Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களின் அட்டகாசத்தில் யாழ் நிலம் பாழாகிறது: குமுதம் இதழில் தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் அட்டகாசத்தில் யாழ் நிலம் பாழாகிறது: குமுதம் இதழில் தீபச்செல்வன்

[ ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2010, 01:31.40 PM GMT +05:30 ]

ஈழப் போர் தொடங்கிய காலத்தில் அதாவது 30 வருடங்களுக்கு முன்னர் செயழிலந்த யாழ் புகையிர வழிகளிலும் புகையிரத நிலைய அலுவலகத்தின் கட்டிடங்களிலும் சில மாதங்களின் முன்னர் தமிழ் மக்கள் சிலர் இருக்க இடமின்றி தங்கியிருந்தார்கள்.

யாழ் நகரத்தின் மையத்தில் இருக்கிற புகையிரத நிலையம் வடக்கின் புகையிரத சேவையின் வீழ்ச்சியின் அடையாளமாகவும் இனப்பிரச்சினையால் ஏற்பட்ட மனமுறிவின் அடையாளமாகவும் இருந்து வந்தது. அந்த புகையிர நிலையத்தில் வைத்துதான் யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினர் சோதனைகளுக்கு உட்படுத்தி வெளியிடங்களுக்கு அனுமதிப்பார்கள்.

புகையிரத வழிகளில் தங்கியிருந்த பல குடும்பங்களை சந்தித்திருக்கிறேன். உடைந்த புகையிர வழிகளில் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். விளையாடிக் கொண்டிருப்பார்கள். புகையிரத வழிகளில் கொட்டப்படும் குப்பைகளை பொறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அகதி நிறம் என்பதைப்போல அவர்களில் உடைகள் கிழிந்து மிகவும் அசுத்தமாக இருந்தன. புகையிரத வழிகளில் தங்கியிருந்த மக்களை வெளியேற வேண்டும் என்று புகையிரத திணைக்களம் தொடர்ந்து காவல்துறை ஊடாக வற்புறுத்தி வந்தது. வற்புறுத்தல் தாங்க முடியாத மக்கள் பலர் வேறு தெருக்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் சென்று தங்கியிருக்கிறார்கள். ஏனைய மக்கள் தொடர்ந்தும் அந்த வழியிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த மக்கள் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்தவர்கள். 1980களின் இறுதிக்காலங்களில் சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்து வந்து பலவேறு இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்து விட்டார்கள். யாழ்ப்பாணத்தில் பாழடைந்த நிலத்தை போல சனங்களற்றிருக்கிற வலிகாமம் வடக்கின் சில இடங்களுக்கு போயிருக்கிறேன். ஒரு காலத்தில் இங்கு சனங்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லும் சாட்சிகளை காலமும் அழிவும் மூடிக் கொண்டிருக்கிற போதும் அவை வெளித் தெரிகின்றன. கீரிமலை, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, கட்டுவன் போன்ற பல பகுதிகள் இப்படி அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தை சேர்ந்த எங்கள் மக்கள் அந்த இடங்களுக்கு சென்று தங்கள் நிலத்தில் காலை ஒருமுறை வைப்பதற்குகூட அனுமதி இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக ஊர் பற்றிய கனவுடன் தெருக்களில் உறையும் யாழ் நில மக்களின் அவலத்தை மறைக்கும் விதமாக அண்மையில் ஒரு நாடகம் நிகழ்த்தப்பட்டது.

யாழ் புகையிரத நிலையத்திற்கு வந்த மூந்நூறு வரையிலான சிங்கள மக்கள் நாங்களும் யாழ்ப்பாணம்தான்., எங்களிடமும் ஆவணங்கள் உள்ளன., எங்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்று வசனங்களை பேசத் தொடங்கினார்கள். ‘தமிழ் மக்கள் மட்டுமல்ல அகதிகள் எங்கள் சிங்கள மக்களும் அகதிகள்தான்’ என்று அரச சார்பாக நேரடியாக அந்த நாடகத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தமிழர் நிலத்தை குறிவைக்கும் சிங்கள பேரினவாத எண்ணத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த நாடகம் வாழ் நிலத்திற்காக போராடிய ஈழத் தமிழ் மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்த மக்களைப் பார்த்தால் அகதிகளைப்போல தெரியவில்லை. இவர்கள் போலி அகதிகளாக இருக்கிறார்கள். யாரைப் பார்த்தாலும் குளிர்ச்சியான ஆவணங்களை கைகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்கள். யாராவது ஊடகவியளாலர்கள் வந்தால் அவர்களுக்கு மிகவும் சரளமாக தெளிவாக சொல்லும் பேச்சாளர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை புகைப்படம் எடுக்கச் சொல்கிறார்கள். தங்களைப் பற்றிய செய்திகளும் படங்களும் யாழ்ப்பாண பத்திரிகையின் முன்பக்கங்களில் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் வந்திறங்கிய குளிர் பேரூந்துகள் இரண்டு மிக அருகாக நிற்கின்றன. வெளியில் போய் வருவதற்கு ஆட்டோக்கள் நிற்கின்றன.

நாங்களும் தமிழர்களைப்போலவே இருக்கிறோம் என்றும் நாங்கள் தமிழ் பேசுகிறோம் என்றும் அந்த மக்கள் சொன்னார்கள். எங்களாட்கள் சிலர் ராஜா திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற எந்திரன் படம் பார்க்கச் சென்று விட்டார்கள் என்றும் சொன்னார்கள். நாங்கள் பேசுறதே தமிழ்தானே என்று விட்டு தமக்குள் சிங்களத்திற்குள் பேசிப் பேசி வருபவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஜனாதிபதி உட்பட தமிழ் மக்களுக்கு துயரம் விளைவித்த நிறையப் பேர் தமிழை பேசுகிறார்கள். ஜனாதிபதி ஐ.நா வரைச் சென்று தமிழை பாடமாக்கிப் பேசுகிறார். ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க தமிழ் பேச முயற்சிக்கிறார். ரணில் முதல் பலர் தமிழ் பேச இப்பொழுது முயற்சிக்கிறார்கள். எங்கள் உரிமைக்கு மட்டுமன்றி தமிழ் மக்கள் உரிமைக்காவும் தாங்கள் போராடப் போவதாக அந்த மக்கள் சொல்வதைத் தவிர கேலிக்குரியது வேறென்ன?

தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் ரணிலும் ஜே.வி.பியும் தமிழ் மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் அழித்தவர்கள். தமிழர்களின் கோரிக்கையை நிராகரித்து தமிழ் மக்களுக்கு என்று தீர்வு எதுவும் தேவையில்லை என்கிறார்கள். தமிழ் மக்களை காப்பற்றவே மனிதாபிமான யுத்தம் நடத்தியதாக சொல்லும் ஜனாதிபதியின் சிந்தனையைப்போல இந்த மக்களும் இப்படி குறிப்பிட்டிருக்கலாம். நிலத்தையும் வளத்தையும் கொள்ளையடித்து தமிழர்கள் தனித்துவமாக வாழக்கூடாது அவர்களை ஒடுக்க வேண்டும் என்று ஊடறுக்க நினைக்கிற பேரினவாதப்போக்கு இப்படி தமிழ் மக்கள்மீது பல நாடகங்களை நிகழ்த்த முயற்சிக்கிறது. இந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கே பாராளமன்றத்தில் பேசியிருந்தார். தங்களுக்குள் அதிகாரத்தை பகிர்வதில் சிங்களக் கட்சிகள் மோதிக் கொள்கிற பொழுதும் தமிழர் தாயக அழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றை ஒன்று முந்தி செயற்படுகின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ திடீரென எந்த அறிவிப்புமின்றி தரைவழியாக யாழ்ப்பாணம் வந்தார். மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வன்னியில் இடம்பெயர்தலைந்ததையும் நில ஆக்கரமிப்பினால் அல்லலுறும் பல்லாயிரக்கணக்கான கிழக்கு மக்களின் அவலத்தையும் 90இன் பின்னர் தாயகம் பிரிந்த மூஸ்லீம் மக்களையும் சந்தித்து அவர்களைப் பார்வையிடாத அவர்களுடன் பேசாத மீள்குடியேற்ற அமைச்சர் இந்த மூந்நூறு மக்கள் விடயத்தில் யாழ்ப்பாணத்திற்கு நடந்து வந்து சேரும் அளவில் அக்கறையாய் இருந்திருக்கிறார். இந்த மக்கள் வாழ்ந்ததாய் தன்னிடம் சொல்லியுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களின் ஆவணங்களை வாங்கி ஆராய்ச்சி செய்யப் போவதாகவும் அங்கு குறிப்பிட்டார். தமிழர் நிலத்தை பறித்தெடுப்போம் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் அமைச்சர். யாழ்ப்பாணத்தில் எண்பதுகளின் முன்னர் போக்கரி, உணவகம் போன்றவற்றை சிங்கள மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அப்பொழுது குறித்த பகுதிகளில் வாடகை சீடுகளில் தங்கியிருந்திருக்கிறார்கள்.

வாடகை வீடுகளில் தங்கிய மக்கள் இன்று தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் காணி வேண்டும் என்கிறார்கள். அரச காணிகளை தர வேண்டும் என்று நிற்கிறார்கள். தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழகில் பல மக்கள் காணியின்றியிருக்கிறார்கள். வறுமை மற்றும் போர் காரணமாக காணி வாங்க முடியாத நிலையில் எங்கள் மக்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் தெற்கில் பல வதிகளுடன் வாய்ப்புக்களுடன் அழகான இடங்களுடன் வாழ்ந்த இந்த மக்கள் ஏன் வடக்கில் யாழ்ப்பாணத்தில் காணி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பதை தெளிவாக யாராலும் புரிந்து கொள்ள முடியும். தமிழர்களின் இராசதானிகளில் முக்கியமான யாழ் இராசதானி நிலத்தை குறிவைத்து வந்திருக்கிறார்கள். யாழ் நிலத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கிலும் அரசியல் அதிகாரம் நிர்வாக அதிகாரம் போன்வற்றை கொள்ளை அடிக்கும் நில அபகரிப்பு நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அண்மையில் யாழ் நூலகத்தை பார்வையிட 36 பேரூந்துகளில் சிங்களப் பிரயாணிகள் வந்துள்ளனர். அன்று நூலகத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றதனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பை மீறி அறிவிப்பு பதாகைகளை கிழித்தெறிந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று சகலரையும் தள்ளி விட்டு இறுதியில் யாழ் நூலகத்திற்குள் அந்தப் பிரயாணிகள் உள்நுழைந்தார்கள். எங்கள் மக்கள் கோயில்களுக்கும் வீடுகளுக்கும் கடலுக்கும் சில இடங்களும் உள்நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் மீறி சிங்கள மக்கள் உடைந்தெறிந்து உள்ளே நுழைகிறார்கள்.

யுத்தத்தினால் உங்கள் அரசன் வடக்கு கிழக்கை கைப்பற்றி விட்டான். உங்களை பாதுகாக்க சுற்றிச் சுற்றி படைகள் நிற்கின்றன என்ற யுத்த வெற்றிச் சுவை ஊட்டப்பட்ட இந்த மக்கள் எதையும் தாங்கள் செய்யலாம். எங்கும் போய் வாழலாம் என்று நினைக்கிறார்கள். இதை இந்த மக்களிடம் ஊட்டியவர்கள் சிங்களப் பேரினவாதக் கட்சிகள். ஆட்சியில் உள்ள கட்சியோ, ஐக்கியத் தேசியக் கட்சியோ, ஜே.வி.பியோ இதைத்தானே சொல்கிறது. யுத்தம் வெடித்த தருணங்களை ஞாபகப்படுத்தும் நூலகம் ஒரு வெள்ளை அடிக்கப்பட்ட அழிவின் கல்லறை என்பதை இந்த சம்பவங்களும் அணுகுமுறைகளும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன. தமிழர் நிலத்தை கைப்பற்றும் ஆக்கிரமிக்கும் இந்த நடவடிக்கைகள் யாழ் நிலத்திலும் வெளிப்படையாக மையம் கொள்கின்றன.

வன்னியில் தமிழர் நிலம் பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் இராணுவ குடியிருப்புக்களாக அபகரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்படுகின்றன. பொம்மைவெளிகளில் குப்பை பொறுக்கும் குழந்தைகளும் யுத்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து விரட்டப்பட்ட மக்களும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்நிய தலையீடுகளும் வணிக ஒப்பந்தங்களும் அதிகரித்து அபாயம் உள்ள யாழ் நிலம் பாழாகிக் கொண்டிருக்கிறது. நிலக் கொள்ளைக்காரர்கள் வந்துறங்கி கொண்டிருக்கிறார்கள். பல்வேறு வடிவில் பல்வேறு பின்னணிகளுடன் நில அபகரிப்பை மீண்டும் நடத்திய ஈழப்பிரச்சினையின் தொடக்க புள்ளிக்கு ஈழத்தை தள்ளுகிறார்கள்.

தீபச்செல்வன்

நன்றி - குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் வெற்றி எப்.எம்.. தோழர் லோசன் அவர்களையே பிளாக் ஸ்பாட்டில் புலிகளூக்கு ஆதரவாக எழுதினார் என்று ஒரு வாரம் களிதின்ன வைத்தார்கள் ... போக ஈழத்தில் இருக்கும் தோழர்கள் இந்த இணைய தள பயன்பாட்டை குறைந்த்து கொள்ள வேணும் ... சகுனி வழியை க்டைபிடிக்க வேணும் (அல்லது ) புனை பெயரில் வரவேணும் :lol: புனை பெயரில் ராஜபக்சே அந்த பாடகிய வளைத்த கதை வரை தெளிவாக ரொம்ப டீட்யிலாக எழுதலாம் ... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் பத்திரிகையில் கறுப்பி இணைத்த தீபச்செல்வனின் ஆக்கம் சில மாற்றங்களுடன் வந்திருக்கிறது. மேலே கறுப்பி இணைத்த ஆக்கத்தில் இருந்தவை குமுதம் பத்திரிகையில் வரவில்லை.

64371838.jpg

விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான யுத்தம் காரணமாக,தமிழ் மக்கள் தங்கள் சொந்த வீடுகளையும் விவசாய நிலங்களையும் ஊர்களையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு அகதிகளாக வெளியேறி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது.

யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், சனங்களற்று அனாதரவாக கிடக்கும் அந்த தமிழர் நிலங்களை,தங்களுக்குச் சொந்தமானது என சிங்களர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களைப் பின்னணியில் இருந்து இயக்குவதுடன்,அப்பகுதிகளில் சிங்களர்களை மீள் குடியேற்றும் வேலையையும் சத்தமில்லாமல் செய்து வருகிறது சிங்கள அரசு. பறிபோகும் தமிழர்களின் நிலங்கள் பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட்.

‘ஈழப் போர் தொடங்கிய காலத்திலேயே, அதாவது 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இயங்காமல் இருக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய அலுவலகக் கட்டிடங்களிலும் தண்டவாளப் பாதைகளிலும் சில மாதங்களுக்கு முன்னர் வரை இருக்க இடமில்லாத ஏராளமான தமிழ் மக்கள் தங்கியிருந்தார்கள். உடைந்த தண்டவாளப் பாதைகளில் இவர்களது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அகதி நிறம் என்பதைப் போல அவர்களின் உடைகள் கிழிந்து மிகவும் அசுத்தமாக இருக்கும். கடந்த ஒரு வருடமாகவே, ரயில் பாதைகளில் தங்கியிருந்த இந்த மக்களை வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து காவல்துறை வற்புறுத்தி வந்தது. வற்புறுத்தல் தாங்க முடியாமல் அந்த மக்களில் பலர் யாழ்ப்பாணத் தெருக்களுக்கும் உறவினர் வீடுகளுக்கும் இடம்பெயர்ந்தார்கள். அதற்கும் வழியில்லாத மக்கள் தொடர்ந்தும் அந்த வழியிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

33ap.jpg

இப்படி நாடோடிகளாக வாழும் இந்த மக்கள் ஒரு காலத்தில் சொந்த வீடுகள், விவசாய நிலங்கள் என வசதியாக வாழ்ந்தவர்கள். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்தவர்கள். 1980-களின் இறுதிக் காலங்களில் யுத்தம் காரணமாக சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்தார்கள். அதற்குப் பிறகும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்து விரட்டிக்கொண்டே இருந்தது.இப்படி பல்வேறு இடப்பெயர்வுகளுக்கு முகம் கொடுத்து விட்டார்கள். போர் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் இப்போது மீண்டும் இடம்பெயர வேண்டிய சூழல்.

என்றாவது ஒருநாள், எல்லாம் முடிவுக்கு வரும்; நம் சொந்த ஊருக்குத் திரும்புவோம் என்று இருபது வருடங்களுக்கு மேலாக ஊர் பற்றிய கனவுடன் தெருக்களில் உறையும் இந்த மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஒரு நாடகம்.

இலங்கையின் தெற்குப் பகுதியில் இருந்து, சமீபத்தில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வந்த சிங்கள மக்கள்கூட்டம் ‘எங்கள் ஊரும் யாழ்ப்பாணம் தான்; எங்களிடமும் ஆவணங்கள் உள்ளன; எங்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள்’ என்று பேசத் தொடங்கினார்கள். ‘தமிழ் மக்கள் மட்டுமல்ல, எங்கள் சிங்கள மக்களும் அகதிகள்தான்’ என்று அரசு சார்பாக நேரடியாக இந்த நாடகத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த போலி அகதிகள் ஜோடிக்கப்பட்ட நிறைய ஆவணங்களை கைகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்கள்.தங்களைப் பற்றிய செய்திகளும் படங்களும் யாழ்ப்பாண பத்திரிகையின் முன் பக்கங்களில் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.அவர்கள் வந்திறங்கிய குளிர் பேருந்துகள் யாழ்ப்பாணத் தெருக்களில் பல நாட்களாக நிற்கின்றன.

இந்த சிங்கள மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கே பாராளுமன்றத்தில் பேசினார். மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ உடனே யாழ்ப்பாணம் வந்தார்.

மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வன்னியில் இடம்பெயர்ந் தலைந்ததையும்,நில ஆக்கிரமிப்பினால் அல்லலுறும் பல்லாயிரக்-கணக்கான கிழக்கு மக்களின் அவலத்தையும், 90-களின் பின்னர் தாயகம் பிரிந்த முஸ்லிம் மக்களையும் சந்தித்து அவர்களுடன் மீள்குடியேற்றம் பற்றிப் பேசாத அமைச்சர், இந்த முந்நூறு மக்கள் விடயத்தில் அவசரமாக யாழ்ப்பாணத்திற்கு வருகிறார். தமிழர் நிலத்தைப் பறித்தெடுப்போம் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் அமைச்சர்.

ஏற்கெனவே, வன்னியில் தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு ராணுவ குடியிருப்புக்களாகவும் யுத்த உயர் பாதுகாப்பு வளையங் களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்னும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் வலிகாமம் மக்களும் இனி சேர்ந்து அலைவார்கள்.

இவர்கள் வாழ்க்கை எப்போது விடியும்?.

- யாழ்ப்பாணத்திலிருந்து தீபச்செல்வன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.