Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா,இங்கிலாந்து போட்டி டை ஆகும் என ஏழு மணி நேரம் முன்பே கூறிய ஷேன் வார்னே. சூதாட்டம் காரணமா?

Featured Replies

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டி டை ஆகும் என்று முன்னாள் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சரியாகக் கணித்திருந்தார். அவர் துல்லியமாக எப்படி கணித்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

கிரிக்கெட் உலகை சூதாட்டத்தின் நிழல் மீண்டும் படர்ந்துள்ளது போலத் தோன்றுகிறது. ஆட்டமா? சூதாட்டமா? என்பது போல் கிரிக்கெட் தன் முகம் மாறி வருவதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி., தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும்,

கடந்த பிப். 25ல் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேக்கு இடையிலான முதல் சுற்று போட்டி அஹ்மதாபாத்தில் நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து முதலில் மந்தமான துவக்கம் கொடுத்தனர். முதல் 11 சுற்று பந்துவீச்சில் 28 ஓட்டங்கள் தான் எடுத்தனர். 15 சுற்றின் முடிவில் 53 ஓட்டங்கள் எடுத்தனர். இதெல்லாம் ஐ.சி.சி எனப்படும் பன்னாட்டு கிரிக்கெட் குழுமத்துக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டிம் நீல்சன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "எல்லோரும் வாட்சன், ஹாடின் மெதுவாக விளையாடியது குறித்து தான் பேசுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் நன்றாகத்தான் விளையாடினர். ஜிம்பாப்வே அணியினர் துவக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியதால், இழப்பின்றி எங்களைப் பாதுகாக்க வேண்டியது இருந்தது. எங்களைப் பொறுத்தவரையில் சரியாகத்தான் விளையாடினோம்", என்றார்.

அதேநேரம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி 'டை' ஆகும் என, போட்டி துவங்குவதற்கும் ஏழு மணி நேரம் முன்னதாக, ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் வார்ன், கணித்ததும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பாராட்டினாலும், பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் ஒருவர் கணிக்கும் போது, யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என்று தான் கூறமுடியும். மாறாக வார்ன் மட்டும், 'டை' ஆகும் என்று எப்படி சொன்னார் என்பது, பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சூதாட்ட சந்தேகம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சொகைல் கூறுகையில், "போட்டி 'டை' ஆகும் என, இந்தியா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் யாராவது தெரிவித்து இருந்தால், இந்நேரம் மேற்கு நாடுகளின் 'ஊடகங்கள்' பெரிய அளவில் விவாதித்து, குதித்திருக்கும். ஆனால், சொன்னது ஆஸ்திரேலியா வீரர் என்றவுடன் 'ஜீனியஸ்' என்கிறார்கள்", என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இச்செய்தி குறித்த படங்கள் மற்றும் போட்டியின் கடைசி 5 பரபரப்பான ஓவர்கள் வீடியோவில் காண.....

http://www.thedipaar.com/news/news.php?id=25016

  • கருத்துக்கள உறவுகள்

சூதாட்ட சந்தேகம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சொகைல் கூறுகையில், "போட்டி 'டை' ஆகும் என, இந்தியா அல்லது பாகிஸ்தான் வீரர்கள் யாராவது தெரிவித்து இருந்தால், இந்நேரம் மேற்கு நாடுகளின் 'ஊடகங்கள்' பெரிய அளவில் விவாதித்து, குதித்திருக்கும். ஆனால், சொன்னது ஆஸ்திரேலியா வீரர் என்றவுடன் 'ஜீனியஸ்' என்கிறார்கள்", என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்களை விட மற்றவர்கள் எல்லாம் கேனையர்கள் என மேற்குலகம் நினைக்கிறது.

தங்களை விட மற்றவர்கள் எல்லாம் கேனையர்கள் என மேற்குலகம் நினைக்கிறது.

சூதாட்டம் செய்பவர்கள் அதை வெளியே சொல்வார்களா?

சிலவேளை வடக்கத்தையானை பற்றி தெரிந்து சொன்னாரோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

‘Shane Warne a genius to have predicted India vs England tie’

Posted by admin on Feb 28, 2011 | 1 Comment

1ShareHe was a genius with the ball and England captain Andrew Strauss said Shane Warne proved as much a genius with predictions by correctly forecasting that the pulsating India-England match would end in a tie even before the players had walked out on the field.

I think Warne is a genius to have predicted that way (a tie). What more can I say,” said Strauss after the nerve-wrecking encounter in which his team was set a mammoth 339-run target by the Indians.

Riding on Strauss’ magnificent 158, the Englishmen ended the match even-stevens to snatch a point.

But much before even the first ball was bowled, Warne had predicted on his twitter page that the match would be a tie.

“Looking forward to the game between India and England today should be a cracker. My prediction – a tie!”

Soon after the thriller, Warne posted another tweet in which he said, “Before u think there was something untoward re prediction of a tie, thought it was going to be a cracker – tie was tongue in cheek – but right.”

Source : Indian Express

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து அணி விட்டுக்கொடுப்பு மனப்பான்மையோடு விளையாடியது. எப்படி தான் விளையாடினாலும் கிண்ணமா கிடைக்கப் போகுது.. சூதாட்டம் மூலம் காசாவது பார்ப்பம் என்று முடிவு கட்டி இருப்பார்கள். பாவம் ரசிகர்கள் சினிமா போல இங்கும் நடிகர்களை நம்பி ஏமாந்து போகிறார்கள். உலகமே ஏமாற்று மயமாக மாறிக் கொண்டு வருகிறது.

கடாபியின் மகன் 1.5 மில்லியன் பவுன்களை அன்பளிப்பாக வழங்கி பிரித்தானியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வர்த்தகத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். அவரின் கலாநிதி பட்டத்திற்காக சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை இன்னொருவரால்.. அவருக்காக.. அதுவும் பிற மூலங்களில் இருந்து பிரதி எடுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

இதே காரணத்திற்காக ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் பதவி விலக நேரிட்டுள்ளதோடு.. அவரின் பட்டமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படிப்பே இப்படின்னா.. விளையாட்டு...??! :unsure::o:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.