Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் மந்தமான போக்கு

Featured Replies

எல்லா நாடுகளும் ஆயுதங்களை வைத்திருப்பதனாலேயே யுத்தம் ஏற்படாமல் இருக்கிறது”. இவ்வாறு சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனின் பிரதமராக இருந்த மாக்கிரட் தட்சர் கூறியிருந்தார்.

அவர் கூறிய செய்தியைப் பத்திரிகையில் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. நாடுகள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு தட்சர் ஊக்குவிக்கின்றாரா? என்ற கேள்வி நம் சிறுவயதில் ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லையாயினும் தட்சரின் இந்தக் கூற்றின் நியாயத்தை – யதார்த்தத்தைத் தற்போது உணர முடிகிறது. எல்லா நாடுகளும் ஆயுத வல்லமையைக் கொண்டிருக்கும் போது யுத்தம் என்பது இல்லாது போகும். ஒருவரிடம் ஆயுதம், இன்னொருவர் நிராயுதம் என்றால் அங்கு ஒரு தரப்பின் பலம் ஓங்கும்.

நிராயுதபாணி ஆயுததாரிக்கு என்றும் அஞ்சுபவனாக இருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. இது உலக நாடுகளுக்குப் பொருந்தும் என்பதனாலேயே பலமுடையவனிடம் இருந்து பலவீனத்தைக் காப்பதற்கு அல்லது கொடுமையிலிருந்து நல்லதை மீட்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையை உலக நாடுகள் ஸ்தாபித்தன.

இரண்டாம் உலகப் போர் கூட, ஆயுத பலத்தின் ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்டது எனினும், வல்லமை பொருந்திய நாடுகளும் இரண்டாம் உலகப் போரில் அடி வேண்டியமையால் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தை வேண்டி நின்றன.

அப்படியானால் உலகில் உள்நாட்டிலோ அல்லது நாடுகளுக்கிடையிலோ யுத்தம் ஏற்படாமல் தடுக்கும் தார்மீகப் பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உண்டு. எனினும் அந்தப் பணியை அந்த அமைப்பு செம்மையாகச் செய்கிறதா? எனக் கேள்வி எழுப்பினால், மெளனத்தைத் தவிர வேறு பதிலை எதிர்பார்க்க முடியாது.

இலங்கையில் கூட ஐக்கிய நாடுகள் சபையின் போக்கு ஆரோக்கியமானதாக இல்லையென்றே கூற வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்.

இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க ஐ.நா.சபைச் செயலாளர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அவரால் எதுவும் செய்ய முடிய வில்லை.

ஏன் அப்படி? இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பான் கீ மூன் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமற் போனமைக்கு ஐ.நா.சபையின் பலவீனமா? அல்லது பான் கீ மூனின் தனிப்பட்ட பலவீனமா? காரணம் என்பது பலத்த கேள்வி. எதுவாயினும் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதில் ஐ.நா.செயலாளரின் ஆர்வம் எப்போதும் மந்தமாகவே இருந்து வருகிறது.

சர்வதேச ஊடகங்கள் கொடுக்கின்ற அழுத்தத்தினாலேயே ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் தலையிடும் அளவில் நிலைமை இருப்பது பெரும் துரதிர்ஷ்டம். அந்த ஊடகங்களும் இல்லையயன்றால் நிலைமை எப்படி ஆகும்? ஆக, ஐ.நா.சபை அமைதியை ஏற்படுத்தும் அமைப்பாக இருந்தால், இலங்கையில் அதனைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இலங்கை முழுவதற்கும் நன்மை செய்வதாக அமையும்.

/meenakam.com

  • கருத்துக்கள உறவுகள்

UN panel can only testify before LLRC

[TamilNet, Thursday, 30 December 2010, 12:47 GMT]

The UN panel set to advice the Secretary General Ban ki Moon on war crimes in Sri Lanka, can only testify before the LLRC set by the war crimes accused Rajapaksa government. "The U.N. panel will be given visas only to testify before the LLRC if they request, and not for any investigations [...] This is the government stance and there is no change in that. The U.N. has so far not requested visa in this regard," said the spokesman of Colombo, Keheliya Rambukwella, speaking to media in Colombo Thursday. However, informed circles said that the UN establishment, sharing mutual interests with Colombo, may make behind the scene arrangements for the UN panel to meet the LLRC outside the island to exchange notes and decide strategies.

The last stages of the war in Tamil Eelam in the island took the lives of maximum 40,000 people in a short span of time, according to a former official in charge of the UN activities in Colombo during the war.

But, during the war, the UN Security Council preferred to discuss the affairs of the island only in the ‘backrooms’ of the Security Council Sessions.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.