Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் எண்ணெய் அகழ்வு: சீனா, இந்தியா, ரஷியா கடும் போட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் எண்ணெய் அகழ்வு: சீனா, இந்தியா, ரஷியா கடும் போட்டி!

ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 02:14

மன்னார் கடல் பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்தில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி தொடர்கின்றது.

மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளது என அறியப்பட்டுள்ள பகுதிகளை அரசு எட்டுத் துண்டங்களாகப் பிரித்து உள்ளது.

இவற்றில் ஒவ்வொரு தனித் தனி துண்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய அரச நிறுவனமான ‘கெய்ன் இந்தியா‘ என்கிற நிறுவனத்துக்கு ஒரு துண்டம் வழங்கப்பட்டது என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது என தற்போது வெளியாகும் செய்திகள் கூறுகின்றன.

ஏனைய துண்டங்களை விரைவில் அனைத்து உலக மட்டத்தில் ஏலத்தில் விற்க அரசு திட்டம் இட்டு உள்ளது.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ரஷியா சென்றிருந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு ரஷியா விருப்பம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், மன்னார் கடல் படுக்கையில் எஞ்சியுள்ள எண்ணெய் அகழ்வுத் துண்டங்களுக்கு அனைத்துலக அளவில் கேள்வி பத்திரம் கோரப்படும்போது இந்தியா, சீனா, ரசியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் போட்டியில் இறங்க உள்ளன.

இவை ஒரு புறம் இருக்க இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட துண்டத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபட உள்ளன. இப்பணிகளுக்காக ஆழ் துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து உள்ளது.

http://tamilcnn.info/index.php?option=com_content&view=article&id=18245:2011-02-12-21-01-13&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பேரம் பேசும் சக்தி இலக்கப்படுவிட்ட நிலையில் இந்த எண்ணெய் அகழ்வை அப்பிராந்திய மக்கள் துணையுடன் மக்கள் போராடமாக சுற்றுப்புற சுழல் மாசு போன்ற இதர காரணங்களை காட்டி தடுக்க முடியாதா? அல்லது நீதி மன்ற தடை உத்தரவுகளை பெற முடியாதா?

தமிழரின் வளங்கள் தமிழரின் நலன்களுக்கே பயன்பட வேண்டும்.

இவ்வளங்களை சுரண்ட அவசரப்படும் சக்திகள் தமிழரின் அழிவில் துணை போன நாடுகளாக உள்ளது,இவர்கள் எந்த நலனையும் எமது மண்ணில் இருந்தது எடுத்து சென்றாலும் அநியாயமாக கொல்லப்பாட்ட எமது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

இதற்கெதிராக தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இவர்களுக்கு எதிராக உலக நாடுகள் எங்குமுள்ள புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தில் ஈடு பட வேண்டும்

சீனாவுக்கு கொடுத்தால் நல்லது.

இந்திய பயங்கரவாதிகள் பொருத்தமற்றவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ஒரு கிடங்கையே வந்து முப்பத்தைஞ்சு வருசமாய் கிண்டிக்கிண்டி ஆராயுறாங்கள் இன்னும் எண்ணையை காணேல்லை. அதுக்குள்ளை என்ன ஒரு கொம்பனியுக்கையே போட்டி? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.