Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப்பொருளாதாரம்

Featured Replies

இன்று Feb 14, 2011, உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்க அதன் அதிபர் மூலம் பாராளுமன்றத்திற்கு தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது.

தனது முதல் இரண்டு வருடத்திலும் பொருளாதார வளர்ச்சிக்காக (stimulus spending) பணத்தை செலவு செய்த அமெரிக்கா இப்பொழுது பல செலவு குறைப்புக்களை முன் வைத்துள்ளது. முக்கிய காரணங்கள், அதிகத்துவரும் துண்டு விழும் தொகை (deficit). மற்றையது பணவீக்கம் (inflation).

ஆனால் உலகத்திலேயே தனது வருமானத்தில் அதிகூடிய பங்கை ஆராய்ச்சிக்காக செலவிடும் அமெரிக்கா இன்னும் கூடுதல் பணத்தை ஒதுக்கியுள்ளது.

மொத்த தொகை : 3.7 trillions USD

ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை: 148 billion USD

துண்டு விழும் தொகை (deficit) : 1.1 trillions USD

http://finance.yahoo.com/news/Obama-budget-boosts-cnnm-1406860653.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=

http://www.cnn.com/2011/POLITICS/02/14/obama.budget.response/

  • Replies 57
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலகில் இரண்டாவது பொருளாதார வல்லரசான சீனா

  • On Monday ( Feb 14, 2011) China became the world's second biggest economy, overtaking Japan. It now has an estimated worth of $5.8 trillion
  • China's growing economic influence in Africa, eroding Western influence there
  • Japan’s economy expanded 3.9 per cent in 2010 – its fastest pace in two decades, but far behind the 10.3 per cent growth recorded by China
  • Japanese officials said Japan’s nominal gross domestic product was worth $5,474bn in 2010 compared with China's $5,879bn

2010ஆம் ஆண்டு ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5 லட்சத்து 47 ஆயிரத்து 420 கோடி அமெரிக்க டாலராகும் என்று ஜப்பான் 14ம் நாள் தெரிவித்தது.

ஜனவரி திங்கள் சீனா வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, 2010ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 5 லட்சத்து 87 ஆயிரத்து 860 கோடி அமெரிக்க டாலராகும். ஜப்பானுக்குப் பதிலாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசாக சீனா மாறியுள்ளது என்று ஜப்பானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2010ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஜப்பானிய மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, மூன்றாவது காலாண்டில் இருந்ததை விட 0.3 விழுக்காடு குறைந்தது. தனிநபர் நுகர்வும், ஏற்றுமதித்தொகையும் 0.7 விழுக்காடு குறைந்தது, இதற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த ஆண்டு ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சீனாவை அடுத்து உலகில் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலைமை குறித்து, ஜப்பானிய நிதி அமைச்சர் Yosano Kaoru 14ஆம் நாள் பேசுகையில், சீனாவின் அண்டை நாடான ஜப்பான், சீனப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜப்பானின் NHK நிறுவனம் இதை அறிவித்தது.

பொருளாதார அதிகரிப்பு, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேலும் வளப்படுத்தும். இதை துவக்கப் புள்ளியாகக் கருதி, சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை மகிழ்ச்சிசயுடன் எதிர்பார்க்கின்றோம். சீனாவுடன் பொருளாதார உறவை மேலும் ஆழமாக்க வேண்டும் என ஜப்பான் விரும்புவதாக Yosano Kaoru செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

http://www.ft.com/cms/s/0/3275e03a-37dd-11e0-b91a-00144feabdc0.html#axzz1DynU3KNn

http://tamil.cri.cn/121/2011/02/14/27s105465.htm

Edited by akootha

தகவலுக்கு நன்றி அகூதா.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய திகதியில் உலகின் முதல் 10 பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள்..

World's 10 biggest economies

* US

* China

* Japan

* Germany

* France

* UK

* Italy

* Brazil

* Canada

* Russia

Source: IMF 2010

இன்றைய திகதியில் தனிநபர் வருமானத்தை அதிகம் கொண்டுள்ள நாடுகள்.. (பணக்காரர் வாழும் தேசங்கள்.)

Countries with highest GDP per head of population

* 1. Qatar: $88,232

* 2. Luxembourg: $80,304

* 3. Singapore: $57,238

* 4. Norway: $52,238

* 5. Brunei: $47,200

* 6. US: $47,123

* ...

* 20. UK: $35,053

* 24. Japan: $33,828

* 93. China $7,518

Source: IMF estimates 2010, done on a purchasing power parity basis, which tries to reflect the cost of living

நன்றி: http://www.bbc.co.uk/news/business-12427321

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

UK inflation surges to double BoE's target

  • Inflation in Britain rose to double the Bank of England's target in January, increasing pressure on the central bank to raise interest rates despite a fragile economic recovery.
  • Consumer price inflation surged to an annual 4.0 percent -- its highest in more than two years -- from 3.7 percent in December, official data showed on Tuesday.
  • On the month, consumer prices rose 0.1 percent. Prices normally fall in January due to post-Christmas discounting.

http://finance.yahoo.com/news/UK-inflation-surges-to-double-rb-129594446.html?x=0&sec=topStories&pos=6&asset=&ccode=

1998 ஆம் ஆண்டு சரிய தொடங்கிய உலகப்பொருளாதாரம் பல நாட்டு மத்திய வங்கிகளாலும் இரண்டு முக்கிய முறைகளால் அணுகப்பட்டது.

  • மத்திய வட்டி வீதத்தை வெகுவாக குறைத்தல்
  • புதிய நாணயத்தை புழக்கத்தில் விடல்

இவை இரண்டும் பொருளாதார மீட்சியை ஒரளவுக்கு தந்துள்ள நிலையில் பணவீக்கம் அதிகரித்து செல்லுகின்றது.

இதை கட்டுப்படுத்த வட்டிவீதத்தை அதிகரித்தல் வேண்டும். ஆனால் இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்குமா என்ற பயம் உள்ளது.

UK inflation surges to double BoE's target

  • Inflation in Britain rose to double the Bank of England's target in January, increasing pressure on the central bank to raise interest rates despite a fragile economic recovery.
  • Consumer price inflation surged to an annual 4.0 percent -- its highest in more than two years -- from 3.7 percent in December, official data showed on Tuesday.
  • On the month, consumer prices rose 0.1 percent. Prices normally fall in January due to post-Christmas discounting.

http://finance.yahoo.com/news/UK-inflation-surges-to-double-rb-129594446.html?x=0&sec=topStories&pos=6&asset=&ccode=

1998 ஆம் ஆண்டு சரிய தொடங்கிய உலகப்பொருளாதாரம் பல நாட்டு மத்திய வங்கிகளாலும் இரண்டு முக்கிய முறைகளால் அணுகப்பட்டது.

  • மத்திய வட்டி வீதத்தை வெகுவாக குறைத்தல்
  • புதிய நாணயத்தை புழக்கத்தில் விடல்

இவை இரண்டும் பொருளாதார மீட்சியை ஒரளவுக்கு தந்துள்ள நிலையில் பணவீக்கம் அதிகரித்து செல்லுகின்றது.

இதை கட்டுப்படுத்த வட்டிவீதத்தை அதிகரித்தல் வேண்டும். ஆனால் இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்குமா என்ற பயம் உள்ளது.

அம்பி அகோதா இந்தமாதிரி விடயங்களையெல்லாம் இங்கு இணைப்பதற்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

அம்பி அகோதா இந்தமாதிரி விடயங்களையெல்லாம் இங்கு இணைப்பதற்கு நன்றிகள்.

எமது இனம் ஒன்றில்தான் பொருளாதாரம் பற்றி பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் கதைப்பது குறைவு. அதை கொஞ்சம் நிவர்த்தி செய்யலாமா? என்ற ஒரு நப்பாசை தான். :D

Edited by akootha

  • தொடங்கியவர்

இன்றைய திகதியில் உலகின் முதல் 10 பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள்..

நன்றி: http://www.bbc.co.uk/news/business-12427321

தகவலுக்கு நன்றி. "நான் ஏதிலியாக" வாழும் கனடாதான் உலகிலேயே "பணக்கார" நாடு என்று சொல்வேன். காரணம்:

- அதிக நீர்வளம் கொண்ட நாடு

- அதிக மசகு எண்ணெய் (மண்ணிலும் கூட Oil Sand)

- தங்கம், வைரம், வெள்ளி, நில வாயு ...

- நிக்கல், இரும்பு, லித்தியம், யுரேனியம், மரம் , ......

- பொட்டாஸ் (விவசாயம் செய்யக்கூடிய உரத்திற்கு தேவை)

Edited by akootha

எமது இனம் ஒன்றில்தான் பொருளாதாரம் பற்றி பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் கதைப்பது குறைவு. அதை கொஞ்சம் நிவர்த்தி செய்யலாமா? என்ற ஒரு நப்பாசை தான். :D

அம்பி அகோதா நம்மினம் திருந்தாத அல்லது திருந்த விரும்பாதவினம் மாற்றுக்கருத்தை சகிக்கமுடியாத இனம். நவீனத்தை விரும்பாத இனம் உலகம் என்ன கேடுகெட்டாலும் நாம்மட்டும் நல்லா வாழவேண்டுமென்று நினைக்கும் அற்புதமான இனம் வேற என்ன சொல்ல.

எமது இனம் ஒன்றில்தான் பொருளாதாரம் பற்றி பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் கதைப்பது குறைவு. அதை கொஞ்சம் நிவர்த்தி செய்யலாமா? என்ற ஒரு நப்பாசை தான். :D

பொருளாதாரம் வானொலி பத்திரிகை இதெல்லாம் உலகத்தில முன்னேறதுடிப்பவர்க்கு இன்னும் நூறு வருசம் பிந்திவாருங்கள்.

  • தொடங்கியவர்

அதிகளவில் அதிகரிக்கும் உலக உணவு விலைகளும் அதனால் வரப்போகும் அரசியல் சிக்கல்களும் பற்றி கூடுதலாக இந்த வருடம் பேசப்படும் ஒன்று. உலகளாவிய இயற்கை அனர்த்தங்கள், சீனாவின் வரட்சி, குறையும் கையிருப்பு என்பன பல அரசியல் தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கும் என இன்று உலகவங்கி கூறியுள்ளது.

சில நாடுகளில் தமது வருமானத்தில் ஐம்பது வீதத்தை உணவுக்காக மக்கள் செலவழிக்க நேரிடும்! 44 மில்லியன் மக்கள் கடுமையான வறுமைக்குள் தள்ளப்படுவர்!

The head of the World Bank, Robert Zoellick, on Tuesday raised concerns about stability in Central Asia, which has been hit hard by rising food prices.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jjzLcw7-CWpP0MRH8tz_nX2p6R6w?docId=CNG.45ed54b37a8da7196eec4d99230b920e.601

Rising global food prices have pushed 44 million more people into “extreme” poverty in developing countries since June, the World Bank said. Surging food costs contributed to protests in Tunisia that ousted President Zine El Abidine Ben Ali in January. Egypt’s Hosni Mubarak resigned as president on Feb. 11 following more than two weeks of unrest.

http://www.bloomberg.com/news/2011-02-15/food-price-jump-pushes-44-million-into-extreme-poverty-world-bank-says.html

Edited by akootha

  • தொடங்கியவர்

உலகப்பொருளாதாரமும் மசகு எண்ணெயும்

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மேற்கத்தைய நாடுகளின் கைத்தொழில் புரட்சி அவற்றை செல்வந்த நாடுகளாக மாற்றியமைக்கு விலை குறைந்த எரிபொருள் முக்கிய காரணமாகின்றது.

இன்று உலக பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை கூடியுள்ள நிலையில் எரிபொருள் தேவையும் கூடிக்கொண்டே செல்கின்றது. ஆனால் உலகம் தொடர்ந்தும் மசகு எண்ணெயில் தனது தேவைக்கு கூடியளவு தங்கியுள்ளமை வரும் காலங்களில் சவாலாக அமையும். காரணம் மசகு எண்ணெய் ஒன்றும் அட்சயபாத்திரத்துக்குள் இருந்து எடுக்கப்படக்கூடிய ஒன்றல்ல. என்றோ ஒரு நாள் அது முடிந்தே தீரும்.

அண்மையில் வெளியான விக்கிலீக்ஸ் தகவல்களின் (http://www.theglobeandmail.com/report-on-business/commentary/jeff-rubins-smaller-world/wikileaks-reveals-imminent-saudi-oil-peak/article1908385/) படி உலகின் முதன்மை உற்பத்தியாளரான சவூதி அராபியாவில் கிடத்தட்ட நாற்பது வீதம் அதிகமாக அதன் கையிருப்பு எதிர்வு கூறப்பட்டதகா சொல்லப்பட்டுள்ளது. இது ஒருவித அதிர்ச்சியையும் மாற்று வழிவகைகளை வெற்றிகரமாக வகுக்கும் நாடுகளே முன்னோக்கி செல்லும் என்பதயும் காட்டுகின்றது.

(OPEC) ஒபெக் அமைப்பு சவூதி அரபியாவை 12 மில்லியன்கள் பரல்களை இன்று உற்பத்தி செய்யச்சொல்லி கேட்டுவருகின்றது. ஆனால் அதி கிடத்தட்ட 10 மில்லியன்கள் பரல்களை உற்பத்தி செய்கின்றது. உலகத்தின் தேவையை சமாளிக்க 2030 அளவில் 14 மில்லியன்களை உற்பத்தி செய்யவேண்டும் என ஒபெக் கேட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டால் அது முடியாது என கூறப்படுகின்றது.

சவூதி அரபியாவால் முடியாது என்றால் யாரால் முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.

இன்று உலகின் சனத்தொகை அண்ணளவாக 6.9 பில்லியன்கள் (http://www.census.gov/main/www/popclock.html)

இன்றைய மசகு எண்ணெய் உற்பத்தி : 87 மில்லியன்கள் பரல்கள்

http://www.nationmaster.com/graph/ene_oil_con-energy-oil-consumption

கிடத்தட்ட 310 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்கவால் 20 மில்லியன்கள் பரல் எண்ணெய் நாளொன்றுக்கு பாவிக்கப்படுகின்றது. 1.2 பில்லியன் மக்களை கொண்டு வளர்த்துவரும் சீனா 8 மில்லியன்கள் பரல் எண்ணெய் பாவிக்கப்படுகின்றது இது அதன் தேவையில் ஐம்பது வீதம் என சொல்லப்படுகின்றது.

ஆக மொத்தத்தில் தேவை அதிகம், ஆனால் மசகு எண்ணெய் இல்லை. இது புதிய எண்ணெய் வளங்களை தேடவும், இருக்கும் வளங்களை பாதுகாக்கவும், மாற்று சக்தி துறைகளை தேடவும் வைக்கும் என நம்பலாம்.

மேல்கூறப்பட்ட தகவல்கள் உலக பொருளாதார - அரசியலையும், மன்னார் வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் ஆய்வுகள் சம்பந்தமான செய்திகளையும் இணைக்க உதவலாம்.

  • தொடங்கியவர்

அதிகளவில் அதிகரிக்கும் உலக உணவு விலைகளும் அதனால் வரப்போகும் அரசியல் சிக்கல்களும் பற்றி கூடுதலாக இந்த வருடம் பேசப்படும் ஒன்று. உலகளாவிய இயற்கை அனர்த்தங்கள், சீனாவின் வரட்சி, குறையும் கையிருப்பு என்பன பல அரசியல் தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கும் என இன்று உலகவங்கி கூறியுள்ளது.

சர்வதேச உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்ததன் விளைவாக, ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. மிக வேகமாக விலை உயர்வதால் ஏற்படும் கடும் அறைகூவல்களை சமாளிக்க, பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென உலக வங்கியின் தலைவர் ராபர்ட் பி சோலிக் 15ம் நாள் கூறினார்.

ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது உலக வங்கியின் சர்வதேச உணவு விலைவாசிக் குறியீடு 29விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் இவ்வாண்டு ஜனவரி வரையான சில திங்களில் மட்டும், இந்தக் குறியீடு 15விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இவ்வங்கி அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

http://tamil.cri.cn/121/2011/02/16/1s105494.htm

அமெரிக்காவில் 15% மக்கள் உணவின்றித் தவிப்பு! ( செவ்வாய், 16 நவம்பர் 2010( 13:44 IST )

வீட்டுக் கடன் சிக்கலால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அமெரிக்காவில் 2007 முதல் 2009ஆம் ஆண்டுவரை ஏழு குடும்பங்களில் ஒன்று உணவின்றி பசியால் வாடி வந்ததென அந்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை நாளுக்கு ரூ.50 வருவாய் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வாழ்பவர்களாக கணக்கிடப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/newsworld/finance/news/1011/16/1101116047_1.htm

தற்போது, உலக உணவு பாதுகாப்பு நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது. உணவுப் பிரச்சினை, உலகளவிய பிரச்சினையாக மாறியுள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கடும் அறைகூவல்களை எதிர்கொள்கின்றன. உணவுப் பற்றாக்குறையால், நாள்தோறும் ஏறக்குறைய 100கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக உலக வங்கியின் நிரந்தர துணைத் தலைவர் என்கோசி ஒகோன்ஜோ ஈவியலா தெரிவித்தார்.

http://tamil.cri.cn/121/2011/02/16/1s105493.htm

  • தொடங்கியவர்

சீனாவின் பொருளாதார வளர்ச்சியினை கட்டுப்படுத்தும் ஒரு நகர்வாக இன்று இந்தியாவும் - ஜப்பானும் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன.

  • India and Japan have set a target of achieving $25 billion worth of bilateral trade by 2014 from the present $10.3 billion
  • Japan has agreed to 97 per cent tariff reduction in trade in goods, India has consented for 90 per cent duty abolition
  • The number of Japanese firms in India has doubled in last 3 years taking the total investments from Japan to India to more than 800 billion Yen

http://www.business-standard.com/india/news/india-japan-target-25-bn-trade-by-%5C14/425494/

சுதந்திரமான வர்த்தகம்: இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்

டோக்யோ, பிப்.16- இந்தியா-ஜப்பான் இடையே சுதந்திரமான வர்த்தகத்தை அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் இன்று டோக்யோவில் முறைப்படி கையெழுத்தானது.

இதன் மூலம் இருநாடுகளும் பரஸ்பரம் 90 சதவீத வரிகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்த நடைமுறை 10 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&artid=377559&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

  • தொடங்கியவர்

உலக பொருளாதாரமும் தொழில்முறை உளவும்

பொதுவாக சாதராணமாக மக்கள் உழைத்து முன்னேறுவார்கள். அந்த மக்களில் ஒரு பகுதியினர் மற்றயவர்களை சுரண்டி வாழ்பவர்கள். அது நாடுகளுக்கும் பொருந்தும். இன்றைய நவீன உலகில் "தொழில்முறை உளவு" (Industrial espionage) ஒரு பெரிய சவாலாக மேற்கத்திய நாடுகளில் காணப்படுகின்றது, அவர்களுக்கு உருசியா, சீன, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வருகின்றது. (http://en.wikipedia.org/wiki/Industrial_espionage). மேற்குலகமும் பல்வேறு வழிகளில் கீழைத்தேய நாடுகளின் பொருளாதாரா வளர்ச்சியில் பல்வேறு உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கூடுதலாக இது நாடுகளுக்குள்ளேயே முதலில் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனம் மீது உளவு பார்ப்பது. உதாரணத்திற்கு ஆப்பிள் (Apple) நிறுவம் எந்த மாதிரியான "அடுத்த" தொழில்நுட்பத்தில் (next big thing) கூடுதலாக பணத்தை முதலீடு செய்கின்றது என்பது பல நிறுவனங்களுக்கு ஒரு அறிய ஆர்வமான விடயமாக உள்ளது. ஆனால் இது நாடுகளுக்கும் இடையில் இன்று வளர்ந்துள்ளது. மருத்துவம், அணு / செய்மதி தொழில்நுட்பம், எரிபொருள் மூலங்கள் போன்றன உதாரணங்களாகும். இப்படியான் பல சம்வன்களை இந்த இணைப்பில் காணலாம் ( http://www.wright.edu/rsp/Security/Spystory/Industry.htm )

நேற்று கனடாவின் இரு அமைச்சுகளின், நிதி(Finance) / திறைசேரி (Treasury) கணிணி வலையமைப்புக்களை ஹக் (hack) செய்யப்பட்டுள்ளது. இரண்டு அரச திணைக்களங்களின் இணையங்கள் செயல் இழந்தன. இணையத் தாக்குதல், சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், சீனர்கள் தாக்குதலை நடத்தினார்களா, அல்லது, சீனாவின் ஊடாக வேறு யாராவது தாக்குதுதலை நடத்தினார்களா என்பதை உறுதி செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டது. ( http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6530) . இப்படியான பல தாக்குதல்கள் வெளியில் சொல்லப்படுவதில்லை.

உளவுகள் பலவிதம் அதில் பொருளாதாரம் சார்ந்த உளவு தனிரகம். :D

.

Economic hit men (EHMs) are highly-paid professionals who cheat countries around the globe out of trillions of dollars. They funnel money from the World Bank, the U.S. Agency for International Development (USAID), and other foreign "aid" organizations into the coffers of huge corporations and the pockets of a few wealthy families who control the planet's natural resources. Their tools included fraudulent financial reports, rigged elections, payoffs, extortion, sex, and murder. They play a game as old as empire, but one that has taken on new and terrifying dimensions during this time of globalization.

link

  • தொடங்கியவர்

மசகு எண்ணெய் - மத்திய கிழக்கு - உலகப்பொருளாதாரம்

அமெரிக்கவில் உள்ள "நியூயார்க் மேற்க்கன்ரைல் எக்ஸ்சேஞ்ச்" ஒரு முக்கிய தளம் ஆகும். இதில் பலவகை அன்றாட வாழ்வுக்கு தேவையான பல பொருட்களின் (http://www.cmegroup.com/ ) ஒப்பந்த விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

மசகு எண்ணெய் : http://www.cmegroup.com/trading/energy/index.html

  • லிபியாவில் அந்நாட்டு அதிபர் கர்னல் கடாபி பதவி விலக வேண்டும் என்று கோரி ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியால் அந்நாட்டின் மசகு எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்ற நிலையால், மசகு எண்ணெய் விலை ஆசிய நாடுகளில் பீப்பாய்க்கு 93 டாலராக உயர்ந்துள்ளது.

  • மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பில் (Organization of Petroleum Exporting Countries - OPEC) அங்கம் வகிக்கும் லிபியா ஒரு நாளைக்கு 10 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது.

  • இதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான ஒப்பந்த விற்பனை விலை (March month's contract price) நேற்று ஒரே நாளில் பீப்பாய்க்கு 6.75 டாலர் அதிகரித்துள்ளது. லண்டன் பிரண்ட் குரூட் (London brand crude) ஏப்ரலிற்கான ஒப்பந்த விற்பனை விலை 106.95 டாலர்களாக உயர்ந்துள்ளது.

  • இது 100 -140 டாலர்கள் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

" நீ பிறக்கும் போது ஏழையாக இருந்தால் அது உன்னுடைய தவறல்ல. நீ இறக்கும் போது ஏழையாக இருந்தால் அது உன்னுடைய தவறு.”

Edited by akootha

  • தொடங்கியவர்

திறமையாக உயர்கல்விகளை கற்க வேண்டும், நல்ல வேலைகளை செய்யவேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பன தமிழர்களின் சில அடிப்படை விருப்புக்கள். எமது மூதாதையர்கள் எமக்கு "பணம் சேமித்தல்" பற்றியும் கூட கூறி உள்ளார்கள். ஆனால், எம்மில் பலர் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் "விற்பனை மோகத்தில்" மாட்டுபட்டு மீளமுடியாத கடனாளிகளாக மாறியுள்ளோம். அதேவேளை எமது அடுத்த சந்ததியையும் இந்த சேமிப்பு பழக்கத்தில் ஈடுபடுத்துவது முக்கியமாகும். ஏனெனில், உழைப்பது கடினம், உழைத்ததில் ஒரு பகுதியை சேமிப்பது கடினம், சேமிப்பை சாதுரியமாக முதலீடு செய்வது அதைவிட கடினம். இதை வெற்றிகரமாக செய்தால் எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

அந்த வகையில் கீழே உள்ள ஒரு கனேடிய கட்டுரை சில சேமிப்புக்கு உதவியான தகவல்களை தருகின்றது. இந்த தரவுகள் எமக்கு சிலவேளை பொருந்தாவிடினும் நமது நாடுகளில் உள்ள வரிச்சலுகைகளையும் பாவித்து நாம் சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இது அமைகின்றது.

How $100 a month can make you a millionaire

  • சிறுவயதில் சேமிக்க தொடங்கு
  • சேமிக்கும் பழக்கத்தை இறுக்கமாக பின்பற்று

You can become a millionaire in 40 years by starting with as little as $100 a month and staying focused.

Here's how:

* From ages 25 to 30, you save $100 per month, for a total of $7,085.08, assuming a rate of return of 6.8 per cent per year, compounded monthly. For the next five years, from 30 to 35, you save $250 per month. Your total at the end of this period is $27,557.40, again assuming the same rate of return.

* From ages 35 to 40, you save $500 each month, and your savings will reach $73,716.30. For the next decade, ages 40 to 50, you save $750 per month, and your total at the end of this period is $269,297.19. Then, from ages 50 to 65, you save $1000 per month. That brings your total savings to $1,028,531.61.

This assumes the savings is done inside a tax-free vehicle such as a Registered Retirement Savings Plan (RRSP), or a Tax-Free Savings Account (TFSA) (assuming that you have accumulated enough contribution room), so the profit is sheltered from income tax. It also assumes a rate of return averaged over many years. Over that entire 40-year span, your actual return would be better some years, and worse for others.

http://www.moneyville.ca/blog/post/943952--how-100-a-month-can-make-you-a-millionaire

சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே

சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே

பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்

பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே

தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்

தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்

மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்

மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.

http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/blog-post_20.html

  • தொடங்கியவர்

பலராலும் விரும்பப்படும் சில தொழில்துறைகளும் ஆறு இலக்க சம்பளமும்

தொழில்துறை : மின்வலையில் விளம்பரங்கள் செய்தல்

சம்பளம் - ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள் +

இந்த வருட வளர்ச்சி - 60 வீதங்கள்

என்ன தெரியவேண்டும் : Familiarity with web analytics and search engine optimization and marketing can be acquired over several months via webinars, workshops, and online courses. A combination of marketing experience and online tech savvy, however, can help get your foot in the door.

தொழில்துறை : கைத்தொலைபேசிகளுக்கான செயல்திறன்கள்

சம்பளம் - $115,000

இந்த வருட வளர்ச்சி - 131 வீதங்கள்

என்ன தெரியவேண்டும் : Programming experience in mobile platforms is necessary, but depending on your background, you can fine-tune your knowledge with a DIY approach or perhaps an online certificate program that typically takes one year to complete.

தொழில்துறை : Global Supply Chain Manager

சம்பளம் - $115,000

இந்த வருட வளர்ச்சி - 10 வீதங்கள்

என்ன தெரியவேண்டும் : Transitioning into this field could take between six months for courses and up to two years to get a master's degree. Those with operations, purchasing, or logistics education and/or experience have the best chance of getting into this field.

தொழில்துறை : நிதித்துறை ஆலோசகர்

சம்பளம் - $139,000

இந்த வருட வளர்ச்சி - 30 வீதங்கள்

என்ன தெரியவேண்டும் : While not required, the Certified Financial Planner (CFP) certificate is a useful credential to get into this profession. The coursework and exam can usually be completed in 18 to 24 months, and over 250 institutions across the country, including some that are online, offer CFP-approved programs.

http://finance.yahoo.com/career-work/article/112224/dream-jobs-six-figure-salaries?mod=oneclick

  • தொடங்கியவர்

இன்று பிரான்ஸ் நாட்டு அரச கணனி வலயங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கும் சீனாவே காரணம் என சொல்லப்படுகின்றது.

உலக பொருளாதாரமும் தொழில்முறை உளவும்

நேற்று கனடாவின் இரு அமைச்சுகளின், நிதி(Finance) / திறைசேரி (Treasury) கணிணி வலையமைப்புக்களை ஹக் (hack) செய்யப்பட்டுள்ளது. இரண்டு அரச திணைக்களங்களின் இணையங்கள் செயல் இழந்தன. இணையத் தாக்குதல், சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், சீனர்கள் தாக்குதலை நடத்தினார்களா, அல்லது, சீனாவின் ஊடாக வேறு யாராவது தாக்குதுதலை நடத்தினார்களா என்பதை உறுதி செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டது. ( http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6530) . இப்படியான பல தாக்குதல்கள் வெளியில் சொல்லப்படுவதில்லை.

உளவுகள் பலவிதம் அதில் பொருளாதாரம் சார்ந்த உளவு தனிரகம். :D

‘Spectacular’ cyber attack hits French governmenthttp://www.montrealgazette.com/technology/Spectacular+cyber+attack+hits+French+government/4395541/story.html

Hackers targeted French gov't computers for G20 secrets

IT staff spent the weekend in a massive clean-up operation to remove traces of a "spectacular" attack on computers at Bercy, the headquarters of the French Ministry of Economy, Finances and Industry, a government minister said Monday.

"There was an attack on the computer systems at Bercy," Budget Minister François Baroin said in an interview on radio station Europe 1. "It's probably the first time it's been as spectacular as this."

http://www.computerworld.com/s/article/9213559/Hackers_targeted_French_gov_t_computers_for_G20_secrets?taxonomyId=142

  • தொடங்கியவர்

US throws water over Indian hopes for UNSC seat

http://www.expressindia.com/latest-news/US-throws-water-over-Indian-hopes-for-UNSC-seat/711956/

உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கலாம்;அமெரிக்கா தகவல்

வரும் 2020 ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வரும் 2025 ம் ஆண்டில் உலக நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கலாம். அதாவது கிடைக்கும் தண்ணீரின் அளவு தேவையை விட குறைவாக இருக்கும். குறிப்பாக ஆசிய நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும்.

அதுவும் 2020 ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த தண்ணீர் பற்றாக்குறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும். திபெத்திய பீடபூமியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் ஆசியாவில் 150 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட ஒன்பது நதிகளுக்கு இதன் மூலம் தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமான நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்கள் பயன்படுத்தி பலனடைகின்றனர்.

பனிக்கட்டிகள் சிறியவையாகும் போது கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறைந்து விடும். குறிப்பாக இதர நீர் ஆதாயங்கள் குறைவாக கிடைக்கும் வறட்சியான காலக்கட்டத்தில் நதிகளில் நீரோட்டம் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். காலநிலை மாற்றங்களாலும் பனிக்கட்டிகள் விரைவில் உருகி பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.

http://panipulam.net/?p=10438

  • தொடங்கியவர்

ஜப்பான் சுனாமி அனைவர் வயிற்றிலும் மண்ணள்ளிப் போடப் போகிறது..

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சுனாமி வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்கோ பரபரப்பாக பேசுவதற்கோ உரிய விடயமல்ல. ஜப்பான் ஆசியாவில் மட்டுமல்ல உலகப் பொருளாதார அசைவின் நடுநாயகமான ஒரு நடாக இருக்கிறது.

ஜப்பானின் தொழில் முயற்சிகளின் சேத விபரம் இன்னமும் மதிப்பிடப்படாவிட்டாலும் கற்பனை பண்ண முடியாத பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

இன்று வடக்கு ஆபிரிக்கா மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஆர்பாட்டங்கள் உலகப் பொருளாதாரத்தின் வயிற்றில் அடித்து பெற்றோல் விலையை இதுவரை இல்லாதளவு உச்சத்திற்குக் கொண்டு போயுள்ளன. இப்போது ஜப்பானில் ஏற்பட்டுள்ள அழிவு மேலும் ஒரு சுற்று விலை உயர்வுக்கு வழிவகுக்கப் போகிறது. உலக வர்த்தகம் என்ற சிலந்தி வலையில் நடுநாயகமாக நிற்கும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள அதிர்வு சர்வதேச வர்த்தக வலையாக்கத்தையே புயலில் சிக்கிய சிலந்திக் கூடாக ஆட வைத்துள்ளது.

கடந்த 1923 ம் ஆண்டு செப் 1ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 145.000 பேர் மடிந்தனர். இதன் காரணமாக அந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப். 1ம் திகதி பேரனர்த்தங்களால் தப்பி வாழுவதற்கான நாடளாவிய பயிற்சி நடைபெறுகிறது. அதுபோல ஒரு அனர்த்த அலாரத்துடன் நேற்றய ஜப்பான் விழித்துக் கொண்டது. இன்று சுனாமி ஏற்பட்ட இரண்டாம் நாள் கண் முன் கிடக்கும் சேதங்களின் அழிவை மதிப்பிடுவது ஒரு புறம், அதைவிட பாரிய சிக்கல் இதை மீண்டும் அதே இடத்திற்குக் கட்டி எழுப்புவதாகும் என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலக வர்தகத்தின் மூன்றாவது பாரிய இடத்தில் ஜப்பான் இருக்கிறது. பங்குச் சந்தையின் நடுநாயகமாக இருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் மைய இரிசு ஜப்பானிலேயே உள்ளது. உலகத்தின் மின் உற்பத்திப் பொருட்களின் பெரும் சந்தையாக இருக்கிறது. இப்படி ஜப்பானின் முக்கியத்துவத்தை விபரித்து செல்ல முடியும்.

ஜப்பானுக்குள் நடைபெறும் அழிவு அனைத்து நாடுகளில் பொருளாதாரத்திலும் அடித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும். இந்தத் தாக்கத்தில் கோடான கோடீஸ்வரர் முதல் கொழும்பு கொட்டாஞ்சேனையில் கோவணத்துடன் குடித்து விட்டு கூத்தாடுபவர் வரை தண்டம் செலுத்த வேண்டி வரும். ஈராக்கின் போருக்கு ஒவ்வொரு உலக ஏழையும் தண்டம் கட்டியது போல இதற்கும் தண்டம் கட்ட நேரிடும்.

ஜப்பானில் அடித்த சுனாமி உலகப் பொருளாதாரத்தின் மீது அடித்த சுனாமி.

http://www.alaikal.com/news/?p=60518

Quake and tsunami a blow to fragile Japan economy

The earthquake and tsunami that struck Japan on Friday forced multinational companies to close factories, fight fires and move workers, inflicting at least short-term damage on the Japan's fragile economy.

Assessing the full economic impact was impossible in the hours after the quake. But traffic clogged streets, trains stopped, flights were grounded and phone service was disrupted or cut off. U.S. companies DuPont and Procter & Gamble said communications problems made it hard to gauge the effect on their operations in Japan.

Japanese stocks plunged. The benchmark Nikkei index fell 1.7 percent, and the Japanese market was only open for about 15 minutes after the quake.

Still, the damage to Japan's economy, the world's third-largest, wasn't nearly as severe as it might have been. The devastated northeastern coastal region is far less developed than the Tokyo metro area.

http://finance.yahoo.com/news/Quake-and-tsunami-a-blow-to-apf-1002176148.html?x=0&sec=topStories&pos=5&asset=&ccode=

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜப்பானிய பேரழிவு, முந்தைய "சாதாரண" காலகட்டத்தில் ஏற்பட்டிருந்தால், ஓர் உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த நாட்கள் நீண்ட காலத்திற்கு முன்பே போய்விட்டன. இப்போதைய நிலைமையில், செப்டம்பர் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸ் (Lehmen Brothers) பொறிவுடன் தொடங்கிய உலக நிதியியல் நிலைமுறிவின் ஒரு புதிய கட்டத்திற்கு களம் அமைப்பதில் இந்த பேரழிவு வினையூக்கியாக இருக்கும்.

ஏழு முக்கிய முதலாளித்துவ பொருளாதாரங்களின் குழுவைச் சேர்ந்த, பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு மத்திய வங்கியாளர் ராய்டரிடம் கூறுகையில், “உலக பொருளாதாரம் செங்குத்தாக வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நிதியியல் சந்தைகள் இன்னமும் பலவீனமாக இருக்கும் இந்த காலகட்டத்திலேயே, இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது,” என்றார்.

கடந்த வெள்ளியன்று (11 March 2011 )நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு முன்னரே, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை படிப்படியாக ஸ்திரமின்மையைக் கண்டு வந்தது. அமெரிக்காவில், அமெரிக்க ஈக்விட்டி சந்தைகளில் (equity markets) ஏற்பட்ட இரண்டு-ஆண்டுகால உயர்வு, அமெரிக்க பொருளாதாரத்தின் எவ்வித மீளெழுச்சியாலும் ஏற்பட்டதல்ல, மாறாக, மத்திய வங்கிகள் கூட்டமைப்பால் நிதியியல் அமைப்புமுறைக்குள் பாரியளவில் பாய்ச்சப்பட்ட நிதிகளால் (stimulus) ஏற்பட்டது. பைனான்சியல் டைம்ஸில் பிரசுரமான சமீபத்திய ஒரு செய்தியில், 2003-2007இல் ஏற்பட்ட பங்குச்சந்தை உயர்வு தற்காலிக கடன் வளர்ச்சியின் மற்றும் வீட்டு விலை மதிப்பீட்டின் "ஆட்டம்காணும் அஸ்திவாரத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டது. இப்போதைய… இந்த ஓட்டமும் அரசுத்துறை தலையீடு என்ற அதீதகற்பிதத்தின், இன்னும் மோசமாக ஆட்டம் கொண்டிருக்கும் அடித்தளத்தில் கட்டியமைக்கப்பட்டுள்ளது” என்று வர்த்தக பொருளாதார நிபுணர் டேவிட் ரோசன்பெர்க் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில், நிதியியல் சந்தைகளிடமிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் பெரும் அழுத்தத்தின்கீழ் வந்திருக்கும் நிலையில், அங்கே ஓர் ஆண்டுக்கு முன்னர் வெடித்த வங்கியியல் மற்றும் செலாவணி நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது தெளிவாக உள்ளது.

ஆசியாவில், ஜப்பானிய பொருளாதாரம் மற்றொரு திருப்புமுனையை சந்திக்கவிருக்கிறது என்பது வெளிப்படையாக உள்ளது. அதேநேரத்தில் ஒரு பெரும் கடன்சந்தை விரிவாக்கத்தால் தூண்டப்பட்டு, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையின் ஒரு தற்காலிக உயர்வால் சீன பொருளாதார விரிவாக்கம் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக அச்சங்கள் வெளியாகின்றன.

இதற்கும் கூடுதலாக, மத்தியகிழக்கு கொந்தளிப்பின் காரணமாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டிருக்கும் உயர்வும் ஒரு பின்னடைவிற்கு அல்லது குறைந்தபட்சம் பொருளாதார வளர்ச்சியில் ஒரு கணிசமான வீழ்ச்சியைக் கொண்டு வரும் அச்சங்களைத் தூண்டிவிட்டது.

தற்போது இந்த பூகம்ப பேரழிவு இன்னும் கூடுதலாக உலக ஸ்திரமின்மையை தீவிரப்படுத்தி உள்ளது. யென்னின் மதிப்பை உயர்த்துவது அதன் உடனடி விளைவுகளில் ஒன்றாக இருக்கும். இரண்டாம் உலக யுத்த காலக்கட்டத்திற்குப் பின்னர், அது அதிகபட்சமாக அமெரிக்க டாலருக்கு எதிராக நேற்று 76.25 என்ற அளவை எட்டியது. உலகம் முழுவதிலும் உள்ள நிதியியல் சந்தைகளுக்கு கடன்கள் அளித்ததில் ஜப்பானிய நிறுவனங்கள் வகித்த முன்னனி பாத்திரத்திலிருந்து, இந்த ஊகத்திற்கு எதிர்விதத்தில் அபிவிருத்தி எழுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 220 சதவீதத்திற்கும் அதிகமாக, சமப்பட்டுள்ள அதன் பெரும் உள்நாட்டு அரசு கடன்கள் இருந்தபோதினும், வெளிநாட்டு சொத்துக்களில் சுமார் $3 ட்ரில்லியன் அளவுடன், ஜப்பான் உலகின் முன்னணி கடனளிக்கும் நாடாக உள்ளது. இதில், சுமார் $900 பில்லியன் அமெரிக்க கருவூல பங்குபத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையைத் தக்கவைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

எவ்வாறிருந்த போதினும், உள்நாட்டில் காப்பீடு மற்றும் ஏனையவைகளிலிருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜப்பானிய நிதிநிறுவனங்கள் அவற்றின் நிதிகளிலிருந்து ஓரளவிற்கு உள்நாட்டிற்குள் திருப்பிவிடுகின்றன. இது யென்னின் மதிப்பைத் தூக்கிவிடுகிறது. ஆனால் உயர்ந்துவரும் யென்னின் மதிப்பு ஏற்றுமதியையும், பொருளாதார வளர்ச்சியையும் வெட்டும் மற்றும் பங்குச்சந்தைகளை அழுத்தும் அச்சுறுத்தலை அளிக்கிறது. இது ஓர் எதிர்மறை பின்னூட்ட நிகழ்முறையை உருவாக்கி, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு சொத்துக்களை அதிகமாக விற்று நிதிகளை மீட்கும் நிலைக்குத் தள்ளி, அவற்றின் மூலதன நிலைப்பாட்டிற்கு இன்னும் கூடுதலாக குழிபறிக்கும். ஆகவே இந்த நிலைமைகளின்கீழ், பூகம்பத்தின் விளைவாக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செலவும் சுமார் $200 பில்லியனாக, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

யென்னின் மதிப்புயர்வு உலக பொருளாதாரத்தை இன்னும் கூடுதலாக ஸ்திரமின்மைக்கு கொண்டு வந்துவிடும் என்ற அச்சுறுத்தலால், ஜி7 நாடுகளின் மத்திய வங்கிகள் அதன் மதிப்பைக் குறைத்துவைத்திருக்கும் முயற்சியாக யென்னை விற்க ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், அதேநேரத்தில், அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு, ஏனைய நோக்கங்களோடு, அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைவாக வைத்திருப்பதற்கும் நோக்கத்தையும் சேர்த்து, அதன் பணத்தைப் புழக்கத்தில்விடும் திட்டத்தின் மூலமாக, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் பணத்தைப் பாய்ச்சுவதைத் தொடர்கிறது.

இத்தகைய முரண்பாடாக ஓட்டங்களின் மற்றும் எதிர்-ஓட்டங்களின் விளைவைத் துல்லியமாக கணிப்பது சாத்தியமல்ல. ஆனால், 2008 நிலைகுலைவிற்கு இட்டுச்சென்ற எந்த பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை என்ற சூழ்நிலையில், ஒரு பாரிய நிதியியல் கொந்தளிப்பை உருவாக்கும் சாத்தியத்திறனை அவை கொண்டிருக்கின்றன என்பது மட்டும் தெளிவாக உள்ளது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அமெரிக்காவின் பொருளாதாரமும் அதனின் இஸ்ரேலுக்கான பண உதவியும்

http://www.youtube.com/watch?v=xvNxEPQ0Ae0

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.