Jump to content

இந்து என்றால் என்ன? ஒரு பகுப்பாய்வு


Recommended Posts

பதியப்பட்டது

இந்து என்ற சொல்லானது, அச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் உட்படப் பெரும்பான்மையினருக்கு, உண்மையில், பெரும் குழப்பத்தைத்தான்; ஏற்படுத்தி வருகின்றது. இந்தச் சொல்லானது இன்று இந்தியா எனக் கூறப்படும் தரைப் பகுதி மக்களால் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதா, அப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால், அது என்ன பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்து என்ற சொல்லானது ஏதாவது சமயத்தைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதா, பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தச் சமயம் எந்தக் கடவுளை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருந்தது, அதன் சிந்தாந்தம் என்ன, இந்து என்ற சொல்லானது பண்டைக் காலத்தில் ஒரு சமயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்திராவிட்டால், அச் சொல்லானது சமயத்தைக் குறிக்க எப்போது புகுத்தப்பட்டது, யாiரால் புகுத்தப்பட்டது எனப் பல கேள்விகள் எழுகின்றன.

துரதிஷ்டவசமாக, இந்து என்ற சொல் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும், விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இன்று வரை எவராலும் செய்யப்படவில்லை.

அதுமாத்திரம் அல்ல. இந்து சமயம் (Hinduism) என்பது பற்றிப் பல நூறு நூல்களும், பல நூறு ஆய்வுக் கட்டுரைகளும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு வந்துள்ளன, இன்றும் எழுதப்படுகின்றன. ஆனால், இந்து என்ற சொல் என்ன, அது எப்போது முதல் பாவனையில் வந்திருந்தது, அது சமயத்துடன் எப்படி இணைகிறது என்பவைகள் பற்றி எவரும் விஞ்ஞான ரீதியாக ஆராயாது, நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளதைத்தான் காணமுடிகிறது.

இது மாத்திரமல்ல. இன்று போதனையிலும், பிரசங்கங்களிலும் ஈடுபட்டு வருபவர்களும், ஊடகங்களும், இந்து, இந்து சமயம், இந்துக் கலாசாரம், என்ற பதங்களை யெல்லாம் பயன்படுத்தும்போதும், இந்து என்பதற்கான தெளிவான விளக்கம் அவைகளிடமிருந்து பெறமுடியாதுதான் உள்ளது.

இன்று இந்து நாகரிகம் என்ற பாடமானது பல்கலைக் கழகம் வரை கற்பிக்கப்பட்டு, பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்து நாகரிகம், இந்து சமயம் என்ற சொற்றொடர்கள் பின்னிப் பிணைக்கப்பட்டு, விடயங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. நூல்கள் பலவும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களால் மாணவர்களுக்கும், பொது மக்களுக்குமென எழுதப்பட்டும் வந்துள்ளன. ஆனால், அவற்றில் தெளிவாக விடயங்கள் கூறப்படவில்லை. உதாரணமாக: யாழ் பல்கலைக் கழக இந்து நாகரிகப் பேராசிரியர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள்

"இந்துப் பண்பாட்டு மரபுகள்" என்ற தலைப்பில், 1992ஆம் ஆண்டில; ஒரு நூலை எழுதியிருந்தார். இந்த நூலில் இந்துக்கள், இந்து பண்பாடு, இந்து சமயம், இந்து விக்கிரகங்கள் என்ற பதங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளபோதும், அந்நூலில் இந்து சமயம் என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை!

இந்தியா, இந்து, இந்துக்கள், இந்து சமயம், இந்துப் பண்பாடு என்ற கருவூல உருவாக்கத்திலும், அதை மாணவர்களுக்குப் புகுத்துவதிலும் மாத்திரம் ஈடுபடுகின்றன என்ற உண்மையையும், இந்த நூல்களை எழுதியவர்களுக்குத் தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை என்ற உண்மையையும்தான் இந்த நூல்கள் அனைத்தும் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. சுருங்கக் கூறினால், இந்த நூல்களும், ஆசிரியர்களும், அறிவியல் என்பதை நிராகரித்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

தமிழில் இப்பிரச்சினை இப்படி இருக்கையில், Hindu, Hinduism என்ற சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இச்சொற்கள் குழப்பத்தைத்தான் உருவாக்கி வருகின்றன.

சிலர்: "Hindu was the term used by the Persians for the people of the Indian subcontinent. Hinduism later came to be used by outsiders for the varied religious beliefs of the majority of the people" என்று கூறுவர்.

இந்தநிலையில், இன்றைய இந்தியப் பகுதிகளில், எவரும் தம்மைப் பண்டைக் காலத்தில் Hindu எனக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், இந்து சமயம் என ஒன்று பண்டைக் காலத்தில் இருந்திருக்கவும் முடியாது.

....

.....

தமிழ்த் தேசத்தவர்களுள் பெரும் பகுதியினர் தம்மைச் சைவர்கள் என அடையாளப்படுத்துகின்றனர். ஆனால், அவர்களை இந்துக்கள் என அடையாளப்படுத்த வைப்பதில, கல்விமான்கள் எனக் கூறப்பட்டுவரும் சிலரும், மேடைப் பிரசங்கிகளும், சில தமிழ் ஊடகங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கங்கள்தான் இருக்கமுடியும் என்பதை எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

.....

.......

இந்து சமயம் என்பது, சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம்,.. என எல்லாவற்றையும் ஒன்றாகக் கூறும் சமயம் என்பர் சிலர். இது எப்படி? சைவம், வைஷ்ணவம், சாக்தம் எனத் தனித்தனியே பல பத்துச் சமயங்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் ஏன் ஒன்று சேர்த்து, இந்து சமயம் எனக் குறிப்பிடவேண்டும்? இவை இந்திய சமயங்கள் எனக் குறிப்பிடப்படலாம்!

ஆனால், இங்கு நாம் ஒரு மிக முக்கிய விடயத்தினை மனதில் கொள்ளவேண்டும்.

பண்டைக்காலத்தில், இந்தியா என்றவொரு நாடு இருக்கவேயில்லை.

பல நுறு தேசங்களை ஒன்றிணைத்து, அதை இந்தியா எனப் பெயரிட்டு, அந்த இந்தியா என்பதை ஆளும் வர்க்கங்களிடம் கையளித்துச் சென்ற பெருமை பிரித்தானிய காலனித்துவவாதிகளைத்தான் சாரும்!

இந்திய ஆளும் வர்க்கங்கள் என்றும் பிரித்தானியக் காலனித்துவவாதிகளுக்கு நன்றிக்கடன் உடையவர்களாகவே இருக்கவேண்டும், அவர்கள் இன்றும் அப்படித்தான் உள்ளனர்!

....

......

இங்குதான், அமெரிக்க, இந்திய, சிங்கள, மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கிடையில், இயல்பான ஒற்றுமை, இணைவு உருவாகியிருப்பதைத் தமிழ்த் தேசம் அவதானிக்கவேண்டும். அவைகளிடையில் இருக்கும் கருத்து முரண்பாடு, யார் இப்பூமியையும், அதில் வாழும் மனித இனத்தையும் அதிகமாகச் சுரண்டுவது என்பதில்தான்!

...

......

ஆனால், இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும, வட, தென் இலங்கைகளிலும் வணங்கப்பட்டுவரும் சிவன், விஷ்ணு, கிருஷ்ணா, பிரம்மா, விநாயகன், முருகன் என்ற கடவுள்கள்; உண்மையில் என்ன, அவை எப்படி உருவாக்கப்பட்டுள்ளன, இந்தக் கடவுள்களின் வழிபாடுகள் எந்தெந்தக் காலம் முதல் இந்தியாவிலும், இலங்கையிலும் இருந்து வருகின்றது@ இந்தக் கடவுள்கள் ஏன் பௌத்தர்களால் இலங்கையில் வழிபடப்பட்டு வருகின்றன, ஏன் இந்தக் கடவுள்கள் தென்னிங்கையின் பௌத்த கோயில்களில் காணப்படுகின்றன என்பவை பற்றியும்@ தென்னிந்தியாவின் பண்டைய சைவ, மற்றும் கோயில்களில் புத்தபெருமானின் சிலைகள், தம்மச் சக்கரம், இணைபாதம் போன்றவை எப்படிக் காணப்படுகின்றன, இந்தக் கோயிலகளுக்கும் அரச மரத்துக்குமிடையில் என்ன தொடர்புகள் உள்ளன போன்ற கேள்விகளுக்கு விஞ்ஞான ரீதியிலான விடைகள் ஆராய்ந்து அறியப்படவேண்டியுள்ளன.

இந்தநிலையில், இந்து என்ற சொல்லானது, கலாநிதி அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டதுபோல் "புத்தர் ஒரு இந்து. அவர் இந்துச் சீர்திருத்தவாதி" எனப் பயன்படுத்தப்பட முடியாது.

இன்று இந்து சமயம் என்ற சொற்றொடர் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இச்சொற்றொடரானது மிகவும் அண்மைக் காலத்தில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டு, பய்ன்படுத்தப்படுவதாகும்.

எதுவிதத்திலும், இந்து சமயம் என்றால் என்ன என்ற கேள்வியைச் சமயப் பெரியோர்களையும், கல்விமான்களையும் கேட்டால், அவர்கள் விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கொடுக்கமுடியாத நிலையில்தான் இருப்பர்!

....

......

மறுபுறத்தில், இந்து என்பது great என்பதையும் குறிக்கமுடியும் எனப் பார்த்திருந்தோம்.

இந்தநிலையில், புத்தபெருமான் ஒரு பெரியோன் ஆன நிலையிலும், அவர் பெரும் சீர்திருத்தவாதி என்ற நிலையிலும், நாம்: "புத்தர் இந்து ( Buddah Great) இந்துச் சீதுதிருத்தவாதி (புத்தர் பெரும் சீர்திருத்தவாதி)" எனக் குறிப்பிட முடியும்.

ஆனால், இந்து என்பது இங்கு இன்றைய விளக்க அடிப்படையிலான இந்து சமயத்தினைக் குறிக்கவில்லை.

...

.....

முன்னைய ஆராய்வாளர்கள் கூறியவற்றை, ஏனைய சகலரும் சரியென ஏற்று வந்தனர். இன்றுபோல் இல்லாது, முன்னயை காலத்தில், உயர் கல்வியில் கணிதத்தைக் கற்றவர்களும், பொறியியலாளர்களும், இயற்கை விஞ்ஞானத்தைக் கற்றவர்களும், இலக்கிய, தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபடுவேயில்லை, இதனால், முன்னைய ஆராய்வாளர்களின் ஆய்வுகளையும், முடிவுகளையும் ஆதாரபுபூர்வமாக நிராகரிக்கக்கூடிய நிலையில் எவரும் இருந்திருக்கவில்லை.

இந்தநிலையில், தமிழ், சமஸ்கிருத இலக்கியங்கள், நூல்களின் இயற்றுகை, அவற்றின் காலங்கள் தொடர்பாக இதுவரை எழுதப்பட்டு வந்தவைகள்; பிழையானவையாகும். சமயங்கள், சித்தாந்தங்கள் தொடர்பாகக் கூறப்பட்டு வருபவைகள் முற்றிலும் பிழையானவையாகும்.

நன்றி தமிழ்சமூகம் (www.tamilsociety.com)

http://www.mousegroup.net/tamilsociety/09....005/bala-01.htm

Posted

பண்டைக்காலத்தில்இ இந்தியா என்றவொரு நாடு இருக்கவேயில்லை.

பல நுறு தேசங்களை ஒன்றிணைத்துஇ அதை இந்தியா எனப் பெயரிட்டுஇ அந்த இந்தியா என்பதை ஆளும் வர்க்கங்களிடம் கையளித்துச் சென்ற பெருமை பிரித்தானிய காலனித்துவவாதிகளைத்தான் சாரும்!

கட்டுரை ஆசிரியர் என்ன சொல்ல வருகின்றார். அப்போ காந்தி சுபாஷ்சந்திரபோஸ் போன்றோர் எல்லாம் போராடியதாக சொல்வது எல்லாம் கனவுலகிலா?? பாகிஸ்தான் பிரிந்தது எல்லாம் கட்டுக் கதைகளா??.தயவு செய்து கட்டுரைகளை இணைப்பவர்கள் அதனைக் கொஞ்சமாவது வாசித்துவிட்டு இணையுங்கள்.

Posted

வசம்பு, அதில் கூறப்பட்டுள்ளது எல்லாவற்றையும் வாசித்தனான் ஆனால் அவை தவறானது என்று சொல்லுமளவிற்கு எனக்கு அறிவு இல்லை.

இந்திய (முதலில் பாக்கிஸ்தான் பின்னர் அதிலிருந்து பங்களாதேஷ் என்றென பிரிய முதல்) ஒரு நாடாக மாத்திரம் இல்லை இலங்கையும் ஒரு நாடாக 1790 களில் இருக்கவில்லை. அதாவது ஜரோப்பியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முதல். நீங்கள் வரலாறு என்று பிரித்தானியர் ஆட்சிக்காலம் என்றோ அல்லது 1930 கள் வரை தான் பின்னோக்கி பார்ப்பேன் என்றால் அந்தக் கட்டுரையில் கூறவருவதை விளங்குவது கடினம்.

Posted

குறு}க்ஸ்

இது பொதுவாகவே நாம் பாடசாலையில் படித்திருக்கின்றோம். இலங்கையை தமது நிர்வாகத் தேவைகளுக்காக இணைத்தார்கள் என்பது உண்மை. ஆனால் ஒல்லார்ந்தர் போத்துக்கீசர் ஆங்கிலேய வருகைகளுக்கு முன்பே இந்தியா பற்றிய செய்திகள் இருக்கின்றன. கட்டுரையாசிரியர் சொல்வது போல் ஆங்கிலேயர் இந்தியாவை உருவாக்கிக் கொடுக்கவில்லை. நீங்கள் தந்த இணைப்பு மட்டுமல்ல சிலர் குறிப்பிட்ட பெயர்களில் இணையத்தளங்களை உருவாக்கி ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற பெயரில் பொய்யான தகவல்களை மக்கள் முன் சமர்ப்பிக்க முனைகின்றார்கள். இப்படியான தவறான செயல்களுக்கு துணை போகாமல் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

Posted

வசம்பு, ஜரோப்பியர்கள் வருகைக்கு முன்னர் இந்தியா ஒன்றாக இருந்தது என்ற தகல்களை இணையுங்கள் படித்து அறிய ஆவலாக உள்ளேன்.

அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட பல விடையங்கள் பற்றி எனக்கு பல கேள்விகள் கனகாலமாக இருந்தது, அவற்றில் சில பற்றி இங்கு கூட முன்பு கேட்டிருந்தேன். ஆனால் பொய்யான தகவலாக என்னுடைய அறிவிற்கும் புத்திக்கும் எட்டவில்லை.

இவற்றைப்பற்றி மேலும் விவாதங்கள் கருத்துப்பரிமாற்றம் மூலம் அறிந்து கொள்ளத்தான் இங்கு இணைத்தேன்.

உங்களால் முடிந்த இணைப்புகள் தகவல்களை இணையுங்கள், கட்டுரையாசிரியர் பொய்யான தகவல்களை மக்கள் முன் சமர்ப்பிக்கிறார் என்றதை விளங்கிக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

Posted

குறு}க்ஸ்

உங்களின் நோக்கமும் கட்டுரை ஆசிரியரின் நோக்கமும் புரிகின்றது. நான் எழுதியதை நன்கு வாசித்துப் பாருங்கள். இலங்கையில் எப்படி தமிழ் சிங்கள மன்னர்கள் ஏன் இந்திய மன்னர்கள் வரை ஆட்சி செய்திருக்கின்றார்கள். அதே போல் இந்தியாவிலும் கலிங்கம் மொகலாயம் பாண்டியநாடு சேரநாடு சோழநாடு என பல ஆட்சிகள் இருந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தான் இந்தியா எனப் பெயர் வைத்தனர் என்பது தவறு என்பதையுமே நான் சுட்டிக் காட்டியுள்ளேன் .அதே போல் வஸ்கொடகாமா தனது கடல் பயணத்தில் இந்தியாவைச் சென்றடைந்தார் என்பது என்ன?? உண்மையில் நான் ஆராய்ச்சியாளனில்லை. இது பற்றிய தகுந்த ஆதாரங்களை கட்டுரையாசிரியர் தான் தந்திருக்க வேண்டும். எனக்கு ஏதாவது கிடைத்தால் நிச்சயமாக இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசம்பு

தோழர் சொல்வது உண்மையிலும் உண்மை

பண்டைய இந்தியா என்பது தனித்தேசமன்று.பல குறுநில/பெருநில மன்னர்களது ஆட்சிப்பரப்பாக பற்பல தேசங்களாகத்தான் இருந்தது.

வெள்ளையருக்கு எதிரான போராட்டமும் மன்னராட்சியின் முடிவும் தான் காலனியாதிக்கத்திற்குப் பிற்பட்ட இந்தியாவை ஒன்றுபடச் செய்தது.

உங்கள் பதிலிலேயே நீங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள் இந்தியாவைப் பாணியர்களும் சோழர்களும்,சேரர்களும் பல்லவர்களும் முகமதியர்களும் ஆண்டார்கள் என்று.

இந்தியா முழுவதும் ஒரே நாடு என்றால் எதற்காகச் சோழர் பாண்டிய நாடு மீது படையெடுக்கவேண்டும்.எதற்காக மொலாயர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுக்க வேண்டும்.எதற்காக பல்லவன் சாளுக்கியர் மீது படையெடுக்கவேண்டும்.

ஆரம்பகாலத்தில் வெள்ளையர் இந்தியாவைக் கைப்பற்ற நடந்த போர்களைப் பற்றிப் படித்திருக்கிறீர்களா ஒவ்வொரு பிரதேசத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த மன்னர்கள் தனித்தனியாகவோ தங்களுக்குள் கூட்டமைத்துக்கொண்டோ வெள்ளையர்களை எதிர்த்தார்கள் ஒழிய தனித்தலைமை ஒன்றின் கீழ் பாரதப் பெருநாடாகப் போரிடவில்லை

இப்போதும் கூட இந்தியாவின் அரசியல் யாப்பில் மொழிவழி மாநிலங்களின் கூட்டரசு என்றுதான் இந்தியா பற்றிக் குறிப்பிடப்படுகிறாதே ஒழிய இந்தியா தனி நாடாக அல்ல

Posted

சரி ஈழவன் நீங்கள் சொல்வதை வைத்தே கேட்கின்றேன். அப்படி இணைக்கும் போது இந்து நாடான நேபாளம் ஏன் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஒன்றாக்கப்பட்டு பின் பிரிக்கப்பட்டதா?? இவற்றை யாராவது ஆதாரத்துடன் விளக்கலாமே???? நான் கலைப்பிரிவில் படிக்கவில்லை. அதனால் இது பற்றிய மேலதிக தகவல்களை படிக்கும் போது அறிந்திருக்கவில்லை. அத்துடன் நீங்கள் கூறும் இந்த இப்போதும் கூட இந்தியாவின் அரசியல் யாப்பில் மொழிவழி மாநிலங்களின் கூட்டரசு என்றுதான் இந்தியா பற்றிக் குறிப்பிடப்படுகிறாதே ஒழிய இந்தியா தனி நாடாக அல்ல என்பதும் கொஞ்சம் உதைக்கின்றதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசம்பு

நேபாளம் எந்த ஐரோப்பியரின் ஆட்சிக்குள் இருந்தது இணைக்கப்படுவதற்கு?

ஐரோப்பியர் வருகைக்கு முன்னரான இந்தியாவை இந்திய நாடு என்பதைவிட இந்திய உபகண்டம் என்பதே பொருத்தமாக இருக்கும்.இன்றும் இந்திய உபகண்டம் என்றழைக்கப்படுவதையிட்டு நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்

பாகிஸ்தான் வங்காளதேசம் எல்லாமே இந்திய உபகண்டத்தின் பகுதிகளாக இருந்தவைதான்.பாகிஸ்தான் இந்தியாவிடமிருந்து வெள்ளையரால் பிரிக்கப்பட்டுத் தனிநாடாக்கப்பட்டது.

வட இந்தியாவில் காந்தாரம்,தட்சசீலம்,அயோத்தி எனும் பேரரசுகள் இருந்த போது தென்னிந்தியாவை திராவிட மன்னர்கள் ஆண்டார்கள்

ஐரோப்பியர் இந்திய உபகண்டத்தைக் கைப்பற்றிய போது தனியொரு அரசனுடன் போராடி அதனைக் கைப்பற்றவில்லை.பல பேரரசுகளுடனும் சிற்றரசர்களுடனும் மோதி வென்றுதான் மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்றினார்கள்.

மொத்த இந்திய உபகண்டத்தையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவன் பரதன் என்றும் அவனது பெயராலேயே இந்தியா பாரதம் எனப்படுகின்றது என்றும் படித்தேன்.

இந்திய அரசால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வப் பெயர் என்னவென்று தயவு செய்து அறிந்து சொல்ல முடியுமா?

இன்று மொழிவழித்தாயகம் கேட்டு யாரும் போராடிவிடக் கூடாது என்பதற்காக பாரத மாதாவின் புதல்வர்கள் யாம் என்று இந்திய மக்கள் மத்திய அரசை நடத்துபவர்களால் உருவேற்றப்படுகிறார்கள்.

அகண்ட பாரதத்தை நிலைநிறுத்தி வைப்பதற்காக சொல்லப்படும் வார்த்தை நான் முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன் என்பது இந்திய நாட்டின் இறைமையின் பெயரால் உருப்போடப்படுகிறது.

உண்மையில் வெள்ளையர் வரும்வரையில் தமிழ்நாட்டில் தமிழனாக இருந்தவந்தான் இன்று இந்தியனாக மாறியிருக்கிறான் ஆகவே முதலில் தமிழன் பிறகுதான் இந்தியன் என்பதே சரியாக இருக்கும்

Posted

ஈழவன்

நீங்கள் இரண்டு விடயங்களை இப்போது ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.

1) ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இந்தியா என்ற பெயர் இருந்திருக்கின்றது.

2) முதலில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தது பரதன் தான்.

மேலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் வன்னி இராச்சியம் கண்டி இராச்சியம் என பல இராச்சியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தமிழர்களாகிய நாம் ஆங்கிலேய இணைப்பை ஏற்றுக் கொண்டு வடகிழக்கை எமது தாயமாக அங்கீகரிக்கும்படி போராடுகின்றோம். அதாவது எமக்குத் தனிநாடு வேண்டும் என்று போராடுகின்றோம். பண்டைய சரித்திரங்களின் படி எமக்கு தனி இராச்சியம் தான் இருந்திருக்கின்றது தனி நாடல்ல. அப்படியாயின் எமது போராட்டத்தை விட்டு விடுவோமா??

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுத்தமிழர்கள் முற்று முழுதாக இந்தியாவை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால்த்தான் அவர்கள் தங்களை முதலில் இந்தியர் என்றும் பின்பு தான் தமிழர் என்றும் சொல்கின்றார்கள் இது அவர்களின் நாட்டுப் பற்றையே காட்டுகின்றது. இதைப் பற்றி நாம் விமர்சனம் செய்வது அழகல்ல. நீங்கள் சிலவேளை அங்குள்ள சிலர் திராவிடநாடு கோரினார்களே என்று கேட்கலாம். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே!!!!!!

Posted

அதே போல் வஸ்கொடகாமா தனது கடல் பயணத்தில் இந்தியாவைச் சென்றடைந்தார் என்பது என்ன??

இந்தியாவை வஸ்கொடகாமா சென்றடைந்தார் என்பது ஒரு புறமிருக்க. முதலில் அமெரிக்காவை கொலம்பஸ்தான் கண்டுபிடிதார் என்கின்றார்கள். ஆனால் இப்போது புதிய செய்தி ஒன்றும் கசிகின்றது. த வைகிங்ஸ்தான் முத்லில் அமெரிக்காவிற்கு சென்றடைந்ததாக. இவ்வாறு சரித்திரங்களில் பல திரிபுகள் நடக்கின்றன. அந்த வகையில் கட்டுரையாளர் குறிப்பிடுவது போல சைவசமயம் எவ்வாறு இந்துசமயமாக மாறியது? இராவண அரசன் எவ்வாறு வாழ்ந்தான் அவன் எப்போது எவ்வாறு மடிந்தான்??? இவன் வீழ்ச்சியின் பின்னாலுள்ள சதி என்ன என ஆராய வேண்டும்? அப்போது பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பு உண்டு.

Posted

மதுரன்

நானும் நீங்கள் சொல்வதைத்தான் சொல்கின்றேன். முன்னோர்கள் எழுதி வைத்த சரித்திரங்களில் தவறு உள்ளதா என்பதைச் சொல்ல முன்னர் ஆதாரபுூர்வமாக சரியான சரித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதே சாலச்சிறந்தது. ஊகங்களின் அடிப்படையில் சரித்திரங்களை மாற்ற முயல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

Posted

இந்தியாவை வஸ்கொடகாமா சென்றடைந்தார் என்பது ஒரு புறமிருக்க. முதலில் அமெரிக்காவை கொலம்பஸ்தான் கண்டுபிடிதார் என்கின்றார்கள்.

மதுரண்ணா சரித்திரத்தைப் புரட்டப் புறப்படாதீர்கள்... கடைசீல இந்தியா தமிழர் அல்லது திராவிடருக்குத்தான் சொந்தம் எண்டவையிலதான் வந்து முடியும்..

நீங்கள் சொன்ன வாஸ்கொடகாமா சொன்னது அதுதான் கறுப்பு மனிதர்கள் வாழும் நாடுதான் இந்தியா எண்ட இந்து மாகடல் அருகின் நாடு.....

சிந்து நதிகலக்கும் கடல் அதனாலும் பேர் பெற்றிருக்கலாம்... ஏனெண்டால் மெகஞ்சதரோ, ஹரப்பா நாகரீகவளர்ச்சி உண்டான நதி......

Posted

மதுரன்

நானும் நீங்கள் சொல்வதைத்தான் சொல்கின்றேன். முன்னோர்கள் எழுதி வைத்த சரித்திரங்களில் தவறு உள்ளதா என்பதைச் சொல்ல முன்னர் ஆதாரபுூர்வமாக சரியான சரித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதே சாலச்சிறந்தது. ஊகங்களின் அடிப்படையில் சரித்திரங்களை மாற்ற முயல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

தெற்காசிய சரித்திரத்தை புரட்ட வேண்டுமாயின். லெமூரியா கண்டத்தில் இருந்து தொடங்கப்ப்டுதல் வேண்டும். அதே போன்று கட்டுரையாளர் சொல்வதபோன்று. இந்து என்னும் சொல்லு பாரசீகத்தில் இருந்து வந்ததாகத்தான். லெக்சிகோனில் நான் படித்தறிந்திருக்கின்றேன். இந்து என்னும் சொல் எவ்வாறு தோன்றியது அதன் பொருள் என்ன? என்பன பற்றி அறிந்துகொள்ள கட்டுரையாளரைப் போல எனக்கும் அவாலாய் உள்ளது. ஆனல் அது எவ்வாறு சாத்தியம்??????

Posted

தலை நேர்த்தியான ஆராய்வுகள் எப்போதும் உண்மையில்த்தானே முடியும். அந்த வகையில் உங்கள் கூற்றோடு நானும் உடன் படுகின்றேன். பல திரிபுகள் உள்ள கட்டுக்கதைகளோடு கூடிய கற்பனைகளால் மெருகேற்றப்பட்ட கதைகளே வரலாற்று ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இப்படிப்பட்ட புனை கதைகள் கூட ( அரச குடும்பங்களைப் பற்றியதாகவே இருக்கின்றன) அடித்தட்டு மக்களின் ( பூர்வீகக் குடிகள்) பற்றிய தகவல்கள் திரிபு படுத்தப்பட்டு மிகவும் குறைவாகவே காணப் படிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசம்பு

எனது பதிலை கவனமாக வாசித்துப் பாருங்கள் நான் ஐரொப்பியர் வருகைக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடு இருந்ததாகக் குறிப்பிடவில்லை.பற்பல தேசங்களின் ஒன்றிணைப்பாக இந்தியா என்று பெருநிலப்பரப்பு ஒன்றிருந்ததாகவே குறிப்பிட்டேன்.அந்தப் பெயர் கூட சிந்துவெளி நாகரீகத்தின் காரணமாய் பாரசீகரால் இடப்பட்ட சிந்து சிந்தியா-இந்தியா என்று வந்ததாகவே படித்தேன்.

இலங்கை தேசியப் போராட்டம் பற்றி நீங்கள் சுட்டியமையால் அதைப்பற்றி மேலும் பேசலாம்

இலங்கையில் சிங்கள மன்னர்களும் தமிழ் மன்னர்களும் இருந்திருக்கிறார்கள்.பல்வேற

Posted

ஈழவன்

நீங்கள் இரண்டு விடயங்களை இப்போது ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.

1) ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இந்தியா என்ற பெயர் இருந்திருக்கின்றது.

2) முதலில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தது பரதன் தான்.

மேலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் வன்னி இராச்சியம் கண்டி இராச்சியம் என பல இராச்சியங்கள் இருந்தன. ஆனால் தற்போது தமிழர்களாகிய நாம் ஆங்கிலேய இணைப்பை ஏற்றுக் கொண்டு வடகிழக்கை எமது தாயமாக அங்கீகரிக்கும்படி போராடுகின்றோம். அதாவது எமக்குத் தனிநாடு வேண்டும் என்று போராடுகின்றோம். பண்டைய சரித்திரங்களின் படி எமக்கு தனி இராச்சியம் தான் இருந்திருக்கின்றது தனி நாடல்ல. அப்படியாயின் எமது போராட்டத்தை விட்டு விடுவோமா??

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுத்தமிழர்கள் முற்று முழுதாக இந்தியாவை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதனால்த்தான் அவர்கள் தங்களை முதலில் இந்தியர் என்றும் பின்பு தான் தமிழர் என்றும் சொல்கின்றார்கள் இது அவர்களின் நாட்டுப் பற்றையே காட்டுகின்றது. இதைப் பற்றி நாம் விமர்சனம் செய்வது அழகல்ல. நீங்கள் சிலவேளை அங்குள்ள சிலர் திராவிடநாடு கோரினார்களே என்று கேட்கலாம். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே!!!!!!

வசம்பு,

தமிழ்நாட்டுத் தமிழன் சார்பில் நான் கதைக்க முடியாது.

ஆங்கிலேயருக்கு முதல் ஏனைய ஜரோப்பியர் வந்துவிட்டார்கள், நீங்கள் பொதுவாக எல்லா ஜரோப்பியர்களையும் (வெள்ளையர்களையும்) ஆங்கிலேயர் என்று எழுதியிருக்குறீர்கள் என நினைக்கிறேன்.

ஜரோப்பியர்களின் வருகைக்கு முதல் பல இராச்சியங்கள் தான் இருந்தது, அதை ஏற்றுக் கொண்டால் இலங்கைத்தீவில் வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசம் தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், அங்குள்ளவர்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமை வேணும் என்ற போராட்டம் தவறு ஏனென்றாகி விடும் என்ற தர்க்கம் விளங்கவில்லை. அது ஒருக்கால் விளங்கப்படுத்த முடியுமா?

Posted

சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக் கருத்துக்களில் ஒன்று பண்டாரநாயக்கா சகாப்தம் என்பதாகும். இன்னுமொரு கருத்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்;தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்தவது பொருத்தமாக இருக்ககூடும்.

முதலில் மகாவம்சம் என்ற நு}ல் எதனைச் சொல்கின்றது அது எப்போது எவரால் எழுதப்பட்டது அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளவை எவை? என்பவை குறித்து நாம் அறிந்து கொள்வது சற்று தெளிவைத் தரக்கூடும்.

இலங்கைத் தீவின் வரலாற்றை விபரிக்கின்ற வரலாற்று நு}ல் ஆவணங்களில் முதன்மையாகத் திகழ்வது மகாவம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் மகாவம்சம் இலங்கை வரலாற்றினைச் சிலவிடத்து நம்பகத் தன்மையோடும் பலவிடத்து நம்பகமற்றதாகவும் விபரிக்கின்றது-என்று கலாநிதி க.குணராசா குறிப்பிடுகின்றார்.

மகாவம்சம் குறித்துக் கலாநிதி க.குணராசா எழுதிய ஆய்வு நு}லையும் அதற்கு உதவிய சில உசாத்துணை நு}ல்களையும் நாம் நன்றியுடன் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றோம். பல சொல்லாடகங்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.

மகாவம்சம் பாளி மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்டிருக்கின்றது. இலங்கைத்தீவிற்குப்; பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது.

மகாவம்சம் விபரிக்கின்ற மூலக்கதைகளைக் கூறாமலேயே மகாவம்சம் கூறுகின்ற இலங்கை வரலாற்றை அறிய முடியும். சிங்கள இனத்திற்கு அவமானம் தருகி;ற சம்பவங்கள் என்று கருதி பலர் சில மூலக் கதைகளைத் தவிர்த்தும், புதுக்கியும், ஏன் திரித்தும் கூட எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மகாவம்சம் சொல்வதை ஏற்பதும், ஏற்காமல் போவதும் வேறு விடயமாகும். ஆனால் ஏற்கனவே உள்ள மகாவம்சத்தின் புனிதத்தன்மையை கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் மகாவம்சத்தை புதுப்பிக்க முற்படும் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கையின் வரலாறு குறித்துப் பேசுகின்ற மகாவம்சத்தின் வரலாறு என்ன என்பது குறித்து முதலில் கவனிப்போம்.

இலங்கையில் பௌத்த மதம் பரவி நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும் மன்னர்களின் வரலாற்றுக் கதைகள்;, அவர்களது பணிகள் குறித்தும் ஏடுகளில் எழுதியதோடு மட்டுமல்லாது வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இவை காலம் காலமாக பேணப்பட்டு வந்ததோடு 'அட்டகதா" என்று அழைக்கப்பட்டும் வந்தது. இவ்வாறு பல்வேறு பௌத்த விகாரைகளில் பேணப்பட்டு வந்த ~அட்டகதாக்கள்| ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு ~அட்டகதா-மகாவம்சம்| என்ற அழைக்கப்படலானது.

~அட்டகதா-மகாவம்சத்தின்| ஏட்டுப்பிரதிகளைத் தழுவி பின்னாளில் தீபவம்சம் என்ற நு}ல் எழுதப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் நான்காம் நு}ற்றாண்டளவில்தான் தீபவம்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். தீபவம்சத்தின் ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்கு காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ~தீபவம்சம்| முழுமை பெற்றிருக்க கூடும்.

இந்த தீபவம்சம் என்கின்ற நு}லில் இருந்துதான் தற்போதைய மகாவம்சம் என்கின்ற நு}ல் உருவாகியுள்ளது. தீபவம்சத்தை மீள் ஒழுங்கு செய்ததுதான் மகாவம்சம் என்று பிளீற் (குடுநுநுவு) கூறுவார். இன்னொரு வகையில் சொல்லப் போனால் ~தீபவம்சம் என்கின்ற நு}லின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம்| என்றும் கூறலாம்.

இவ்வாறு பல பௌத்த பிக்குகள் காலம் காலமாக ஏடுகள் ஊடாகவும் வாய்மொழி ஊடாகவும் பேணி வந்த செய்யுள்கள் ~அட்டகதா| என்றும் பின்னர் ~அட்டகதா-மகாவம்சம்| என்றும் அதன் பின்னர் ~தீபவம்சம்| என்றும் ஈற்றில் ~மகாவம்சம்| என்றும் ஒருங்கிணைக்கப்பட்டு மீள் ஒழுங்கு செய்யப்பட்டன.

மீள் ஒழுங்கைச் செய்து மகாவம்சத்தை உருவாக்கியவர் மகாநாம தேரர் என்று சில ஆய்வாளர்கள் கருதுவார்கள். மகாநாம தேரர்தான் மகாவம்சத்தின் மூல ஆசிரியர் எனக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கருதுகின்ற ஆய்வாளர்களும் உண்டு.

இது ~மகாவம்சம்| என்கின்ற வரலாற்று நு}ல் உருவான வரலாறு ஆகும்.!

இந்த ~மகாவம்சம்| என்கின்ற வரலாற்று நு}ல் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கின்றது, அது எதனைச் சொல்கின்றது என்பதனை இப்போது பார்ப்போம்.

மூல நு}லான தீபவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உள்ளன. அதேபோல மகாவம்சத்தில் முதலில் 37 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. அத்தோடு மேலும் 63 அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு எல்லாமாக நு}று அத்தியாயங்கள் மகாவம்சத்தில் தற்போது உள்ளன. 38 ஆம் அத்தியாயத்தில் இருந்து 100 ஆவது வரையிலான அத்தியாயங்கள் ~சூளவம்சம்| என்ற தொடர் நு}லில் உள்ளவையாகும். இவற்றைப் பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்த வில்லியம் கெய்கர், முதல் 37 அத்தியாயங்களை ~மகாவம்சம்| என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார். மீதி 100 வரையிலான அத்தியாயங்களை ~சூளவம்சம் தொகுதி ஒன்று|, ~சூளவம்சம் தொகுதி இரண்டு| என்று மொழி பெயர்த்தார். பின்னாளில் அதாவது 1889ல் முதலியார் எல்.சி விஜயசிங்க என்பவர் ஜோர்ஜ் ரேனர் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீளாய்வு செய்து மறுபதிப்பாக வெளியிட்டார். ஆனால் முதலியார் விஜயசிங்க ஒரு மாறுதலை தலைப்புகளின் பெயரில் கொண்டு வந்தார். சூளவம்சம் கூறுகின்ற 38 முதல் 100 வரையிலான அத்தியாயங்களுக்கு ~மகாவம்சம் தொகுதி இரண்டு| என்று பெயரிட்டார். முதலியார் விஜயசிங்கவின் கருத்துப்படி நு}று அத்தியாயங்களும் மகாவம்சம் என்ற பொதுப் பெயருக்குள்ளேயே அடக்கமாகி விட்டன.

ஆனால் இங்கே ஓர்; உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும். பாளி மொழியில் இருந்து மகாவம்சத்தை ஜேர்மன் மொழிக்கு மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர் அதனை ஜேர்மன் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தது 1912 ஆம் ஆண்டில்தான். அதற்கு முன்னரேயே பாளி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு ~மகாவம்ச| என்ற பெயரில் 1837ல் ஜோர்;ஜ்; ரேனர் மொழிபெயர்ப்பு செய்ததையும் அதனைத்தான் முதலியார் விஜயசிங்க மீளாய்வு செய்ததையும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

எது எப்படியிருப்பினும் ~மகாவம்சம் என்கின்ற நு}ல் கிறிஸ்துவுக்கு பின் 6 ஆம் நு}ற்றாண்டில்தான் எழுதப்பட்டுள்ளது| என்றுதான் வரலாற்று ஆசிரியர்களும் ஆய்;வாளர்களும் கருதுகின்றார்கள்.

தற்போதைய மகாவம்சத்தில் நு}று அத்தியாயங்கள் (பிற்சேர்க்கையாக) சேர்க்கப்பட்டுள்ள போதிலும் முதல் 37 அத்தியாயங்கள் குறித்து இப்போதைக்கு நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில் அவையே கருப்பொருளாகவும் உள்ளன. இந்த 37 அத்தியாயங்களும் என்ன சொல்கின்றன? அவை தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? என்பவை குறித்து மிகச்சுருக்கமாகத் தர்க்கி;க்க விழைகின்றோம்.

மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை விபரிக்கின்றது. மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில விடயங்கள் புலனாகின்றன. பௌத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

அன்புக்குரிய நேயர்களே! மகாவம்சத்தின முதலாவது அத்தியாயத்தி;ன் குறிப்புகளின் படி இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர்கள் என்பது புலனாகின்றது. இதனை மனதில் உள்வாங்கிக் கொண்டு அடுத்த சம்பவத்திற்கு வருவோம்.

இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே பிரசன்னமாகி பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்கு தருகின்றோம். எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

இயக்கர்கள் அகன்றதும் அந்த இடத்தில் ~தேவர்கள்| கூடுகின்றார்கள். இந்த தேவர்கள் என்பவர்கள் யார்? பின்னாளில் விஜயன் வருவதற்கு முன்னரேயே ஊடுருவி இருந்த ஆரியர்கள் என்பவர்கள்தான் இந்த தேவர்கள். உண்மையில் இந்தியாவிற்குள் கைபர் மற்றும் போலன் போன்ற இமயமலைக் கணவாய்கள் ஊடாக கிறிஸ்துவுக்கு முன்னர் 2500 ற்கும் கிறிஸ்துவுக்கு முன்னர் 1500 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஆரியர்கள் ஊடுருவி விட்டார்கள்.

இந்தியத் திராவிட மக்களை தென்புலமாக நகர வைத்ததுடன் விஜயனின் வருகைக்கு முன்னரேயே இலங்கையின் தென் புலங்களில் ஆரியர்கள் குடியேறினர். ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 483 ஆம் ஆண்டில் விஜயனின் வருகையோடுதான் ஆரியரின் வருகை ஆரம்பமானது என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பிடிவாதமாக உள்ளார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விபரமாக ஆராய்ந்து பார்த்தால் உண்மைகள் வெளிப்படும்.

புத்தர் இரண்டாம் முறையும் இலங்கைக்கு வருகின்றார். இம்முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளை பயப்படுத்திய புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவரது வீரர்களையும் பயங் கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ~புத்தம்- தர்மம் -சங்கம்| என்ற போதனைகளை அளிக்கின்றார்.

இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். கல்யாணி என்ற தேசத்தின் நாக மன்னின் வேண்டுதலை ஏற்று அங்கே செல்வதோடு பல இடங்களுக்கும் சென்று அந்த இடங்களை ஆசிர்வதித்து திரும்புகின்றார்.

இந்தச் செய்திகளில் மறைந்துள்ள சில உண்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இலங்கையின் ஆதிக்குடிவாசிகளாக இயக்கர்களும் நாகர்களும், உள்ளார்கள். இயக்கர்களை அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் நாக என்ற சொல் வரும் பெயர்களும் (எ.கா-நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபுூசணி) மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.

மகாவம்சத்தின இரண்டாவது அத்தியாயம் புத்தரின் முந்தாதைகள் குறித்தும் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அத்தியாயங்கள் புத்த மத மகாநாடுகள் குறித்தும், ஆறாவது அத்தியாயம் விஜயனின் கதை குறித்தும், ஏழாவது அத்தியாயம் இலங்கைத்தீவில் விஜயன் கரை இறங்குவது குறித்தும் விபரிக்கின்றது. மிகுதி அத்தியாயங்கள் யாவும் சிங்கள மன்னர்கள் பற்றியதும், அவர்களது ஆட்சி முறைகள் பற்றியும் தமிழ் மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்கள் குறித்தும் விபரிக்கின்றன.

இப்போது மேற்கூறிய மகாவம்ச அத்தியாயங்கள் குறித்துத் தொகுப்பாக அதேவேளை சுருக்கமாகச் சில தகவல்களைத் தரவிழைகின்றோம்.

விஜயனின் கதை என்பது ஒரு கட்டுக்கதையாகவும், நாடோடிக் கதைகளின் திரிபாகவும் உள்ளது. என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். விஜயனின் முதல் மனைவியான குவேனி பற்றிய குறிப்புக்கள் மகாவம்சத்திற்கு இரண்டு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட தீபவம்சத்தில் எதுவுமில்லை. தவிரவும் பின்னாளில் அரசகுலப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணப்பதற்காக மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னனின் மகளையும், பாண்டிய மன்னனின் அரசப் பிரதானிகளின் பெண்மக்களான எழுநு}று பேரையும் தேர்ந்தெடுத்து விஜயனும் அவனது எழுநு}று தோழர்களும் (அல்லது அவ்வேளையில் இருந்த அரசனும் அவனது நண்பர்களும் என்றும் கொள்ளலாம்) மணம் புரிந்தார்கள் என்று மகாவம்சம் சொல்கின்றது.

இது வேறு ஒரு சிக்கலையும் உருவாக்குகின்றது.

விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள் பாண்டிய மகளிர்கள் என்பதனால் சிங்கள இரத்தத்துடன் பாண்டிய நாட்டுத் திராவிட இரத்தமும் சேர்ந்து சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக உருவாகி விட்டது என்ற தர்க்கமும் எழுகிறது அல்லவா? இதனைத் தாங்க முடியாத சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சிலர் பாண்டிய மதுரையை பாண்டு மதுராவாக்கி மகாபாரத பாண்டவர் குலத்தில் தொடர்பு தேடி வருகின்றார்கள். ஆனால் மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவம்சம் குறிப்பிடுகின்ற மற்றைய முக்கிய அம்சங்களில் காமினி அபயன் என்கின்ற துட்ட காமினியும், எல்லாளன் என்கின்ற தமிழ் மன்னனும் அடங்குவார். துட்ட காமினியை தனது பாட்டுடைத் தலைவனாகத்தான் மகாவம்சம் விபரிக்கின்றது. அவனது வரலாற்றை விபரிக்கும்போது இரண்டு அம்சங்களை மகாவம்சம் வலியுறுத்துகின்றது. ஒன்று தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள். மற்றது பௌத்தமதத்திற்கு அவன் ஆற்றிய சேவை.

துட்ட காமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு புத்த மதத்தை முன்வைத்தான். ~நான் அரசபோகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பௌத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கின்றேன்| என்று அந்தக் காலத்திலேயே மிகக் கவர்ச்சிகரமான கோஷத்தை துட்ட காமினி முன் வைத்தான்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 145 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்துவுக்கு முன்னர் 101 ஆம் ஆண்டுவரையிலான 44 ஆண்டுகள் தமிழ் மன்னனான எல்லாளன் ஆட்சி செய்த காலமாகும். எல்லாளன் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்தவனுமாகவும் பாளி இலக்கியங்கள் கூறுவதில் உண்மையில்லை. இப்படியொரு சோழன் இந்தியாவில் இருந்ததாக தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த ஆதாரமுமில்லை. எல்லாளன் என்பவன் இலங்கையை சேர்ந்த தமிழ் மன்னனேயாவான். அவனது நீதி தவறாத ஆட்சி குறித்துப் பல இடங்களில் மகாவம்சமும் கூறுகின்றது. இளைஞனான துட்டகாமினியுடன் 72 ஆண்டுகள் நிரம்பிய எல்லாளன் தனிச்சமர் செய்து இறந்ததன் காரணமாக எல்லாளனின் தோல்வி தமிழீழ மக்களின் தோல்வியாயிற்று என்று திருச்செல்வம் குறிப்பிடுவார்

மகாவம்சத்தின் ஊடாக மேலும் சில விடயங்கள் தெரிய வருகி;ன்றன. அனுராதபுர சிம்மாசனத்தில் அமர்ந்து சிங்களவரும், தமிழரும் மாறிமாறி இலங்கையை ஆட்சி புரிந்துள்ளார்கள். அதன்படி இந்த நாட்டைத் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆளும் உரிமையை பெற்றிருந்தார்கள். இயக்கர்கள், ஆரியர்கள், தமிழர்கள் என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உள்ளார்கள். அனுராதபுரத்தை எல்லாள தமிழ் மன்னனுக்கு 57 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐந்து தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். பல சைவக்கோவில்களையும் சைவச் சின்னங்களையும் அழித்து அவ்விடங்களில் பௌத்த து}பிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே அங்கே ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் என்போர் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவை மகாவம்சம் தந்துள்ள செய்திகளாகும்.

மகாவம்சம் தருகின்ற-மறைமுகமாகத் தருகின்ற மற்றைய முக்கியமான செய்தி இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய புூமியும் கூட என்பதுதான்.

'சிங்களதேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில் அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்து போய்க் கிடக்கின்றது. இலங்கைத்தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடமை என்றும் மகாவம்சம் திரித்து விட்ட புனைகதையில் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கின்றார்கள்."

நன்றி தமிழ் நாதம். http://www.tamilnatham.com/sabesan/20051214.htm

Posted

வணக்கம் குறுக்ஸ்

இந்து என்றால் என்ன என்று ஆரம்பித்த கட்டுரை இந்துவை விட இந்தியாவையே நிறைய ஆராய்கின்றது. அத்துடன் நீங்கள் என்னைக் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் ஈழவனின் கருத்துக்களை வாசித்து விட்டு பின் என் கருத்துக்களை வாசியுங்கள் புரியும். மேலும் நான் ஆரம்பத்திலேயே தெளிவாகவே ஒல்லாந்தர் போத்துகீசர் ஆங்கிலேயர் என்றே குறிப்பிட்டிருக்கின்றேன். பின்பு தான் பொதுவாக ஐரோப்பியர் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். ஆகவே இதுபற்றி நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

மதுரன்

நீங்கள் ஏற்கனவே குறுக்ஸ் தந்த இணைப்பிலுள்ளதை அப்படியே இணைத்துள்ளீர்கள். இப்படி தற்போது பலர் செய்த ஆய்வுகள் வருகின்றன. ஆனால் அந்த ஆய்வுகள் யாவும் ஒரு குறிப்பிட்ட குழுக்களினாலேயே நடாத்தப் படுகின்றன. இவர்கள் முன்னய தமிழ் ஆய்வுகளையும் குறை சொல்வதிலேயே நிற்கின்றார்கள். விஜயனின் வருகையும் பொய் என்பது யோசிக்க வைக்கின்றது. ஆனால் நிச்சயமாக சில இந்திய வரலாறுகளிலும் இவ்விடயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் ஆராய்தல் அவசியம். அதே போல் கட்டுரை ஆசிரியர் துட்டகாமினி என்று குறிப்பிடுவது துட்டகைமுனுவை என்று நினைக்கின்றேன். எல்லாளனுக்கு துட்டகைமுனுவால் கட்டப்பட்ட சமாதி இன்றும் பொலநறுவையில்(என்று ஞர்பகம்) காணப்படுகின்றது. அத்துடன் மகாவம்சம் எப்படி மாற்றியமைக்கப் பட்டாலும் இறுதியாக இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருக்கும் அப்போதய நிலமை பற்றிய தரவுகள் எமக்கு உதவலாம்.

Posted

வணக்கம் குறுக்ஸ்

இந்து என்றால் என்ன என்று ஆரம்பித்த கட்டுரை இந்துவை விட இந்தியாவையே நிறைய ஆராய்கின்றது. அத்துடன் நீங்கள் என்னைக் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் ஈழவனின் கருத்துக்களை வாசித்து விட்டு பின் என் கருத்துக்களை வாசியுங்கள் புரியும். மேலும் நான் ஆரம்பத்திலேயே தெளிவாகவே ஒல்லாந்தர் போத்துகீசர் ஆங்கிலேயர் என்றே குறிப்பிட்டிருக்கின்றேன். பின்பு தான் பொதுவாக ஐரோப்பியர் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். ஆகவே இதுபற்றி நீங்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

மதுரன்

நீங்கள் ஏற்கனவே குறுக்ஸ் தந்த இணைப்பிலுள்ளதை அப்படியே இணைத்துள்ளீர்கள். இப்படி தற்போது பலர் செய்த ஆய்வுகள் வருகின்றன. ஆனால் அந்த ஆய்வுகள் யாவும் ஒரு குறிப்பிட்ட குழுக்களினாலேயே நடாத்தப் படுகின்றன. இவர்கள் முன்னய தமிழ் ஆய்வுகளையும் குறை சொல்வதிலேயே நிற்கின்றார்கள். விஜயனின் வருகையும் பொய் என்பது யோசிக்க வைக்கின்றது. ஆனால் நிச்சயமாக சில இந்திய வரலாறுகளிலும் இவ்விடயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றையும் ஆராய்தல் அவசியம். அதே போல் கட்டுரை ஆசிரியர் துட்டகாமினி என்று குறிப்பிடுவது துட்டகைமுனுவை என்று நினைக்கின்றேன். எல்லாளனுக்கு துட்டகைமுனுவால் கட்டப்பட்ட சமாதி இன்றும் பொலநறுவையில்(என்று ஞர்பகம்) காணப்படுகின்றது. அத்துடன் மகாவம்சம் எப்படி மாற்றியமைக்கப் பட்டாலும் இறுதியாக இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருக்கும் அப்போதய நிலமை பற்றிய தரவுகள் எமக்கு உதவலாம்.

அப்படியாயின் திரிபுகளற்ற ஆதாரங்கள் என்றா குறிப்பிட முனைகின்றீர்கள் வசம்பு அவர்களே. அதாவது கட்டுரையாளர் மகாவம்சத்தை உருவாக்கியவர்கள் பற்றிய செய்தி இரண்டினை தந்திருக்கின்றார். அதனை மறுதலிக்கின்றீர்களா? அதே போன்று இந்து என்னும் சொல்லின் விளக்கம் வினாவுகின்றார்களே அதன் பொருளை விளக்காது. பகவத்கீதை இராமாயணம் போன்ற கற்கனைக் கதைகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் என்ன??? சைவம் சமணம் போன்ற சமையங்களை இந்து மதத்தின் பிற பிரிவுகள் என்று கூறிய. இவர்களில் சிலர்தான். பிறமதங்களையும் இந்துமதத்துள் அடக்க முயன்றவர்கள். யேசு, அல்லா, கூடவே காந்தியையும் இணைத்து எல்லோரும் பரமாத்மாவின் அவதாரங்களே என வியாக்கியானம் செய்பவர்களும் இருக்கும்பொழுது ஏன் திரிபுகள் இருக்காதென எண்ணக்கூடாது?

கடவுள் இருக்கின்றார இல்லையா என்பத விட்டுவிடுவோம். ஆனால் இராமாயணத்தில் கூறப்படுபது போன்று குறங்குகள் இராமனுக்கு உதவியதாக கூறப்படும் கதையினை கேட்டபின்பும். திரிபுகள் இல்லை ஒரு பக்க சார்பான வாதம் என நீங்கள் எதுக்குவீர்களே ஆனால், நாமும் கூறுவதைப்போன்று கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. இந்து சமயத்திலோ அல்லது புத்த சமயத்திலோ பலநிலை வாதங்களாக அவை பிரதிபலிக்கவில்லை என்கின்ற பொழுது ஏன் தமிழர்களின் ஆய்வுகளை பலநிலை வாதங்களாக இருக்கவேண்டும் என எதிர் பார்க்கின்றீர்கள்??

தத்துவ ஆசிரியர் பாலசிங்கம் அண்ணன் அவர்கள் சொன்னதைப்போலா. புத்த பெருமான் இந்து மதத்தை அடியோடு வெறுத்தார் என்கின்ற பொழுது. அவரை ஒரு கடவுளாக மாற்றி தமிழருக்கு எதிராக திருப்பும் முயற்சில் ஈடு பட்ட கும்பலை பற்றி தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

நீங்கள் எந்த கருத்தியல் நிலையில் நின்று சிந்தித்தாலும். உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதே எனது நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அன்பின் வசம்பு

இந்து என்னும் பகுப்பாய்வு இந்தியாவைப் பகுப்பாய்வதாய் விரிந்திருப்பதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்கலாம் எனக்கில்லை.இந்தியா என்ற தேசமே இந்து என்னும் அடிப்படையில்தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்ற வாதத்தை முன்வைப்பதுதான் என நோக்கம் ஒழிய உங்கள் தேசப்பற்றையோ அல்லது இந்திய நாட்டையோ கிண்டலடிப்பது இல்லை.

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த விஜயன் பற்றி இலங்கையில் நூல் எழுதப்பட்டுள்ளது.ஆனால் இந்தியாவில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

Posted

அப்படியாயின் திரிபுகளற்ற ஆதாரங்கள் என்றா குறிப்பிட முனைகின்றீர்கள் வசம்பு அவர்களே. அதாவது கட்டுரையாளர் மகாவம்சத்தை உருவாக்கியவர்கள் பற்றிய செய்தி இரண்டினை தந்திருக்கின்றார். அதனை மறுதலிக்கின்றீர்களா? அதே போன்று இந்து என்னும் சொல்லின் விளக்கம் வினாவுகின்றார்களே அதன் பொருளை விளக்காது. பகவத்கீதை இராமாயணம் போன்ற கற்கனைக் கதைகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் என்ன??? சைவம் சமணம் போன்ற சமையங்களை இந்து மதத்தின் பிற பிரிவுகள் என்று கூறிய. இவர்களில் சிலர்தான். பிறமதங்களையும் இந்துமதத்துள் அடக்க முயன்றவர்கள். யேசு, அல்லா, கூடவே காந்தியையும் இணைத்து எல்லோரும் பரமாத்மாவின் அவதாரங்களே என வியாக்கியானம் செய்பவர்களும் இருக்கும்பொழுது ஏன் திரிபுகள் இருக்கும் என எண்ணக்கூடாது?

கடவுள் இருக்கின்றார இல்லையா என்பதை விட்டுவிடுவோம். ஆனால் இராமாயணத்தில் கூறப்படுபது போன்று குரங்குகள் இராமனுக்கு உதவியதாக கூறப்படும் கதையினை கேட்டபின்பும். திரிபுகள் இல்லை ஒரு பக்க சார்பான வாதம் என நீங்கள் ஒதுக்குவீர்களே ஆனால், நாம் அவர்கள் கூறுவதை நமது பெற்றோர்கள் கேட்டுக்கொண்டிருந்தது போல கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. சமஸ்கிருத போதனை நூல்களிலோ இல்லை பௌத்த போதனை நூல்களிலோ பலநிலை வாதங்களாகள் இல்லாத பொழுது, ஏன் தமிழர்களின் ஆய்வுகள் மட்டும் பலநிலை வாதங்களாக இருக்கவேண்டும் என எதிர் பார்க்கின்றீர்கள்??

தத்துவ ஆசிரியர் பாலசிங்கம் அண்ணன் அவர்கள் சொன்னதைப்போலா. புத்த பெருமான் இந்து மதத்தை அடியோடு வெறுத்தார் என்கின்ற பொழுது. அவரை ஒரு கடவுளாக மாற்றி தமிழருக்கு எதிராக திருப்பும் முயற்சில் ஈடு பட்ட கும்பலை பற்றி தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

நீங்கள் எந்த கருத்தியல் நிலையில் நின்று சிந்தித்தாலும். உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதே எனது நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வசம்பு மற்றும் ஈழவன் அனைவருக்கும்: நீங்கள் எந்த வரலாற்றை இப்போது கதைக்கிறீர்களோ அந்த வரலாறு எமக்கு புகட்டப்பட்டது மகாவம்ச்ததின் அடிப்படையில் தான். அதே போல இங்கு கட்டுரையாளர்களும் ஏதோ ஒரு நு}லின் அடிப்படையில் தங்களது எண்ணங்களை அதாவது எழுந்த மனதாக தாங்கள் நினைப்பதை..இப்படி தான் நடந்திருக்கும்..இப்படியும் நடந்திருக்கும் என்று ஆய்வு செய்கின்றனர். ஆய்வு என்பது அதுவல்ல..நான்கு பக்கத்தில் இருந்தும் ஆராய வேண்டும். இந்த ஆய்வை எழுத கணனியும் கணனியறிவும் மட்டும் போதாவது வரலாறும் அதன் பின்னணியும் தெரிய வேண்டும்! இந்த கட்டுரையாளருக்கு எந்த பிண்ணனி தெரியும்? வரலாறு ஏற்கனவே திரிக்கப்பட்டு கிடக்கிறது.. அதை மீண்டும் ஆய்வு என்ற பெயரில் பலர் திரிக்கின்றனர். இது எமக்கும் எமது எதிர்காலத்துக்கும் நல்ல விடையமன்று. எனவே ஆய்வாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் இதை கவனத்தில் கொண்டு எழுத வேண்டும். வெறும் யுூகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தால் எங்கள் வரலாறும் ஒரு யுூகமாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.