Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ‐ சிவிகே சிவஞானம்‐GTNசெய்தியாளர்

Featured Replies

ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ‐ சிவிகே சிவஞானம்‐GTNசெய்தியாளர்

யுத்தம் என்பது முடிவல்ல. எங்களது அபிலாசைகள் என்றுமே முடிவற்றதாகும். யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் மூலம் எமது அபிலாசைகளும் முடிவிற்கு வந்து விட்டதாக அர்த்தப்பட மாட்டாது எனத் தெரிவித்தார் யாழ் மாவட்ட அரசியல் பிரமுகரும் அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதியுமான சிவிகே சிவஞானம். இன்றைய தினம் யாழ் செயலகத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னதாக வாக்குமூலம் அளித்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அந்தப் போராட்டம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் சிவிகே சிவஞானம் தெரிவித்தார்.

அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு முன்னதாக தமிழ் மக்களுக்கு நல்லதொரு கட்டுமாணம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தக் கட்டுமாணம் ஏற்படுத்தப்பட்டால் அடிப்படைப்பிரச்சனைகள் தானாகவே தீர்ந்து விடும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் படித்திருக்க வேண்டிய முக்கிய பாடம் கடந்த 60 வருடங்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

தேசிய இனம் என்பதனை அங்கீகரித்து அவர்கள் தமது அலுவல்களை தாங்களே பார்த்துக் கொள்வதற்கான கட்டுமாணம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

தந்தை செல்வா போன்ற மிதவாத தலைவர்கள் முன்னர் மேற்கொண்டிருந்த எந்தவொரு பேச்சுவார்த்தைகளோ ஒப்பந்தங்களோ எதுவுமே பலனளித்திருக்கவில்லை. அதேபோன்று அமர்தலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழி;தெறியப்பட்டன.இதைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிவுற்றுள்ளது. யுத்த நிறுத்தத்தின் போது இரு தரப்பினரும் ஒவ்வொரு தரப்பினர் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அரசு புலிகளை பலவீனப்படுத்துவதிலேயே முன்னின்று செயற்பட்டது என சிவிகே சிவஞானம் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக நீங்கள் எவருமே தமிழ் மக்களாகிய எம்மை நம்பவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னதாக யாழ் செயலகத்தில் நடைபெற்ற வாக்குமூல நிகழ்வில் முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டு பின்னர் விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக அந்தப் பதவியை பொறுப்பேற்க முடியாது போயிருந்த ராஜன் கூல் மற்றும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை சிவிகே சிவஞானம், பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலரும் அங்கு வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதனிடையே இந்நிகழ்வை அவதானிப்பதற்காக அமெரிக்க தூதரகத்தின் செயலாளர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் இன்று நேரடியாக பிரசன்னமாகியிருந்தார். அவருடன் பத்மினி எனப்படும் தமிழ்ப் பெண் அதிகாரி ஒருவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தமை அனைவரதும் கவனத்தை பெற்றிருந்தது.

இதன் பின்னர் நேற்றைய தினம் தவற விடப்பட்டிருந்த குருநகர்ப்பகுதியில் வாக்குமூலங்கள் பதிவு செய்யும் பணி இடம்பெற்றது. இலங்கை ராதணுவத்தின் 512 வது படைப்பிரிவினரால் தமது வீடுகளில் வைத்தே கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்கள் மற்றும் கணவன்மார் தொடர்பில் தாய்மார் மற்றும் மனைவிமார் இன்றும் பகிரங்க வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.

இன்று காலை வட்டுக்கோட்டைப்பகுதியிலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யும் நடவடிக்கைள் இடம்பெற்றது. நாளைய தினம் வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி பகுதிகளில் இந்த வாக்குமூலங்கள் பதியும் பணி ஆரம்பமாகவுள்ளது.

My link

"இதனிடையே இந்நிகழ்வை அவதானிப்பதற்காக அமெரிக்க தூதரகத்தின் செயலாளர் மட்டத்திலான அதிகாரி ஒருவர் இன்று நேரடியாக பிரசன்னமாகியிருந்தார்."

வரும் தை மாதம் சூடானில் ( ஆபிரிக்கவிலேயே பெரிய நாடு) ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதன் முடிவில் ஐம்பது வீதம் + ஒரு வாக்கு கிடைக்கும் பொழுது தெற்கு சூடான் தனியே பிரிந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

Southern Sudanese independence referendum, 2011: http://en.wikipedia.org/wiki/Southern_Sudanese_independence_referendum,_2011

இதற்கு தற்போதைய சூடானின் அரசு இணங்கியதுக்கு ஒரு காரணம் நடந்த இன படுகொலைகளும் அதை விசாரித்து அதன் மூலம் அந்த நாட்டு அதிபர் யுத்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதும் ஒரு காரணம்.இதற்கு பின்னால் அமெரிக்காவும் உள்ளது.

எனவே நாமும் முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை ஐ. நா. க்கு மார்கழி 15 முன் அனுப்பி வைப்போம். இது ஒரு மக்கள் வாக்கெடுப்புக்கும் இட்டுச்செல்லும் என நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.