Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்காலத்தில் சிங்கள அடக்குமுறைக்கும், இந்திய வல்லு}றுகளின் பார்வைக்கும் தமிழ்மக்கள் எப்படிப்பட்ட தப்பித்தலை மேற்கொள்ளலாம் என்று எண்ணாமல், மாண்டு போன காந்தியின் கருத்துக்களில் நியாயத்தை தேடுவது வேடிக்கை.

இவரது புறுபுறுப்புக்கள் ஏதும் சிங்கள அரசு தமிழ்மக்களுக்கு நியாயத் தீர்வை தருவதற்கான முறைமையாக இருக்கப் போவதில்லை.

90ம் ஆண்டு இந்திய அரசு மாகாணசபை தான் தீர்வு என்று தந்தது. கடைசியில் என்னாச்சு? எவ்வித அதிகாரமும் அற்ற அமைப்பை எம் தலையில் கட்டிவிட்டு எம் பிரச்சனைகளைத் தீர்த்து கொள்ளலாம் என்று முட்டாள் பட்டம் கட்டமுனைந்தது.

ஆனால் இப்போது அதன் பலம் எல்லோருக்கும் தெரியும். இப்போது அதை ஆளுவது சிங்கள ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட சிங்கள நபர். அதை விட இன்று நினைத்தாலும் அதை சிங்கள அரசு கலைத்து விடமுடியும். இப்படிப்பட்ட உப்புச்சப்பற்ற திட்டத்தை எம் தலையில் கட்டி முட்டாள் ஆக்கிய இந்திய அரசைப் பற்றி குறித்த நபருக்கு கதைக்க வக்கில்லை.

சிங்கள அரசு சுனாமி;க்கு கூட வடக்கு கிழக்கிற்கு ஏதும் கொடுக்ககூடாது என்று கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றது. புலிகள் பகுதியை விடுவோம். அரசாங்கப் பகுதிகளும் பாதிக்கப்பட்டவை தானே. அவர்களுக்கு எவ்வித தீர்வையும் கொடுக்கமுடியாதோ? ஆனால் காலியிலும், அம்பாந்தோட்டையும் கல்வீடு கட்டி கொடுக்க தீர்விருக்கின்றது. ஆக தமிழ்ர்களுக்கு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று நிற்கின்ற சிங்கள அரசைப் பற்றி கதைக்க இக் குறித்த நபருக்கு வக்கில்லை.

ஆனால் அல்பிரட் துரையப்பா கட்டித்தந்த ஒளவையார் சிலையும், மைதானமும் தான் மக்களுக்கு தீர்வு என்று நினைக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கு விளங்கப்படுத்தவா முடியும்?

  • Replies 147
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்தம் கொட்டாமல் சுதந்திரம் வாங்கியவர்கள் ஏன் வங்கதேசத்திற்கு இராணுவத்தை அனுப்பியவர்கள்.

பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே

..

எனது கருத்துக்கு ஆதாரமாக..

எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி

  • கருத்துக்கள உறவுகள்

தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

மேலும் சில விடயங்களை இவ் நபர் மறைப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். கல்லோயக் குடியேற்றம், மகாவலி கங்கை அபிவிருத்தி என்று தமிழர் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது கூட இப் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை மறைப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இதை விட தொழில்ரீதியில் சென்ற தமிழ்மக்களை "நாய்" என்றும்"கள்ளத் தோணிகள்" என்றும் வசை பாடும் போது அதை சகிர்த்துக் கொண்டு, சிங்களவர்களின் காலடியில் கிடக்கவேண்டும் என்று நினைக்கின்றாரா?

எனவே எவ்வித யதார்த்ததுக்கு உதவாத விவாதியாக தன்னை காட்டிக் கொள்ள இவர் விரும்புகி;ன்றார் என்பது தான் புலப்படுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

..

எனது கருத்துக்கு ஆதாரமாக..

எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரே கூறிவிட்டீர் உமக்கு சாத்வீகவளிகளில் போராடிய தமிழ் தலைவர்களை பற்றிய அறிவு போதாது என்று. அப்படியாயின் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும். அதன் பின்பு வந்து கருத்தெழுதும். அதைவிட அவர்களை பற்றிய அறிவு இல்லை என்கிறீர் பின்பு எப்படி அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று தெரியும்.

நீர் உமது கற்பனைகள் தான் வரலாறு என்று நம்புகறீரா.????

:?: :?: :?: :evil: :twisted:

:twisted: :evil: :twisted:

அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..

அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை..

:?: :?: :?: :evil: :twisted: :evil: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போது அவர்களை வருமானம் எடுக்கவிட்டிருந்தால் இப்போ பணபலத்தால் அனைவரையும் அடிமையாக்கியிருப்பார்கள். முழு ஈழமும் அவர்கள் கையில் இருந்திருக்கும். பின்பு அவர்கள் செய்வதை அங்கிருந்து பார்த்தால்தான் தெரியும். அதைவிட வருமானம் எடுத்ததை அப்படியே விட்டிருக்க வேண்டும் என்கிறீர்கள். பின்பு ஏன் சட்டங்கள் நீதிமன்றங்கள் தேவை. அவரவர்களை தாங்கள் விரும்பியதை செய்ய விடலாமே. கதிர்காமர் கொலையை ஏன் விசாரிக்க வேண்டும். அவரது விசாரணைக்கு லட்சக்கணக்கான பணம் செலவாகும் அல்லவா.

அது அனைத்தும் வீண் அல்;லவா. அவர் உயிரோடு இருந்தாலும் செலவு இல்லாவிடினும் செலவு அல்லவா.

ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..

யாருடைய வருமானம்?

தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்

கடந்த மூன்றரைவருட காலத்தில் நீங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தீர்கள் உங்கள் போராட்டம்பற்றி அத்தனை நாடுகளுக்கும் போராட்டத்தின் நியாயத்தன்மையை பரப்புரைசெய்யவே பேச்சுவார்த்தை என்று பலநாடுகளுக்கும் சென்றதாக அன்ரன் பாலசிங்கம் மாவீரர்தின விரிவாக்க ஊரையில் குறிப்பிட்டிருந்தார்..

அப்படிச் சென்ற எத்தனை நாடுகள் உங்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன?

எத்தனை நாடுகள் உதவிக்கரம் தந்துள்ளன?

அன்ரன் பாலசிங்கம் சொன்னதில் எத்தினைவீதம் உமது அறிவுக்கு விளங்கிச்சுது....???? பரப்புரை செய்ய எண்டபதம் பாவிக்கப்பட்டதா...???? கதைதிரிபை நிப்பாட்டும். முதலில் சொன்னது என்ன என்பதில் தெளிவுகாட்டும்....

காந்தியம் எண்ட உப்பு சப்பில்லாத ஒத்துளையாமை இயகத்தினால் மக்கள் சட்டத்துக்கு உட்படாமல் எதிர்ப்பு நடவடிக்கை என்பதும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதுக்கும் நீர்..காட்டுகிண்ற பொருளாதார இளப்பை காரணமாக காட்டும் உமக்கு காந்தியத்தாலும் பொருளாதாரம் இளக்கப்படும் என்பது தெரியாதா....???

அடக்குமுறைக்கு எதிராய் அகிம்சை எண்ட இம்சைக்கும் ஆயுதம் தாங்கிய போருக்கும் உள்ள வித்தியாசங்களை அறிய முயலும்..

உமது சொந்தக்காரணங்களுக்காய் ஈழத்தவர் செய்வது தவறு எண்டு நிறுவ முற்படாதீர்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எதையும் சிந்திக்காமல் கருத்தை எழுதிவிட்டு நீங்கள் கூறுவதே சரியென்று வாதிடுகிறீர்கள். உங்களிற்கு எதைப்பற்றிய உண்மை நிலையும் தெரியாதா. அல்லது தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீர்களா. நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பாPட்சையின் யாழ் மாவட்ட பெறுபேறுகளை பார்த்தீர்களா. விடுதலைபுலிகளின் பகுதிகளில் இருக்கும் மாணவர்களது பெறுபேறுகளை பார்த்தீர்களா. இதற்கு முந்தைய முடிவுகளையும் பார்த்தீர்களா.

யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மாத்திரம் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேரென்று தெரியுமா. அல்லது இலங்கை சனத்தெகை எவ்வளவு என்று தெரியுமா????

உங்ஙளது போராட்டமுறையால் அழிவுற்ற கல்வி முறையினால் தமிழரின் கல்வி கீழ்மட்டத்திற்குச்சென்றதைய

இலங்கையில் வாழும் 10 இலட்சம் இலங்கைத்தமிழர்களில் இரண்டு இலட்சம் தமிழர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலும் 8 இலட்சம் இலங்கைத்தமிழர்கள் இலங்கைத் தலைநகரையும் அதைச்சுற்றியுள்ள பிரதேசத்திலும் வாழ்வது யார் இனவாதிகள் என்பதை உணர்த்தவில்லையா

:lol::D:D:D:D

இப்பதான் எனக்கு விளங்கிச்சுது... நாங்கள் யாரோடை விவாதிக்கிரம் எண்டு.... :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஏன் தட்ஸ்தமிழிற்கு போகவேண்டும். உங்களிற்கு அங்கு உறவுகள் இருப்பார்கள். நீங்கள் போவீர்கள். அந்த அன்பர் நீங்களாக கூட இருக்கலாம். நீங்களே எழுதிவிட்டு நீங்களே படித்தாகவும் கூட இருக்கலாம். உண்மையை நீங்கள் எப்போதும் பித்தலாட்டம் ஆக்க பார்க்கிறீர்கள். ஏனென்றால் உமது தொழிலுக்கு அதனை பித்தலாட்டம் ஆக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..

இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்

:evil: :evil: :evil: :twisted: :twisted: :evil: :twisted: :evil: :lol::D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் எனக்கு விளங்கிச்சுது... நாங்கள் யாரோடை விவாதிக்கிரம் எண்டு

எனக்கும் பலதடவைகள் வாசித்த பின்னர்தான் விளஙகியது யாரோடு கதைக்கிறோம் என்று. :lol::D

:D:D:D

எனக்கும் பலதடவைகள் வாசித்த பின்னர்தான் விளஙகியது யாரோடு கதைக்கிறோம் என்று. :lol::D

:D:D:D

ம் எனக்கும் இப்பதான் விளங்கிச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பதிலை உங்கள் சிந்தனைக்கு.. கற்பனைக்கு.. விட்டு

மீண்டும் "காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டம்"

தலைப்புக்கு வருவோம்..

நன்றிகள் பல

குறுக்ஸ் எழுதிய பதிலில் திருப்தியா. அல்லது உமது கற்பனை இங்க எடுபடவில்லையா. உமக்கு எட்டாம் வகுப்பு வரை படித்தும் நல்ல அறிவு உள்ளது(???). விழங்காவிடில் கேளும் விளங்கபடுத்துவார். தலைப்பு மாறுகின்றதே என்று எண்ணி தப்பி ஒட பார்க்கவேண்டாம். எமது போராட்ட வெற்றிகள் உங்களை சோர்வடையசெய்திருக்கும். அதற்காக காந்தியை இழுத்து கடைசிவரை புலம்பியாவது பார்ப்போம் என்று முயற்சிக்கிறீர்கள். முயற்சிசெய்யுங்கள்..

:evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted:

:lol::D:D:D:D:D:D:D:D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நாங்கள் எல்லாம் அகிம்சைப் போராட்டத்துக்கு தயாராவம். ஏனென்டால் தத்துவாசிரியர் சுகுமாரன் எவ்வளவு பெரிய கட்டுரை கட்டுரையாக எழுதும் போது விடலாமோ!!

அப்ப செல்வநாயகம் கோல்பேஸ்சில் இருந்தமாதிரி உண்ணாவிரதம் இருப்பம். அப்ப சிங்கள ஆட்கள் எங்களை கீழ்தரமான வார்த்தையால் திட்டி,பொல்லுகளால் அடித்து கடலுக்க து}க்கிப் போடுவினம். நீங்கள் நொந்து போனாலும் திருப்பி எஜமான்களுக்கு அடிக்க கூடாது!!

ஒரு சந்தோசம் என்னவென்றால் முந்தி சேனாநாயக்கா பாராளுமன்ற மேல்மாடியில் இருந்து நக்கலாக சிரிச்ச மாதிரி இப்ப பிரதமரால் சிரிக்க இயலாது. ஏனென்டால் பாராளுமன்றம் இடம் மாறி விட்டுதே!!! :roll:

உங்களின் வேலைத் தளத்தில் "பல்லா" எண்டு திட்டுவினம். மனித நரகலை மூச்சியிலும், சாப்பாட்டுக்கேயும் போடுவினம். நீங்கள் அதைப் பெருந்தன்மையாக ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுங்கோ!! :idea: :idea:

பாராளுமன்றத்தில் நீங்கள் கறுப்புத் துணியைக் கட்டி எதிர்ப்பு தெரிவியுங்கோ!! உடனே சிங்கள எம்பிமார் வேட்டியை உருவினம். அதுக்காக கவலைப்படாதிங்கோ!! கோவணத்தையும் விடமாட்டினம்.

இப்ப எங்களுக்கு ரோச நரம்பு தான் இல்லை எண்டதற்காக பேசாமலே இருந்து விடக்கூடாது. ஏனென்டால் நாங்கள் கேட்ட சுதந்திரத்தை பெற்ற சந்தோசத்தில்

"பாடுவோமே... சுதந்திரம் கிடைத்தது என்று...." சுதந்திரப் பள்ளுப் பாடி காந்தி வழியில் உரிமை கிடைத்தது என்று கொண்டாடுவோம்.

எம்தமிழ் பெண்கள் மார்பினில் பளுக்கக்காச்சிய இரும்பினால் சிங்கள சிறீ பதிப்பார்கள், எமது தமிழ் குழந்தைகளை கொதிக்கும் தார்பீப்பாக்குள் தூக்கிப்போடுவார்கள், அகிம்சையின் பெயரால் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். :evil: :evil: :twisted: :twisted: :twisted:

அதோட எங்கட ஊரைவிட்டு துரத்தீட்டு சிங்கள் குடியேறம் செய்வான்... அவங்கள் வந்து விவசாயம் செய்வீனம்.... எங்கட மண்ணைப் பொன்னாக்கி சாப்பிட நாங்கள்... காந்தியம் எண்டு பட்டினிகிடப்பம்... அப்ப இந்தியா மாமா வந்து பிளேனில அரிசி சீனி போடுவார் வாங்கி நக்குவம்.....

  • தொடங்கியவர்

பலரும் கருத்து எழுதியுள்ளீர்கள்.. ஆசுவாசமாக பதில்களை வாசித்து நாளை சந்திக்கின்றேன்..

வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலரும் கருத்து எழுதியுள்ளீர்கள்.. ஆசுவாசமாக பதில்களை வாசித்து நாளை சந்திக்கின்றேன்..

வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

முடிந்தளவு எல்லாருக்கும் பதில் அளிக்கவும். இல்லாவிட்டால் மரியாதையா இருக்காது.

அதோட காந்தியை இந்தியர் ஏன் கொண்றார்கள் எண்டும் எழுதும் அதுவும் இங்கு பொருத்தம் அப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானொலி ஏதொ ஒலியெழுப்புகின்றதேயென.. இணையத்தைத்திறந்து முகப்பிலிருந்து துயரச்செய்தியறிந்தேன் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்

உங்களிற்கு இந்த செய்தி எப்படி ஓர் துயர செய்தியாக இருக்கும். இவர் ஆயுதம் ஏந்தி போராடுகின்ற ஓர் குழுவை ஆதரிப்பவரல்லவா? இது காந்தீய கொள்கையுடன் முரண்படுகின்றதல்லவா? அல்லது ஓர் மனிதன் இறந்து விட்டான் என்று கவலைபடுகிறீர்களா? இவர் நீங்கள் கூறுவதுபோல வாய்பிளக்க கொழும்பில் நின்றுகொன்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் இந்த நிலமை வந்திராது என்று நினைக்கிறீர்களா?

  • தொடங்கியவர்

இங்கு கொடுக்கப்பட்ட தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திர போராட்டமும்.. அதை கவனத்திலெடுத்து உங்களது பதில்களை எழுதுங்கள்..

தெடங்கப்பட்ட கருத்திலிருந்து விலகியிருந்தாலும் எழுதியிருக்கும் கருத்துக்களுக்குப் பதில் எழுதவேண்டிய கடமையின்நிமித்தம் இயன்றவரை பதில்தர முயற்சிக்கின்றேன்..

தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?

இவர் குறிப்பிடும் படியாக தனிச்சிங்களச்சட்டமும், காவற்துறை கொலைகள் தானா, யாழ்நுலகத்தை எரிக்கத் து}ண்டியது, அல்லது வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு, என்று ஆரம்பமானது?

தனிச்சிங்கள சட்டமூலம் கொண்டு வந்ததை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனம் இவரது வார்த்தைகளில் புலப்படவில்லையா? ஒரு மொழித்திணிப்புக்கும், விரும்பிப் படுப்பதற்கும் உள்ள முறைமை வேறு! சிங்கள மொழி மூலச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு எல்லோரும் ஆங்கிலத்தில் தானே படித்தார்கள். அப்போது எம் மக்களிடம் எவ்வித கிளர்ச்சியும் ஏற்படவில்லையே ஏன்?

ஏன் என்றால் அது திணிக்கப்படாமல், கல்வி சார் தேவைக்கு அவசியமாக இருந்தது. ஆனால் எவ்வித பயனுமற்ற சிங்கள மொழியைத் தான் படிக்கவேண்டும் என்ற திணிப்பை, பிறகு ஆட்சிக்க வந்த பண்டாரநாயக்காவின் மகள் உணர்ந்து, சிங்களப்பாடசாலைகளில் தமிழும், தமிழ்பாடசாலைகளில் சிங்களமும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தார்.

( 2002 வரை பாடசாலை வாழ்வோடு தொடர்பு கொண்டவன் என்ற வகையில் என்னால் உத்தரவாதப்படுத்த முடியும்)

பிறகு வந்த ரணில் தப்புக்களை உணர்ந்து, இப்போது பல பாடசாலைகளில் ஆங்கில கல்வியை ஏற்படுத்தியிருப்பதை புலம்புவர் அறிவாரோ?

சிங்கள ஆட்சியாளரே தவறு என்று ஒத்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் இரு மொழியையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றபோது, இவர் கட்டாய சிங்கள மொழிக்கு ஆதரவு காட்டும் போக்கு தனிப்பட்ட வஞ்சத்தை தீர்ப்பதற்கான கருவியாக பாவிக்கின்றார் என்பதை தெளிவாக்குகின்றது.

மாற்றுக் கருத்து என்று மட்டமாக மற்றவர்களை வசைபாடும் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அதை நிகழ்கால வாழ்வில் ஒன்றித்து பார்ப்பது வேடிக்கை.

ஏட்டுக்கல்வியை மட்டுமே வைத்து, தனது யதார்தத்துக்கு பொருந்தாத கிறுக்குப்பிடித்த வார்த்தைகளால் எழுதும் இவருக்கு புரிய வைக்க முடியும் என்று கள உறுப்பினர்கள் யாராவது கருதுகின்றீர்களா?

  • தொடங்கியவர்

ரகுவரன் நீங்கள் காந்திஜி யுூதர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுதியிருக்கின்றீர்கள்.. உங்கள் ஆதரவு யுூதர்களுக்கா இல்லை பலஸ்தீனத்தவர்களுக்கா?

ஏன்கண்ணோட்டத்தில் இங்கு பலரும் பலஸ்தீனத்துக்கு ஆதரவானவர்கள்.. ஆதலால் உங்களுக்கு பதிலளிக்கவேண்டியது இறந்த காந்திஜி அல்ல கள உறவுகள்தான்..

ஆகிம்சைப்;போராட்டம் எப்போதும் வெற்றியளிப்பதில்லை என்று அதற்கு ஆதாரமாக வேறொருவருடைய அறிக்கையை தந்துள்ளீர்கள்.. அதுகூட அவரது கருத்து..

இங்கு தலைப்பு காந்தீயமும் இந்திய சுதந்திரப்போராட்டமும்.. இந்தியாவினுடைய சுதந்திரத்துக்கு காந்திஜி எந்தெந்த வழிமுறைகளை கையாண்டார் அப்போராட்டத்தின்போது சுபாஸ்சந்திரபோஸ் பகவத்சிங் சூரியா சென் போன்றோர் தொடங்கிய ஆயுதப்போராட்டம் எவ்வாறு முடிவுற்றது என்பது பற்றியது..

கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் மேற்குப்பாக்கிஸ்தானுக்கும் தரைத்தொடர்பு இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா.. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் போராட்டம் தொடங்கியதும் இந்தியாவை முஜிபுர் அழைத்ததும்.. இந்தியா வங்கதேசம் என்று பிரகடனப்படுத்தி அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறியதும் தெரியாதா.. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடு..

புலிகள்.. புளொட்.. ரெலோ.. ஈபிஆர்எல்எப்.. ஈரோஸ்.. போன்ற அமைப்புக்களுக்கு ஏன் ஆயுதப்பயிற்சியளித்தீர்கள் எனவினவ எனக்கும் ஆசை.. ரஜீவைப்போட்டபின்பு அதைப்பற்றி வினவமுடியுமா?

ரத்தம் கொட்டாமல் சுதந்திரம் வாங்கியவர்கள் ஏன் வங்கதேசத்திற்கு இராணுவத்தை அனுப்பியவர்கள்.

பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே

  • தொடங்கியவர்

எனது அறிவுக்கு எட்டியவரை ஆயுதப்போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லையென்று குறிப்பிட்டு எழுதியதை திரிவுபடுத்தி எழுதியிருக்கின்றீர்கள்.. இங்கு நீங்கள் எந்த இலங்கைத்தமிழ் அரசியல்த்தலைவர் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல்கொடுத்தார் என்று சுட்டிக்காட்டியிருக்கவேண்ட

  • தொடங்கியவர்

வருமானம் பற்றி எழுதியதை விமர்சனம் செய்துள்ளீர்கள்.. முன்னைய தலைவர்கள் வருமானம்பற்றி சிந்தித்ததாகவும் தற்போது எவரும் வருமானம்பற்றி சிந்திப்பது கிடையாது என்பது போன்ற பிரேமையை உண்டாக்குவதற்கு மறுதலித்து எழுதியிருந்தேன்.. புலம்பெயர்ந்தநாடுகளில் தற்போதய தலைமைத்துவத்தின் சகோதரர்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் உழைத்து வாழ்வதாக சொல்லுவது போன்ற கருத்தை மறுதலித்து எழுதியிருந்தேன்.. எழுதும் கருத்தை தூக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதம் தாருங்கள் எனது முழுமையான கருத்தை நேரடியாகப்பதிவுசெய்கின்றேன

  • தொடங்கியவர்

தரப்படுத்தல் பற்றிய கருத்தின்பால் உங்களது தற்போதய கல்விநிலையும் ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்த கல்விநிலையும் ஒன்று என்று கூறவருகின்றீர்களா.. சிங்களவரது கல்வி சிறிதும் மாற்றமடையாமல் எப்போதும்போல அடிமட்டத்தில் இருக்கின்றது என்று கூறவருகின்றீர்களா..

நீங்கள் எதையும் சிந்திக்காமல் கருத்தை எழுதிவிட்டு நீங்கள் கூறுவதே சரியென்று வாதிடுகிறீர்கள். உங்களிற்கு எதைப்பற்றிய உண்மை நிலையும் தெரியாதா. அல்லது தெரிந்தும் தெரியாமல் நடிக்கிறீர்களா. நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பாPட்சையின் யாழ் மாவட்ட பெறுபேறுகளை பார்த்தீர்களா. விடுதலைபுலிகளின் பகுதிகளில் இருக்கும் மாணவர்களது பெறுபேறுகளை பார்த்தீர்களா. இதற்கு முந்தைய முடிவுகளையும் பார்த்தீர்களா.

யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் மாத்திரம் வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை பேரென்று தெரியுமா. அல்லது இலங்கை சனத்தெகை எவ்வளவு என்று தெரியுமா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் அண்ணா நீங்கள் பண்டாரநாயக்காவின் மகள் ரணில் என பலவிதமான கதைகள் சொல்லுகின்றீர்கள்.. 8 இலட்சம் தமிழ்மக்கள் தலைநகரிலும் தலைநகரை அண்டிய பகுதிகளிலும் புலம்பாமல் இருக்கும்போது உங்கள் கருத்து வேடிக்கையாகவிருக்கின்றது..

நீங்கள் ஒரு தமிழராகப்பிறந்து சிங்களமொழியில் படித்து வேதனையுற்றிருந்தால் எழுதுங்கள் மேற்கொண்டு கருத்தாடலாம்..

அண்ணா.. தலைநகரிலும் தலைநகரை அண்டியபகுதியிலும் வசிக்கும் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்திதான் என்ன?

ஏனப்பு உனக்கு ஈழத்தமிழர் எத்தினை ஆயிரம் எண்டு தெரியுமா.? இல்லையா.? தலை நகரை அண்டிய தமிழர் 8 லச்சம் பேர் எண்டுறார் சரி அது இந்திய வம்சாவளியையும் சேர்த்து. சரி விடுவம் ஏனப்பு நாளாந்த போலீஸ் சுத்திகரிப்பு இரணுவக் கைதுகள் தலைநகரை அண்டி நடக்கேல்லையே. 4ம் மாடி போய்ப் பார் அப்பு. அப்ப தெரியும் எத்தினை கொழும்பிலை இருக்கிரவை கைதாகி வெலிக்கடை போகினம் எண்டு..

அது சரி தமிழர் சுய நிர்ணயம் எண்டு இப்ப நிக்கிற தமிழர். என்ன காரணதுக்காகப் போராட்டம் தொடங்கினவை எண்ட தெளிவு இல்லாமை காந்தியம் பேசுறாய் அப்பு. பிறகு எப்பிடி ஈழத்தவருக்கு காந்தியம் பொருந்தும் எண்டு கதை விடுகிறாய் எண்டு விளங்கப்படுத்தப்பு.

வெளிநாடுகளில தமிழர் அடங்கி வாழுகினம் இலங்கையில வாழ்ந்தால் என்ன எண்டும் கேப்பாய் அப்பு. எனக்கு தெரியும் உனக்கு அவ்வளவு அறிவுதான் இருக்கு எண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.