Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம்

Featured Replies

அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்தகச் சட்டமூலங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் அந் நாட்டுப் பொலிஸாரால் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பங்குச்சந்தை நிலைவரத்தை முற்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் கூகிள், ஐ.பி.எம்., இன்டெல் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரியும் பங்கு நிலைவரம் தெரிந்த முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பங்குச்சந்தையில் சட்டவிரோதமான முறையில் இலாபம் ஈட்டியதாக இவர் மீதான வழக்கில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ராஜ் ராஜரட்ணம் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்களை இலாபம் ஈட்டியதாக இவ் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ் ராஜரட்னம் சுமார் 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுடன் உலகின் 549ஆம் இடத்தை வகிக்கும் கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6CF563EE-4CD8-4803-90DE-2C412738E087}

  • தொடங்கியவர்

ராஜ் செய்த insider dealing என்ன ?

இருபது மில்லியன் டாலர் பெறுமதியான insider dealing குற்றத்தை ராஜ் செய்திருப்பதாக தெரிய வருகிறது. அவை பின்வரும் பிரபலமான கம்பனியின் பங்குகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன International Business Machines (NYSE: IBM), Advanced Micro Devices (NYSE: AMD), and Sun Microsystems (NYSE: SUN). Other companies included Google (Nasdaq: GOOG), Polycom (Nasdaq: PLCM), and Hilton hotels. மூன்று மாதங்களாக அவரின் தொலைபேசியை ஓட்டுக்கேட்டதாகவும் , குற்றம் நிரூபிக்க பட்டு உள்ளதாகவும் , ராஜுடன் சேர்த்து மேலும் ஆறு முதலீட்டாளர்களும் கைது செய்ப்பட்டு இருப்பதாக FBI அறிவித்து இருக்கிறது.

"insider dealing" என்றால் என்ன?

ஒரு கம்பனியின் பிரசுரிப்பதற்கான நிதியறிக்கைகளை மட்டுமே அதன் பங்குதாரர்களோ அல்லது பொது மக்களோ பார்க்க முடியும் , இந்த அறிக்கைகள் மட்டுமே கம்பனி ஒன்றால் உத்தியோக பூர்வமாக பிரசுரிக்கப்படும் , இவை தவிர்ந்த சில பிரத்தியேகமான , பெறுமதியான தகவல்களும் செய்திகளும் ஒரு கம்பனியில் இரகசியமாக பேணப்படும். இது போன்ற பெறுமதியான தகவல்களையும் , நிதி நிலைமைகளையும் கம்பனியின் அனுமதி இல்லாமல் கசிய விடுதல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றன "insider dealing" என்று கொள்ளப்படும். இது போன்ற தகவல்களால் பங்குச்சந்தையில் செயற்கையான விளைவுகளை ஏற்படுத்தி இலாபம் அல்லது நட்ட நிலைமைகளை ஏற்படுத்தலாம், உதாரணமாக கூகிள் நிறுவனத்தில் நாற்பது வீதமான பங்குகள் microsoft நிறுவனத்துக்கு விற்கப்பட இருக்கிறது என்பதை கூகிள் ஊழியர் ஒருவர் மூன்றாம் நபரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்தினால் அதை insider dealing எண்டு சொல்லமுடியும்.

  • தொடங்கியவர்

இந்த insider dealing குற்றமாக இருப்பினும், ஒரு நிறுவனத்தின் பங்கையோ இல்லை ஒரு இயற்கை பொருளின் விலையை (commodities like Gold) எதிர்வு கூறுதலோ (hedging) ஒரு மிகப்பெரிய வியாபாரம், பங்கு சந்தையில். அதில் இன்று பிரபலமானவர் John Paulson ( http://en.wikipedia.org/wiki/John_Paulson ) கடந்த வருடம் இவரின் தனி நபர் இலாபம் 5 Billion USD. அமெரிக்காவின் வீட்டு விலை சரிவை எதிர்வு கூறி பல பில்லியன்களை உழைத்தவர்.

2012 தொடக்கம் அமெரிக்காவில் பணவீக்கம் வளரும் எனவும் அது அவ்வாறு வளரும் பொழுது அந்த எதிர்வு கூறல்களின் படி இவற்றின் கணிப்புக்கள் சரி வரும் எனில், இவர் உலகின் முதன்மை சட்டரீதியான பணக்கரார் ஆக கூடிய சந்தர்ப்பம் உள்ளது என கூறப்படுகின்றது.

How John Paulson Made $5 Billion in 2010

Paulson has told these investors that he’s placed 80% or so of his personal money in his firm’s gold share classes, as well as in a separate gold-focused fund that rose 35% last year. ( http://blogs.wsj.com/deals/2011/02/07/more-detail-on-how-john-paulson-made-5-billion-in-one-year/ )

www.youtube.com/watch?v=nurpwpam1GI

Edited by akootha

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையில் ஒரே நாளில் 40 லட்சம் டொலர் லாபமீட்டிய ராஜ் ராஜரட்ணம்

[Wednesday, 2011-03-23 12:26:47]

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணம், ஹில்டன் ஹோட்டல் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் மூலம் பங்குச் சந்தையில் ஒரே நாளில் 40 லட்சம் டொலர் லாபமீட்டியதாக அமெரிக்க நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த ஹோட்டலை பிளக்ஸ்டோன் குழும நிறுவனம் வாங்கிய போது இது நடந்ததாகவும் அமெரிக்க இந்தியர்கள் இருவர் இதில் சம்பந்தப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

உள்வீட்டு இரகசிய தகவல்களை பெற்று பங்குச் சந்தையில் முறையற்ற விதமாக லாபமீட்டினார் என ராஜ் ராஜரட்ணம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரையாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்களும் நீதிமன்றில் செவிமடுக்கப்பட்டன. இதன் மூலம், இன்டெல் நிறுவன மன்னாள் தலைவர் ராஜீவ் கோயல் எவ்வாறு இரகசிய தவல்களை ராஜ் ராஜரட்ணத்திற்கு வழங்கினார் என்பதை வழக்குத் தொடுநர்கள் வெளிப்படுத்தினர்.

இவ்வழக்கில் தான் குற்றவாளி என ராஜீவ் கோயல் ஏற்கெனவே ஒப்புககொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி.கொம்

  • கருத்துக்கள உறவுகள்
  • 1 month later...
  • தொடங்கியவர்

பங்குச் சந்தை மோசடியில் ராஜரத்தினம் மீதான குற்றம் நிரூபணம்! 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்படுமா?

கெலோன் குழும நிறுவனரும் தொழிலதிபருமான ராஜ் ராஜரட்ணம் உட்தகவல் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதோடு அவருக்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரையான சிறை தண்டனை வழங்கப்படலாமெனக் கூறப்படுகின்றது. ராஜரட்டணம் மீது சுமத்தப்பட்ட 14 வெவ்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய பங்குச் சந்தை மோசடி என கணிக்கப்படுவதோடு பங்கு வர்த்தக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி விவகாரமாகவும் உள்ளது.

இந்த மோசடி கண்டறியப்படுவதற்கு முன்புவரை ராஜரத்தினத்தின் வர்த்தக நிறுவனமான கெலோன் குழுமத்தினால் 8000 மில்லியன் டொலர் பெறுமதியான பங்குகள் நிர்வகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மேற்படி உட்தகவல் மோசடி மூலம் ராஜரட்ணம் 70 மில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Intel Capital நிறுவனத்தின் ராஜுவ் கூல் மற்றும், மதியுரை நிறுவனமான McKinsey இன் தலைவர் அனில் குமார் ஆகியோரோடு ராஜரட்ணம் கூட்டு-வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். றொபேட் முபாஃத், மற்றும் டாடியல் சியஷி ஆகியோர் இம்மோசடியின் ஏனைய தரப்புகளாகவுள்ளனர். 2007ஆம் ஆண்டிலேயே அமெரிக்க காவல்துறையினரால் இந்த உட்தகவல் பங்குச் சந்தை மோசடி கண்டறியப்பட்டது. காவல் துறைக்கு தகவல் கொடுத்த பெயர் குறிப்பிடாத நபர், உட்தகவல் மோசடி மூலம் தான் வணிகம் செய்தமையை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முடிவினை எடுத்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் பதிவுகள் இம் மோசடி மீதான விசாரணைகளில் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. ராஜ் ராஜரத்தினத்தின் பல தொலைபேசி உரையாடல்கள் முக்கிய சாட்சியங்களாக அமைந்துள்ளன. பங்குச் சந்தையைத் தீர்மானிக்கவல்ல நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் தொலைபேசி மூலம் பெறப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. உட்தகவல் பங்கு வணிகத்தில் Google, Polycom, Hilton Hotels மற்றும் IBM போன்ற ஏனைய பெரும் பங்கு நிறுவனங்களும் தொடர்புபட்டுள்ளன. குற்றம் சுமத்தப்பட்டுள்ள றொபேட் முபாஃத 2009ஆம் ஆண்டு IBM இல் தலைமைப் பதவி வகித்துள்ளார். இவரே ராஜரட்ணத்திற்கு தகவல்களைக் கசிய விட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 2009 மார்ச் மாதம், முபாஃத் தன்னைக் குற்றவாளியாக ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={F826CFB7-5DE6-4711-ACF5-46599DA65863}

UPDATE 1-Rajaratnam verdict shocks some at hedge fund event

Some hedge fund managers and investors attending a conference here audibly gasped when the news flashed on TV screens that Raj Rajaratnam had been convicted on all 14 counts of insider trading.

"Wow, gosh. I don't know what to say," whispered a prominent industry executive.

The executive was responding to a person standing next to him who muttered: "Guilty on all 14 counts."

http://www.reuters.com/article/2011/05/11/galleon-hedgefundmanagers-idUSN1118369020110511

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜ் ராஜரட்ணத்திற்கு 24 ஆண்டுகள் சிறை வழங்கப்படலாம்?!

Published on September 21, 2011-10:17 am

நிறுவனங்களின் உட்தகவல்களைப் பெற்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் சட்டவிரோதமான முறையில் இலாபமீட்டியமை தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட ராஜ் ராஜரட்ணத்திற்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறன்றது.

இதன்படி மன்ஹாட்டன் பெடரல் மாவட்ட நீதிமன்றத்தால் எதிர்வரும் 27ம் திகதி இவருக்கு 24 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவருக்கு 24 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மன்ஹாட்டன் பெடரல் மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்படும் முதலாவது நீண்டகால சிறைத் தண்டனை இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசுக்கு பெடரல் தீர்பளித்தல் வரமுறைக்கு அமைய ராஜ் ராநரட்ணத்துக்கு 19 தொடக்கம் 24 வருட சிறைத் தண்டனை வழங்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர் தனது குற்றங்களை மறைக்க முயற்சித்ததினால் அவர் அடிப்படையில் பொய்யான நேர்மையற்ற தனது குணாதிய வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவருக்கு கருணை ரீதியிலான தீர்ப்பு வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 24 வருட சிறைத் தண்டனை ராஜ் ராநரட்ணத்துக்கு அளிக்கப்படும் என செய்திகள் வெளியாகியதை அடுத்து அவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது கண்டிக்கத்தக்க வேடிக்கையானதொரு விடயம் என ராஜ் ராஜரட்ணத்தின் சட்டதரணியினர் தெரிவித்துள்ளனர்.

http://www.saritham.com/?p=35226

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு நிதி வழங்கியமை தொடர்பில் சான்றுகள் இல்லை

  • Saturday, October 1, 2011, 15:03

பங்கு பரிவர்த்தனை உள்ளக செயற்பாட்டு முரண் காரணமாக அமெரிக்காவில் தண்டனையினை எதிர்கொள்ளவுள்ள ராஜ் ராஜரட்ணம் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததற்கான எந்தச் சான்றுகளும் இல்லை என எவ்.பி.ஐ. தனது விசாரணையில் கூறியுள்ளது.இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரபல கோடீஸ்வரரான அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக “வானிட்டி பெயார்” என்னும் சஞ்சிகை தகவல் வெளியிட்டிருந்தது தெரிந்ததே.

http://www.tamilthai.com/?p=27488

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரான ராஜ்ராஜரட்ணத்துக்கு நாளை மறுதினம் அமெரிக்காவில் தீர்ப்பு!

[Tuesday, 2011-10-11 21:19:49]

அமெரிக்க பங்கு சந்தையில் மோசடி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள இலங்கையரான ராஜ்ராஜரட்ணத்தின் இறுதி தீர்ப்பு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது. 54 வயதான அவருக்கு, 23 வருடங்கள் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மொத்தமாக 70மில்லியன் டொலர்கள் வருமானத்தை நேர்மையான முறையிலேயே ஈட்டியுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

http://seithy.com/breifNews.php?newsID=50709&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

Rajaratnam sentenced to 11 years

Raj Rajaratnam, a self-made hedge fund tycoon convicted in the biggest Wall Street trading scandal in a generation, was ordered on Thursday to serve 11 years in prison, one of the longest sentences on record in an insider-trading case, but less than prosecutors had sought.

Prosecutors had asked U.S. District Judge Richard Holwell in Manhattan to impose a sentence of at least 19-1/2 years on the Galleon Group founder, the central figure in a sweeping criminal case that touched some of America’s top companies, including Goldman Sachs Group Inc., Intel Corp., IBM and the elite McKinsey & Company Inc. consultancy.

http://www.theglobeandmail.com/report-on-business/international-news/rajaratnam-sentenced-to-11-years/article2199924/

  • தொடங்கியவர்

ராஜ் ராஜரத்தினம்: 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இலங்கையில் பிறந்த பெரும் செல்வந்தரான ராஜ் ராஜரத்தினத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

நீயுயார்க்கில் வசித்து வந்த ராஜ் ராஜரத்தினம் பங்கு சந்தையில் உள் வியாபாரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றத்துக்கு வழங்கப்பட்ட அதிக கால தண்டனை இதுவேயாகும்.

முன்னணி நிறுவனங்களுக்குள் இருந்தவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட ராஜ் ராஜரத்தினம் அதன் மூலம் 75 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

கோல்ட்மேன் சாக்ஸ், இன்டேல், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை ராஜ் ராஜரத்தினம் வாங்கிவிற்றுள்ளார்.

இந்த தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.co.uk/tamil/global/2011/10/111013_rajrajaratnam.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தில் பற்று உள்ள ஒரு மனிதன், குடும்பம்

மேல் முறையீட்டீல் விடுதலையடைய வேண்டுவோம்.

  • தொடங்கியவர்

பலரும் எதிர்பார்த்ததை விட தண்டனை குறைவாகவே கிடைத்துள்ளது என்பது ஆறுதல். மறுபக்கத்தில் எவ்வளவோ பெரும்பான்மை வெள்ளை இனத்தவர்கள் மோசடி செய்தாலும், இரு தமிழரை தான் இதிலும் முதன்முறையாக தண்டித்துள்ளர்கள்.

விரைவில் விடுதலையடைய வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ராஜரத்தினத்தின் கூட்டாளி ரஜத் குப்தாவும் சிக்கினார்!

இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட இந்தியரான ரஜத் குப்தா நேற்று அமெரிக்காவில் எப்பிஐ அதிகாரிகளிடம் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை ‘இன்சைடர் டிரேடிங்’ மூலம் (நிறுவனங்களின் உள் நிலவரங்களை முறைகேடான வழிகள் மூலம் அறிவது, அதை வைத்து அந்த நிறுவன பங்குகளை வாங்கி அல்லது விற்று லாபம் அடைவது) அறிந்து 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் ராஜரத்தினம்.

அமெரிக்க வர்த்தக உலகில் இவ்வளவு பெரிய மோசடியை இதுவரை யாரும் செய்ததில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜரத்தினத்துக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ராஜரத்தினத்துக்கு இந்த மோசடியில் உதவி செய்த இந்தியரான ரஜத் குப்தா மீதும் அமெரிக்காவின் எப்பிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஜத் குப்தா, தான் பணியாற்றிய புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ் மற்றும் மெக்கிங்ஸ்லி நிதி நிறுவனம் ஆகியவற்றின் நிதி விவரங்களை ராஜரத்தினத்துக்குத் தந்துள்ளார்.

இதை வைத்துக் கொண்டு ராஜரத்தினம் தனது கலியோன் ‘ஹெட்ஜ் பண்ட்’ (பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும்போது அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க நிதி ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம்) நிறுவனம் மூலம் இந்த நிறுவனங்களின் பங்குகளை பரிவர்த்தனை செய்துள்ளார்.

இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை நன்றாக இருந்தபோது பங்குகளை வாங்கியுள்ளார், நிதி நிலை சரியத் தொடங்கியபோது அதை ரஜத் குப்தா மூலம் முன்பே அறிந்து பங்குகளை விற்று

நஷ்டத்திலிருந்து தப்பியுள்ளார். ஆனால், இவரது நஷ்டம் பங்குகளை வாங்கிய பிறர் மீது விழுந்தது.

இப்படியாக ராஜரத்தினம் தனது முறைகேடுகளால் ஈட்டிய தொகை 75 பில்லியன் டாலர்.

இவருக்கு ரஜத் குப்தா தவிர மேலும் ஏராளமான கார்பரேட் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் உதவியுள்ளனர். இதற்காக இவர்களுக்கும் பணத்தைக் கொட்டித் தந்துள்ளார் ராஜரத்தினம்.

62 வயதான ரஜத் குப்தா அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்பட்ட இந்தியர் ஆவார். உலகின் முன்னணி நிறுவனங்களான புராக்டர் அண்ட் கேம்பிள், பெர்க்ஸைர் இன்வஸ்ட்மென்ட், கோல்ட்மேன் சேக்ஸ், மெக்கிங்ஸ்லி நிதி அமைப்பு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந் நிலையில் இப்போது இவர் மீது 6 நிதி மோசடி வழக்குகளைத் தொடர்ந்துள்ளது எப்பிஐ. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 105 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ரஜத் குப்தா 10 மில்லியன் டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.

http://www.alaikal.com/news/?p=86278

Edited by akootha

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ராஜ் ராஜரட்ணத்துக்கு மிகப்பெரிய அபராதம்

நிறுவனங்களின் ரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட அமெரிக்காவில் முன்னாள் ஊக வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணம் அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 9 கோடியே 28 லட்சம் டாலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க பங்கு வர்த்தக மற்றும் பணப்பரிமாற்ற ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட தனக்கு எதிரான இந்த சிவில் வழக்கில், தான் மேலும் எந்த விதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று ஒரு காலத்தில் பெரும் கோடிஸ்வரராக இருந்த ராஜ் ராஜரட்ணம் வாதாடியிருந்தார்.

தனக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு காரணமாக தான் படாத பாடு பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கிரிமினல் வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலாக ஒரு கோடி டாலர்கள் அபராதம் செலுத்துமாறும், முறைகேட்டின் காரணமாக சம்பாதித்த 5 கோடியே 40 லட்சம் டாலர்களை திரும்ப செலுத்துமாறும் ராஜரட்ணம் ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனது தீர்ப்பில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெட் ரக்கோஃப் அவர்கள், அமெரிக்க நிதி ஒருங்குபடுத்தினர்களுக்கு சாதகமாக முடிவு செய்துள்ளார்.

ஒரு தனி நபருக்கு எதிராக வழங்கப்பட்ட மிகவும் பெரிய அபராதமான இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி, இந்தத் தொகையை விட ராஜரட்ணம் சம்பாதித்தது மிகவும் அதிகம் என்று கூறியுள்ளார்.

சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான அபராதமாக ராஜரட்ணம் தற்போது ஒட்டு மொத்தமாக 15 கோடியே 60 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக செலுத்தியாக வேண்டும்.

உட் தகவல்களை பெற்று சட்டவிரோதமாக செய்யும் வணிகம் குறித்து தண்டிக்கப்பட்டவர்களில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களில் ராஜ் ராஜரட்ணமும் ஒருவராவார்.

http://www.bbc.co.uk...jhugefine.shtml

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.