Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் போராளிகள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் சமூகமெனும் பெரும் கற்சுவரை எதிர் கொள்கிறார்கள்:-

Featured Replies

முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பெண் குழந்தைப் போராளிகள் சமூகத்தால் இன்னமும் சரியாக உள்வாங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது என்று தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறை மாவட்ட சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்கள் மீள தம்மை சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் சமூக கலாசாரத் தடைகள் எவ்வளவு பெரிய தடைகளாக அவர்கள் முன் உள்ளன என்பதை நாங்கள் அவதானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் போர்ப்பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வநாயகம் செல்வானந்தா சொல்கிறார் விடுதலைப் புலிகளில் இணைந்து போரிட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கான மணவாய்ப்பும் மிகக் குறைந்த நிலையிலேயே உள்ளது என. செல்வநாயகம் செல்வானந்தாவும் அதே திருச்சபையைச் சேர்ந்த ஒரு உள்ளுர் உதவிப் பணியாளர்.

தமிழ் சமூகம் மிகவும் மரபார்ந்தது. தமது மகன் முன்னாள் பெண் போராளி ஒருவரைத் திருமணம் செய்வதை பெற்றோர் விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது இந்தச் சமூகத்தால் மணம் அங்கீகரிக்கப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

முன்னர் போராளிகளாய் இருந்தவர்கள் என்ற 'களங்கம்' சமூகத்துடன் அவர்கள் மீள இணைந்து கொள்வதற்குப் பெரும் தடையாக இருப்பதாகச் சொல்கிறார் கொழும்பிலிருக்கும் பெண்கள் உரிமைச் செயற்பகாட்டாளரான சுனிலா அபேசேகரா.

பெண் போரளிகள் ஆயுதம் ஏந்தியவர்கள். ஆயுதத்தை மணந்தவர்களுக்கு மணம் என்பது ஏது என்கிற பார்வையின் விளைவாக முன்னாள் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில் பெரும் பிரச்சினையை எதிர் கொண்டு வருகிறார்கள் என்று சொல்லும் சுனிலா அபேசேகர மூவாயிரம் முன்னர் பெண் புலி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் எவ்வளவு போர் மணம் முடிக்காமலிருக்கின்றனர் என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

விடுதலைப் புலிகள் ஒரு வன்முறை இயக்கமாக இருந்தார்கள். சமூகத்தில் பலர் விடுதலைப் புலிகளால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இப்போது சமூகம் தானாகவே முன்னர் விடுதலைப் புலிகளில் தொடர்பு பட்டிருந்தவர்களுக்கு எதிராக தன்னை வெளிப்படுத்துகிறது. முன்னாள் ஆண் பெண் போராளிகள் இருபாலாருக்கும் இந்த நிலைமை பொதுவானது என்றும் சுனிலா குறிப்பிடுகிறார்.

எனினும் பெண்கள் அதிகமாகவே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

முன்னாள் பெண் போராளிகள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் சமூகமெனும் பெரும் கற்சுவரை எதிர்கொள்கிறார்கள் என்கிறார் கிளிவ் ஜக்நிக் என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்.

நான் வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் கல்வி வேலைவாய்ப்ப்பு போன்றன எனக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன. போதிய வேலை வாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லை. நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புக்களும் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் பதினெட்டே வயதான ஜெயா கமல்ராஜன். இவர் 2007 முதல் 2009 வரை புலிகளில் போராளியாக இருந்தவர்.

யாரும் எனக்கு வேலை தரத் தயாராக இல்லை. ஏனென்றால் விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்ட ஒரு அடங்காப்பிடாரிப் பெண் என்றே என்னைப் பார்க்கிறார்கள் என்கிறார் அவர்.

எனக்கு வாழ்க்கை பற்றிய பெரிய திட்டங்கள் ஏதும் இல்லை. அமைதியான இயல்பான ஒரு வாழ்க்கையையே நான் பெரிதும் விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடந்த காலத்தில் நடைபெற்ற அனைத்தையும் மறந்து விட விரும்புகிறேன் என்றும் அவர் கூறுகிறார்.

முல்லத் தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயதேயான நளினி சொல்கிறார் விடுதலைப் புலி உறுப்பினர் என்ற முத்திரை என்னுடைய வாழ்வில் என்றென்றைக்குமாகப் பதிந்து விடுமோ என அஞ்சுகிறேன். இது எனது வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது என்கிறார்.

நான் இவற்றைக் கடந்து சென்று விட விரும்புகிறேன். ஆனால் இந்த சமூகத்தின் கலாசாரத் தடைகள் எவ்வளவு தூரம் எனக்கு அனுமதிக்குமோ தெரியவில்லை. மக்கள் என்மீது அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் நான் சம்பந்தப்படாத ஒன்றுக்கு என்றும் சொல்கிறார் அவர்.

(பெண் போராளிகளின் பெயர்கள் மட்டும் உண்மையானவை அல்ல.) நன்றி : ஐஆர்ஐஎன் தமிழில் ஜிரிஎன்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58373/language/ta-IN/article.aspx

முன்னால் விடுதலை போராளிகளுக்கு சமூகம் அவர்களை ஏற்று வேலையோ இல்லை வாழ்க்கையோ தருவதில் சிக்கல் இருக்கின்றது. அதையும் மீறி அவர்களை சமூகத்தில் ஏற்க தடையாக இருப்பது அவர்களை சுற்றியுள்ள சிங்கள பயங்கரவாதம் - அதன் இனவாத அரசியல்வாதிகளும் அவர்களால் வழிநடத்தப்படும் பயங்கரவாத இராணுவமும்.

சாதாரணமாகவே வேலை செய்வதே கடினமாக உள்ளது. ஒருவர் முன்னால் போராளியை வேலைக்கு அமர்த்தினால் அவரை சிங்கள புலனாய்வுத்துறை தொடக்கம் அரசியல் ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றார். திருமணம் முடித்தாலும், ஏன் முடித்தீர்கள் என நெருக்கடிகள். பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு அரசியல் தீர்வு எமது மக்களுக்கு வந்தால் மட்டுமே ஒரு நிரந்தர விடிவு இவர்களுக்கும் எமது சாதாரண மக்களுக்கும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் தீர்வு எமது மக்களுக்கு வந்தால் மட்டுமே ஒரு நிரந்தர விடிவு இவர்களுக்கும் எமது சாதாரண மக்களுக்கும் வரும்.

உண்மைதான். ஆனால் வெளிச்சம் துலங்காத நீண்ட குகையினுள் பிரயாணம் செய்யும் நிலையில்தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கான தேடலும் உள்ளது. எனவே போராட்ட காலத்தில் இதே பெண்போராளிகளை உயர்வாக வைத்திருந்த தமிழ்ச் சமூகம், வெறும் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக மட்டும்தான் உதவாமல் இருக்கின்றார்கள் என்று நினைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மன வருத்ததக்க விடயம் எமக்காக போராடியவர்கள்,நாட்டுக்காக போராடியவர்கள் தாங்கள் புலியில் இருந்து போராடியதையே மறக்க வேண்டும் என சொல்வது எவ்வளவு தூரம் அவர்கள் இச் சமூகத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது...இங்கு பெண் போராளிகள் மட்டும் இல்லை ஆண் போராளிகள் கூட கஸ்டப்படுகிறார்கள் ஆனால் ஆண்கள் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள் பெண்கள் பாடுதான் படு திண்டாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

பெண் போராளிகள் இயல்பு வாழ்கையில் சமூகமெனும் பெரும் கற்சுவர் தடையாகிறது:-

27 பெப்ரவரி 2011 GTBC.FMன் நிலாச்சோறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேயர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்:-

முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58464/language/ta-IN/-----.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.