Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தொடர்மாடியில் இடம்பெற்ற தீ விபத்தில் வன்னியைச் சேர்ந்த பெண்கள் இருவர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தொடர்மாடியில் இடம்பெற்ற தீ விபத்தில் வன்னியைச் சேர்ந்த பெண்கள் இருவர் பலி!

[saturday, 2011-02-05 06:08:22]

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் இருவர் லண்டன் தீவிபத்தில் மரணம் அடைந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு குடும்பப் பெண்கள் லண்டனில் 16 அடுக்குள்ள தொடர்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்துள்ளதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் (04-02-11) வெள்ளியன்று தென்கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையைச் சேர்ந்த தர்மலிங்கம் சந்திராவதி மற்றும் புதுக்குடியிருப்புவாசியாகிய அழகரத்தினம் ரஞ்சிதாதேவி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்மாடி வீடொன்றின் 16 ஆவது மாடியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தத் தீவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்தனர். அவசர முதலுதவிகளின் பின்னர் படுகாயமடைந்த மற்றுமொரு வன்னிப்பிரதேசப் பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்து சம்பவம் பற்றி அறிந்ததும் 50 பேர் கொண்ட தீயணைக்கும் படையைச் சேர்ந்த குழுவினர் கடும் முயற்சியின் பின்னர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினுள்ள சிக்கியிருந்த 6 பேரை மீட்டுள்ள லண்டன் தீயணைக்கும் படையினர், அந்தக் கட்டிடத்தில் இருந்து 35 பேரைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றபோதிலும். இது நாச வேலையாக இருக்கலாமோ என்பதைக் கண்டறிவதற்காக விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக லண்டன் பொலிசார் கூறியுள்ளனர்.

தீயினால் நாசமடைந்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவசர மாற்று குடியிருப்பு வசதிகளைச் செய்யும் நடவடிக்கைகளில் பொலிசாரும் லியுஷாம் பிரதேச உள்ளூராட்சி கவுனிசிலர் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

seithy.com

எங்களுக்குத்தான் ஒரே அழிவு :(

Edited by thappili

துக்கமான செய்தி. உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள்.

மேலும், புலபெயர் நாட்டில் வாழும் தமிழர்கள் இப்படியான தவிர்க்கப்படக்கூடிய இழப்புக்களில் இருந்து தம்மை காப்பாற்ற ஆவான் செய்ய வேண்டும். அதில் மிக முக்கியமானது:

  • "நெருப்பு அறிவுறுத்தல்" ( Fire Alarm) கருவியை வருடத்திற்கு இரு தடவை சரி பார்ப்பது;
  • அவற்றின் மின் கலங்களை (battery) மாற்றுவது
  • இவை பற்றி எமது ஊடகங்களும் கூடிய விழிப்புணர்வை மேற்கொள்ளல் வேண்டும்.

ஆழ்ந்த இரங்கல்கள் !

fire alarm வைத்திருப்பதோடு மட்டும் இல்லாமல் gas heater மற்றும் gasஅடுப்பு வைத்திருப்பவர்கள் (carbon monoxide detector) நச்சுவாவு கசிவு ஏற்ப்படும் போது அதனை உடனே கண்டறியும் கருவி வீட்டில் பொருத்துவது அத்தியாவசியமானது. அதிலும் battery சரியாக வேலை செய்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வது அதை விட முக்கியம்!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் எப்படித் தான் பாதுகாப்போடு இருந்தாலும் அந்த நேரத்தில் சாக வேண்டும் என விதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.

பொதுவாக மேற்கத்தைய நாடுகளுக்கு புதிதாக வந்தவர்கள் அந்த நாட்டில் உள்ள பல இலவச சேவைகளை, அத்தியாவசிய உதவிகளை சரியான முறையில் பாவிப்பதில்லை.

உதாரணத்திற்கு வட அமெரிக்காவில் தமக்கு உடல்நலம் பாதிக்கப்படும் பொழுது 911 கூட என்ற இலக்கத்தை உடனடியாக அழைப்பதில்லை, இதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் பலர் தவிர்க்ககூடிய ஆபத்துகளை சந்தித்துள்ளனர். இதற்காக பல சேவைகள், அறிவுறுத்தல்கள் தமிழிலும் உள்ளன.

:) கொஞ்சம் முயற்சித்தால் விதியை மதியால் வெல்லலாம் இல்லை கொஞ்சம் தூரத்தில் வைக்கலாம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் விபத்தில் தமிழர்கள் பலி, நெருப்பை மூட்டியவர் மறியலில்!

செவ்வாய், 08 பெப்ரவரி 2011 13:38

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள டெம்ஃபேட் என்கிற இடத்தில் அமைந்திருக்கும் 16 மாடிக் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கைத் தமிழ் பெண்கள் இருவர் உயிர் இழந்தமை தொடர்பான வழக்கில் அம்மாடிக் கட்டிடவாசிகளில் ஒருவரான Sandra Clarke (வயது-49) என்பவர் Camberwell Green நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு எதிராக கடந்த 06 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மனிதக் கொலைகளை புரிந்தார், உயிராபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக தீ மூட்டினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இறந்தவர்களின் சடலங்கள் நேற்று பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இச்சடலங்கள் உத்தியோகபூர்வமான முறையில் அடையாளம் காணப்பட்டன.

குணாளினி அழகரத்தினம் (வயது-42), சந்திராவதி தர்மலிங்கம் (வயது-59) ஆகியோரே இறந்தவர்கள் என்று பொலிஸார் அறிவித்து உள்ளனர்.

உறவினர்களை பார்க்க இவர்கள் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார்கள்.

tamilcnn

லங்காசிறீயில் ஒருவரின் அகாலமரணம் எனர அறிவித்தல் கொடுத்துள்ளார்கள்.

இரு பிள்ளைகளின் தாய்.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

இருவரின் மரண அறிவிதலும்போடபட்டு இருக்கிறது .........கொடுமை .

ஒரு மனநிலை சரியிலதவனின் செயலாய் இருக்கலாமோ ?

இருவரின் மரண அறிவிதலும்போடபட்டு இருக்கிறது .........கொடுமை .

ஒரு மனநிலை சரியிலதவனின் செயலாய் இருக்கலாமோ ?

பொதுவாக இப்படியான தீயூட்டல் சம்பவங்கள் பெருந்தொகை "நட்டஈடு" பணம் பெறுவதற்காக செய்யப்படுவது.

இந்த அவலத்திற்கு என்ன காரணம் என விசாரணைகளை பதில் சொல்லலாம்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளைப் பார்க்கச் சென்றவரே லண்டனில் பலி!

Wednesday, February 9, 2011, 3:56

லண்டனில் தங்கி உள்ள தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக லண்டனுக்கு வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திரமதி தர்மலிங்கம் (வயது 59) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார். கடந்த 6 வருடங்களாக லண்டனில் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தவரான திருமதி குணாலினி அழகரட்ணமும் (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

இவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். இரு பிள்ளைகளின் தாயார் ஆவார். அவரது இறுதிக் கிரியைகள் நடந்து முடிந்துள்ளன. இவர்கள் வசித்த 16 மாடிக் கட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கருகி இவர்கள் இருவரும் பலியாகினர்.

திருமதி தர்மலிங்கம் 2004ஆம் ஆண்டும் தனது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களுக்கு வந்து திரும்பியுள்ளார். 7 ஆண்டுகளின் பின்னர் அவர் மீண்டும் வந்த போது இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

“பயங்கரப் போருக்குள்சிக்கிய பின்னரும் அம்மா உயிருடன் எங்களிடம் வந்து சேர்ந்தார் என்று சந்தோசப்பட்டோம். ஆனால் தீ எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டது. அவரது இழப்பால் நானும் குடும் பத்தினரும் பெரும் துன்பம் அடைந்துள்ளோம்” என்றார் அவரது மகள் நந்தினி.

இரு பெண்களதும் சாவுக்குக் காரணமான தீயை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சான்ட்ராகிளார்க் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் அதே தொடர்மாடியில் வசிப்பவராவார். அவருக்கு எதிராக கம்பர்வெல் கிறீன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

இதையே தமிழன் செய்திருந்தால் அகதித் தமிழன் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டான் எண்டு பேப்பரில் எழுதுவினம். :unsure: இப்ப இது வெள்ளைப் பெண்மணி செய்ததுதானே.. பிரச்சினையில்லை..! :huh: மனநிலை சரியில்லை எண்டு சமாளிக்கலாம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=AXV8QPPqxEM&feature=player_embedded

இலங்கையில் போரில் தப்பிய என் தாயார், 7 வருடங்களின் பின்னர் எம்மைப் பார்ப்பதற்காக லண்டன் வந்து தீயில் கருகும் நிலை ஏற்பட்டு விட்டதாக, முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டன் ஊடகங்களுக்கு கவலையுடன் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் லூசியம், கிறீனிச் அருகிலுள்ள டெட்போர்ட் (Deptford) பகுதியிலுள்ள மரீன் ரவர் என்ற 16 அடுக்குமாடியில் (Marine Tower, Abinger Grove) இடம்பெற்ற தீ விபத்தில் 59 அகவையுடைய சந்திராபதி தர்மலிங்கம், 42 அகவையுடைய குணாழினி அழகரட்னம் ஆகியோர் உயிhழந்திருந்தனர்.

இவர்களில் ஐந்து பிள்ளைகளின் தாயாரான திருமதி சந்திராபதி 2004ஆம் ஆண்டு லண்டன் வந்து சென்ற பின்னர் மீண்டும் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பார்வையிட 7 வருடங்களின் பின்னர் வந்திருந்தார். இவர் தனது மைத்துனியான இரண்டு பிள்ளைகளின் தாயாரான குணாழினியைப் பார்வையிடச் சென்றபோதே அங்கு தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

இவர்களைக் காப்பாற்ற 50 பேர் வரையிலான தீயணைப்புப் படையினர் போராடிய போதிலும், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருந்தது.

இந்த இழப்பு பற்றி செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்க சந்திராபதியின் மகளான 38 அகவையுடைய நந்தினி, தனது தாயாரை 7 வருடங்களின் பின்னர், அதுவும் கொடிய போரில் இருந்து தப்பி வந்த அவரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்த போதிலும், அந்த மகிழ்ச்சி முழுவதும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அம்மாவின் இழப்பில் தானும் தனது குடும்பத்தினரும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமது தந்தை 2003ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், ஊரில் வாழந்த தாயார் 2004ஆம் ஆண்டு லண்டனிற்கும். பரிசிற்கும் வந்து தம்மைப் பார்த்துவிட்டுச் சென்றதாகவும், மீண்டும் வந்திருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்நிருப்பதாகவும் நந்தினி மேலும் கூறினார்.

நந்தினியின் சகோதரனான 33 அகவையுடைய சந்திரலிங்கம் கூறும்போது, தனது தாயாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவரது சிரிப்பு முகமே ஞாபகத்திற்கு வருவதாகக் கவலையுடன் தெரிவித்தார்.

தீயில் பலியான மற்றையவரான 42 அகவையுடைய குணாழினி அழகரட்னத்திற்கு 17 அகவையுடைய கோகிலவரதன், 5 அகவையுடைய கிசான் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருப்பதுடன், தாயகத்திலிருந்து கடந்த 6 வருடங்களின் முன்னரே இவர் லண்டனிலுள்ள தனது கணவர் பொன்னம்பலம் அழகரட்னத்துடன் வந்து இணைந்திருந்தார்.

குணாழினி பற்றிக் கூறிய அவரது உறவினரான லூசியத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய தரினாத் மகேந்திரராஜா, குணாழினி எப்பொழுதும் அனைவரையும் அன்பாகப் பராமரிக்கும் பழக்கம் உடையவர் எனவும், அவரது இழப்பை தம்மால் ஈடுசெய்ய முடியவில்லை எனவும், அவர் எப்பொழுதும் தனது பிள்ளைகளை நன்றாகக் கவனித்து, அவர்கள் சிறப்பாக கல்வி கற்கப் பாடுபட்டவர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இவர்கள் இருவரும் தீ விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும், தீ வைத்துக் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய காவல்துறையினர், குணாழியின் மாடித் தொடரின் பக்கத்து வீட்டில் வசித்த 49 அகவையுடைய சாள்ட்றா கிளார்க் (Sandra Clarke) என்பவரைக் கைது செய்து நேற்று (08-02-2011) கம்பர்வெல் கிறீன் (Camberwell Green) நீதிமன்றில் காணொளி வாயிலாக சாட்சியம் அளிக்க வைத்துள்ளனர். இவரை மீண்டும் எதிர்வரும் 14ஆம் நாள் வூளிச் கிறவுன் நீதிமன்றில் (Woolwich crown court) முன்னிறுத்தமாறு நீதியாளர் உத்தரவிட்டுள்ளார்.

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.