கள் உலகின் பிணைப்புகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயல்வார்கள். இதில் சிலர் வெற்றியும் பெறுவார்கள். "

" விடுதலை அடைந்த ஆத்மாக்கள் உலகியலிலான காமினி காஞ்சனத்தில் சிக்குண்டு இருப்பதில்லை. அவர்கள் இறைவனின் மலர் பாதங்களையே என்றும் தியானித்துக் கொண்டிருப்பார்கள். "

" ஒரு குளத்தின் மீது வலை ஒன்றை வீசுவோமாயின், சில மீன்கள் என்றுமே இந்த வலையில் அகப்படுவதில்லை. இந்த மீன்கள் என்றுமே சுதந்திரமான ஆத்மாக்களுக்கு உதாரணமானவை. ஆனால் அநேகமான மீன்கள் வலையில் மாட்டிக் கொள்ளும். சில மீன்கள் இந்த வலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும். இவை விடுதலை தேடுபவர்களை போன்றவை. "

" ஆனால் விடுவிக்க முயற்சிக்கும் எல்லா மீன்களும் வெற்றி பெறுவதில்லை. மிகச் சில மீன்கள் வலையில் இருந்து பெரிய சப்தத்துடன் நீருள் பாய்கின்றன. ஆனால் வலையில் மாட்டிக் கொண்ட அநேகம் மீன்கள் தப்பிக்க முயற்சிப்பதும் இல்லை; தப்பிக் கொள்வதும் இல்லை. மாறாக வலையுடன் அவை சேற்றில் ஒளிந்து கொள்ள‌ முயற்சிக்கின்றன.

'நாங்கள் பயப்படத் தேவையில்லை.இங்கு பாதுகாப்பாய் உள்ளது.' என்று நினைத்துக் கொள்கின்றன. மீனவன் அவற்றை வலையுடன் வெளியே இழுக்கப் போகின்றான் என்பதை அவை அறிவதில்லை. இவை உலகத்துடன் பிணைந்துள்ள மனிதர்களுக்கு உதாரணமானவை. "

" காமினி காஞ்சனம் என்னும் சங்கிலிகளினாலேயே இந்த ஆத்மாக்கள் உலகத்துடன் பிணைந்துள்ளன. அவர்களின் கைகளிலும் கால்களிலும் சங்கிலிகள் பிணைந்திருக்கும். காமினியும் காஞ்சனமும் தமக்கு சந்தோசத்தையும் பாதுகாப்பையும் தரும் என்று எண்ணுவார்களேயன்றி, அவை தம்மை சிறைப் படுத்தி அழிக்கின்றன என்று உணரமாட்டார்கள். "

" இப்படியான ஒரு மனிதன் தன் மரணப் படுக்கையில் இருக்கும் போது அவன் மனைவி ' நீ போகப் போகிறாய். எனக்கு ஏதாவது செய்துள்ளாயா ?' என்று கேட்பாள். உலக‌த்துடனான அவன் பிணைப்பு எத்தகையது எனில், மரணப் படுக்கையில் இருந்து கொண்டே 'விளக்கு அதிகம் எரிந்து எண்ணை வீணகின்றது. அதனைக் குறைத்து விடு' என்பான் !!! "

.

Edited by esan

  • தொடங்கியவர்

.

" உலகியலில் உழளும் ஆத்மாக்கள் ஒருபோதும் கடவுளை நினைப்பதேயில்லை. விடுமுறை கிடைக்கும் போது தேவையற்ற கதைகளிலேயே நேரத்தைக் கழிக்கின்றனர், அல்லது பிரியோசனமற்ற ஏதாவது வேலைகளைச் செய்கின்றனர். அவர்களிடம் இதற்கான காரணத்தைக் கேட்டால், 'என்னால் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. ஆகவே வேலி ஒன்று கட்டுகிறேன்' என்பார்கள். நேரம் மித மிஞ்சி இருந்தால் சீட்டாடுவார்கள். "

மண்டபம் மிகவும் அமைதியாக இருந்தது.

நம்பிக்கையின் பலன்

பக்தன்: "ஐயா, அப்படியானால் இந்த உலகியலில் ஈடுபடும் மனிதர்களுக்கு ஒரு வழியுமே இல்லையா ? "

குரு: " அதற்கு வ‌ழி இருக்கவே செய்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அம்மனிதன் சாதுக்களும், புனிதமான மனிதர்களும் உள்ள சூழலில் வாழுதலும், நேரம் கிடைக்கும் போது தனிமையில் கடவுளைத் தியானித்தலும் வேண்டும். மேலும் அவன் உண்மையப் பொய்களில் இருந்து பாகுபடுத்தும் பயிற்சிகளைச் செய்தலும் அவசியம். கடவுளிடம் ' எனக்கு நம்பிக்கையையும் பக்தியையும் தா' என பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒருவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை ஏற்படும் போது அவன் சகலதையும் அடைகின்றான். நம்பிக்கையை விட உயர்வானது எதுவுமேயில்லை. "

.

" உலகியலில் உழளும் ஆத்மாக்கள் ஒருபோதும் கடவுளை நினைப்பதேயில்லை. விடுமுறை கிடைக்கும் போது தேவையற்ற கதைகளிலேயே நேரத்தைக் கழிக்கின்றனர், அல்லது பிரியோசனமற்ற ஏதாவது வேலைகளைச் செய்கின்றனர். அவர்களிடம் இதற்கான காரணத்தைக் கேட்டால், 'என்னால் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. ' என்பார்கள். நேரம் மித மிஞ்சி இருந்தால் சீட்டாடுவார்கள். "

மண்டபம் மிகவும் அமைதியாக இருந்தது.

நம்பிக்கையின் பலன்

பக்தன்: "ஐயா, அப்படியானால் இந்த உலகியலில் ஈடுபடும் மனிதர்களுக்கு ஒரு வழியுமே இல்லையா ? "

குரு: இருக்கவே இருக்கிறது யாழ்களம் ...

ஆதாரம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=90824

அப்பிடீன்னார்!!

  • தொடங்கியவர்

.

(கேதாரிடம்) " நம்பிக்கை எவ்வளவு சக்திவாய்ந்தது என்று கேள்விப்பட்டிருப்பாய். புராணங்களில் சொல்லப்படுவது போல் அந்தப் பிரம்மமே வடிவான இராமன் இலங்கைக்கு செல்வதற்கு கடலின் மேல் பாலம் கட்ட வேண்டியிருந்தது. ஆனால் அனுமாரோ இராமனின் பெயரில் மேல் கொண்ட நம்பிக்கையில் மாத்திரமே ஒரு தாவில் கடலைக் கடந்து அடுத்த கரையை அடைந்தார். அவருக்குப் பாலமே தேவைப்படவில்லை. (எல்லோரும் சிரித்தார்கள்) "

" ஒரு முறை ஒரு மனிதன் கடலைக் கடக்க வேண்டி இருந்தது. விபிஷணன் இராமனின் பெயரை ஒரு இலையில் எழுதி அம்மனிதனின் உடையில் ஒரு மூலையில் முடிந்து அம்மனிதனிடம் ' பயப்படாதே. நம்பிக்கை வைத்துக்கொண்டு நீரின் மேல் நட. ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதே. எப்போது நம்பிக்கையை இழக்கின்றாயோ அக்கணமே நீருள் தாண்டு விடுவாய்.' என்றான். அம்மனிதனும் நீரின் மேல் இலகுவாக நடக்கலானான். அப்போது அவனுக்கு தன் உடையில் என்ன முடிக்கப் பட்டிருக்கின்றது என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அவன் முடிச்சை அவிழ்த்துப் பார்த்த போது அதில் ஒரு இலையில் இராமனின் பெயர் எழுதப்படு இருந்தது. 'என்ன இது ? இராமனின் பெயர் மாத்திரமே உள்ளது! ' என்று எண்ணலானான். அவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்ட அடுத்த கணமே நீருள் தாண்டு போனான். "

  • தொடங்கியவர்

.

ஹோமா பறவையின் கதை

நரேந்திரரைக் காட்டியவாறே " இந்தப் பையனைப் பாருங்கள். இவனுடைய ஒழுக்கமும் அப்படிப்பட்டதே. ஒரு குரும்புக்கார பையன் தன் தந்தையுடன் இருக்கும் போது மிகவும் ஒழுக்கம்மிக்கவனாக இருப்பான். ஆனால் அவர் அற்ற வேளையில் அவன் முற்றத்தில் விளையாடும் போது முற்றிலும் வேறுபட்ட பிறிதொருவனாகக் காணப்படுவான். நரேந்திரனும் அவனைப் போன்றவர்களும் என்றும் சுதந்திரமான ஆத்மாக்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒருபோதும் இந்த உலகத்தில் சிக்குபடுவதில்லை. அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து வரும் போது அவர்களின் உள் மனம் விழிப்படைந்து இறைவனை நாடிச் செல்வார்கள். அவர்கள் இவ்வுலகத்திற்கு வருவதே பிறரிற்கு போதிக்கவே. உலகத்தில் உள்ள எந்த ஒன்றினாலும் அவர்கள் ஈர்க்கப் படுவதில்லை. காமினி காஞ்சனத்துடன் அவர்களுக்கு பிணைப்பு ஏற்படுவதில்லை. "

" வேதங்களில் ஹோமா என்னும் பறவையைப் பற்றிச் சொல்லப் படுகின்றது. அது வானத்தில் மிக உயரத்தில் வசிக்கின்றது. அது அங்கேயே முட்டையும் இடுகின்றது. முட்டைகள் கீழ் நோக்கிக் வீழ்ந்து கொண்டிருக்கும் போது அவற்றில் இருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. அவையும் கீழ் நோக்கி வீழ்கின்றன. குஞ்சுகள் வீழ்ந்து கொண்டிருக்கும் போது அவற்றின் கண்கள் திறக்கின்றது. சிறகுகளும் வளர்கின்றது. கண்கள் திறந்த உடனேயே தான் கீழே வீழ்ந்து கொண்டிருப்பதையும், நிலத்தில் மோதிச் சிதறப்போவதையும் உணர்ந்து அது மேலே தாயை நோக்கிப் பறக்கின்றது. "

அப்போது நரேந்திரர் அறையை விட்டு வெளியேறினார். கேதார், பிராணகிருஷ்ணர், 'ம' மற்றும் பலர் அறையில் இருந்தனர்.

நரேந்திரரைப் புகழ்தல்

குரு: " நரேந்திரன் பாடல், வாத்தியங்களை இசைத்தல், கல்வி மற்றும் எல்லா விசயங்களிலும் சிறந்து விளங்குகின்றான். மற்றொரு நாள் கேதாருடன் விவாதத்தில் ஈடுபட்டும் போது கேதாரின் கருத்தை நார் நாராகக் கிழித்தான். (எல்லோரும் சிரித்தல்)"

(ம விடம்) " ஆங்கிலத்தில் காரண காரியத்தைப் பற்றிப் புத்தகங்கள் உள்ளதா ? "

ம : " ஆம். ஐயா. அதனைத் தர்க்கவியல்** என்பார்கள்."

குரு : " அதனைப் பற்றி எனக்கு விளக்குவாயா ? "

ம : சற்று கூச்சத்துடன், " நூலின் ஒரு பகுதி, பொதுவான விசயங்களில் இருந்து குறிப்பிட்ட ஒன்றை நோக்கி*** எப்படிப் போவதென்பதை விளக்குகின்றது. உதாரணமாக, எல்லா மனிதர்களும் இறப்புடையவர்கள். கல்விமான்களும் மனிதர்கள். ஆகவே அவர்களும் இறப்புடையவர்கள். "

" நூலின் மற்றைய பகுதி எப்படி குறிப்பிட்ட ஒரு விசயத்தில் இருந்து பொதுவான ஒரு அம்சத்தைக்**** கண்டுபிடிப்பதென்பதை விளக்குகின்றது. உதாரணமாக, இந்தக் காகம் கறுப்பு. அந்தக் காகமும் கறுப்பு. நாங்கள் எல்லா இடத்திலும் பார்க்கும் காகங்களும் கறுப்பு. ஆகவே எல்லாக் காகங்களும் கறுப்பு. இந்த முறை மூலம் முடிவுகள் எடுக்கப்படும் போது தவறுகள் ஏற்படலாம். சில நாடுகளில் வெள்ளைக் காகங்கள் இருக்கக் கூடும். இன்னுமோர் உதாரணம், மழை பெய்கின்றது, அங்கே முகில் இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது. ஆகவே மழை முகிலில் இருந்துதான் பெய்கின்றது. மற்றுமோர் உதாரணம், இந்த மனிதனிடம் முற்பத்தியிரண்டு பற்கள் உள்ளன. அந்த மனிதனிடமும் முற்பத்தியிரண்டு பற்கள் உள்ளன. நாங்கள் பார்க்கும் எல்லா மனிதனிதர்களிடமும் முற்ப‌த்தியிரண்டு பற்கள் உள்ளன. ஆகவே மனிதர்களுக்கு முற்ப‌த்தியிரண்டு பற்கள் உள்ளன. ஆங்கிலேய தர்க்கவியல் இப்படிக், கருத்து ஒடுக்கங்களிலும் கருத்து விரிவாக்கங்களிலும் தொடர்புடையது. "

இராமகிருஷ்ணர் இந்த வார்த்தைகளை காதில் விழுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர் தன்னை மறந்த நிலையில் இருந்தார். அதனால் சம்பாசனை மேற்கொண்டு தொடரவில்லை.

பக்தர்கள் கோவில் தோட்டத்தில் உலாவச் சென்றார்கள். "ம" பஞ்சவடியை நோக்கிச் சென்றார். அப்போது மாலை ஐந்து மணியளவில் இருந்தது. சற்று நேரத்தின் பின் குருவின் அறைக்கு மீண்டார். அங்கே வடக்கு நோக்கியிருந்த ஓடையில் அவர் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டார்.

--------------------------------------------------------------------------------------------

தர்க்கவியல் ** Logic

பொதுவான விசயங்களில் இருந்து குறிப்பிட்ட ஒன்றை நோக்கி *** from the general to the particular

குறிப்பிட்ட ஒரு விசயத்தில் இருந்து பொதுவான ஒரு அம்சத்தை **** from the particular to the general

  • 1 year later...
  • தொடங்கியவர்

l.jpg

ஸ்ரீ இராமகிருஷ்ணர் அறை

Sri_Ramkrishna.jpg

ஸ்ரீ இராமகிருஷ்ணர் பரவச நிலையில், விழாமல் தாங்கப்படுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.