Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடநம்பிக்கையை மூலதனமாக்கி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூடநம்பிக்கையை மூலதனமாக்கி...

இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான்.

மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும்.

‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒரு பிராணிதானே. அது மட்டும் என்ன மனிதனுக்கு கேடுவிளைய வேண்டும் என்று விரதம் இருந்து வேள்வியா நடத்துகிறது! இந்தப் பூனைக் குறுக்கே வந்தால்…. இதற்கு ஒரு கதையே உண்டு. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் குருகுல கல்விதான் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாணவர்கள் அந்த குருகுலத்தில் தங்கியிருந்து படித்தார்கள். (கட் அடிப்போம். கலர் பார்ப்போம் கதையெல்லாம் இங்கே நடக்காது.) அப்படி ஒரு குருகுலத்தில் குரு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். அவர்கள் வளர்த்த பூனை ஒன்று ஒருநாள் குருவுக்கும் மாணவர்களுக்கும் நடுவிலே நடந்து சென்றது. இதனால் சில நிமிடங்கள் மாணவர்களின் கவனம் குரு நடத்தும் பாடத்தில் செல்லாமல் பூனையிடம் சென்றது. இதே போல் மறுநாளும் பாடம் நடத்தும் வேளையில் பூனை குறுக்கே நடக்க மாணவர்களின் கவனம் சிதறியது.

அடுத்த நாள் அதே நேரத்தில் மாணவர்கள் ‘நீ வருவாயா…’ என்று பூனையின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். பார்த்தார் குரு. ‘பாளாய்ப போன பூனையால் பாடம் நடத்துவது தடைபடுகிறதே. இனிமேல் இந்தப் பூனை இப்படிக் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும். மாணவர்கள் ஒழுங்காகப் பாடத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதற்கு ஒரு முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

மறுநாளிலிருந்து பாடம் நடத்தும் வேளைகளில் ‘வாராய் நீ வாராய்’ என்று அந்தப் பூனையைப் பிடித்து கட்டிப்போட்டு விட்டார்.

இந்தப் பூனை குறுக்கே வந்த கதையைத்தான் திரியாக்கிப் பற்ற வைத்து பந்தமாக எறியவிட்டு கடைசியில் சகுனமாக்கி விட்டார்கள்.

திரைப் படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ அதே போல் மூடநம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே மணிபிளாண்ட்போல் வளர்த்து வருவதில் தனது பங்கைச் செவ்வனே செய்கிறது.

ஒரு பிரபல தொலைக்காட்சியில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலத் தொடரில் பல வாரங்களுககும் மேலாக ஒரு பச்சிளம் குழந்தையை மையப்படுத்தி ஒரு காட்சியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உடுக்கை அடித்து வெற்றிலையில் மை போட்டுப்பார்த்துஇ பச்சிளங் குழந்தையைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்குமாம்!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்!

பழைய மாயாஜாலக் கதைகளில் மனித உயிரைப் பலி கொடுத்து புதையலை எடுக்க முயற்சிப்பதைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் எந்தக் கதையிலாவது எந்த மந்திரவாதியாவது புதையலை எடுத்து அதன்பின்பு ‘பொன் மகள் வந்தாள்…’ என்று மகிழ்ச்சியாகப் பாடி ஆடி பல நூறு வருடங்கள் வாழ்ந்தான் என்று படித்திருக்கிறோமா?

மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் இப்படியொரு உடுக்கை ஜோசியம் அவசியம்தானா?

‘மகாஜனங்களே! யோசித்துப் பாருங்கள். உட்கார்ந்து யோசியுங்கள். நின்று கொண்டு யோசியுங்கள். கழிவறைத் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள். அம்மா யோசியுங்க. அய்யா யோசியுங்க.’ என்று கவுண்டமணிபோல் தொண்டை எலும்பு தெறிக்க கத்தினாலாவாது இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?

நான்கு தெருவுக்கு ஒரு சோதிடரும் நாலு ஊருக்கு ஒரு சாமியாரும் காணப்படுகிறார்கள். சிலர் தும்மல் வந்தால்கூட மஞ்சள் பையில் சாதகத்தைத் திணித்துக் கொண்டு சோதிடர் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்திவிடுவார்கள். சிலர் காலையில் எழும்பும்போது மனைவி முகத்தில் விழிப்பதா? வேலைக்காரி முகத்தில் விழிப்பதா? என்று தனது ஆஸ்தான சோதிடரிம் ஆலோசனைக் கேட்டுத்தான் கண்ணை விழிக்கிறார்கள்.

கற்பூரச் சாமியார், சாம்பிராணிச் சாமியார், ஊதுவத்திச் சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்கள். இப்பொழுது பீர் சாமியார், பிராந்திச் சாமியார் என்று மதுரசப் பெயர்களைக் கொண்டவர்கள் காவிகட்டி நெற்றி நிறைய நீரு பூசி ‘எங்கேயும் எப்போதும்…’ என்று பாடித் திரிய ஆரம்பித்து விட்டார்கள் நம்ம பழனிச் சாமியார்போல்.

இந்தக் கற்பூரச் சாமியாரைப் பற்றித் தெரிந்து கொண்டால் மற்றவர்களும் எப்படி மக்களுக்குக் கற்பூரம் காட்டி மயக்குகிறார்;கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கற்பூரச் சாமியாரைப் பார்ப்பதற்காக நம்ம பாப்பாபட்டி ராமசாமி இடைநில்லாப் பேருந்தில் ஏறி ஒரு நகரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்தில் ஏறி ஒரு கிராமத்தைத் தாண்டி ஒற்றையடிப்பாதைச் செல்லும் இடத்தில் இறங்கினார். அந்த இடத்திற்குப் பெயர் ‘கற்பூரச் சாமியார் விலக்கு.’ (பேர் ஃபேமஸ் ஆயிடுச்சில்ல. பேரு வச்சிர மாட்டோமா என்ன!)

ஓற்றையடிப்பாதை சாமியாரிடம் குறிகேட்க வந்த கேணையர்களால் (தன்னை நாடி வருபவர்களுக்கு சாமியார்கள் வைக்கும் பெயர் இப்படித்தான்) கார்செல்லும் பாதையாக மாறியிருந்தது.

சாமியாரின் வாசஸ்தலம் அருகே ஒரு கடை இருக்கும். அங்கே சாமியாரைச் சந்திக்க வருபவர்களின் நலன் கருதி டீயிலிருந்து டிபன் வரை விற்கப்படும். இருபது ரூபாயக்கு கற்பூரம் வாங்கிக் கொண்டு சென்றால்தான் சாமியாரைச் சந்திக்க முடியும். (அந்தக் கற்பூரம் மீண்டும் கடைக்கே வந்து சேர்ந்துவிடும் என்ற ரகசியம் கடைக்கார வெள்ளச்சாமிக்கும் கற்பூரசாமியாருக்கும் உள்ள ஜென்டில்மேன் அக்ரிமென்ட்)

சாமியாரை என்ன அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியுமா! காத்திருந்து காத்திருந்து காலமும் நேரமும்தான் போய்க் கொண்டிருக்கும். சாமியார் அடையாளம் சொல்லி அழைக்கப் படுபவர்கள்தான் அவரைச் சந்திக்க முடியும்.

மற்றவர்களெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என்று சாமியாரிடமிருந்து அழைப்பு வரும்வரைக் காத்திருக்க வேண்டும். சரி காத்திருந்து காத்திருந்து நாவரண்டு விட்டது என்று டீ சாப்பிட கடைக்குச் சென்றால் அங்கே சாமியாரின் கையாள் கடைக்கார வெள்ளச்சாமி டீயைக் கொடுத்து பணத்தையும், வாயைக் கொடுத்து மனதிருப்தையும் வாங்கி விடுவான்.

அவனருகில் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும் கைத்தடிகள் விஷயத்தைச் சேகரித்து, சாமியாரிடம் சரியாகச் சேர்த்து விடுவார்கள். குறிகேட்க வந்திருக்கும் கூட்டத்தில் அமர்ந்த்திருக்கும் நம்ம ராமசாமி ‘சாமியார் நம்மளைக் கூப்பிட மாட்டாரா’ என்று ஆவலோடு காத்திருக்கும் நேரத்தில் ஒருவன் உள்ளேயிருந்து வந்து

“இங்கே பச்சைச் சட்டை போட்டவன், தென்கிழக்குத் திசையிலிருந்து மகளின் கல்யாணக் காரியமாக வந்திருப்பவன் யார்.” என்று கேட்டவுடன் ராமசாமிக்கு இதயமெல்லாம் பளிச் பளிச்சென்று சீரியல் பல்புகள் கலர் கலராக எரிய ஆரம்பித்துவிடும்..

'ஆகா என்ன அற்புதம்! எவ்வளது லெக்கா (கிராமத்தில் அடையாளம் காணுதல் என்பதற்கு பேச்சு வழக்காக லெக்கு என்று சொல்வார்கள்.) சொல்லி கூப்பிடுறாரு!’ என்று பூரித்தப் போய் சாமியாரைக் காணச் செல்வார். (இப்படிப்பட்ட பூரிப்பான மனநிலையில்தான் பலர் தனது சொத்து, நகை, பணம் என்று சாமியார்களுக்குத் தாரை வார்த்துவிட்டு பின்பு தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்கிறார்கள்.)

இந்த ராமசாமி மூலமாக கற்புரச் சாமியாரின் புகழ் பாப்பாபட்டி மட்டமல்ல அதைச் சுற்றியுள்ள பத்துப் பட்டிக்கும் றெக்கை கட்டி பறந்து விடும். அப்புறம் என்ன! எண்பது கிலோ உடம்பில் ஐம்பது கிலோ தொப்பையைச் சுமந்து கொண்டு நம்ம காவல்துறை வீரர்கள் சாமியாரைத் தேடி வந்து பிடிக்கும் வரை அவர் காட்டில் பொன்மழையும் பெண்மழையும் மாதம் முப்பது மாரியாய்ப் பொழிந்து பொண்டிருக்கும்.

இந்தக் கற்பூரச் சாமியார் செய்யும் உத்திகளைத்தான் பெரும்பாலான சாமியார்கள் கையாண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படிப் பட்ட சாமியார்கள் எல்லாம் தொலைக்காட்சி நடிகர்கள்போல் என்றால் பெரிய திரை நடிகர்கள்போல் நாட்டையே ஏமாற்றும் சாமியார்களும் இருக்கிறார்கள்.

கடவுளை அமர்த்த வேண்டிய இடத்தில் இவர்கள் அமர்ந்து கொண்டு ‘தாங்கள் கடவுளின் அவதாரம்’ என்கிறார்கள். இதை நம்பியவர்கள் அவர்களுக்குப் பாதபூஜை செய்து பல இலக்க பணத்தை அள்ளி வழங்கி சாமரம் வீசி லாலி பாடுகிறார்கள். கேட்டால் இது கடவுளுக்குச் செய்யும் சேவை என்கிறார்கள்.

இந்தக் கடவுளின் அவதாரங்களுக்கு சுனாமிகளையும் சூறாவளிகளையும் ஏன் முன்பே கண்டு சொல்ல முடியவில்லை. இல்லை ஏன் நிறுத்த முடியவில்லை! இவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியுமா? இவர்களால் எதுவும் முடியாது. காரணம் சாமியார் என்ற முகமூடி அணிந்து சமுதாயத்தை ஏமாற்றும் இவர்களில் பலரும் சமூகவிரோதிகள் என்ற தீவிரவாதிகள் போன்றவர்கள்தான்.

(மீண்டும் மேலே சொன்ன கவுண்டமணி டயலாக்கை இந்த இடத்தில் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.)

நான்கு செருப்புத் தேய நடையாய் நடந்து நம்மிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சிபீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் கூட இதுபோன்றவர்களிடம் ஆசிபெற்று அரசியல் நடத்தும் நிலை ஏற்படுகிறது. இந்த அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைகளைவிட இதுபோன்ற சாமியார்களின் பாதங்களுக்குச் செய்யும் சேவைகள் அதிகம்.

அரசியல் வாதிகளிடம் மூடநம்பிக்கை அதிகம் என்பதை சமீபத்தில் கர்நாடக முதல்வராக மிகவும் குறுகிய காலம் மட்டும் பதிவியிலிருந்த மனிதர் விட்ட அறிக்கை உணர்த்தும். (இவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ஏவல் வைக்கப் பட்டதாம்)

என்ன கொடுமை சார் இது!! இன்னொரு வீரப்பன் வந்து இவர்களைப் போன்றவர்களைக் கடத்திக் கொண்டு போனால்தான் இவர்களிடமிருந்து மக்கள் தப்பிக்க வழி கிடைக்கும்.

உழைத்துக் கிடைக்கும் பலனைவிட குறுக்கு வழியில் கிடைக்கும் பலனையே அதிகம் எதிர்பாhக்கிறார்கள் மனிதர்கள். அதனால்தான் இந்த ஏமாற்று வேலைகளும் தங்கு தடையில்லாமல் எஃப் எம் வானொலிபோல் எல்லா இடங்களிலும் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மாறுமா சமுதாயம்? மாறாது ஆசையில்லா மனிதர்களாக அனைவரும் மாறும்வரை!!!!!. மனிதர்களே மனிதர்களை ஏமாற்றாதீர்கள்.

மரணத்திற்குப் பின்பு நீங்களும் தெய்வமாகலாம்.

கனிஷ்கா. தென்காசி.

http://malargal-kanish.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூட நம்பிக்கை என்றால் என்ன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூட நம்பிக்கை என்றால் என்ன

மூட நம்பிக்கையை புறந்தள்ளி வாழ்க்கையை வசந்தமாக்க உறுதுணை புரியும் பகுத்தறிவு

தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களில் அனேகம் பேர் மூடநம்பிக்கையில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். இன்றைய மிலேனியம் ஆண்டிலும் கூட இதனை அவர்கள் மேற்கொள்வது வியப்பிற்குரிய விடயமாகும்.

மூடநம்பிக்கை மக்களின் அறிவை மழுங்கவைத்து முட்டாள்தனமான செயற்பாட்டில் ஈடுபட வைக்கின்றது. அதற்காக பெரும் தொகையான பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பது கவலைக்குரிய விடயமாகும்.

சீர்குலைந்துள்ள சமுதாயம் தலைநிமிர்ந்து அனைவரும் ஒற்றுமையுடனும், சுபிட்சத்துடனும் வாழவேண்டுமானால் முதலில் பகுத்தறிவு திறனைப் பெறவேண்டும் என்பது நிதர்சனமாகும். ஏலவே மூடநம்பிக்கை என்றால் என்ன? பகுத்தறிவு என்றால் என்ன? என்பவற்றுக்கான விடையைக் காணுவது இங்கு உசிதமாகும்.

பூனை குறுக்கே சென்றால் சகுணம் சரியில்லை என்பது மூடநம்பிக்கை ஆகும். பகுத்தறிவு என்றால் எதையும் உடனே நம்பிவிடாமல் தனது மூளையைப் பயன்படுதுதி சிந்தித்துப் பார்ப்பதாகும். ஏன்? எதற்கு? எங்கு? எப்போது? எப்படி? என்ற வினாக்களை எழுப்புவது பகுத்தறிவு!

ஒருவீட்டில் முதியோர் மாலை ஆறு மணிக்குப் பின் அறையைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனைக் கூட்டி ஒரு மூலையில் ஒதுக்குவார்கள். அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் குப்பையை வெளியில் தள்ளமாட்டார்கள். இதற்கு காரணம் கேட்டால் சரியான பதில் பெறமுடியாத நிலைமை ஏற்படுகின்றது.

ஒருசிலர் இப்படிப் பதில் அளிப்பார்கள் அதாவது ‘விளக்கு வைத்த பின் வீட்டின் அறையைக் கூட்டி வெளியில் தள்ளினால் சீதேவியும் புறப்பட்டுச் சென்றுவிடுவாள். அவளுக்கு பதிலாக மூதேவி உள்ளே நுழைந்து விடுவாள்’ என்பார்கள்.

இது மூடநம்பிக்கைக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால் உண்மை நிலை என்றவென்று பார்ப்போமாகில் இரவு வேளையில் வீட்டைக் கூட்டும் போது அதற்குள் கண்ணுக்குப் புலப்படாத சிறிய தங்க நகையோ அல்லது பெறுமதிமிக்க பொருளோ எமது கவனக் குறைவால் விழுந்திருக்கலாம். அவற்றையும் குப்பையுடன் கூட்டி வெளியில் தள்ளினால் அவை காணாமல் போக வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த உண்மையை உணராதவர்கள் தான் மூதேவி – சீதேவி என்று கற்பனைக்கதையை உருவாக்குகின்றனர். அந்தோடு நின்றுவிடாது அவர்களது பிள்ளைகளுக்கும் இதனை உபதேசிக்கின்றனர். இதனால் பரம்பரை பரம்பரையாக இப்பழக்கம் தொடருகின்றது.

இடக் கையையும் இடக் காலையும் ராசியில்லாத உறுப்புகள் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் இடக் கால் இல்லாமல் மனிதனால் நடக்க முடியுமா? இடக்கையில்லாமல் துவிச்சக்கர வண்டியைத் தானும் ஒழுங்காக ஓட்ட முடியுமா?

வாசலில் உள்ள கதவு நிலை தலையில் அடித்துவிட்டால் செல்லுகின்ற காரியம் சித்தி பெறாது என்று எத்தனையோ பேர் விஜயத்தைக் கூட ரத்துச் செய்துவிட்டு அங்கலாய்ப்பதையும் காண்கின்றோம். அவர் வெளியேறும் போது முன் ஜாக்கிரதையாகச் சென்றிருந்தால் இச்சம்பவம் நடைபெற்றிருக்காது. ஆகவே இப்படியான துரதிர்ஷ்ட சம்பவம் நடைபெறுவதற்கு கவனக்குறைவே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஆபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் சிறுவனொருவனை மாயமனிதன் காப்பாற்றுவதாக சின்னத் திரையில் காண்பிக்கப்படுகின்றது. இதனை உன்னிப்பாக அவதானித்த பாலகர்கள் சிலர் தங்களுக்கும் இப்படியான ஆபத்து நேரும் வேளைகளில் மாயமனிதன் காப்பாற்றுவான்தானே என்று தவறுதலாக புரிந்துகொண்டு கிணற்றில் குதித்தல், ஆழ் கடலுக்குச் செல்லுதல், குன்றிலிருந்து கீழே விழுதல், மரம் உச்சியிலிருந்து கீழே குதித்தல் போன்ற பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

முடிவு அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் தமது இன்னுயிரை இழக்க வேண்டியும் ஏற்படலாம். சென்னை மாநகரில் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது. மகனின் உயிரைக் குடித்த இந்த தொலைக்காட்சி தொடரை நிறுத்த கட்டளை பிறப்பிக்குமாறு பெற்றோர்களினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாம் என்றும் அறிய முடிகின்றது.

அத்துடன் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை ரி. வி. மூலம் அறிந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இவை யாவும் மூட நம்பிக்கைக்கு உகந்த சான்றாகும்.

இனி கனவின் பலன்களைப் பார்ப்போம். கனவு என்றால் என்ன? கனவு என்பது ஒவ்வொருவருடைய அடி மனதில் புதைந்து கிடக்கும் ஆசைகளும், தீராத ஏக்கங்களும், கற்பனையுமே ஆகும். இந்த யதர்த்தத்தைப் புரியாதவர்கள் நல்ல கனவு, கெட்ட கனவு என்று தரம் பிரித்து மக்கள்களை முட்டாள்களாக்கியும் விடுகின்றனர்.

நபரொருவருக்கு ஒரு செயல் கனவில் கண்டதைப் போன்று நிஜத்திலும் நடந்திருக்கலாம் அதற்காக கனவுகள் எல்லாம் உண்மை என்று வாதிட முடியுமா? மனம் மூன்று வகைகளாக வகுக்கப்பட்டுள்ளது. வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்பனவே அவை. மனம் என்ற உறுப்பு தனியே கிடையாது மூளையைத்தான் மனம் என்கின்றோம்.

நல்லகாரியத்திற்குச் செல்லும் போது விதவையின் முகத்தில் விழிக்கக் கூடாது என்பது சிலரது கூற்றாகும். மேலும் குப்பை, விளக்குமாறு சிரிப்பே இல்லாத முகம் போன்றவற்றில் விழித்துச் சென்றால் கெட்ட காரியம் நடக்குமென்பது அவர்களது கருதாகும். ஒரு அரசியல்வாதி பணியொன்றை முடித்து தருவதற்கு பெற்றுக்கொள்ளும் பணம் லஞ்சம். ஒரு புரோகிதருக்கு கொடுக்கும் பணம் தட்சணை.

ஒரு பெண்ணை மணம் முடிக்க சம்பந்தி வீட்டார் வாங்கும் பணத்தை வரதட்சணை என்கின்றோம். அதேவேளை ஒன்றுமே இல்லாமல் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் ஏழைக்கு கொடுப்பது மட்டும் பிச்சை! என்று கெளரவக் குறைவாக அழைக்கின்றோம். இதனையும் மூட நம்பிக்கைகள் பட்டியலில் உள்ளடக்கலாம். ஏனெனில் எல்லாவற்றிற்கும் பணம்தான் முன்னிலை வகிக்கின்றது.

சொர்க்கமும் நரகமும் எங்கு உள்ளது? இந்த பூமியில்தான் இருக்கின்றது. ஆனால் அது மேல்லோகத்தில் தான் காணப்படுகின்றது. என்று கூறுபவர்களும் பலர் உள்ளனர். மனிதர்கள் நோய் வாய்ப்பட்டோ, விபத்தில் சிக்கியோ அல்லது இயற்கை அனர்த்தத்தில் அகப்பட்டோ இறந்துவிட்டால் சித்திரகுப்தனின் விசாரணைக்குப் பின்னர்.

புண்ணியம் செய்திருந்தால் சொர்க்கத்திற்கும் தீமை அல்லது பாபம் செய்திருந்தால் நரகத்திற்கும் செல்லவேண்டும். இது உண்மையானால் நரகம் நிரம்பி வழியும் என்றும் கூறலாம். ஒருவன் களிப்புடனும் சகல செளபாக்கியமுமாக வாழ்ந்து கொண்டிருந்தால் அதுதான் சொர்க்கம்! தொடர்ந்தும் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருந்தால் அதுதான் நரகம்!

ஒருபந்தை சுவரில் எறிந்தால் அது எப்படி நம்மை நோக்கி வருகிறதோ அதேபோல் அடுத்தவருக்கு தீங்குசெய்தால் அது அவனுக்கே திரும்ப வந்துசேரும் என்பது கண்கூடு.

கோமா என்று குறிப்பிடுகின்றார்களே அது என்ன? மூளை செயல்படாமல் இருப்பதுதான் கோமா. இந்த நிலையில் கூட இருதயம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

மற்றைய உறுப்புகள் எதுவும் செயற்படாது. இவர்களது மூளை செயல்படத் தொடங்கியதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். இறந்தவர்களின் உயிர் மீண்டும் இவ்வையத்தில் ஜனிக்கிறது என்பது பலரது கூற்றாகும். இது உறுதிப்படுத்த முடியாது நம்பிக்கை.

பேய் என்று ஒன்று இருக்கிறதா? இல்லை. அது மூடநம்பிக்கை இயேசு நாதருக்கு எதிராக சாத்தான் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இன்றைய உலகில் உள்ள மக்கள் பேய்க்குப் பல்வேறு நாமங்களையிட்டு அழைக்கின்றனர். பேய்பிடித்துவிட்டது. போய் அடித்துவிட்டது என்று கூறக் கேட்டுள்ளோம்.

மனநோயைத்தான் பேய்பிடித்து விட்டது என்று கூறுகின்றனர். அறிவற்றவர்கள் தான். பேய், பிசாசு, ஆவி, என்பவற்றை நம்புகின்றார்கள். அறிவியல்படி ஆராய்ந்து பார்ப்போமாகில் எல்லாமே பொய். இதுவும் மூட நம்பிக்கைதான்.

ஒரு பிள்ளையின் தாயும், தந்தையும் பல ஆசிரியர்களுக்கு சமனானவர்கள் என்பதை பெற்றோர் நின¨வுகூர வேண்டும். ஏலவே பெற்றோர் தமது குழந்தைகளுக்கு பகுத்தறிவை நன்கு போதித்து வளர்ப்பது உத்தமமாகும். பிள்ளைகளை சமூகத்தில் நல்லவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் மிளிரவைக்க முதலில் மூடநம்பிக்கையை புறந்தள்ள வேண்டும். இதற்கு பகுத்தறிவு உறுதுணை புரியுமென்பது திண்ணம்.

http://www.thinakaran.lk/2009/09/09/_art.asp?fn=d0909091&p=1

மூடநம்பிக்கை பற்றிய நல்ல விளக்கங்களை இணைத்தமைக்கு மிகவும் நன்றி நுணாவிலன் அண்ணா..! இவற்றினை வாசித்து சிலராவது தம் மூடநம்பிக்கைகளை தளர்த்தினால் அதுவே வெற்றிதான்.

எம் மக்களிடம் இருந்து மூடநம்பிக்கையை அகற்றுவது இலகுவான விடயம் அல்ல இருந்தாலும் அடிக்க அடிக்க அம்மியும் நகர்வது போல முயற்ச்சி செய்வோம்-வெல்வோம்

:)

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற வட மொழி சொல்லின் தமிழ் வடிவம். ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரிகக்லாம், ஜோதி என்ற வட சொல்லுக்கு தமிழில் ஒளி அல்லது ஒளிக்கதிர் என்று பொருள், இஷம் என்ற வடசொல்லுக்கு இயல் என்று பொருள். ஆக ஜோதிஷம் என்றால் ஒளிக்கதிரியியல் என்று பொருள்.

அதாவது சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள், மற்றும் சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, என்பது குறித்த விஞ்ஞானம் ஆகும்.

இந்த விஞ்ஞான யுகத்தில், கம்ப்யூட்டர் காலத்தில் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

இதே கேள்வியை நான் சற்று மாற்றி அமைக்கிறேன். ஜோதிடம் கலையா? விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா ?

1. ஜோதிடம் கலையா?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ஜோதிடத்தை எதிர்ப்பவர்களும் ஜோதிடத்தை கலை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் ஜோதிடம் கலை அல்ல.

காரணம், கலை என்பது மெய், வாய், கண்,மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களால் உணர்ந்து ரசிக்கக் கூடியது.

உதாரணமாக, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, சமையல் கலை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியல் (Astronomy)-ஐயும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. எனவே ஜோதிடம் கலை அல்ல.

பிறகு ஏன் காலங்காலமாக இன்று வரை ஜோதிடத்தை கலை என்று கூறி வருகின்றனர் என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம்.

இன்றைய அறிவியல் பாடங்களாகிய B.Sc (Bachelor of Science) Maths, Physics, Chemistry போனன்றவை சுமார் 40-45 ஆண்டுகளுக்கு முன் B.A (Bachelor of Arts) என்றுதான் வழங்கப்பட்டது. முன்பு கலையாக இருந்தவை இன்று அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அறிவியாலாளர்களும், கல்வியாளர்களும் ஜோதிடத்தை அறிவியலாக அங்கீகரிக்காமல் இருக்கின்றனர்.

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால் ஜோதிடம் அறிவியல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பது திண்ணம்.

2. ஜோதிடம் அஞ்ஞானமா? (மூடநம்பிக்கையா? அறிவீனமா?)

நிச்சயமாக ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. தனக்கு முன்னால் ஒரு திரையை வைத்துக் கொண்டு திரைக்கு பின்னால் எதுவுமே இல்லை என்று கூறுவதும், திரைக்கு பின்னால் ஏதேனும் (something) இருக்கலாம் என்ற அடிப்படை சந்தேகம் கூட எழாமல் திரைக்குப் பின்னால் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பதும், தனக்கு தெரியாத ஒரு பொருளை ( Subject or Concept) பொய், தவறு என்று விமர்சிப்பதுதான் அறிவீனம், மூட நம்பிக்கை, அஞ்ஞானம் ஆகும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள் - 355

அதாவது ஒரு பொருள் (Subject or Concept) எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மை, ஆழம் (Reality and Depth) இவற்றை ஆராய்ந்து அறிதலே அறிவு என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த அடிப்படையில் ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அடிப்படை கூட தெரியாமல் ஜோதிடத்தை பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் விமர்சிப்பது அறிவீனமே அன்றி அறிவுடமை ஆகாது.

3) ஜோதிடம் விஞ்ஞானமா? (அறிவியலா?)

இல்லை, அறிவியல் என்று தவறாக எழுதி விட்டேன். உண்மையில் ஜோதிடம் ஒரு நுண் அறிவியல் (Micro Science) என்பதே சரி.

ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... வேடிக்கையாக இருக்கிறது... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்த இடத்தில் அறிவியல் என்றால் என்ன? என்பது பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவியல் பற்றி அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தனது Out of my later years -ல் கூறியிருப்பது.

Science is the attempt - to make the chaotic diversity of our sense experience - correspond to a logically uniform system of thoughts.

அதாவது ஒரு பொருளை (Subject or Concept) பகுத்து ஆராயும் போது கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட அனுபவங்களை, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும் முயற்சியே அறிவியல் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் மனிதர்கள் உடற்கட்டமைப்பில் ஒத்திருந்தாலும் கல்வி, வாழ்க்கைத்தரம், குணாதிசயங்கள், உடலில் ஏற்படும் நோய்... போன்றவற்றில் வேறுபட்டிருக்க காரணம் என்ன? என்பது பற்றி ஜோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்களாகிய சித்தர்களும், ஞானிகளும் ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தி தந்திருப்பதுதான் ஜோதிடம்.

சரி.... அப்படிஎன்றால் ஜோதிடத்தை அறிவியல் என்றுதானே கூற வேண்டும். நுண்விஞ்ஞானம் என்று கூறுவது எப்படி பொருந்தும்? என்று யாரோ கேட்கிறார்கள்.

அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜோதிடம் நுண்விஞ்ஞானம் என்பதற்கு ஒரு ஆதாரம் தருகிறேன்.

ஒரு 100 CC – மோட்டார்சைக்கிள்-நல்ல நிலையில் உள்ளது- ஒன்றில், ஓட்டுவதில் அனுபவமும் திறமையும் உள்ள ஒருவர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மற்றோரிடத்திற்க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம்.

வண்டியின் திறன், பெட்ரோலின் தன்மை, இடையில் ஓய்வு எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சீராக சென்றால் 5 மணி நேரத்தில் சென்றடைவார் என்று கூறுவது அறிவியல். இதைதான் அறிவியல் மூலம் கூற முடியும்.

ஆனால் இதனிலும் ஒரு படி மேலே போய் துவங்கிய பயணம் தடையின்றி முழுமையடையுமா? இடையில் தடை, தாமதம் ஏற்படுமா? என்பது பற்றியும் தெரிவிப்பது ஜோதிடம்.

எனவேதான் ஜோதிடம் அறிவியலை விட உயர்ந்து நுண் அறிவியலாக பரிணமித்து நிற்கிறது.

ஜோதிடம் மூடநம்பிக்கை, பயனற்றது என்று கூறுபவர்கள் நிச்சயமாக பகுத்தறிவாளர்களாகவோ,அறிவியலாளர்களாகவோ இருக்கமுடியாது. காரணம், இப்பூவுலகில் எந்த ஒரு பொருளையும் (Things (or) Subject (or) Concept) பயனற்றதாக இயற்கை அன்னை படைக்கவில்லை. ஒவ்வொரு பொருளும் ஏதாவதொரு விதத்தில் பயன்படும் என்பதே இயற்கையின் நியதி. உதாரணமாக பாம்பன விஷம்கூட விஷமுறிவுக்காகப் பயன்படுகிறது.

ஒரு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்லாமலேயே அதைப்பற்றி விமர்சிப்பவர்களை பகுத்தறிவுப் பாமரர்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஜோதிடம் மூடநம்பிக்கை, எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறுவது தற்காலத்தில் நாகரீகம் (fasion) ஆகிவிட்டது. உண்மையில் யார்யாரெல்லாம் ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று கிண்டல், கேலி செய்கிறார்களோ அவர்கள் அனைவருமே ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள், - இது ஊரறிந்த, நாடறிந்த ரகசியம்.

ஜோதிடம் மூடனம்பிக்கை இல்லை, ஜோதிடம் பயனுள்ளது, ஜோதிடம் விஞ்ஞானதைவிட உயர்ந்தது.

பண்டைய கிரேக்கர்களாலும், பபிலோனியர்களாலும், எகிப்தியர்களாலும் கோள்களையும், மனித வாழ்க்கையையும் சம்மந்தப் படுத்தி யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஜோதிடம்... என்பது வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களின் கருத்து. யூகங்கள் பெரும்பாலும் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். இப்படி இருக்க ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பகுத்தறிவுள்ள நாம் சிந்திக்க வேண்டாமா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் – 423

ஒரு பொருளைப்பற்றி யார் கூறியிருந்தாலும், கூறியவர் படித்தவரா? படிக்காதவரா? வறியவரா? செல்வந்தரா? வயதில் அல்லது அனுபவத்தில் பெரியவரா? சிறியவரா? மகானா? பாமரனா? யார் கூறியிருந்தாலும், கூறியவரைப் பற்றி சிந்திக்காமல் கூறப்பட்ட பொருளின் உண்மைத் தண்மையை ஆராய்வதே அறிவுடைமை ஆகும்.

ஜோதிடத்தை எழுதியது பாபிலோனியர்களா? கிரேக்கர்களா? என்பதல்ல பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, யூகங்கள் தவறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம், என்று வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களால் கூறப்பட்டதுதான் பிரச்சனை.

ஜோதிடம் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதைவிட, யூகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப்பட்டது என்பதுதான் மிகச்சரியானது.

விஞ்ஞானம் அல்லது அறிவியலின் அடிப்படையே யூகங்கள்தானே?
யூகம் இல்லாமல் அறிவியல் ஏது? அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று யூகிக்காமல் எப்படி ஆய்வை மேற்கொண்டு தொடர முடியும்?

அணுவைத்துளைத்து எழுகடல் புகுத்தி குறுக தறித்த குறள் – என்ற ஒளவையாரின் யூகத்தின் விஸ்வரூபம்தானே இன்றைய அணு விஞ்ஞானம்.

இரவையும் ஒளிர வைக்க முடியும் என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் யூகத்தின் விளைவுதானே இன்றைய மெர்குரி, சோடியம் வேப்பர், நியான் இன்னும் பலவிதமான மின் விளக்குகள்.

தந்திக் கம்பி மூலம் பேசமுடியும் என்ற கிரகாம் பெல்லின் யூகத்தின் அபரிதமான வளர்ச்சிதானே இன்றைய செல்போன்.

இப்படி யூகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்றைய விஞ்ஞானிகளின் அதிகப் பொருட்செலவில் செய்யப்பட ஆய்வுகள் தோல்வியடைந்திருக்கின்றனவே! எனவே விஞ்ஞானம் என்பது சுத்த ஹம்பக் என்று கூறுவது சரியாகுமா? நியாயம்தான் ஆகுமா?

அதுபோல ஜோதிடத்தை மூடநம்பிக்கை, ஹம்பக் என்று கூறுவது சரியல்ல. நியாயமும் அல்ல.

விஞ்ஞானிகள் யூகித்தால் அது விஞ்ஞானம், பழங்கால முனிவர்களும், சித்தர்களும் யூகித்தால் அது வெறும் யூகம். இது சரியா?

http://www.eegarai.net/t69106-topic

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.