Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசிய தொலைக் காட்சியில் இன்று நிலவரம் நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள். .......................

  • Replies 58
  • Views 12.1k
  • Created
  • Last Reply

ஏன்............????? கொன்சம் விரிவாக சொன்னால் நல்லாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் இப்போது அதைத்தான்

பாத்துக் கொண்டிருக்கிறேன் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.....

.

ஆனால் மிக விரைவில்.........

என்னப்பா என்ன விடயம் :roll: :roll: :roll: :roll:

என்னப்பா ஒரே மர்மமாய் இருக்கு.. அப்படி என்னதான்

வரப்போகுது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசியதொலைக்காட்சிய அவையின்ர அனுமதியே இல்லாமல் லங்காசிறிக்காரர் போடுகினமாம். எங்கட தொலைக்காட்சி நிகழ்ச்சிய காசு குடுத்து பாக்காமல் இன்ரர்நெட்டில போடுறது சரியில்ல........இத லங்காசிறிக்காரரிட்ட யாராவது சொல்லி நிப்பாட்டுங்கோவன்..... வேணுமெண்டா அவையிட்ட அனுமதி வாங்கிட்டு போடலாந்தானே.....

அவை தமிழ் தேசிய தொலைக்காட்சி மாத்திரமல்ல எல்லா செய்திகளும் பிரசுரிமையை மதிக்காமல் தான் போடுறவை.

newstamilnet

lankasri

goodsrilanka

என பல இணைய முகவரிகளில் போடீனம்.

lankasri, goodsrilanka என்ற பெயர்களை ஏன் தெரிவு செய்தார்களோ?

தமிழீழ தேசிய தொலைக் காட்சியில் இன்று நிலவரம் நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள். .......................

ஈழமகன் எதிர்பார்க்கிறதை பாலகுமார் அண்ணை புலிகளின் குரலில் போனகிழமையே சொல்லிவிட்டார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்ணா அவை ஏதோ தாங்கள் கெட்டிக்காரர் எண்டுறமாதிரி தம்மட பாட்டுக்கு எல்லாத்தையும் அனுமதியள் எடுக்காம செய்யினம்...................இவைக்கெதிரா யாராவது வழக்கு போட்டா தான் திருந்துவினம்.......ஐரோப்பால இருந்துதான் யாரோ கொப்பியடிச்சு இன்ரர்நெட்டில போடுகினம் உத.........

இது தவறென்றால்

இங்கு எல்லாமே தவறுதான்.

அவரவர் நேரடியாகத்தான் செய்தி சேகரித்துப் போட வேண்டும்.

இந்த

நன்றி.

இணைப்புகள்

............................

எதுவுமே போடக் கூடாது.

இவைகளுக்கும் நாங்கள் அனுமதி பெற வேண்டும்.

நம்மைப் பற்றிய விடயங்கள்

இப்படியாகவே போனதால்தான்

இன்னும்

நாம் வெளியே தெரியாமல் இருக்கிறோம்.

நமது கலைகள் - வித்தைகள் - மட்டுமல்ல

பிரச்சனைகளும் இப்படியே உள் வீட்டு விவகாரமாகவே ஆகி விட்டது.

எனவே

இது ஒரு பாரதூரமான செயல் அல்ல.

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத

சட்லைட் இணைப்புகள் பெற முடியாத (கொடுக்க முடியாத) பலருக்கு

இது ஒரு வரப்பிரசாதம்.

அது மட்டுமல்ல

உலகெங்கும் பரந்து வாழும் எல்லோருக்கும் தொலைக் காட்சி நிகழ்வுகள் சென்றடையாது.

தவிர

இதனால் இவர்களுக்கு பணம் வருமானால் அதைக் கருத்தில் எடுப்பதில் தவறில்லை.

எல்லோருக்கும் செய்திகள் போய் சேர்கிறதே என மகிழ்வதே சரி.

அனைத்து தமிழர்களும் திறமை கொண்டவர்களானால் மட்டுமே

அந்த தமிழர் சமூகம் திறமையான சமூகம் என பெயர் எடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்றீங்க அயீவனண்ணா?????? ntt தொலைக்காட்சி அப்பிடியெண்டால் அவை இலவசமா எல்லாருக்கும் விடுவினந்தானே??????? அது ஊரில இருந்து யூரோப்பாக்கு எடுக்க எவளவு செலவெண்டு தெரியுந்தானே உங்களுக்கு....????????? சரி அப்பிடி நினைச்சிருந்தா ரிரிஎன்னுக்கு தனிய வெப்சைட் இருக்குதானே.....அவையே அத இலவசமா இன்ரர்நெட்டில போட்டிருப்பினந்தானே????? இவை லங்காசிறிக்காரர் எப்பிடி அத அனுமதியெடுக்காமல் போடலாம்???????எங்கட தொலைக்காட்சியள் பொருளாதாரத்தில வளந்தா பிறகு அவை தாங்களே இலவசமா எல்லாரும் பாக்கிறதுக்கு ஏத்த வழி செய்வினந்தானே?????? லங்காசிறிக் காரர் செய்யிறது தொலைக்காட்சின்ர வளர்ச்சிய குறைக்கும்தானே அண்ணா..... அப்பிடிப் பாத்தா யாழ் இணையம் ஏன் அப்ப ரிரிஎன்ஐ இன்ரர்நெட்டில எடுது்து போடேல?????????

ஒருகாலும் நிச்சயம் அப்படி ஆகாது.

விஞ்ஞான வளர்ச்சிகள் இப்படித்தான் வளர்ச்சி பெறுகின்றன.

தொலைக் காட்சிகள் வந்த போது

சினிமாக்காரர்கள் பயந்தார்கள்.

இதுபோன்ற

அச்சங்களும் கேள்விகளும் முதலில் ஏற்படுவதும்

அதை நிர்வர்த்தி செய்யவும்

முன்னோக்கிச் செல்லவும் தேடுதல்கள் கிடைப்பதும்

சரித்திரம்.

இங்கே பல நன்மைகள் இடம் பெறுகின்றன.

அதை இங்கே விவாதிக்க நான் விரும்பவில்லை.

நன்றி.

அனைவரும் திறமை கொண்டவர்களானால் மட்டுமே

அந்த சமூகம் திறமையான சமூகம் என பெயர் எடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியண்ணா அப்ப அத ரிரிஎன் தொலைக்காட்சியே தங்கட வெப்சைட்டில ntt தொலைக்காட்சி நிகழ்ச்சியள போடட்டுமன்..........??????? லங்காசிறி செய்வது சரியில்ல..............லங்காசிறிட்ட என்ன தேடுதல்கள் இருக்கெண்டுறீங்க????????? ரிரிஎன்னிட்ட அனுமதி வாங்காம அத கொப்பியடிச்சு இன்டர்நெட்டில போடுறதில என்ன தேடுதல் இருக்கு???????

ஓம் புூனைக்குட்டி உப்படியான இணையத்தளங்களை விடக்கூடாது. உவர்களின் விளையாட்டுக்களை கிளறினால்த்தான் யார் உவர்களின் உண்மையான வேர்கள் என்பதும் வெளிவரும். அப்போது பல ஆச்சரியப் படத்தக்க தகவல்களும் வெளிவரும்.

எமது செய்திகளும் கருத்துகளும்

இப்போது அனைவருக்கும்

போய்ச் சேர வேண்டும்.

அது எந்த வழியானாலும்..............சரி

நமது பிரச்சனை நமக்குத் தெரியும்

அடுத்தவருக்கு தெரிய வேண்டும்.

சமாதானப் பேச்சு வார்த்தைக்கு

தமிழீழத்தில் இருந்து வந்தவர்கள்

சமாதானத்தை வாங்கிச் செல்லவில்லை.

ஆனால்

தமிழர் துயர்களை விளக்கிச் சென்றார்கள்.

அங்கே

என்ன பிரச்சனை என்று கேட்டவர் வாயால்

அங்குள்ள பிரச்சனையை பேச வைத்துச் சென்றார்கள்.

அதுதான் வெற்றி.

இங்கே முழுத் தொலைக் காட்சி நிகழ்வுகளும் இல்லையே?

ஒரு சில முக்கிய நிகழ்வுகள்தானே இருக்கின்றன?

நன்றி.

வணக்கம்.

ஓம் புூனைக்குட்டி உப்படியான இணையத்தளங்களை விடக்கூடாது. உவர்களின் விளையாட்டுக்களை கிளறினால்த்தான் யார் உவர்களின் உண்மையான வேர்கள் என்பதும் வெளிவரும். அப்போது பல ஆச்சரியப் படத்தக்க தகவல்களும் வெளிவரும்.

முடிந்தால் :D

செய்தி நிறுவனங்களின் மீளபிரசுர உரிமையில் அவர்கள் இதைப்பற்றி கூறியிருப்பார்கள். உதாரணத்திற்கு TamilNet எடுத்தால் அவர்களுடைய XML/RSS feed பாவிப்பதற்கு முன் அனுமதி தேவையில்லை. ஆனால் அந்த feed இன் மூலம் TamiNet என்றதை மறைக்காமல் போட வேண்டும் என்கிறார்கள்.

பொதுவாக இலவசமாக கிடைக்கும் feeds எடுத்தால் அது செய்திநிறுவனங்களினால் செய்தியின் தலையங்கம் (மற்றும் அதுபற்றிய சிறு குறிப்பை) மாத்திரம் மற்றய இணையத்தளங்களுக்கு தானியங்கியாக அனுப்புகிறது. முழுச் செய்தியையும் படிக்க செய்திநிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தான் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் அவர்கள் அந்தச் சேவையை வழங்குகிறார்கள்.

XM/RSS feeds போன்ற தானியங்கிச் சேவைகளை வழங்காத தளங்களில் இருப்பவற்றை அதே போல் தலையங்கத்தையும் செய்திபற்றிய சிறு குறிப்பை மேலோட்டமாக எழுதி முழுச் செய்திக்கு இணைப்பை குடுப்பதில் என்ன தவறு? இதற்கு முன் அனுமதி தேவையாக தெரியவில்லை.

TamilNet தமது தளத்தில் விளம்பரங்கள் போடுவதில்லை. அந்த வகையில் அவர்களது செய்தியை விளம்பரம் போடும் இணையத்தளத்தில் முன் அனுமதியின்றி போடுவது தவறு.

புதினத்தை எடுத்தால் அவர்கள் தமது இணையத்தில் விளம்பரம் போடுகிறார்கள். அந்த வகையில் அவர்களுடைய செய்திகளை முன் அனுமதியின்றி இன்னொரு விளம்பரம் இல்லாத தளத்தில் போடுவதும் தவறு.

ஒரு இணையத்தில் பிரசுரிக்கப்படும் செய்தியை முழுமையாக வெட்டி ஒட்டி 20 வேறு இணையத்தில் போடுவதால் பலருக்கு போய்ச்சேரும் என்ற வாதம் சரியா? பல மூலங்களிலிருந்து வரும் சம்பந்தப்பட்ட செய்திகளை ஓரே பக்கத்தில் வாசகர்களின் வசதி கருதி வழங்க விரும்புபவர்கள் XML/RSS feeds போல தலையங்கத்தையும் சிறு குறிப்பையும் அல்லவா போடுவது நியாமானது?

தமிழ்த் தேசிய தொலைக்காட்சி நிகழ்சிகளின் சிறுபகுதிகளை ஒரு விளம்பரம் இல்லாத (வியாபார நோக்கோடு இல்லாமல்) இயங்கும் இணையத்தளம் போடுவதை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளலாம்.

நல்ல படைப்புகள், ஆக்கங்கள் எல்லோருக்கும் பிந்தியாவது போய்சேரவேணும் என்றால் அதற்கு தமிழ் ஒளி இணையத்தாரின் இணையத் தளத்திலேயோ சில நாட்களுக்கு பின்னராக உத்தியோகபூர்வமாக நிலவரம் போன்றவற்றை வழங்குவது சிறந்த அணுகு முறை.

நன்றி குறுக்காலபோவான்............

இவை பற்றி வெகுவாக பேச வேண்டி வரும்.

குறிப்பாக ஒவ்வொரு தேச சட்டங்கள் போல்

ஊடக சட்டங்களும் மாறுபடுகின்றன.

இலங்கை - இந்திய ஊடகவியல் பற்றிய நிலையிலிருந்து சிங்கப்பூரின் நிலை மாறுபட்டிருந்ததை கண்டேன்.

பின்னர் ஐரோப்பாவுக்குள் உள்ள நிலை

அதிலிருந்து முற்று முழுதாக வேறுபட்டே காணப்படுகிறது.

ஒரு சில நியதிகள் மட்டுமே விதிவிலக்காக இருப்பதைக் காண முடிகிறது.

இத் "தமிழீழ தேசிய தொலைக்காட்சியின்" ஒவ்வொரு நிகழ்சிகளும் செதுக்கப்பட்ட சிற்பங்கள்!!!!! அவற்றின் நிகழ்சிகள், புலத்தில் இருக்கும் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும்!! குறிப்பாக செய்திகள்/செய்தி ஆய்வுகள் உண்மைகளின் விம்பங்கள்!!!! இவைகளை உலகின் மூலைகளின் இருக்கும் ஒவ்வொரு தமிழர்களும் பார்ப்பதற்கு "லங்காசிறீ"யை விட மாற்று வழிகள் ஏதாவது உண்டா?????? எங்களுக்கு "அரிசியாக்கப் படுகிறது"!! அதுவே போதும்!!!!!!!

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

லங்கா சிறி மட்டுமல்ல நிதர்சனம் மற்றும் சில தளங்கள் புதினத்திலிருந்தும் செய்திகள் கொப்பியடித்து போடுகிறார்கள்.

அஜீவன் நீங்கள் கூறுவது போல தமிழ்நெட், சங்கதி, பதிவு, புதினம் ஆகியன தாமாகவே சில செய்திகளை சேகரித்து வெளியிடுகிறார்கள். சிலவேளை சங்கதி, பதிவும் கொப்பியடித்துத்தான் போடுகிறார்கள்.

ஒரு இணையத்தளத்திலிருந்து எடுத்து போடுகிற படங்கள், செய்திகளுக்கு நன்றி போடுவதால் நாம் எந்த வகையில் தரம் தாழ்ந்து விடுகிறோம்?

ஒரு செய்தியை மொழிபெயர்ப்பதற்கு நேரம் செலவழிக்கத்தானே வேண்டும்?

செய்தியை உறுதிப்படுத்த தொலைபேசி கட்டணம் யார் அவர்களுக்கு செலுத்துவார்கள்?

உயிராபத்துக்களின் மத்தியில் செய்தி சேகரிக்கிற நிருபர்களை நாம் மதிக்கின்றோமா?

இவற்றை ஒருகணம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். செய்திகள் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று நீங்கள் கூறலாம். அதனைத்தான் யாவரும் விரும்புவார்கள். ஏன் நன்றி என்ற வார்த்தைகளை அந்த அந்த இணையத்தள்த்திற்கு நாம் கொடுக்கக்கூடாது?

உதாரணத்திற்கு ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள். அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.

ஒவ்வொருவருடைய உழைப்புக்கு மதிப்புக் கொடுங்கள். சிலர் தம்மை வருத்தித்தான் பலவிடயங்களை செய்கிறார்கள். நிதர்சனம் இணையத்தளம் ஏதோ மாமியார் வீட்டுச் சொத்து போன்று பதிவு, சங்கதி, புதினத்தின் செய்திகளை கொப்பியடித்து போடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் மேற்படி தளங்களிலிருந்து எடுத்து போட்டு அந்த தளங்கள் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் திருத்தினால் நிதர்சனம் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை.

இது செய்திக்கு ஆரோக்கியமானதல்ல.

அதேவேளை இந்த களத்தில் செய்திகளை எடுத்துப் போடுபவர்களும் நம்பகத்தன்மையுள்ள இணையத்தளங்களின் செய்திகளையும் உண்மையான மூலம் யாருடையது என்று இனம் கண்டு இதில் போடுங்கள். அப்போதுதான் கொப்பியடித்து தமது செய்திகளாக போடுபவர்களின் வண்டவாளம் தெரியவரும்.

தமிழ் ஊடகத்துறை தற்போது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது. அதனை சரியான முறையில் நாம் ஊக்குவிக்க வேண்டும். பிறர் செய்திகளை தமது செய்திகளாக போடும் இணையத்தளங்களை புறக்கணியுங்கள்.

இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.

நிர்மலன்

உங்கள் ஆதங்கம் நியாயமானது.

ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.

அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.

நிர்மலனது வேதனை நியாயமானது.

ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள்.

அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.

இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?

இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.

உண்மை

என்றாலும் எனக்கொரு கவலை. லங்காசிறி என்று பெயரை வைத்துக் கொண்டு மற்றைய மொழிகளின் இணைப்பு இருக்கின்றது. ஆனால் சிங்களமொழி இணைப்பு இல்லையே. ஆரம்பித்தவர்கள் அதனையும் சேர்த்திருக்கலாமல்லவா??? :roll: :cry:

நிர்மலன்

உங்கள் ஆதங்கம் நியாயமானது.

ஒருவரது உழைப்புக்கு ஊதியம் கொடுக்கத்தான் மனசு இல்லை.

அவர்களை கெளரவிக்கவாவது மனசு வேண்டும்.

நிர்மலனது வேதனை நியாயமானது.

இதைப் பின்பற்றுவதில் என்ன பிரச்சினை?

உண்மை

நன்றி கூறி மூலத்தளத்தின் பெயரைப்போடுவதில் தப்பொன்றும் இல்லையே! :? அல்லது தாங்கள் தான் தந்ததாக இருக்கவேண்டும் என்ற வரட்டுப்பிடிவாதமா? :roll:

தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் தமிழீழ நிர்வாக கட்டமைப்பின் அலகுகள் பற்றிய விவரணம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் தமிழீழ நிர்வாக கட்டமைப்பின் அலகுகள் பற்றிய விவரணம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்கள்.

நல்ல முயற்சி.

பலருக்கு அங்கு இருக்கின்ற நிர்வாகத்தை பற்றி தெளிவாக புரிய வைக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.