Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியன் ராடார் சரியில்லையாம்;அமெரிக்க உதவியை கோரும் இலங்கை

Featured Replies

செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011

இந்தியாவில் இருந்து பெற்றுகொள்ளப்பட்ட ராடார் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தரமற்றவை என இலங்கை அரசு இப்போ கூறுகின்றது. அதற்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து ராடார் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை கொள்வனவு செய்ய அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டுள்ளது இலங்கை அரசு. படிப்படியாக இந்தியாவிற்கு தண்ணி காட்டும் வேலைகலையே இலங்கை செய்துவருவதாக கூறபப்டுகின்றது.

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியா செய்த உதவியினால்தான் புலிகளின் விமானத்தை வீழ்த்தியதாக இலங்கையின் புதிய விமானப்படை அதிகாரி கூறியிருந்தார். ஆனால் இப்போ ராடார் விமான எதிர்ப்பு தொகுதிகள் தரமற்றவை என கூறப்படுகின்றது.

அமெரிக்கா இலங்கைக்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. அதனை சமாளிக்க ஆயுத கொள்வனவுகளை மீண்டும் அமெரிக்காவிடம் செய்ய திட்டமிட்டு இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்
:D ரயில் பெட்டிகள் சரியில்லை,ராடார் சரியில்லை......என்று சொல்லுவதைவிடுத்து ....இந்தியாவே சரியில்லை என சொல்ல வேண்டியதுதானே...

காலை வாரும் ராடரும் அதனக் கண்டுபிடித்த புலிகளும்:

இந்திய அரசால் கொடுக்கப்பட்ட 2 பரிமானத் தோற்றத்தைக் கொண்ட ராடர்கள் 24 மணி நெரமும் வேலைசெய்யும்போது, குறைந்தது ஒவ்வொரு 8 மணித்தியாலத்தின் பின்னர் சிறிது நேரம் வேலைசெய்யாமல் போவது வழமையாக இருந்திருக்கிறது. இருப்பினும் அதனை இலங்கை பாவித்து வந்துள்ளது. இந் நிலையில் 2007ம் ஆண்டு புலிகளின் வான்படை கொழும்பு கட்டநாயக்கா விமானநிலையத்துக்கு மேலாகப் பறந்து குண்டு வீச்சில் ஈடுபட்டது. இதனால் இந்தியாவிடம் இருந்து குத்தகைக்குப் பெற்றிருந்த தாக்குதல் உலங்கு வானூர்திகள் உட்பட பல விமானங்கள் சேதத்திற்கு உள்ளாகின.

அப்போது இலங்கை அரசானது தமக்கு எந்தச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் புலிகள் வீசிய குண்டுகள் ஓடுபாதையில் வீழ்ந்ததாகவும் தெரிவித்தது தப்பியது. ஆனால் விக்கி லீக்ஸ் இது குறித்த தகவலை வெளியிட்டு, இலங்கை அரசின் மூக்கை உடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியா கொடுத்த ராடர்கள் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கும் ஒரு முறை குறிப்பிட்ட சில நிமிடநேரங்கள் செயல் இழக்குமாம், அந்த சில நிமிட நேரம் எது என்பதை வான் புலிகள் மிகத் துல்லியமாக தெரிந்துவைத்திருக்கின்றனர். அதனால் தாம் வன்னியில் இருந்து புறப்படும், நேரம் தென்னிலங்கையில் தாம் தாக்கும் இடம், என்பனவற்றை மிக மிகத் துல்லியமக அவர் கணித்தே செயல்பட்டுள்ளனர்.

வன்னியில் இருந்து புலிகளின் விமான பறப்பில் ஈடுபட்ட சில வினாடிகளில், வன்னி தளத்தில் உள்ள இலங்கை ராடர் அதனைக் கண்டு பிடித்துவிடும். ஆனால் அவர்கள் கொழும்புக்கு வரும்நேரம், கொழும்பு ராடர் செயலியழக்கும் நேரமாக இருக்குமாம். அதனால் ராடர் இருந்தும் அதனை பாவிக்கமுடியாத நிலையும், மற்றும் அது வேலைசெய்தாலும், புலிகளின் விமானங்கள் பறப்பை அது கண்டு பிடிக்காது என்ற உண்மை பின்னரே இலங்கை அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது புலிகள் இந்தியா கொடுத்த ராடர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்துவைத்திருந்ததோடு, அது 8 மணித்தியாலத்துக்கு ஒருமுறை இப்படிக் காலைவாரும் என்று வேவுபார்த்து தெரிந்தும் வைத்திருந்தும் உள்ளனர்.

இதனை மிகத் தாமதமாக அறிந்த கோத்தபாய, தாம் பல காலமாக முப்பரிமான ராடர்களை இந்தியாவிடம் இருந்து கோரிவருவதாகவும் அதனை அவர்கள் தரவில்லை என்று அமரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிடம் குறைப்பட்டுள்ளார். சும்மா இருப்பாரா ரொபேட் ஓ பிளேக், உடனே பாதுகாப்பு தொலைத் தொடர்பு ஊடாக இச் செய்திகளை தமது கட்டளைப் பீடத்துக்கு ஏப்பிரல் 2007ம் ஆண்டு அனுப்பிவைத்துள்ளார். அதனை விக்கி லீக்ஸ் கைப்பற்றி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கோத்தபாய அமெரிக்காவைச் சேர்ந்த் நிபுனர் குழு ஒன்று இலங்கை வந்து புலிகளின் விமானத் தாக்குதலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து படையினருக்கு உதவிகளை வழங்கவேண்டும் எனவும் கோரியுள்ளார் என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது.

இறுதியாக சீனாவிடம் இருந்து முப்பரிமாண ராடர்களை பெரும் விலைகொடுத்து இலங்கை அரசு வாங்கி அதனைப் பொருத்தி உள்ளது. இருப்பினும் இரவில் வரும் புலிகளின் விமானங்களை அது கண்டு பிடித்தாலும், விமானத்தைத் தாக்கும் துப்பாக்கிகளை இயக்கும் ராடர் வசதிகளை அதுகொண்டிருக்கவில்லை எனவும், அதனால், புலிகளின் விமானம் பறப்பில் ஈடுபடும்போது வாண்பரப்பு முழுவதும் கண்மூடித்தனமாக இலங்கைப் படையினர் சுட்டுத் தள்ளியதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் நேரடித் தலையீட்டில் இலங்கை அரசு புலிகளுடனான போரில் வென்றுள்ளது என்பது புலனாகிறது. ஆனால் அதனைக் கருத்தில் கொள்ளாது, தாம் புலிகளைப் போரில் வெண்றதாக அது பிதற்றுவது அர்த்தமற்றது.

15 Mar 2011

manithan.com

  • கருத்துக்கள உறவுகள்

கான்கேவு கான்டக்டு லென்சு எதாவது கோளாறா இருக்கும் அல்லது நட்டு எதாவது லூசா இருந்திருக்கும்.. அதை போய் பெருசு பண்ணிக்கிட்டு

டிஸ்கி:

அதை இங்கிருந்தே சரிபண்ண நல்ல தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த காட்சி உள்ளது போல உள்ளார்களே.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.