Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறிவரும் உலக ஒழுங்கில் வலுப்பெறும் தமிழீழக் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாறிவரும் உலக ஒழுங்கில் வலுப்பெறும் தமிழீழக் கோரிக்கை

புதன்கிழமை, 02 மார்ச் 2011 08:15

மனித நாகரீகம் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் அரசியலும் உலகாவிய ரீதியில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் தோன்றிய கிரேக்க உரோம் அரசுகள் தேசிய அரசுகளாகவிருந்தன. குறுகிய நிலப்பரப்பு, சிறிய மக்கள் தொகை, இறைமை என்பவற்றை உள்ளடக்கி அவ் அரசுகள் அளவில் சிறியனவாகவிருந்தன.

பின்னர் நாடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளை மற்றவர்கள் ஆக்கிரமித்து கொள்ளும் புதிய நாகரீகம் அல்லது நடைமுறை தோற்றம் பெறலாயிற்று இத்தகைய போக்கு, பிரான்ஸ், பிரித்தானியா, போர்த்துக்கல், ஸ்பெயின், சீனா, இத்தாலி, ஜேர்மனி போன்ற அரசுகள் தமக்கு அண்மித்த தேசங்களை ஆக்கிரமிக்கவும் கடல் கடந்த பெரிய அரசுகளை உருவாக்கவும் வழிகோலின எனலாம். பின்னர் குறித்த நாடுகள் தம்மை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த செல்வந்த நாடுகளாக முன்னிறுத்தி கொள்ள தேவையான தங்கம் மற்றும் மூலவளங்கள் காலணித்துவ நாடுகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் நாடுகள் இன மத மொழி அடிப்படையில் தமது சுதந்திரத்தை கருத்தில் கொண்டு பிரிந்து செல்லும் புதிய நடைமுறை தோற்றம் பெற்றது. சோவியத் ரஸ்யாவின் உடைவுடன் இத்தகைய போக்கு அவதானிக்கப்பட்டது. அதற்கு முன் இந்திய பேரரசு பாகிஸ்தான், பங்களாதேஸ் என மத மற்றும் மொழி அடிப்படையில் பிளவு பெற்றது. பின்னர் அண்மையில் கொசோவா மற்றும் சூடானின் பிரிவு சுதந்திர அரசு என்பன உலகின் மிக முக்கிய அரசியல் மாற்றங்களுக்கான நிகழ்வுகளுக்கு கால்கோளிட்டன.

இதன் முக்கிய திருப்ப புள்ளியாக தற்போது எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி உலகத்தின் சனநாயகத்தை விரும்பும் மக்களின் நம்பிக்கை புள்ளியாக மாறியுள்ளது எனலாம். 20 வருடங்களுக்கும் மேலாக எகிப்தை தனது சர்வாதிகார ஆட்சி மூலம் கட்டியாண்டு கொண்டிருந்த முபாரக் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். பல நாட்களாக எகிப்து மக்கள் கெய்ரோ நகர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதன் விளைவு அரச படையினர் மற்றும் மக்கள் படையினருக்கு இடையேயான போராட்டங்கள் என்பன ஓய்ந்த நிலையில் எகிப்தின் இராணுவம் இடைக்கால ஆட்சியை கைப்பற்ற பொருத்தமான சமயத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரிடம் ஆட்சியை கையளிப்பது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் இதனை இலங்கையின் தற்போதைய நிலையுடன் நன்கு ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது விடுதலைப் புலிகளுடன் பேச்சு மூலம் தீர்வுகாண்பேன் என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் வாக்களிக்காமலேயே ஆட்சி பீடம் ஏறினார் சனாதிபதி மகிந்தர். ஆனால் ஜெனிவாவில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் ஒரு இணக்கப்பாட்டையாவது நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை இனி போரை தவிர வேறு வழி எதனையும் தேர்ந்தெடுக்காதிருக்க செயலாற்றி அதில் பெரும் வெற்றியும் கண்டார்.

ஆனால் எல்லோரைப் போலவும் பதவியானது அதிகார சுகம் என்பன காரணமாக அரசியல்யாப்பை தனக்கும் தனது குடும்பத்துக்கும் சாதகமாக திருத்தி சர்வாதிகார ஆட்சி ஒன்றை நடத்தி வருகின்றார் மகிந்தர். யுத்த வெற்றி யாருக்கு உரியது என்ற போட்டா போட்டியில் முன்னாள் இராணுவத்தளபதியையே சிறையில் அடைத்தார்.

ஏனைய இலங்கை சனாதிபதிகளுக்கு கிடைக்காத ஒரு சந்தர்ப்பமாகிய “இலங்கை இனப்பிரச்சினை தீர்வு” அவருக்கு கிட்டிய போதும் அதனை சரியாக பயன்படுத்தாது காலத்தை வீணடித்துவரும் மகிந்தர் ஏனைய சிங்கள இனவாதிகளிலிருந்து தானும் வேறுபட்டவரல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார். பொருட்களின் விலைவாசி உயர்வு, மீண்டும் தொடங்கியுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் என்பன தமிழ் மக்களை மீண்டும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளியுள்ளது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களை வெறுத்த ஒரு சில தமிழர்களும் மற்றும் அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் சிங்களவர்களும், அரச இயந்திரத்தை எதிர்க்க விடுதலைப்புலிகள் மீண்டும் வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளதை நாட்டில் காணக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே பல உயிர்களை காவு கொண்டும் திருந்தாத சிங்கள அரசு தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்கிறது என்றுதான் குறிப்பிட வேண்டும்.

-காரை.வசந்தன்

நன்றி - பூராயம் இணையம்

எகிப்தில் அதிபராக இருந்த முபாரக்கிற்கு மேற்குலக பல தடைவைகள் அரசியல் மாற்றங்களை செய்யச்சொல்லி வற்புறுத்தியிருந்தன. அவர் தனது இராணுவத்திலும் புலனாய்வுத்துறையிலும் வைத்திருந்த அதீத நம்பிக்கையால் உதாசீனம் செய்துவந்திருந்தார்.

இன்று தமிழரை சிங்களத்துடன் சேர்ந்து வாழச்சொல்லும் உலகமும் சிங்களத்தை, முக்கியமாக இரண்டில் மூன்று பெரும்பான்மையை கொண்ட கட்சியை, அதிகார பரவலாக்கலுக்கு கேட்டுக்கொண்டு இருக்கின்றது. ஆனால், "தலைவர் பிரபாகரன் கேட்டதை கொடுக்க மாட்டேன்" என கூறும் சிங்களம் "உண்மையில் தந்தை செல்வா" கேட்டதையே மறுத்து வருகின்றது.

மாறிவரும் உலகில் சிங்களம் மாற மறுக்கையில் அந்த சந்தர்ப்பங்களை நாமும் தவறாது பயன்படுத்தல் வேண்டும். அதுவே இந்த தலைமுறையின் வரலாற்று கடமையாகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.