Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல் ‐ இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல் ‐ இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு ‐ ஜீரிஎன் செய்தியாளர்

10 November 10 09:02 am (BST)

யாழ் அரச அதிபருக்கு இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொலை அச்சுறுத்தலை அடுத்தே இந்த ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது வாசஸ்தலம் அமைந்திருக்கும் பழைய பூங்காவிற்கு படையினரின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளியின் பின்னர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ள இமெல்டா சுகுமார் தனது கடமைகளை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ் மாவட்ட தரப்புகள் இதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளன.

இதனிடையே சர்ச்சைக்குரிய வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவிற்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் அரச உயர்மட்டத்தினர் அவர் மீது மனச் கசப்பு அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இமெல்டா சுகுமாhர் இடமாற்றம் செய்யப்படலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் செயலாளரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ இது தொடர்பாக நேரடியாக தொலைபேசி மூலம் இமெல்டா சுகுமாருடன் கதைத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இமெல்டா சுகுமார் வாக்குமூலம் அளித்திருந்தார். இது தொடர்பிலேயே அரச உயர்மட்டம் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக அவர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாகவும் உள்ளுர் மக்களிடையே பலத்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பாக அவரது கருத்துக்கள் பல்வேறு தரப்புகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதும் அதனையடுத்து அவருக்கான ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=32267&cat=1

யாழ். அரசாங்க அதிபரின் சாட்சியம் அதிர்ச்சியுடன் வேதனையை தருகிறது: எஸ்.சிறிதரன் _

வீரகேசரி நாளேடு 11/10/2010 8:14:17 AM

2009 தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அரச அதிபர் இமெல்டா சுகுமாரினால் 2009 மே மாதம் 18 ஆம் திகதிவரையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு நேரில் கண்டதைப் போல் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்க முடியும். இவ்வாறு பொய்களைக் கூறுகின்ற அரச அதிகாரிகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யான எஸ்.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதார். சிறிதரன் எம்.பி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

யாழ் குடாநாடாடில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதாகவும் அதில் தற்போதைக்கு மக்கள் மீளக்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர்களும் இராணுவ அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். குடாநாட்டில் அதியுர் பாதுகாப்பு வலயம் என்ற எந்தவொரு இடமும் இல்லையென கூறுகின்றார்.

அண்மையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அவர் பொய்களை தாராளமாகவே கூறியுள்ளார். முல்லைத்தீவை விட்டு தான் 2009 தை மாதம் வெளியேறிவிட்டதாக ஆணைக்குழு முன்னிலையில் காட்சியமளித்த அரசு அதிபர் அதன் பின்னர் மே 18 ஆம் திகதிவரையிலான சம்பவங்கள் தொடர்பிலும் நேரில் கண்டதைப்போல் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் பொது மக்களை புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவங்களை எப்படி நேரில் கண்டவரைப்போல் சாட்சியளிக்க முடியும்.

இவரது சாட்சியம் எமக்கு அதிர்ச்சியை மட்டுமல்லாது வேதனையையும் தருகின்றது. இவர் இவ்வாறு பொய் கூறுவது யாருக்காக. இவரைப்போன்ற அரச அதிகாரிகளால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது என்றார்.

ஆக அவர் சொன்ன சாட்சியம் பொய் என இமெல்டாவும் , பசிலும் நிரூபிதுள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.