Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துனீசியாவின் 'முத்துக்குமார்'!

Featured Replies

துனீசியாவின் 'முத்துக்குமார்'!

- குளோபன்

மக்கள் புரட்சிக்கு வித்திட்டு, 23 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தியிருக்கிறது, துனிசிய இளைஞர் முகமது புவாஸிஸி-யின் தற்கொலை மரணம்!

கடந்த 1956 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்ற துனீசியாவில், 1987-ல் ஆட்சியைப் பிடித்து அதிபரானார் ஸின் அல்-ஆபிதின் பென் அலி.

அழகுமிகு கடற்கரைகளால் உலக உல்லாசப் பயணிகளை வசீகரித்த துனீசியாவுக்கு சுற்றுலாத் துறை மூலம் வருவாய் வெகுவாகக் கிடைத்தது. அதேவேளையில், பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியதோடு, தங்கள் வாழ்வாதாரத்துக்கும் வழியின்றி வாடித் தவித்தனர்.

அதிபரின் குடும்பமும், அதிகார வர்க்கமும் செழிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டதே தவிர, வறுமையில் உழலும் மக்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள், அவ்வப்போது மாயமாக்கப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்கட்சிக்காரர்கள், தடைச் செய்யப்படும் தொழிற்சங்கங்கள், ஒடுக்கப்படும் போராட்டக்காரர்கள் ... இப்படி வெளிப்படையாக சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த பென் அலிக்குத் தான் முற்றுப் புள்ளி வைத்துள்ளது, முகமதுவின் தற்கொலை மரணம்!

புரட்சிக்கு வித்திட்ட 'முடிவு'

பட்டதாரி இளைஞரான முகமது புவாஸிஸி (வயது 26) படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காத நிலையில், தனது குடும்பத்தைக் காப்பாற்ற, வீதியில் காய்கறி விற்கத் தொடங்கினார். அவரை ஒவ்வொரு நாளும் லஞ்சம் கேட்டு இம்சித்தது, உள்ளூர் போலீஸ்.

டிசம்பர் 17,2010... உரிமம் இல்லாமல் கடை போட்டிருப்பதாகக் கூறி, ஒரு பெண் போலீஸ் மிரட்டலுக்கு ஆளானார், முகமது. அத்துடன், இழிவான வார்த்தைகளால் திட்டிய அந்தப் போலீஸ், முகமதுவின் கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

சிறுமைப்படுத்தப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத முகமது, உள்ளூர் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார். எவ்வளவு அழுது புரண்டும், அதிகாரிகளின் கதவுகள் திறக்கப்படவில்லை.

வீதிக்குத் திரும்பிய முகமது, சாமானியனை உதாசினப்படுத்திய அதிகார வர்க்கத்துக்கு எதிர்ப்பைப் பதிவுச் செய்ய தனது உடலை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டார். உடல் கருகிய நிலையில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட முகமது, ஜனவரி 4-ல் மரணமடைந்தார்.

இந்தச் செய்தி, தீயாகப் பரவியது. கொந்தளித்தனர் துனீசியா மக்கள். வெடித்தது புரட்சி!

முகம் தெரியா முகமதுவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஆயிரக் கணக்கான வேலையில்லா பட்டதாரி இளைஞர்களின் கோபம், அரசின் பக்கம் திரும்பியது. வீதிகளில் போராடத் தொடங்கிய இளைஞர்களுடன், எல்லா தரப்பு மக்களும் கைகோர்த்தனர். ஸ்தம்பித்தது அரசு.

வழக்கம்போல், அடக்குமுறை ஆயுதத்தால் மக்களை ஒடுக்க முனைந்த அரசால், இம்முறை வெற்றி பெற முடியவில்லை. 78 உயிர்களைச் சாய்க்க முடிந்ததே தவிர மக்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இளைஞர்களின் ஆயுதமான இணையம்!

ஊடகங்கள் முடக்கப்பட்ட துனீசியாவில், முகமது மரணத்துக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியை உலககுக்குக் கொண்டுச் செல்ல, இணையத்தை நாடினர் அந்நாட்டு இளைஞர்கள்.

தங்கள் புரட்சியை இணையத்தில் பேஸ்புக், டிவிட்டர் சமூகத் தளங்களின் மூலமாகவும், யூடியூப் வாயிலாகவும் சர்வதேச கவனத்துக்குக் கொண்டுச் சென்றனர்.

இதன் பலனாக, துனீசியாவைக் கண்டுகொள்ளாத சர்வதேச ஊடகங்களின் பார்வை, அந்நாட்டின் மீது பதிந்தது. மக்களின் எழுச்சியும் உச்சத்தைத் தொட்டது.

நிலைமைக் கையை மீறிச் சென்றதை உணர்ந்த அதிபர் பென் அலி, தனது குடும்பத்தோடு சவுதி அரேபியா தப்பிச் சென்றார்.

மீண்டது துனீசியா.

தன் இனத்தைக் காப்பதற்கு உயிர் நீத்த முத்துக்குமாரின் முடிவு, இங்கு சில பல காரணங்களால் 'முடிந்து' போயிருக்கலாம்...

துனிசிய 'முத்துக்குமார்' முகமதுவின் முடிவு, ஒத்தப் பிரச்னைகளில் முடக்கப்பட்டிருக்கும் சக அரபு நாடுகளிலும் விதையாக முளைக்கும் சூழலை உருவாக்கியிருப்பது, புதைக்க முடியாத உண்மை!

http://new.vikatan.com/article.php?mid=10&sid=59&aid=1983

தமிழ் நாட்டில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது, ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது, நிச்சியம் விடிவு கிடைக்கும்

Self-immolation is horrifying. Yet the pent-up turmoil and despair to which it gives graphic expression has the potential to move masses to action.

Bouazizi: The Man Who Set Himself and Tunisia on Fire

Such was the case with Muhammad Bouazizi, a 26-yearold Tunisian college graduate who set himself on fire last month. Unable to find employment commensurate with his skills, Bouazizi settled for peddling fruits and vegetables in his home town. He became despondent when security forces brutally destroyed his unlicensed cart and confiscated his wares. His desperate act of protest touched a nerve with educated Tunisian youths in situations similar to Bouazizi’s and helped spark a revolution.

He is now famous throughout Tunisia and the Arab world — a legend, in fact. But Mohammed Bouazizi never set out to be a byword.

Read more: http://www.time.com/time/world/article/0,8599,2043557,00.html#ixzz1C2mj1pol

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது, ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது, நிச்சியம் விடிவு கிடைக்கும்

முதலில் சிரிப்பு வந்தாலும் தற்போதைய தமிழகத்தின் நிலை கவலைக்கிடம்..! :(

வழக்கம்போல், அடக்குமுறை ஆயுதத்தால் மக்களை ஒடுக்க முனைந்த அரசால், இம்முறை வெற்றி பெற முடியவில்லை. 78 உயிர்களைச் சாய்க்க முடிந்ததே தவிர மக்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

துனிசிய அதிபருக்கு மூளை காணாது..! :unsure: புரட்சி தொடங்கிய மறுநிமிடமே தானும் அதில் கலந்துகொண்டு மனித சங்கிலி, உண்ணாநோன்பு, கடிதம் எழுதுதல் என்று இறங்கியிருந்தால் இன்னும் பதவியில் ஒய்யாரமாக ஒட்டியிருக்கலாமே??! :(:D

துனிசிய அதிபருக்கு மூளை காணாது..! :unsure: புரட்சி தொடங்கிய மறுநிமிடமே தானும் அதில் கலந்துகொண்டு மனித சங்கிலி, உண்ணாநோன்பு, கடிதம் எழுதுதல் என்று இறங்கியிருந்தால் இன்னும் பதவியில் ஒய்யாரமாக ஒட்டியிருக்கலாமே??! :(:D

ஆபிரிக்கா,மற்றும் அரபு நாடுகளில் சண் தொல்லை காட்சிகளை ஒளிபரப்பும் படி மேதகு இசையை கேட்டுக்கொள்கிறேன் :D:lol:

ஆபிரிக்கா,மற்றும் அரபு நாடுகளில் சண் தொல்லை காட்சிகளை ஒளிபரப்பும் படி மேதகு இசையை கேட்டுக்கொள்கிறேன் :D:lol:

பக்கத்து வீடு பத்தி எரிஞ்சாலும் மானாட மயில் ஆடி இருக்க வேணும் எண்டதை விட்டு போட்டியள்....

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்கா,மற்றும் அரபு நாடுகளில் சண் தொல்லை காட்சிகளை ஒளிபரப்பும் படி மேதகு இசையை கேட்டுக்கொள்கிறேன் :D:lol:

:D :D நெல்லிக்கனி பார்ட்னரா வருவாங்களா? :wub:

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.