Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் போர் அனுபவ மாநாட்டை புறக்கணிக்க வேண்டுகோள்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011

போர் அனுபவத்தை பகிரும் மாநாட்டை ( “Defeating Terrorism Sri Lankan Experience” )புறக்கணிக்க அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான காட்டு மிராண்டித்தனமான போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் நோக்கில் சுமார் 50 இற்கு மேற்பட்ட நாடுகளை அழைத்து மா நாடு ஒன்றினை நடத்துகின்றமை அனைவருக்கும் தெரியும். இந்த மா நாடு மே மாதம் 31 இல் இருந்து ஜூன் 2 வரை கொழும்பில் நடக்கவிருக்கின்றது.

.

இந்த மா நாட்டை புறக்கணிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள் ஸ்தாபனம் அறிவித்துள்ளது. தற்போது இன்ரனஷ்னல் வாட்ச்டோக் எனும் அமைப்பும் இந்த மா நாட்டை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டத்திற்கு முரணான இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அமைந்து விடும் ஆகவே இந்த மா நாட்டை புறக்கணியுங்கள் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D

சிறிலங்கா படைத்துறைக் கருத்தரங்கினை அமெரிக்கா, ஜப்பான் புறக்கணிப்பு! மேலும் பல நாடுகள் பரிசீலனை!!

தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியில் தோற்கடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சிறிலங்காவின் கருத்தரங்கினைப் புறக்கணிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மே மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்கேற்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

'முறியடிப்புப் தாக்குதல்' தொடர்பான தமது பட்டறிவினை இக்கருத்தரங்கில் தாம் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக சிறிலங்கா படைத்துறை தெரிவித்திருந்தது.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்துவரும் நிலையில், அது விடயத்தில் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நோக்கில் அமெரிக்கா கருத்தரங்கினைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது. படைத்துறை சார்ந்த எந்தவொரு நடவடிக்கைகளிலும் பங்கெடுப்பதற்கான தடை ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பில் நிலவும்; காரணத்தால் சிறிலங்காவின் மேற்படி கருத்தரங்கில் ஜப்பான் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரியவருகின்றது.

இறுதிக் கட்டப் போரின் பொறுப்பு விவகாரங்கள் மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பான சிறிலங்காவின் செயற்பாடுகளில் அமெரிக்க அதிருப்தி அடைந்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பல முக்கிய அனைத்துலக நாடுகளும் புறக்கணிப்பு தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டினை முன்னிறுத்திய கொண்டாட்டங்களுக்கும் சிறிலங்கா தயாராகி வருவதோடு, உல்லாசப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ள நிலையில் அமெரிக்காவினதும் ஜப்பானினதும் புறக்கணிப்பு சிறிலங்காவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6FB9FC89-58E3-4E0E-9A06-F9063AA068DD}

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=2N1z4cuup-s

அதென்ன மாநாடு? இவனெ நம்ம செந்தில் போல காசு கொடுத்துபோட்டு வரசொல்லியிருப்பான்.. ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.defseminar.lk/

This is the website ( above link) which is set up by GOSL especially to promote the seminar. The participating or invited countries' flags are shown on this website. I googled it and found the details in this website. http://www.sinhalaya.com/news/eng/news.php?go=fullnews&newsid=725

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.