Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரன்னையின் திருவுடல் வல்வை இந்து மயானத்தில் மாலை தீயில் சங்கமமானது

Featured Replies

ஈழநாதம்

யாழ் நிருபர்

செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 22, 2011

parvathi%20amma%20burned.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான தேசத்தின் பேரன்னை பார்வதிப் பிள்ளையின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன. வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் அம்மாவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இராணுவத்தின் நெருக்கடிகளிற்கு மத்தியில் நன்கு ஒழுங்கமைக்கப்படதன்படி அம்மாவின் திருவுடல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று காலை 10.30 அளவில் வல்வெட்டித்துறை ஆலடி ஒழுங்கையில் உள்ள பேரன்னையின் புதல்வியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் இன்றுமாலை 2.30 அளவில் திருவுடல் அங்கிருந்து வல்வெட்டித்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

பேரன்னையின் இறுதி நிகழ்வில் பல்லாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக எமது தொடர்பாளர் கூறியுள்ளார். பல்வேறு தடைகளை நடைமுரைப்படுத்தியும் மக்களின் அணிதிரள்வினை இராணுவத்தினால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. மக்கள் குடா நாட்டின் பல இடங்களில் இருந்தும் இன்று காலையே வல்வையில் கூடிவிட்டதாக தொடர்பாளர் கூறினார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

Edited by உமை

யாழ் பல்கலைக்கழக்கத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சற்று முன்னதாக மாலை ஐந்து மணிக்கு தீயுடன் சங்கமமாகினார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 19.02.2011 அன்று இயற்கை மரணம் எய்தியிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக பார்வதி அம்மாளின் திருவுடல் வைக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது மக்களுடன் ஈழத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு அம்மாளுக்கு அஞ்சலி தெரிவித்தார்கள்.

டாக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் நடந்த நிகழ்வில் நாடாளமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோதரலிங்கம், சிறீதரன், சுமந்திரன் அரியனேந்திரன், யோகராஜன், ஈ.சரவணபவன் முதலியவர்களும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர்களான செ. கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செலமன்.சூ. சிறில், பத்மினி சிதம்பரநாதன் முதலியவர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதலிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் சில பிரதிநிதிகள் அம்மாளுக்கு அஞ்சலி உரையாற்றினார்கள். அதேவேளை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் இயக்குனருமான சீமான், கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்கள் தொலைபேசி வாயிலாக நேரலையாக தங்கள் அஞ்சலியினை தெரிவித்தார்கள்.

பின்னதாக பார்வதி அம்மாளின் திருவுடல் இறுதிக் கிரிகைகள் செய்வதற்காக பிரபாகரன் வீதியில் உள்ள அவரது உறவினர் ஒருவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படட்டது. தலைவர் பிரபாகரனின் வீடு முற்றாக அடித்து நெருக்கி அழிக்கப்படதன் காரணமாகவே உறவினரின் வீட்டில் இறுதிக்கிரிகைள் நடைபெறுவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அங்கு நடந்த கிரிகை நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூhரத்தில் வல்வை கடற்கரையில் உள்ள வல்வை மயானத்திற்கு பார்வதி அம்மாளின் உடல் தகனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதி மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை சீருடை அணிந்த படையினரும் சிவில் உடையில் வந்த இராணுவப் புலனாய்வினரும் புகைப்படங்களை எடுத்ததுடன் வீடியோக்களிலும் பதிவு செய்தனர். தெருத் தெருவாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அம்மாளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. இதனால் வல்வை நகரமே வெடிச்சத்தத்தால் அதிர்ந்தது. அதேவேளை கடந்த இரண்டு நாட்களாக வல்வை நகரமே சோகத்தில் உறைந்திருந்தது.

மக்கள் துக்கத்தை வெளிப்படும் விதமாக கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மரண ஊர்வலத்திற்கு முன்பாக இராணுவத்தினர் கறுப்புக் கொடிகளை பல இடங்களில் அகற்றியிருந்தனர். மரண ஊர்வலத்தை தொடர்ச்சியாக இராணுவத்தினர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வாயிலாக பதிவு செய்தனர். மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட எம்.பிக்கள் மற்றும் பொது மக்கள் கறுபபுக் கொடிகளை தாங்கியிருந்தனர்.

மக்கள் ஒவ்வொரு தெருக்களிலிருந்தும் வந்து இணைந்ததன் காரணமாக பெருமளவிலான மக்கள் மயானத்திற்கு வருகை தந்தனர். அதேவேளை பல மக்கள் வீதிகளில் நின்றபடி அன்னைக்காக பிரார்த்தித்து அஞ்சலி செலுத்தினர். தொடக்கத்தில் மக்கள் அச்சம் காரணமாக வருகை தராத பொழுதும் இறுதி நேரங்களில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டார்கள்.

கடும் மரியாதை மத்தியிலும் அஞ்சலிகள் மத்தியிலும் பார்வதி அம்மாளின் திருவுடல் இன்று மாலை 5 மணிக்கு தீயுடன் சங்கமமானது.

அதேவேளை., வன்னி யுத்தத்திற்கு முகம் கொடுத்து மக்களுடன் மக்களாக இராணுவத்தால் பார்வதி அம்மாள் கைது செய்யப்பட்டார். தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பனாங்கொட என்ற தடுப்பு முகாமில் விசாhரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். பனாங்கொட தடுப்பு முகாமில் நடந்த கொடுமையான விசாரணைகளை அடுத்து திரு வேலுப்பிள்ளை அவர்கள் மரணமடைந்தார். திருமதி பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருந்த பார்வதி அம்மாள் வல்வை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வல்வை மயானத்தில் வேலுப்பிள்ளை அவர்கள் தகனம் செய்யப்பட்டிருந்தார். அதேவேளை திருமதி பார்வதி அம்மாள் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு தீவிர நிலைகளுக்கு சென்று கொண்டிருந்தார். இவர் வைத்தியம் பெறுவதற்கு மலேசியா சென்று அங்கிருந்து இந்தியாவுக்குச் சென்ற வேளை விமான நிலையத்திலிருந்து இந்திய மற்றும் தமிழக அரசால் திருப்பி அனுப்பட்டார்.

மீண்டும் வல்வை மண்ணிற்கு வந்த திருமதி பார்வதி அம்மாள் யாழ் போதனா வைத்தியசாலையிலும் சாவகச்சேரி வைத்தியசாலையிலும் மருத்துவம் பெற்றிருந்தார். தொடர்ச்சியாக வல்வை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வந்த பார்வதி அம்மாளை தொடர்ச்சியாக கவனித்து வந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். இவருக்கான வைத்திய பணியை டாக்டர் மயிலேறும் பெருமாள் ஆற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 19.02.2011 அன்று உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியபடி தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் என்கிற வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்கள் காலமாகினார்.

பார்வதி அம்மாளின் புகலுடல் மாலை 4.30 மணிக்கு தீயுடன் சங்கமமானது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் புகலுடல் இன்று மாலை 4.58 மணிக்கு தீயுடன் சங்கமமானது. ராணுவத்தினரின் கெடுபிடிகளின் மத்தியில் அவரது இறுதி ஊர்வலமும் இறுதிக் கிரியைகளும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக தீருவில் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகலுடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன. காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 வரை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பரதிநிதிகள் என என மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் அவரது வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள பிரபாகரனின் சகோதரியின் வீட்டிற்கு இவரது புகலுடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் சுமார் 2.30 மணியளவில் தொண்டமனாறு வல்வெட்டிதுத்துறை வீதி வல்வெட்டித்துறை பருத்தித்துறை வீதியூடாக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வீதியின் இரு மருங்கிலும் ராணுவமும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் வீதியில் கட்டிப்பட்டிருந்த கறுப்புகொடிகள் பலாத்காரமாக அகற்றப்பட்டன. சுவரொட்டிகளும் கிழித்தெறியப்பட்டன. அங்கு நடமாடிய பொதுமக்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். மரண வீட்டிற்கு சென்றிருந்தவர்கள் கூட துருவித் துருவி சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.

பலதரப்பட்ட சோதனைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பழநெடுமாறனின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உள்ளிட்ட சில தரப்புகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புகலுடல் வல்வெட்டித்துறை ஊறணி மைதானத்தில் அவரது ரத்த உருத்தான சங்கர் நாராயணன் என்பவர் கொள்ளி வைக்க தீயுடன் சங்கமமானது.

இதனிடையே அங்கு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த பிரமுகர்கள் பலரும் உரையாற்றியிருந்தனர். அதேபோன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு அஞ்சலி செலுத்தினர். புடைத்தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உணர்ச்சி பூர்வமாக இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.